தேய்பிறையின் முதல் நாளிலிருந்து * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129e956a893fde73&attid=0.11&disp=inline&realattid=f_gbswj6or10&zwதேய்பிறையின் முதல் நாளிலிருந்து * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

* நூல் ஆசிரியர் : ரத்திகா

கவிஞர் ரத்திகாவிற்கு இது முதல் நூல் என்பதை நம்ப முடியவில்லை. பல நூல்கள்
எழுதியுள்ள அனுபவம் மிக்க கவிஞர் போல மிக தேர்ந்தெடுத்த சொற்களுடன் நுட்பமாக
கவிதை நூல் வடித்து இருக்கிறார். இவரது முதல் நூலை புகழ் பெற்ற உயிர்மை
பதிப்பகம் வெளியிடுவது நூலிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது..

மகாகவி பாரதி சொல்வதைப் போல கூடை கூடையாக எழுதிக் குவிப்பவன் அல்ல கவிஞன்.
கவிதையாக வாழ்கிறவன் கவிஞன் அது போல என்னிடம் மொழிப் புலமை உள்ளது என்பதை
பறைசாற்றும் விதமாக பலர் வசன கவிதைகளாக நூல் முழுவதும் எழுதுவதுண்டு. ஆனால்
இந்த நூலில் ஒரு பக்கத்தில் சில வரிகள் சில சொற்கள் மட்டுமே இருந்தாலும் நம்மை
ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன. பேசுவதை விட மௌனம் சிறந்த மொழி என்பார்கள். அது
போல இவர் சொன்ன சொற்கள் தவிர சொல்லாமல் விட்ட சொற்கள் பல பொருள்களைத்
தருகின்றன. முதலில் படித்தவுடன் கவிதை புரிகின்றது. இது தான் வெற்றி
சுண்டக்காய்ச்சிய பால் சுருக்கமான சொற்களினால் விரிவான பொருள் தருகின்றார்..

தமிழ் செய்யுளுக்கு கோனார் உரை உள்ளது போல சிலரது கவிதைக்கு கோனார் உரை
போட்டால் தான் கவிதை புரியும். சிலர் நவீனம் என்ற பெயரில் யாருக்கு என் கவிதை
புரியவே கூடாது நான் வந்து தான் விளக்கிச் சொல்லிட வேண்டும் என்ற நிலையில்
எழுதும் கவிஞர்களும் உள்ள இந்தக் காலத்தில் புதுக்கவிதையை புரியும் படி
எழுதியிருப்பது நூலின் சிறப்பு.

நூலின் பெயர் தான் தேய்பிறையின் முதல் நாளிலிருந்து ஆனால் கவிஞர் ரத்திகாவோ
வளர்பிறையாக கவிதைகளால் வளர்ந்து வருகிறார். நூலிற்கு அணிந்துரை நல்கியுள்ள
கவிஞர் நந்தலாலா நாடறிந்த நல்ல பேச்சாளர் மட்டுமல்ல நல்ல எழுத்தாளர் என்பதையும்
நிருபிக்கும் விதமாக சிறப்பான அணிந்துரை. நூலின் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக
ஜொலிக்கின்றது.

. கவிதைகளில் பெண்களின் உணர்வுகளை அதிர்வுகளாக பதிவு செய்து உள்ளார். நான்
பெண்ணியம் எழுதுகிறேன். என எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக அடக்கமாக
பெண்ணியம் பாடி உள்ளார். சமுதாயத்தை சாடி உள்ளார். விடியலைத் தேடி உள்ளார்.
உள்ளத்து உணர்வுகளை சொற்களால் செதுக்கி உள்ளார்..

விற்பனைக்கு என்று தொடங்கி நம்பிக்கை என்று முடித்து 30 கவிதைகள் 30
முத்துக்கள். சிந்தனைக்கு சிதறல்கள். இவருடைய கவிதை நடை தெளிந்த நீரோடை போல
இருந்தாலும் சில சொற்கள் எரிமலை போன்ற வெப்பத்தையும் உமிழ்கின்றன..

*பின்னும் எல்லாம் முடிந்து விட்டது இனி தீ வளர்த்து குதித்து உயிர்த்தெழுந்து
நிரூபிக்க வேண்டும்*

இந்த வரிகள் நமக்கு இராமாயணத்தில் சீதைக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டி
கேட்கும் வைர வரிகளாக உள்ளன..

சித்திரப்பெண் என்ற கவிதை வடிக்கும் போது நமக்குள் கற்பனையும் வண்ணங்களும்
பிறக்கின்றன. மச்சத்தை நட்சத்திரமாக பார்த்த முதல் கவிஞர் ரத்திகா மட்டுமே.
இந்த உவமை வேறு எந்த கவிஞர்கள் எழுதியும் நான் படித்ததில்லை வித்தியாசமான
உவமை..

உருமாற்றம் என்ற கவிதையில் கடைசி வரிகள்.

*இன்று வரை கிடைக்கவில்லை, இழந்தவை நீ உட்பட *

தலைவனைப் பிரிந்த தலைவியின் மன ஆதங்கத்தை மிக இயல்பாகவும் நுட்பமாகவும்
அழகாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்துள்ளார். கவிதை ரசிகர்களுக்கு இந்நூல்
இன்பம் பயக்கும். சிந்தனை மின்னல்களை உருவாக்கும். படித்திட சுவைக்கும்..

பள்ளி ஆசிரியர் மட்டுமல்ல கவிதை ஆசிரியராகவும் திகழ்கின்றார். கவிதை எப்படி
எழுத வேண்டும் என்பதை இந்நூலை பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்..

கிரகணம் என்ற கவிதையையை நான் திரும்பப் திரும்ப படித்துப் பார்த்தேன்.
இன்றைக்கு ஆணாதிக்க சமுதாயம் பெண்களை எந்த அளவிற்கு ஒளிர விடாமல் கிரகணமாக
மறைத்து வருகிறார்கள் என்பதை கவிதை நயத்துடன் பதிவு செய்து இருக்கிறார்கள். சில
பெண் கவிஞர்கள் நவீனம் என்ற பெயரில் கொச்சையான சொற்களை பயன்படுத்துவது தான்
சிறப்பு என்று வலிய சொற்களைப் பயன்படுத்தி மலிவான விளம்பரம் தேடிக் கொள்ளும்
இந்த காலத்தில் மிகவும் கண்ணியமான சொற்களினால் கவிதை வடித்து இருக்கும் கவிஞர்
ரத்திகா பாராட்டுக்குரியவர்..

ஒரு பூ கவிதை படித்து முடித்தவுடன் ரோசாப்பூ உடன் நம் நினைவிற்கு வருகின்றது.
இது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி. என் சொற்கள் என்ற கவிதையில் இன்றைய காதலில்
ஊடலும் கூடலும் மிக மிக அபத்தமாக உள்ளது என்பதை உடைத்துக்கூறி உள்ளார். இப்படி
கவிதைகளின் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம். …

கருத்துகள்