கரந்தடி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12bbdfe7ddfcd19d&attid=0.3&disp=inline&realattid=f_gfeyfs4p2&zw
கரந்தடி

மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் : கவிஞர் புதுமை சீனு தமிழ் மணி


நூலின் அட்டைப்பட ஓவியமே அசத்தலாக உள்ளது. நன்றி பெயர் பட்டியல் ஆசிரியரின் நன்றி உணர்வுக்கு எடுத்துக்காட்டு. கரந்தடி பற்றிய விளக்கம் நன்று. முதல் ஹைக்கூ மறைந்திருந்து அடிக்கும் அடியாக கரந்தடியாக உள்ளது.

மாந்த நேய எதிரிகளே

கரந்தடியா

துளிப்பா

நூலில் உள்ள நவீன ஓவியங்கள் சிறப்பாக உள்ளன. நூலின் தரத்தை மேலும் கூட்டும் விதமாக ஓவியங்கள் இன்றைக்கு காவிரி தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு, பெரியாறு நீர் மட்டம் உயர்த்த கேரளா எதிர்ப்பு, ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே அணைகட்ட முனைப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் உதாசீனப்படுத்தி விட்டு இந்திய ஒருமைப்பாட்டை கேலி கூத்தாக்கிவரும் அவலத்தை அற்புதமாக விளக்கிடும் அழகிய ஹைக்கூ

கண்ட இடங்களில் துப்பாதீர்கள்

இங்கே இங்கே துப்புங்கள்

ஒருமைப்பாடு பேசுவோர் முகம்

இடி மின்னலைப் போல அதிர்வுகளை ஏற்படுத்தும் ஹைக்கூகளின் அணிவரிசை கரந்தடி.இருபத்தி ஒறாம் நூற்றாண்டிலும் தீண்டாமை சுவர்கள் அதனை இடித்து விட்டால் போராட்டங்கள்.இவற்றை விளக்கும் மூலத்தின் மூலவேரை ஆட்டிப் பார்க்கும் அற்புத ஹைக்கூ.

தொட்டால் பார்த்தால் அண்டினால்

தீட்டு தீட்டு தீட்டு

தீட்டு கத்தியை

தமிழன் மிகவும் ஏமாளியாக எனக்கென்ன என்று இருக்கும் சோம்பேறியாக இருப்பதற்கு கண்டனத்தைப் பதிவு செய்யும் நல்ல ஹைக்கூ

மூன்று முறை முகத்தில் குத்தினால்

புத்தருக்கும் சினம் வரும்

வரவில்லை தமிழனுக்கு

கொடியது ஏழ்மை, பசி கொடிதிலும் கொடிது. பசியோடு இருக்கும் போது ரசனைக்கும் வேலை இல்லை என்பதை பறைசாற்றிடும் ஹைக்கூ

சுவைக்கவில்லை

குயில் பாட்டு

பசி

நம் நாட்டில் குடியிருக்க அம்பானிகள் கோடிக்கணக்கில் வீடு கட்டுவதும், நடைபாதையில் கூட படுக்க வழியின்றி விரட்டியடிக்கப்படும் ஏழைகள் நிரம்பி வழிவதும்,

இந்த முருண்பாட்டை சுட்டிக் காட்டும் பொதுவுடமை ஹைக்கூ,

எரிவது அடுப்பில்லை

ஏழைகளின் வயிறு

தனியுடைமை

செருப்பு விலையும் ஏறிவிட்டது என்பதை நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தும் சிறந்த ஹைக்கூ

காலை மட்டுமல்ல

கையையும் கடித்தது

புதுச் செருப்பு

இப்படி ரசிக்கக் கூடிய சிந்திக்க வைக்கக் கூடிய மிகச் சிறந்த ஹைக்கூ கவிதைகளின் அணிவகுப்பு இந்நூல்.நகைத்துளிப்பாக்கள் சென்ரியுக்கள் நம்மை உண்மையிலலேயே நகைக்க வைக்கின்றன. அது தான் நூலின் வெற்றி

இந்தி பேசினால் இந்தியன்

ஆங்கிலம் பேசினால்

அவன் தமிழன்

இன்றைக்கும் நமது தமிழர்கள் அந்நிய மொழியான ஆங்கிலத்தில் பேசுவதைப் பெருமையாகக் கருதிடும் அவலநிலை தொடர்வதைப் பார்க்கிறோம். ஹைக்கூ

கவிதைகளும் இந்நூல் உள்ளது. எல்லா வகை துளிப்பாக்களின் சங்கமம் இந்நூல். எல்லா வகையிலும் சிறப்பாக படைத்துள்ள படைப்பாளி நூல் ஆசிரியர் திரு.புதுவை சீன தமிழ்மணி பாராட்டுக்குரியவர், ஹைக்கூ ஆய்வாளர்களுக்கு இந்நூல் பாடப்புத்தகம் என்றால் மிகையன்று

கரந்தடியில் பகுத்தறிவு கருத்துக்கள் உள்ளன. மூடநம்பிக்கைச் சாடல் உள்ளது. அரசியல் எள்ளல் உள்ளது. காலத்தின் வரலாற்றுப்பதிவு இலக்கியம். இன்றைய வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் சுக துக்கங்கள் வலிகள், உணர்வுகள் ஆகியவற்றின் சிறப்பான பதிவாக கரந்தடி உள்ளது. ஹைக்கூ பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்கும் புரிதலை ஏற்படுத்துகின்றது. படிக்கின்ற வாசகர்கள் அனைவருக்கும் எளிமையாக புரியும் வண்ணம் எல்லா ஹைக்கூவும் இருப்பது நுலின் தனிச்சிறப்பு, ஹைக்கூ, லிமரைக்கூ, ஐபுன்கள், சென்ரியு, ஹைக்கூ அந்தாதி என ஹைக்கூவில் எத்தனை வடிவங்கள் உள்ளதோ அத்தனை வடிவிலும் கவிதை படைத்து இருப்பது நூலாசிரியன் திறமைக்கு எடுத்துக்காட்டு

மதக்கலவரங்கள் சாதிக்கலவரங்கள் நாட்டில் அமைதியை சீர் குலைத்து வருவதுமன்றி மனித உயிர்களையும் பலி வாங்கித வருகின்றது

வேண்டாம் என்கிறோம் மதம்

மிடித்து அலைந்து திரிகின்றனர்

அழியப் போகின்றனர் நிதம்

இது போன்ற முற்போக்குக் கருத்துக்களும் கருத்தாழம்மிக்க கவிதைகளும் நிறைய உள்ளது. இது ஹைக்கூ காலம் என்று சொல்லுமளவிற்கு இன்று பரவலாக ஹைக்கூ எல்லோராலும் வாசிக்கப்படுகின்றது. ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் மிகச்சிறந்த படைப்பாளி நூலாசிரியர் ஹைக்கூ கவிதையை கிண்டல் செய்து கேலி பேசியவர்களின் கன்னத்தில் அரையும் விதமாக இந்நூல் வந்துள்ளது. ஹைக்கூ பற்றிய உயர்வான எண்ணத்தை வாசகர்களின் உள்ளத்தில் உருவாக்கும் விதமாக உள்ளது. இந்நூல் படித்து முடித்தவுடன் நமது உள்ளம் அசைபோடும் கருத்துக்கள் தான் இந்நூலின் வெற்றி.

இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கின்றது கரந்தடி. கரந்தடி எதிரிகளை கவிதைகளால் தாக்கும் கைத்தடி.

கருத்துகள்