இடுகைகள்

October, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருச்சியில் நடைப்பெற்ற ஹைக்கூ திருவிழா புகைப்படங்கள்

படம்

திருச்சியில் நடைப்பெற்ற ஹைக்கூ திருவிழா புகைப்படங்கள்

படம்

திருச்சியில் நடைப்பெற்ற ஹைக்கூ திருவிழா புகைப்படங்கள்

படம்

கரந்தடி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

படம்
கரந்தடி

மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் : கவிஞர் புதுமை சீனு தமிழ் மணி


நூலின் அட்டைப்பட ஓவியமே அசத்தலாக உள்ளது. நன்றி பெயர் பட்டியல் ஆசிரியரின் நன்றி உணர்வுக்கு எடுத்துக்காட்டு. கரந்தடி பற்றிய விளக்கம் நன்று. முதல் ஹைக்கூ மறைந்திருந்து அடிக்கும் அடியாக கரந்தடியாக உள்ளது.

மாந்த நேய எதிரிகளே

கரந்தடியா

துளிப்பா

நூலில் உள்ள நவீன ஓவியங்கள் சிறப்பாக உள்ளன. நூலின் தரத்தை மேலும் கூட்டும் விதமாக ஓவியங்கள் இன்றைக்கு காவிரி தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு, பெரியாறு நீர் மட்டம் உயர்த்த கேரளா எதிர்ப்பு, ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே அணைகட்ட முனைப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் உதாசீனப்படுத்தி விட்டு இந்திய ஒருமைப்பாட்டை கேலி கூத்தாக்கிவரும் அவலத்தை அற்புதமாக விளக்கிடும் அழகிய ஹைக்கூ

கண்ட இடங்களில் துப்பாதீர்கள்

இங்கே இங்கே துப்புங்கள்

ஒருமைப்பாடு பேசுவோர் முகம்

இடி மின்னலைப் போல அதிர்வுகளை ஏற்படுத்தும் ஹைக்கூகளின் அணிவரிசை கரந்தடி.இருபத்தி ஒறாம் நூற்றாண்டிலும் தீண்டாமை சுவர்கள் அதனை இடித்து விட்டால் போராட்டங்கள்.இவற்றை விளக்கும் மூலத்தின் மூலவேரை ஆட்டிப் பார்க்கும் அற்புத ஹைக்கூ.

தொட்ட…

தானாய் கழிந்தது பொழுது (நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி)

படம்
தானாய் கழிந்தது பொழுது

(நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி)


நூல் ஆசிரியர் - இரா.ஆனந்தி


சங்க காலத்தில் நிறையப் பெண்பாற் புலவர்கள் இருந்தார்கள்.அவ்வையார் என்ற பெயரில் பலர் இருந்ததாக சொல்கிறனர்.பெண் கவிஞர்கள் இன்று குறைவாகவே இருக்கின்றனர்.ஆணாதிக்க உலகில் பெண் கவிஞர்கள் வெளிவருவதற்கு நிறைய தடைகள் உள்ளது என்பதும் உண்மை. அப்படிப்பட்ட தடைகளை எல்லாம் தகர்த்து பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இரா.ஆனந்தி, இந்த நூலை மகாகவி பாரதிக்கு காணிக்கையாக்கியிருப்பது மிகச்சிறப்பு. மிகப்பொருத்தமாக திரு.வெ.சுப்பிரமணிய பாரதி என்ற பெயர் உடையவரிடமே அணிந்துரை வாங்கி இருப்பது இன்னும் பொருத்தமாக உள்ளது.

இந்நூலில் ஹைக்கூ புதுக்கவிதை, மரபுக்கவிதை என பல்சுவை விருந்தாக முத்தாய்ப்பாக தனி முத்திரை பதித்து உள்ளார். முதல் ஹைக்கூ கவிதையை பாருங்கள். இதை படித்தவுடனேயே நூல் முழுவதையும் வாசிக்க வேண்டுமென்ற ஆவல் பிறக்கின்றது. உடன் ஒரே மூச்சில் கவிதைகளை ஆர்வமாக படித்து விடுகின்றோம்.

