அமெரிக்க அதிபர் ஒபாமாவின் “சிகரம் தொட்ட சிந்தனைகள் “ * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129fdccfd6a94cf1&attid=0.1&disp=inline&realattid=f_gbylkz8x0&zw
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் “சிகரம் தொட்ட சிந்தனைகள் “ * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

* நூல் ஆசிரியர் : டாக்டர் செல்வின் குமார்


நூலின் அட்டைப் படத்தில் ஒபாவின் உரையாற்றும் புகைப்படும் நம்மை வரவேற்கின்றது. நூலாசிரியர் தமிழ்க்குரிசில் முனைவர் எஸ்.செல்வின்குமார் உலகத் தமிழர் பல்கலைக்கழகத்தை அமெரிக்காவின் நிறுவி பல்லாண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதால், ஒபாமாவின் சிந்தனைகளை நன்கு உள்வாங்கி, கருத்துக் கருவூலமாக சிந்தனை பெட்டகமாக நூலை வழங்கி உள்ளார்.

வெற்றியின் மீது வேட்கை உள்ள அனைவரும் படிக்க வேண்டி அற்புத நூல் நூலின் அளவு மட்டுமல்ல, உள்ளே உள்ள கருத்துக்களும் பெரியது தான். ஒபாமா 1961ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4ம் நாள் பிறந்தவர் என்று தொடங்கி, அமெரிக்க அதிபர்களின் சிந்தனை துளிகளைத் தொகுத்து மிகச் சிறப்பாக எழுதி உள்ளார். நூல் ஆசிரியர் முனைவர் செல்வின் குமார். அமெரிக்காவில் பல ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கை இந்த அரிய நூல் படைக்க உதவியாக இருந்துள்ளது.

பராக் ஒபாமா இரண்டு வயது குழந்தையாக இருக்கும் போதே அவரது பெற்றோர்கள். விவாகரத்து செய்து கொண்டனர் என்ற தகவல் தொடங்கி, பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளது. சிறு வயதிலேயே பெரிய மனக்காயங்கள் ஏற்பட்ட போதும்,தகவல்கள் நூலில் உள்ளது. சிறு வயதிலேயே பெரிய மனக்காயங்கள் ஏற்பட்ட போதும், கடின உழைப்பின் முயற்சியால் வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு நிலாவாக உலா வர முடிந்ததை உணர்த்துகின்றது நூல் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் நாள் பராக் ஒபாமா, அமெரிக்காவின் 44வது அதிபராக பதவிப்பிராமாணம் ஏற்று அதிபராக திகழ்கிறார்.

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா வந்ததில் உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தது முற்றிலும் உண்மை. ஆனால் இலங்கைத் தமிழர்களை காப்பாற்றும் விசயத்தில் நாம் எதிர்பார்த்தப்படி ஒபாமா நடந்து கொள்ளவில்லை என்ற வருத்தம் உலகத்தமிழர் அனைவருக்கும் உண்டு. இருப்பினும் ஆதிக்க மனம் படைத்த வெள்ளையர்களை ஆளும் அதிபர் பதவிக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த உயர்ந்த மனிதன் வந்ததில் மகிழ்ச்சி

அமெரிக்காவின் 44 ஆதிபர்களின் சிந்தனைத் துளிகள் உள்ளது. நூலிற்கு கூடுதல் சிறப்பு. இவை முழவதையும் தொகுக்க ஆசிரியர் எத்தனை நூல்களில் இருந்து இவற்றைத் திரட்டி இருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்க்கும் போது வியப்பாக உள்ளது.

ஜார்ஜ் புஷ் ஈராக்கிற்கு அமெரிக்கப் படைகளை அனுப்பி சதாம் உசைனைக் கொன்ற நிகழ்வின் காரணமாக உலக அரங்கில் ஒரு வில்லனாகவே காட்சி தந்தார் என்பது உண்மை. அவரைப் பற்றி ஒபாமா சொன்ன கருத்து இதோ!

