இதுதாண்டா காங்கிரஸ் கவிஞர் இரா .இரவி


இதுதாண்டா காங்கிரஸ் கவிஞர் இரா .இரவி

கட்சிக் கொடியையே தலைகீழாகக்
கம்பத்தில் கட்டிடும் தொண்டர்கள்

மனைவியின் படிவத்தை திட்டமிட்டே
தவறாக எழுதிடும் மாநிலத்தலைவர்

சூரியன் உதிக்க மறந்தாலும்
கோஷ்டிச் சண்டை நடத்த மறப்பதில்லை

கடலில் அலைகள் ஒய்ந்தாலும்
காங்கிரஸ் கோஷ்டிப் பூசல் ஓயாது

வேஷ்டி கிழியும் மண்டை உடையும்
வேறு எங்குமில்லை கட்சி அலுவலகத்தில்

காமராசர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லி
காமராசரைக் களங்கப் படுத்தும் பேச்சாளர்கள்

தேர்தல்நாள் வரை வேட்பாளர்கள் பெயர்
தினமும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்

தமிழே தெரியாத வடவர்கள் தான்
தமிழக அரசியல் பொறுப்பாளர்கள்

கவனித்தவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு
கக்கன் மருமகளுக்கே தராமல் ஏய்ப்பு

காந்தியடிகள் சொன்னபடி அன்றே கட்சியைக்
களைத்து இருந்தால் நாடுப் பிழைத்திருக்கும்

கருத்துகள்