இழை இழையாய் இசைத்தமிழாய் - நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129e956a893fde73&attid=0.22&disp=inline&realattid=f_gbswj6ps21&zw
இழை இழையாய் இசைத்தமிழாய் - நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் திரு.நா.மம்மது .


தரமான நூல்களை, அறிவார்ந்த நூல்களை பதிப்பிக்கும் முன்னணி பதிப்பகம் தென்திசையின் மூலம் வந்துள்ளது. அட்டைப்பட வடிவமைப்பு மிகச்சிறப்பு. முன் அட்டையில் இசைக்கருவிகளின் ஓவியமும், பின் அட்டையில் நூல் ஆசிரியர் திரு.நா.மம்மது அவர்களின் புகைப்படத்துடன் நன்றாக உள்ளது.

தசாவதாரம் படத்தில் �கடவுள் இல்லை என்று சொல்லவில்லை : இருந்திருந்தால் நல்லாயிருக்கும்� என்ற புகழ்பெற்ற வசனத்திற்கு சொந்தக்காரரான பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களுக்கு நூலை காணிக்கையாக்கி இருப்பது போற்றுதலுக்குரியது. மதுரையில் அனைவராலும் பேராசிரியர் தொ.ப என அன்பாக அழைக்கப்படும் மாமனிதரின் வழிகாட்டுதலில் நிறைய முனைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

நூலாசிரியர் என்னுரையில் மிகச்சிறப்பாக பதிவு செய்து உள்ளார். உலகின் முதன்மொழி தமிழ்மொழி என்பது ஆய்வில் கண்ட உண்மை. அது போல உலகின் முதல் இசை, தமிழ் இசை என்பதை மிகச்சிறந்த ஆய்வின் மூலம் நிருபணம் செய்துள்ளார். அவரது மொழியிலேயே இதோ!

வேர் எது? விழுது எது? என்று பிரிந்து அறிய முடியாத 5000 ஆண்டுகளுக்கு முன்பான பழமையுடைய தமிழர் இசை, தமிழர் ஆடல் என்ற விண்ணளாவி மண்ணளாவிய பெரும் ஆலமரத்திற்கு வேர் வடநாட்டிலும், காசுமீரத்திலும் இருப்பதாக ஆய்வு (!) செய்து நம்மை மயக்கும் நிலை இன்று தொடர்கிறது.

புதிய காற்று உள்பட பல்வேறு உரத்த சிந்தனை விதைக்கும், சிற்றிதழ்கள் அல்ல சீரிய இதழ்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளனர். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பார்கள். பதினாறு கட்டுரைகளும் நேர்காணலும் அடங்கி உள்ளது. நூல் ஆசிரியர் சங்க இலக்கியம் நன்கு கற்ற பெருமகனார் என்பதால் பாடல் வரிகளைச் சொல்லி விளக்கி உள்ளார்கள். கர்நாடக இசை என்பதற்கான விளக்கம் மிக நன்று. இசையால் பயிர்கள் வளர்கின்றன என ஆய்வுகள் சொல்கின்றன. பயிரே வளரும் போது மனித உயிரைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ? இசையால் வசமாகாத இதயம் எது? மொழிகள் கடந்து இசை ரசிக்கும் போது, தாய்மொழி இசையான தமிழ்மொழி இசை பற்றி கூறவும் வேண்டுமோ? இசை இன்பம் தரும், பரவசப்படுத்தும், கவலைகளைக் காணாமல் போக வைக்கும். தமிழிசையின் தொன்மை விளக்கும் சிறந்த நூல் இது.

சங்க இலக்கியம் காட்டும் தமிழ் இசை வரலாறு கட்டுரை ஒன்று போதும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியமான சங்க இலக்கியத்தில் உள்ள தமிழிசைப்பற்றிய சொற்களை ஆதாரப் ப+ர்வமாய விளக்கி உள்ளார். யாரும் மறுப்புக்கூற முடியாது. தமிழிசைக்கு மிகவும் பிந்திய கர்னாடக இசையை தலையில் வைத்து கூத்தாடுவது மட்டுமின்றி, தமிழிசைக்கு எதிராகவும் தவறான கருத்துக்கூறி வருவோரின் தலையில் கொட்டும் வண்ணம் மிகச்சிறப்பான கட்டுரைகளை வடித்து உள்ளார் நூல் ஆசிரியர்.

தமிழிசையை ஆய்வு செய்யும் ஆய்வு மாணவர்களுக்கு இந்த நூலை பாடநூலாக்கலாம். தகவல் களஞ்சியமாக உள்ளது. நூலாசிரியரின் ஆராய்ச்சிக்கான கடின உழைப்பை நன்கு உணர முடிகின்றது. சான்றுக்குறிப்புகளைப் பட்டியலிட்டு கருத்தை ஆணித்தரமாக விதைத்து உள்ளார். தமிழிசைக்கான மறுமலர்ச்சிக்கு இந்த நூல் வழிவகுக்கும் என்பது முற்றிலும் உண்மை. கையிலே வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாய் தமிழன் தரமான தமிழிசையை வைத்துக் கொண்டு கர்னாடக இசை தேடி அலையும் அவலத்திற்கு வேட்டு வைக்கும் சிறந்த நூல் பாராட்டுக்கள்.

இழை இழையாய் இசைத்தமிழாய் நெய்து தமிழாடை தந்து உள்ளார். தமிழிசை சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டும் வரிகள் ஏராளம் உள்ளது. நூலில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இதோ.

சிறுநா நண்மணி விளரி ஆர்ப்ப-குறுந்தொகை,336 சிறுநா ஒண்மணி தௌ; இசை கடுப்ப - நற்றிணை,267 விளரி உறுதரும் தீந்தொடை நினையாத் தளரும் நெஞ்சம் தலைஇ மனையோன்-புறநானூறு,260
ஏற்பாடு நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும் - தொல்காப்பிய நூற்பா ,954

இப்படி தமிழிசைக்கு ஆதாரமாக உள்ள சொற்றொடர்கள் உள்ள பாடல்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து பாமாலை போல தமிழன்னைக்கு சூடி உள்ளார். பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் மெய்யாகி விடும் என்று ஒரு கூற்று உண்டு. அதற்கு ஏற்பத்தான் சிலர் தமிழ் அல்லாமல் பிறமொழியை முதல்மொழி என்றும், தமிழிசை அல்லாத பிற இசையை முதல் இசை என்றும், பொய் கூறி வரும் பொய்யர்களின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் வந்துள்ள சிறந்த நூல் இது. உலகத்தமிழர்கள் அனைவரும் வாங்கிப்படித்து. தமிழின் பெருமையை தமிழிசையின் தொன்மையை உணர வேண்டிய ஒப்பற்ற நூல்.

கருத்துகள்