கவிதை எழுதினீர்களா?
உம். எழுதினேன்
உன் பெயரை!

இவருடைய ஹைக்கூ கவிதைகள் நம் சிந்தனையில் சிறு மின்னலை ஏற்படுத்துவது உண்மை என்பதை நீங்கள் உணர இதோ அவரது ஹைக்கூ கவிதைகள…

குறிஞ்சிப் பூக்கள்விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
குறிஞ்சிப் பூக்கள் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் வீ.தங்கராஜ்
குறிஞ்சிப் பூக்கள், என்ற பெயருக்கு ஏற்றபடி உள்ளது கவிதைகள், மலரைப் பிடிக்காதவர்கள் யாருமில்லை. குறிப்பாக பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே அபூர்வமாக பூக்கும் அழகிய குறிஞ்சி மலர் போலவே கவதைகள் அற்புதமாக உள்ளன. சிலருக்குத்தான் கவிதை எழுதத் தெரியும். வெகுசிலருக்குத்தான் எழுதிய கவிதைகளை நூலாக்கும் துணிவும், வசதியும் வாய்க்கும். படைப்புலகில் தொடர்ந்து இயங்கிவரும் படைப்பாளி நூலாசிரியர் கவிஞர் வீ.தங்கராஜ் இனிய படைப்பாளி. அது போல நூலாசிரியரும் இலக்கியதாகம் கொண்டு செயல்பட்டு வருபவர். இவருக்கு காரணப்பெயர் என்றே கருதுகின்றேன். தங்கமான கவிதைகளைப் படைப்பதில் இவர் இராசா என்ற காரணத்தால் தான் இவருக்கு இவரது பெற்றோர்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் தங்கராஜ் என பெயரிட்டார்களோ? என எண்ணுகின்றேன். கலைமாமணி கவிப்பேரரசு டாக்டர் பழனி இளங்கம்பன் அவர்கள் மரபுக்கவிதையும் அருவியாக கொட்டுவார். ஹைக்கூ கவிதையும் சிற்பம் போல செதுக்குவார். பல்துறை வித்தகரின் அணிந்துரை இந்நூலுக்கு மகுடம் போல உள்ளது. முனைவர் கவிஞர் சிற்பி. பால சுப்பிரமணி…
படம்
Feathered Festoons தமிழ் ஹைக்கூ கவிஞர் கவிமுகில்
ஆங்கில மொழி பெயப்பு ஹைக்கூ முனைவர் ராமகுருநாதன்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி தேமதுரத்தமிழோசை உலகெல்லாம் பரவச் செய்ய வேண்டும் என்ற மகாகவி பாரதியின் ஆசையை ப+ர்த்தி செய்து வந்துள்ள இனிய நூல். புகழ் பெற்ற ஹைக்கூ கவிதைகளை எழுதுவதில் வல்லவர் கவிஞர் கவிமுகில். இவர் ஒரு சகலகலா வல்லவர் மரபும் தெரியும் பதுக்கவிதையும் தெரியும் ஹைக்கூ வரும் கவிதையும் எழுதவரும் திரைப்படப்பாடலும் எழுதுவார் மகிழுந்து நிறுவனத்தையும் சிங்காரச் சென்னையில் திறம்பட நடத்துபவர். பன்முக ஆற்றலாளர் இவர். தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அந்நியர்களும் அறிந்து கொள்ளும் அற்புதமாக வடிவமைத்து இருக்கிறார்கள்.

கவிஞர் கவிமுகில் எழுதிய மிகச்சிறந்த ஹைக்கூ கவிதைகள தேர்ந்தெடுத்து அவற்றை பேராசிரியர் இராம.குருநாதன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருக்கிறார். பேராசிரியருக்கு ஹைக்கூ பற்றி நல்ல புரிதல் இருக்கின்ற காரணத்தால் ஹைக்கூ ஆய்வாளர். காகித்ய அகதெமி உறுப்பினர் என்ற பல்வேறு தகுதிகள் இருப்பதனால் ஹைக்கூவின் மூலத்தில் உள்ள கருத்தை உணர்வை அப்படியே பதிவு செய்துள்ளார்.

