நனைந்த நதி (நூல் விமர்சனம் - கவிஞர் இரா. இரவி)

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129ef511819ea4b8&attid=0.2&disp=inline&realattid=f_gbukvnuh1&zw
நனைந்த நதி (நூல் விமர்சனம் - கவிஞர் இரா. இரவி)


நூல் ஆசிரியர் - திலகபாமா


பாரதி கண்ட புதமைப் பெண்ணாக வலம் வரும் கவிஞர் திலகபாமா கவிதை நூல்களின் வெற்றியைப் தொடர்ந்து படைத்துள்ள சிறுகதை தொகுப்பு இது. சிவகாசியில் வசிக்கும் சிந்தனை மத்தாப்பு இவர். சிறுகதை இலக்கியம் நலிந்து வரும் காலத்தில் அதனை உயிர்ப்பிக்கும் விதமாக வந்துள்ள நல்ல நூல் இது. வளரும் எழுத்தாளர்கள் அனைவரும் வாசித்து சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர். பனிரெண்டு சிறுகதைகளுடன் மலர்ந்துள்ள குறிஞ்சி நூல் - நனைந்த நதி. நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. நம்மை சிந்திக்க வைக்கின்றது. நூல் ஆசிரியர் கவிஞர் என்பதால் சிறுகதை வரிகளில் கவித்துவம் மேலோங்கி இருப்பது கூடுதல் சிறப்பு. சிறுகதையில் வரும் உரையாடல்களில் உவமை கூட கவித்துவமாக உள்ளது.

�போளிக்குள்ள வைச்ச ப+ரணமா அவ மனசில� இப்படி நூல் முழுவதும் உவமைகள், எளிமையான வழக்குச் சொற்கள் என படிப்பதற்கு இனிமையாக உள்ளது. சிறுகதை என்ற பெயரில் சிலர் சின்ன துணுக்கை விரித்துக் கூற முற்படுவார்கள். ஆனால் இந்த நூலில் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு கருத்து உள்ளது. வாழ்வியல் கருத்துக்களை ஏழ்மையின் அவலத்தை பல்வேறு உணர்வுகளை நுட்பமாக பதிவு செய்துள்ளார். நனைத்த நதி, சிக்காத மனம், வெற்றிடம், துடிப்புகள், விழிகள், தீப்ப+க்கும் வாகை, வெளிச்சம் பழகட்டும் கண்களுக்கு, வெற்றுத் தாள்களில் விளைந்த அச்சுகள், பயணத்தின் பயணம், கல்லறையில் கல் ப+ காட்டுவழிக்காற்று புதையும் விதைகள் இப்படி 12 சிறுகதைகளின் தலைப்பும் அற்புதமாக உள்ளது.

சிலர் சிறுகதையில் வலிய ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தி தமிங்கலமாக கதை எழுதுவதே சிறந்த நடை என்று தங்களுக்குத் தாங்களாகவே முடிவு கட்டி எழுதி வருபவர்கள் அவசியம் இந்த நூலைப் படித்துத் திருந்த வேண்டும்.

நூலாசியர் கவிஞர் என்பதால் தேர்ந்தெடுத்து நல்ல தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்தி எல்லோருக்கும் புரியும் எளிய நடையில் எழுதி உள்ளார்.

�புதையும் விதைகள்� என்ற சிறுகதையில் வரும் வைர வரிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

காதலை வெளிப்படுத்த தைரியம் வேண்டுமென்றால் அதை மறைத்து வைக்கவும் ஒரு தைரியம் வேண்டுமென்று முதன் முறையாக கண்டு கொண்டேன்.

பெண்மைக்காக உரக்கக் குரல் கொடுத்துள்ளார். ஒரு பெண் கணவனுக்காக வாழ்கிறாள். குழந்தைகளுக்காக வாழ்கிறாள். ஆனால் அவளுக்காக அவள் வாழ முடிவதில்லை. அவளது உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை கல்லை விட கீழாக பெண்களை நினைக்கும் ஆணாதிக்க சிந்தனைக்கு சிறுகதைகளின் மூலம் வேட்டு வைத்துள்ளார். சிவகாசிப் பெண் குட்டி ஐப்பான் என்று சொல்லும் சிவகாசியில் வசிக்கும் சுறுசுறுப்புத் தேனீ திலகபாமா அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

சிறுகதை படிக்கிறோமா? கவிதை படிக்கிறோமா? என வியக்கும் வண்ணம் கவிதை நடையில் வந்துள்ள சிறுகதை. �கதை�யில் ஒரு எழுத்து �வி� சேர்ந்தால் � கவிதை� ஆகின்றது. இலக்கியத் தரமாக உவமைகள். பெண்மைக்கான போராட்டங்கள். முற்போக்குவாதியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்கள் கூட இல்லத்தில் பிற்போக்குவாதியாகத் தான் இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்த்துகின்றனது.

தந்தை பெரியார் சொன்னதைப் போல � பிள்ளை பெறும் இயந்திரம் பெண்� பெண்ணிற்கு சம உரிமை வழங்க வேண்டும். அவளது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற பல்வேறு கருத்துக்களை உணர்த்தும் சிறந்த சிறுகதை தொகுப்பு நூல் இது. வக்கிரங்களை தொலைக்காட்சித் தொடராக எடுத்து வரும் இயக்குநர்கள் இந்நூலின் சிறுகதையை தொடராக்கினால் நாடு நலம் பெறும்.

கருத்துகள்