நூலின் பெயர் :திரும்பி வர மாட்டாயோ ? ,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

நூலின் பெயர் :திரும்பி வர மாட்டாயோ ? ,நூல் விமர்சனம் : கவிஞர்
இரா.ரவி
https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12adb31e964446df&attid=0.1&disp=inline&realattid=f_gdo10zew0&zw

நூல் ஆசிரியர் : கவிஞர் ந.பாண்டுரங்கன்

“பிள்ளைகளின் தோள்கள்”என்ற சிறுகதை தொகுப்பு நூலை வெளியிட்டு இலக்கிய உலகின்
பாராட்டினைப் பெற்ற நண்பர் கவிஞர் ந.பாண்டுரங்கன் அவர்களின் இரண்டாவது படைப்பு
“”திரும்பி வர மாட்டாயோ ? என்ற கவிதை நூல். முதலில் அவர் கவிஞர் பிறகு தான் எழுத்தாளர்.
இவரது முதல் நூல் வெளியீட்டு விழாவில் நான் கேட்டுக் கொண்*ட* படி கவிதை நூலை
வெளியிட்டவருக்கு முதல் நன்றி

நிறைய வாசிப்பவர்,நூல்களை நேசிப்பவர், நூலக அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு
பெற்றாலும் இலக்கியப் பணியிலிருந்து என்றும் ஓய்வு பெறாதவர். தொடர்ந்து
இயங்கிக் கொண்டே இருக்கும் படைப்பாளி. மிகச்சிறந்த மரபுக்கவிஞர். இந்த நூலில்
மரபும் உள்ளது. புதுக்கவிதையும் உள்ளது. சோறாக மரபும், ஊறுகாய் போல
புதுக்கவிதையும் உள்ளது. தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர் படுகொலைகள் கண்டு
கொதித்தோம் நாம். கவிஞர் ந.பாண்டுரங்கன் வரிகள் இதோ!

*தமிழச்சி கண்ணீர்*
*
*

*இதயம் எரிகிறது – தமிழ்
ஈழம் எரிவதனால்
கலங்கிவிடு தமிழரின் நிலைதனைக் கண்டும்
கண்ணீர் ரத்தம் வடிவதைக் கண்டும்*

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் செந்தமிழை உயிருக்கு மேலாகப் போற்றுபவர். அந்த
வரிசையில் கவிஞர் ந.பாண்டுரெங்கனும் போற்றுகின்றார்.

*தமிழே வேண்டும்*
*
*

*தமிழில் தான் எல்லோரும் பேச வேண்டும்
தமிழில் தான் எல்லோரும் பாட வேண்டும்
தமிழில் தான் வழிபாடு நடத்த வேண்டும்
தமிழ் வாழ்க முழக்கமே தழைக்க வேண்டும்.*
*

*

*ஆலயத்தில், நீதிமன்றத்தில், அலுவலகங்களில் எங்கும் எதிலும் தமிழே என்ற நிலை வர
வேண்டும். ஆலயத்தின் உள்ளே தமிழை மறுப்பவர்களை ஆலயத்தை விட்டே அகற்ற வேண்டும்.*

“பேரருங்காடு” என்ற தலைப்பில் உள்ள கவிதை மரபுக் கவிதையின் மூலம்
அழகிய வனத்திற்கே வாசகர்களை அழைத்துச் சென்று காட்சிப்படுத்தி பிரமிக்க
வைக்கின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் ந.பாண்டுரங்கன்.

வளரும் கவிஞர்கள் அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டிய நூல் இது. சொற்களஞ்சியமாக
கவிதைகள் உள்ளது. “என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில், ஏன்? கையை ஏந்த வேண்டும்
பிறமொழியில்” என்பதைப் பறைசாற்றிடும் விதமாக பிறமொழி கலப்பின்றி அழகு தமிழில்
அற்புதமாக கவிதைகள் வடித்துள்ளார். சிலர் புதுக்கவிதை என்ற பெயரில் ஆங்கிலச்
சொற்கள் கலந்து எழுதி தமிழை சிதைத்து வருபவர்கள் இந்த நூலைப் படித்துப்
பார்த்து திருந்த வேண்டும்.

சந்த நயங்களுடன் சொற்கள் நடனமாடுகின்றன. அல்லி, மல்லி, சொல்லி, வல்லி, வெல்லம்,
உருவம், உள்ளம், வெல்லும், நிற்கும், கற்கும், காணும்,நாணும், பெருகும்,
உருகும்,உருவம்,உலவும், இந்தச் சொற்கள் யாவும் காவிரி வெள்ளம் என்ற ஒரே ஒரு
கவிதையில் இடம் பெற்றுள்ளவை. ஓரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல சொல்லி
உள்ளேன். நூல் முழுவதும் எவ்வளவு இனிமையான சொற்கள் இருக்கும் என்பதை கற்பனை
செய்து பாருங்கள். கருத்துக்களும் சமூகத்தை நெறிப்படுத்தும் விதமாக உள்ளது.

*பொங்குக*
*
*

*நாட்டின் தெருக்களிலே – ஊழல்
நாற்றச் செயல்பாடு
பாட்டுப் புலவரெல்லாம் – இதைப்
பாடத் தயங்குவதேன்*.

படைப்பாளிகளுக்கு நிறைய வேலை உள்ளது, தயங்காமல் பாடுங்கள் என கவிஞர்களுக்கு
ஊக்கம் கொடுக்கும் விதமாக கவிதை உள்ளது. பாராட்டுக்கள். அரசியல்வாதிகள் கூவத்தை
சுத்தம் செய்து கொள்ளும் முன்பு அவர்களை சுத்தம் செய்வதுநல்லது . பல்லாயிரம்
ஆண்டுகள் ஆன போதும் உலகின் முதன்மொழியான தமிழ்மொழிக்கு பல்வேறு எதிர்ப்புகளும்.
சிதைவுகளும்,துரோகங்களும் வந்த போதும் அழியாமல் நிலைத்து நிற்கும் அற்புதத்
தமிழுக்கு அணி சேர்க்கும் விதமாக இந்நூல் வந்துள்ளது.

கவிதை படிப்பது,சுகமான அனுபவம் மரபுக்கவிதை படிப்பது சுகமோ சுகம். சொற்கள்
நடந்தால் வசனம்,சொற்கள் நடனமாடினால் கவிதை,கவிஞர் ந.பாண்டுரங்கனிடம் சொற்கள்
களிநடனம் புரிந்து உள்ளன. அன்னைத் தமிழுக்கு அணி சேர்க்கும் விதமாக இந்நூல்
வந்துள்ளது. தொடர்ந்து இதுபோன்ற தரமான நூல்களை வழங்கிட வாழ்த்துக்கள்.

*இந்நூலில் தமிழ்ப்பற்று உள்ளது. தத்துவக் கருத்துக்கள் உள்ளது.
எதுகை,மோனை,இயைபு என இலக்கணங்களும் உள்ளது. கவிதைகளின் தலைப்புகளே ஆடல்,
புகழின் கோலம், கல்லறைச் சாசனம், பயணம்,தனித்தன்மை, கொள்கை மாறாத கோழிகள்,
ஆள்வினை கொள்க, தமிழச்சி கண்ணீர் இப்படி சிந்திக்க வைக்கின்றன.*

கவிதை ரசிகர்களுக்கு கற்கண்டு இந்நூல். கவிதை நந்தவனத்தை சுற்றி வந்த இன்பத்தை
தருகின்றது. வாங்கிப் படித்துப்பாருங்கள். உண்மையை நீங்களே உணருவீர்கள்.
...

கருத்துகள்