மொழி பெயர்ப்பு…

பார்த்து மகிழுங்கள் கன்னிக்கோயில் ராஜா வலைப்பூ

http://kannikovilraja.blogspot.com/
பார்த்து மகிழுங்கள் கன்னிக்கோயில்
ராஜா வலைப்பூ

ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி

ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி ஏவுகணை சோதனை வெற்றி
விலைவாசி குறைப்பில் படு தோல்வி
இந்தியா

அறிவு விளக்கை அணைத்து விட்டு
அணையா விளக்கு
காமராசருக்கு

தூரத்தில் தர்ம தரிசனம்
அருகில் நடப்பது
அதர்ம தரிசனம்

இலஞ்சம் ஒழிப்பவரே
இலஞ்சம் வாங்கி கைது
காவல்துறை

ஏறும் விலைவாசி
இறக்கிட யோசி
மக்கள் விருப்பம்

அன்று ஊறுகாய்
இன்று சாப்பாடு
திரைப்படங்களில் ஆபாசம்

நாட்டில் ஓடியது
தேனும் பாலும்
திருப்பதிக்கு தங்கக் கோபுரம்

பேச ஆரம்பித்தனர்
மதுவிலக்கு
அருகில் தேர்தல்

வெற்றி பெற்றன
ஊடகங்கள்
பண்பாட்டுச் சீரழிப்பில்

போதித்தன
மிருக குணம்
தொ(ல்)லைக்காட்சித் தொடர்கள்

குடிபோதையில்
குடும்பத்தலைவன்
தள்ளாடும் குடும்பம்

வந்தாரை வாழ வைத்தே
வீடு இழந்தவன்
தமிழன்

கூழ் இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
வாழ்க இந்தியா

சக நடிகர் கைது
கண்டிக்காத திரைஉலகம்
சுயநலவாதிகள்

தன்னம்பிக்கை ஹைக்கூ

தன்னம்பிக்கை ஹைக்கூ
*

வாழ்க்கைத் தத்துவம்
யானைக்குத் தும்பிக்கை
மனிதனுக்கு தன்னம்பிக்கை!
இமயம் செல்லலாம்
இரு கால்களும் இன்றி
தன்னம்பிக்கை இருந்தால்
முடியாதது முடியும்,
நடக்காதது நடக்கும்
தன்னம்பிக்கை இருந்தால்…
தாழ்வு மனப்பான்மையை தகர்த்து
தன்னம்பிக்கையை நிறுத்து
வெற்றி பெற
வெற்றியை
வெறியோடு சாதிக்க
துணை தன்னம்பிக்கை!
வயது தடையல்ல!
எந்த வயதிலும்
புரியலாம் சாதனை.
உடல் ஊனம்
அகற்றிடும்
தன்னம்பிக்கை.
உள்ளத்து ஊனம்
தகர்த்திடும்
தன்னம்பிக்கை
குறைந்த காரணத்தால்
மலிந்தது குற்றங்கள்
தன்னம்பிக்கை
உருவம் இல்லாத உறுப்பு,
உள்ளத்தில் இருப்பதே சிறப்பு
தன்னம்பிக்கை
இழந்தவன் வீழ்வான்
இருப்பவன் வெல்வான்
தன்னம்பிக்கை
தென்னைக்குத் தெரியாது
இளநீரின் சுவை
திறமையறியா இளைஞர்கள்
மனதில் தீ வேண்டும்,
திட்டமிட வேண்டும்
புரியலாம் சாதனை
கவிஞர் இரா. இரவி