ஜார்ஜ் புஷ் அதிபராக ஏற்று நடத்தும் ஆட்சி
அமெரிக்க மக்களின் எண்ணத்திற்கு முரண்படானது
எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாதவற்றை செயல்படுத்த
முயலும் ஒரு நியாயமற்ற நிர்வாக அமைப்பாகும்

கல்வெட்டு வார்த்தைகள் ஜார்ஜ் புஷ் பற்றி மிகச்சிறந்த விமர்சனம் செய்ததன் காரணமாகவே ஒபாமாவிற்கு வெற்றி கிட்டியது என்றால் மிகையன்று. அமெரிக்க மட்டுமல்ல உலக மனிதநேய ஆர்வலர்கள் யாருமே விரும்பவில்லை. ஜார்ஜ் புஷ்ஷின் தான் தோன்றித் தனமான அணுகுமுறையை

இன வேறுபாடுகள் சமுதாயத்தில் நிலவுகிறதா? என்ற கேள்விக்கு ஆம்! என்று கூறுகிறார் ஒபாமா. இலங்கையில் இன வேறுபாடு தலைவிரித்து ஆடியது ஒரு கண்ணில் வெண்ணெயையும், மறு கண்ணில் சுண்ணாம்பு வைத்த முரண்பாட்டின் காரணமாகவே அங்கே இனக் கலவரம் உண்டானது என்பது மறுக்க முடியாத உண்மை.

செய்தித்துறை பற்றி, ஒபாமாவின் விளக்கம் மிக நுட்பமாக உள்ளது. செய்தித் துறையைப் பொறுத்த வரையில் எல்லோர் கையிலும் வெட்டி வீழ்த்தும் கோடாரி ஒன்று இருப்பது போன்ற அசுதர பலம் இருக்கிறது. என்னுடைய கருத்தோ பத்திரிக்கை உலகம் தனது பணியை முறையாக, சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதே”

இப்படி நூல் முழுவதும் ஒபாமாவின் சிகரம் தொட்ட சிந்தனைகளை நூல் ஆசிரியர் அழகு தமிழில் எல்லோருக்கும் புரியும் வகையில் மிக எளிய நடையில் வழங்கி உள்ளார். ஒபாமா சிந்தனையின் காரணமாகவே சிறப்பாக செயல்பட்டு உரையாற்றி, சிகரம் அடைந்து உள்ளார். ஒடுக்கப்பட்ட இனம் அனைவரும் பெருமை கொள்வோம். ஓபாமா உச்சம் அடைந்து போல நாமும் ஒரு நாள் உச்சம் அடைவோம் என்பது நிச்சயம். தொடர்ந்து போராடுவோம், ஆதிக்க சக்திகளின் ஆக்கம் அதற்கு இந்த நூல் உதவும்.

ஓபாமா பதவி ஏற்றதன் காரணமாக மாற்றம் என்ற பெயரில் பலர் தமிழர்கள் இந்தியர்கள் வேலை இழந்து தாயகம் திரும்பினார்கள் என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும், அவருக்கு உள்ள தாய் மண் பற்றின் காரணமாக இது போல் நடந்து கொள்கிறார். அது போல நம்மில் அனைவருக்கும் தாய் மண் பற்று வர வேண்டும்.

மொத்தத்தில் ஒபாமாவின் சிந்தனை மட்டுமின்றி அமெரிக்க அதிபர்கள் அனைவரின் சிந்தனைத் துளிகளையும் வழங்கி மிகச் சிறப்பான நூலை வழங்கி உள்ள முனைவர் செல்வின் குமார் அவர்கள். அமெரிக்காவில் தமிழுக்காக, தமிழை வளர்ப்பதற்காக உலகத்தமிழ் பல்கலைக்கழகம் நிறுவி, தமிழ்த் தொண்டு புரிந்து வரும் நூலாசிரியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நான் பிறந்த மதுரை மண்ணிலிருந்து அமெரிக்க சென்றவர் என்பது பெருமை. வெற்றி பெற துடிப்பவர்களுக்கு இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷம்.

கருத்துகள்