மலர் மதிப்புரை :முனைவர்.ச.சந்திரா

படம்
← Older posts மலர் மதிப்புரை :முனைவர்.ச.சந்திராPosted onஅக்டோபர் 16, 2010byeraeravi நூல் :மணி விழா மலர்
முனைவர்இரா.மோகன்,முனைவர் நிர்மலா மோகன்
பதிப்பாசிரியர்கள் :கவிஞர் இரா.இரவி
முனைவர்.வனராசா இதயகீதன்
மலர் மதிப்புரை :முனைவர்.ச.சந்திராஈரைந்து மாதங்கள் ஆகும் ஒரு கரு உலகத்தை தரிசிக்க
ஓரைந்து மாதங்களில் ஒர் உன்னத மலர் இலக்கிய உலகில் பூத்துள்ளது.”சும்மா இருப்பதே சுகம் ” -என்று மனிதர்கள் பொழுதைப்போக்கும் இக்காலத்தில் சுற்றியிருப்போர் ஏந்துபுகழெய்த முனைப்புடன் செயல்பட்டு அனுபவ மலர்களை அபூர்வ மாலையாகத் தொடுத்த பதிப்பாசிரியர்களாம் கவிஞர் இரா.இரவி அவர்களுக்கும் முனைவர் இதய கீதன் அவர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களின் சார்பாய் மனமார்ந்த பாராட்டுக்கள்.
மலருக்குள் மலர் :
தெள்ளுதமிழ் பேசும் தென்பாண்டி நாட்டில் இலக்கிய தென்றலாய் உலா வரும் இணையரது மணிவிழா மலர் தனக்கு மட்டுமில்லாமல் தரணிக்கே நறுமணம் பரப்பும் தாழைமலர்.இணையரின் பண்புநலன்கள் ஒளிர்விடும் பொழுதில் இது பாரிஜாதமலர்.பட்டிமன்ற அனுபவங்கள் சொல்லும் வேளையில் இது இரவிலும் மின்னிடும் நிஷாகந்தி மலர்.உள்ளத்திற்கு மருந்தாய் மகிழம்பூ போல அறிவுறு…

இதயத்தில் ஹைக்கூ

படம்
இதயத்தில் ஹைக்கூ
நீளம் சக்கரமானது
தொட்டது சுருண்டது
ரயில் பூச்சி

எருக்கம் பூ
ரோசாப்பூ
பேதமின்றி ஆதவன்

முதலிடம் தமிழகம்
முட்டாள் தினத்தில்
அட்சயதிரிதியில் தங்கம்

வென்றாள் கண்ணகி
சிலப்பதிகாரத்திலும்
சிலை அதிகாரத்திலும்

எதுவும் செய்வான்
செய்யாமலும் இருப்பான்
அவளுக்காக-கவிஞர் இரா.ரவி

படித்து மகிழுங்கள்

படம்
-- படித்து மகிழுங்கள்
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com

காடு அதை நாடு

காடு அதை நாடுகாடு அதை நாடு அங்குள்ளவிலங்குகளை வதைக்காமல் நாடுமரங்களை வெட்டாமல் நாடுநோய் நீங்க காடு செல்சுடுகாடு செல் வதைத் தள்ளிப்போடகாடு செல்மன அழுத்தம் குறைய வனம் செல்மகிழ்ச்சி மனதில் பெருக வனம் செல்கோபம் தணித்து சாந்தி பெற வனம் செல்கள்ளம் கபடம் ஒழிய வனம் செல்இயற்கை ரசிக்க வனம் செல்செயற்கை மறந்து களிப்புற வனம் செல்உடலுக்கு சுகம் பெற வனம் செல்உள்ளத்திற்கு வளம் பெற வனம் செல்அரிய விலங்குகளை அறிய வனம் செல்அற்புத உயிரினங்களைத் தெரிய வனம் செல்துன்பங்களை மறந்து மகிழ்வுற வனம் செல்துயரங்களைத் துறந்து துணிவு பெற வனம் செல்மரங்களின் மகத்துவம் அறிய வனம் செல்அறங்களின் மேன்மை புரிய வனம் செல்-- அன்புடன் கவிஞர் இரா .இரவிwww.eraeravi.comwww.kavimalar.comeraeravi.wordpress.comeraeravi.blogspot.com

புதிய ஹைக்கூ - கவிஞர். இரா.இரவி

புதிய ஹைக்கூ - கவிஞர். இரா.இரவி
மனம் வருந்தியது
விணாய் போனதற்கு
திருஷ்டி பூசணி

ஓராயிரம் பொருள் கிடைக்கும்
உற்று நோக்கினால்
படைப்பதற்கு

மேடுகளைத் தகர்த்து
பள்ளம் நிரப்பு சமத்துவம்
பொதுவுடமை

விழி இரண்டு போதாது
வனப்பை ரசிக்க
வண்ண மலர்கள்

ஒய்வதில்லை
விண்ணும் மண்ணும் அலையும்
ஒய்ந்திடும் மனிதன்

வெட்ட வெட்ட
வளரும் பனைமரம்
பாராட்ட வளரும் குழந்தை

குடியால் கோடிகள் திரட்டி
கோடித் துணி தந்தனர்
ஏழைகளுக்கு

புதிய பொருளாதாரம்
கல்வி தனியார் மயம்
மது அரசுமயம்

உருவமின்றியும்
தேசப்படுத்தியது வாழையை
காற்று

அன்றே அநீதி
ஆண்களுக்கு கை சிலம்பு
பெண்களுக்கு கால் சிலம்பு

இருப்புப் பாதையில்
இருப்பின்றி பயணம்
தொடர் பயணம்

கழிவுநீர் உறிஞ்சி
இளநீர் தரும்
உயர்ந்த தென்னை

யார் உயர் திணை
மோதி விழும் மனிதன்
கூடி வாழும் பறவைகள்

விளைவித்தன கேடு
கண்ணிற்கும் மனதிற்கும்
தொல்(ல்) லைக்காட்சிகள்

தரம் தாழ்ந்தால்
களையாகும்
கலை

மாடு செரிப்பதற்கும்
மனிதன் மகிழ்வதற்கும்
உதவிடும் அசைபோடுதல்

போராட்டம் நடிப்பு அரசியலில்
பேராட்டமே வாழ்க்கை
ஏழைகளுக்கு

கண்ணிற்கு குளிர்ச்சி
மனதிற்கு மகிழ்ச்சி
இயற்கை

மனம் வருந்துவதில்லை
மங்கையர் சூடாததற்கு
எருக்கம் பூக்கள்

சாலை மூடியதும்
மரியாதை செ…

தமிழா நீ பேசுவது தமிழா ( கவிஞர் இரா.ரவி )

தமிழா நீ பேசுவது தமிழா ( கவிஞர் இரா.ரவி )
தமிழா நீ பேசுவது தமிழா?
தமிங்கிலம் நீ பேசுவது அழகா?

உணவுக் கலப்படம் உடலுக்குக் கேடு
மொழிக் கலப்படம் மொழிக்குக் கேடு

என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில்
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்

தமிழைப் பிழையின்றித் தமிழாகவேப் பேசு
தமிழில் பிறமொழி கலந்து பேசக் கூசு

தொலைக்ககாட்சியில் தினமும் தமிழ்க்கொலை நடக்குது
தொல்லைக்காட்சி நிலை காண நெஞ்சம் கொதிக்குது

பத்துச் சொற்களில் இரு சொல் தமிழ்
பெயரோதமிழ் மாலை என விளம்பரங்கள்

தமிழா உன் அடையாளம் தமிழ்
தமிழ் சிதைந்தால் தமிழன் சிதைவான் உணர்

தமிழா உன் முகவரி தமிழ்
தமிழ் அழிந்தால் தமிழன் அழிவான் எழு

நமக்கென்ன என்று நீ இருந்து விட்டால்
நாளைய வரலாறு உன்னைப் பழிக்கும்

உலகின் முதன்மொழி தமிழ்மொழி
உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி

பிறமொழிகலந்து பேசுவதை விட்டுவிடு
பண்டைத் தமிழ்மொழிக் காத்திட நீ விழித்திடு

செம்மொழி நம் மொழி சிறப்பை உணர்ந்திடு
செந்தமிழ்மொழி காக்க உடன் அணிவகுத்திடு

மாற்றுத் திறன் படைத்தோரின் மனசு -கவிஞர்.இரா.இரவி

மாற்றுத் திறன் படைத்தோரின் மனசு -கவிஞர்.இரா.இரவி
கலக்குவோம் கலக்குவோம் இந்த
உலகத்தையே கலக்குவோம் நாங்கள்

மாற்றுத்திறன் படைத்தோர் நாங்கள் உலகில்
மட்டற்ற சாதனை படைத்திடுவோம் என்றும்

கை கால் குறையின்றி நாளும்
உழைக்காமல் உண்ணும் சோம்பேறிகள் உண்டு

கை கால் குறையிருந்தும் என்றும்
உழைக்காமல் உண்பதில்லை நாங்கள்

பார் புகழ்ந்திட உழைப்போம் நாங்கள்
பரிசுகள் பல வெல்வோம் நாங்கள்

கவலைக்கு இடம் கொடுப்பதில்லை நாங்கள்
கலை வளர்க்கவும் தவறுவதில்லை நாங்கள்

ஆடுவோம் பாடுவோம் என்றும்
ஆனந்தக் கூத்தாடுவோம் நாங்கள்

கருணை கேட்கவில்லை நாங்கள்
கனிவோடு நடத்திடுங்கள் நீங்கள்

உடல்குறை குறையே அன்று
உள்ளத்தின் குறையே பெரும் குறையாகும்

குறையை குறையாக நினைப்பதில்லை நாங்கள்
குறையையும் நிறையாக நினைப்பவர்கள் நாங்கள்

பிறக்கும் போதும் குறை உண்டு
பிறந்த பின்னும் குறை உண்டு

கல்வியிலும் படைத்தோம் பல சாதனை
விளையாட்டிலும் வென்றோம் கடந்தோம் சோதனை

சகலகலா வல்லவர்கள் உண்டு எங்களில்
நடனக் கலைஞர் மறைந்த குட்டியும், வாழும் சுதாசந்திரனும் எங்களினம்

பார்வையின்றி பார் புகழ வாழ்கின்றார் பலர்
பார்வை இருந்தும் பயனற்று வாழ்ளகின்றார் பலர்

மண்ணுக்கும் தீயுக்கும்…

விலங்கு - இரா.இரவி

படம்
விலங்கு - இரா.இரவிவிலங்கு என்று விரட்டாதே
வீண்பழி அதன்மேல் சுமத்தாதே

தேனைச் சேர்ப்பது தேனியாகும்
தேனைச் சிதைப்பது நீயாகும்!

இறைச்சி உண்பதில்லை ஆடு
இறைச்சியே உனக்கு ஆடு!

நீயும் மானும் ஓடிப்பார்
நிச்சியம் தோற்பாய் நினைத்துப்பார்

கொடியது பாம்பு என்றாலும்
கடிக்காது நீ அதைச் சீண்டாமல்

பாலைவனக் கப்பல் ஒட்டகமே
பாதை கடப்பது அதன் இனிமே!

நீரை விடுத்துப் பாலை அருந்தும்
நிறைந்த மதியுடைய அன்னம்

நினைத்ததை உன்னால் மறப்பதாலே
நீ அல்ல நிறைமதி அன்னம்

எறும்பின் வேகத்தை உற்றுப்பராது
எதிர்காலம் சேமிக்கும் குணத்தைப்பார்

சினைமாடு என்று தெரிந்துவிட்டால்
காளைமாடு சற்றே ஒதுங்கிவிடும்

மாற்றம் வேண்டும் - கவிஞர்.இரா.ரவி

படம்
மாற்றம் வேண்டும் - கவிஞர்.இரா.ரவிஏழைகளின் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும்
இன்னல்கள் யாவும் தீர்ந்திட வேண்டும்

பன்னாட்டு நிறுவனங்கள் விரட்டப்பட வேண்டும்
பாட்டாளியின் கரங்கள் உயர்த்தப்பட வேண்டும்

அரசியலில் ஊழல் அகற்றப்பட வேண்டும்
அரசியலில் நேர்மை விதைக்கப்பட வேண்டும்

உழவனின் உழைப்பு போற்றப்பட வேண்டும்
உழவுத் தொழில் மதிக்கப்பட வேண்டும்

ஏற்றத் தாழ்வுகள் தகர்க்கப்பட வேண்டும்
ஏங்கும் சமநிலை ஏற்படுத்தப்பட வேண்டும்

பண்பாட்டுச் சீரழிவு தடுக்கப்பட வேண்டும்
பண்பில் சிறந்தோராக மாற்றப்பட வேண்டும்

சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்திட வேண்டும்
சந்தோச வாழ்க்கை பரவலாக்கப்பட வேண்டும்

சாதிமத சண்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்
சகோதர உணர்வுகள் மலர்ந்திட வேண்டும்

எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திட வேண்டும்
இல்லாதோர் இல்லை என்றாக்கிட வேண்டும்

மூடநம்பிக்கைகள் முற்றாக தடை செய்திட வேண்டும்
மூளையை பகுத்தறிவிற்கு பயன்படுத்திட வேண்டும்

ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடியல் வேண்டும்
இனவெறி பிடித்த சிங்களர்கள் திருந்திட வேண்டும்

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக தடுக்கப்பட வேண்டும்
ஏழைகள் மேலும் ஏழைகளாவது நிறுத்தப்பட வேண்டும்.

புவி வெப்பமயமாதலைத் தடுப்போம் - கவிஞர் இரா.இரவி

படம்
புவி வெப்பமயமாதலைத் தடுப்போம் - கவிஞர் இரா.இரவிகாந்தியத்தைக் கடைபிடித்தால் நலம் பயக்கும்
கைத்தொழில் பெருகுதல் வளம் சேர்க்கும்

மின்சார பயன்பாட்டை குறைத்திட வேண்டும்
மனித ஆற்றலைiயே பெருமளவு பண்படுத்திட வேண்டும்

எரிபொருள் சிக்கனம் என்றைக்கும் வேண்டும்
எண்ணெய் வளம் வருங்காலத்திற்கும் வேண்டும்

மரம் வெட்டுதல் தடை செய்திட வேண்டும்
மரம் வளர்த்தல் கடமையாக்கிட வேண்டும்

சுற்றுச்சூழல் மாசு இன்றி காத்திட வேண்டும்
சுகாதாரமான காற்றை சுவாசித்திட வேண்டும்

இயற்கையை இயற்கையாக இருக்க விட வேண்டும்
இயற்கையை இல்லாமலாக்குவதை நிறுத்திட வேண்டும்

செயற்கையை முடிந்தளவு அகற்றிட வேண்டும்
செயல்கள் மனிதனால் நடந்திட வேண்டும்

விவசாய உற்பத்தியை பெருக்கிட வேண்டும்
விசம் கக்கும் தொழில்கள் நிறுத்திட வேண்டும்

இயற்கை உரங்களை பயன்படுத்திட வேண்டும்
இரசாயண உரங்களை தவிர்த்திட வேண்டும்

உடலுக்கும் உலகிற்கும் நலம் மிதிவண்டி
உலகம் செழிக்க குறைப்போம் விசைவண்டி

மகத்தானது மனித ஆற்றல் உணர்ந்திடுவோம்
மாசுக் கட்டுப்பாட்டிற்கு உதவிகள் புரிந்திடுவோம்

வெப்பமயமாதலைத் தடுக்க எல்லோரும் உதவிடுவோம்
வெப்பமாகும் செயல்களை உடன் நிறுத்திடுவோம்

எங்கும் இயந்திரமயமா…

ஹைக்கூ - கவிஞர் இரா.இரவி

படம்
ஹைக்கூ - கவிஞர் இரா.இரவி நல்ல விளைச்சல்
விளை நிலங்களில்
மகிழ்ந்து நிறுவனங்கள்

கத்துக்குட்டி உளறல்
நதிநீர் இணைப்பு
எதிர்ப்பு

நல்ல முன்னேற்றம்
நடுபக்க ஆபாசம்
முகப்புப் பக்கத்தில்

இன்று குடிநீர்
நாளை சுவாசக்காற்று
விலைக்கு வாங்குவோம்

பெட்டி வாங்கியவர்
பெட்டியில் பிணமானவர்
பிணப்பெட்டி

உணவு சமைக்க உதவும்
ஊரை எரிக்கவும் உதவும்
தீக்குச்சி

நடிகை வரும் முன்னே
வந்தது
ஒப்பனை பெட்டி

தனியார் பெருகியதால்
தவிப்பில் உள்ளது
அஞ்சல் பெட்டி

தாத்தா பாட்டியை
நினைவூட்டியது
வெற்றிலைப்பெட்டி

நகைகள் அனைத்தும்
அடகுக் கடையில்
நகைப்பெட்டி?

மூடநம்பிக்கைகளில்
ஒன்றானது
புகார்ப்பெட்டி

brilliant art

படம்
நன்று நன்றி
prasannam narayanaswamyசிந்திப்பாயா? இரா .இரவி

சிந்திப்பாயா?

அலகு குத்தி பால்குடம் எடுத்து
தீச்சட்டி ஏந்தி ரத யாத்திரை நடத்தி
கட்டவுடிற்கு பாலபிசேகம் செய்து
திரை அரங்கில் நுழைந்த ரசிகனிடம்
திரை அரங்கின் பணியாளர் சொன்னார்
ருபாய் ஐநூறு கொடு டிக்கட்
இல்லாவிட்டால் கெட் அவுட்

மனிதனாக வாழக் கற்றுக் கொடுங்கள் இரா .இரவி

மனிதனாக வாழக் கற்றுக் கொடுங்கள்

சட்டக் கல்லூரி சண்டியர்கள் கல்லூரி ஆனது
பொறியியல் கல்லூரி மதி இலார் கல்லூரி ஆனது
கலைக் கல்லூரி களைகளின் கல்லூரி ஆனது
கல்வி கற்பிப்பது இருக்கட்டும் முதலில்
மனித நேயத்தோடு மனிதனாக வாழக் கற்றுக் கொடுங்கள்--
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com

கவிஞர் இரா .இரவி

படம்

காந்தியடிகள் ஹைக்கூ

காந்தியடிகள் ஹைக்கூ

அகிம்சையை உணர்த்திய
அறிவு ஜீவி
காந்தியடிகள்

ரகசியம் இல்லாத
அதிசய மாமனிதர்
காந்தியடிகள்

கொண்ட கொள்கையில்
குன்றென நின்றவர்
காந்தியடிகள்

திருக்குறள் வழி
வாழ்ந்த நல்லவர்
காந்தியடிகள்

சுட்ட கொடியவனையும்
மன்னித்த மாமனிதர்
காந்தியடிகள்

உலகம் வியக்கும்
ஒப்பில்லாத் தலைவர்
காந்தியடிகள்

வன்முறை தீர்வன்று
வையகத்திற்கு உணர்த்தியவர்
காந்தியடிகள்

நெஞ்சுரத்தின் சிகரம்
நேர்மையின் அகரம்
காந்தியடிகள்

அரை ஆடை அணிந்த
பொதுஉடைமைவாதி
காந்தியடிகள்

வெள்ளையரின்
சிம்ம சொப்பனம்
காந்தியடிகள்

மனித உரிமைகளின்
முதல் குரல்
காந்தியடிகள்

அமைதியின் சின்னம்
அடக்கத்தின் திரு உருவம்
காந்தியடிகள்

அன்றே உரைத்தவர்
உலக மயத்தின் தீமையை
காந்தியடிகள்

மனிதருள் மாணிக்கம்
மாமனிதருக்கு இலக்கணம்
காந்தியடிகள்

-- அன்புடன் கவிஞர் இரா .இரவிwww.eraeravi.comwww.kavimalar.comeraeravi.wordpress.comeraeravi.blogspot.com