இடுகைகள்

April, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை அல்ல விதை

படம்
சிகரம்வழங்கிய மதிப்புரை ; ( - - - - - - / சந்திரா மனோகரன்)கவிஞர் இரா.இரவியின் இலக்கியப் பயணத்தில் இது எட்டாவது மைல் கல் என்று அவரே தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அவருடைய இணையதளமான 'கவிமலர் டாட் காம்' -ல் பார்த்த இலட்சக்கணக்கான வாசகர்கள் பாராட்டிய கவிதைகளே இவை என்பது இன்னும் சிறப்பு. வித்தகக் கவிஞர் பா.விஜய் மற்றும் தமிழறிஞர் தமிழண்ணல் ஆகியோரின் அற்புதமான அணிந்துரைகள் இந்நூலினை மேலும் மெருகூட்டுகின்றன. 'ஹைக்கூவின் மறுபெயர்தான் இரவி' என்ற தமிழண்ணலின் பாரட்டுக்கு முற்றிலும் பொருத்தமானவர் தான் இந்நூலாசிரியர்.

தனது முதல் கவிதை குறளுக்கு அர்ப்பணம், தொடர்ந்து பாரதி (குடும்ப அட்டையில் 'எச்' முத்திரை குத்தியிருக்கமாட்டான், ஏன் தெரியுமா? / இன்றும் அவனது வருமானம் / அய்யாயிரத்திற்கும் கீழ்தான் இருந்திருக்கும். - பக்கம் 14 ) அப்புறம், பாரதிதாசன், நேதாஜி, காமராஜர், தெரசா என்று ... கவிதைத் தோரணம் நீளுகிறது. கலாம் அறிவுக்குச் சலாம் போடும் கவிதைப் புநையல்களில் மூழ்கிக் குளிக்கலாம். (கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே - பக்.34 ) அவரது குடும்பத்தின் மக்களையும் க…

இதயத்தில் ஹைக்கூ

படம்
தமிழ் ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகள்











இனிய நந்தவனம்வழங்கிய மதிப்புரை ; ( - - - - - - / பீர்முகம்மதுஹைக்கூ திலகம் எனப் பட்டம் பெற்ற கவிஞர் இரா.இரவியின் ஏழாவது ஹைக்கூ தொகுப்பு நூல் "இதயத்தில் ஹைக்கூ ". வினைபுரியும் வீரிய விதையாய் என்ற தலைப்பில் மு.முருகேஷ் அணிந்துரையும், ஹைக்கூவுக்கு அமுதென்று பேர் என்ற தலைப்பில் இரா.மோகன் அவர்கள் அணிந்துரையும் சிறப்பு. ஒவ்வொரு கவிதைக்கும் படங்கள் வைத்து கவிதையா, புகைப்படக் கண்காட்சியா என வியக்க வைக்கிறது 72 பக்கத்தில் 434 ஹைக்கூ கவிதைகளும். "அவள் நினைவலைகளில் நான், என் நினைவலைகளில் அவள் காதல் அலைவரிசை" என்ற கவிதையும், "இதழ் சொல்லும் விழிகள் சொல்லாது பொய்" என்ற காதல் ரசனைமிக்க வரிகள், "இனிக்கவில்லை வாழ்க்கை, கரும்பு நட்டத்தில் நட்டம்" என்ற விவசாயிகளின் கவலையின் வெளிப்பாடு, "அப்பா மது போதையில், அம்மா தொலைக்காட்சி போதையில், வாழ்க்கைப் போராட்டம் நடைபாதையில்" என சீரியல் மோகத்தை விளக்குகிறார். மதுரை ஆர்.ஆர். டிசைனர்ஸ் ஓவியமும் வடிவமைப்பும் புத்தகத்தை மேலும் மெருகூட்டுகின்றது.

நெஞ்சத்தில் ஹைக்கூ

படம்
தமிழ் ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகள்











புதிய காற்றுவழங்கிய மதிப்புரை ; ( - - - - / மு.செல்லா
கவிஞர் இரா.இரவியின் ஆறாவது கவிதைத் தொகுப்பு. ஏற்கனவே இவரது "விழிகளில் ஹைகூ" "உள்ளத்தில் ஹைகூ" என்ற இரண்டு ஹைகூ கவிதைத் தொகுதிகள் வெளியிடப்பட்டு சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன.

நவீன கவிதை வடிவங்களில் சிறியவர், பெரியவர், அதிகம் படித்தவர், ஓரளவே படித்தவர் என்ற பேதம் இன்றி அனைத்துத் தரப்பினராலும் பரவலாக வரவேற்று வாசிக்கப்படுபவை குறும்பா என்னும் ஹைகூ கவிதைகளாகும். ஆளமான செய்திகளையும் சுருக்கென்று ஒருசில வார்த்தைகளிலேயே நம்முள் பதிய வைத்துவிடுபவை என்பதால் இதற்கான வரவேற்பு நாட்டின் எல்லைக்ள தாண்டி மொழிகளைத்தாண்டி அமைந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை.

தமிழில் ஹைகூக்களின் மீதான சோதனை முயற்சி மிகச் சமீபத்திலானது என்றாலுமகூட வீரயம் மிக்க நல்ல கவிதைகள் அதிகம் தென்படத்துவங்கியுள்ளன. தமிழில் தேர்ந்த ஹைகூ கவிஞர்களில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர் இரா.இரவி. இவரது கவிதைகள் பல்வேறு மேடைகளில், இணைய தளங்களில், ஒருபடி மேலே போய் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம் பிடித்துள்ளதே இவரது க…

பார்வையற்றவர்கள்

பார்வையற்றவர்கள்புறப்பார்வை இரண்டு இல்லா விட்டாலும்
அகப்பார்வை ஆயிரம் பெற்றவர் நீங்கள்
சாதாரண வாழ்க்கை எங்களுக்கு
சாரனை வாழ்க்கை உங்களுக்கு
சராசரி மனிதர்கள் நாங்கள்
சரித்திர மனிதர்கள் நீங்கள்
வாழ்க்கையில் போராட்டம் உண்டு எங்களுக்கு
வாழ்க்கையே போராட்டம் உங்களுக்கு
நூறு கோடியில் சிறு புள்ளி நாங்கள்
கோடியில் ஒருவர் நீங்கள்
சிறு துன்பத்திற்க்கு கலங்கும் நாங்கள்
பெரும் துன்பத்திற்க்கு கலங்காதவர் நீங்கள்
வாழ்க்கையில் இருட்டு என வருந்துபவர் நாங்கள்
இருட்டே வாழ்க்கை என்ற போதும்
ஒளி ஏற்றுபவர் நீங்கள்
இருக்கை பின்னத்தெரியாது பார்வையுள்ள
எங்களுக்கு
இருக்கையை சிறப்பாக பின்னுபவர்கள் நீங்கள்
விழியில் தூசி விழுந்தால் துடிப்போம் நாங்கள்
விழியே தூசியானதால் துடிப்பதில்லை நீங்கள்
பிறந்தோம் இறந்தோம் என்பது எங்களுக்கு
பிறந்தோம் சாதித்தோம் என்பது உங்களுக்கு.

இரா. இரவி, மதுரை

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவ…

எண்ணை மாற்றவில்லை

படம்
எண்ணை மாற்றவில்லை .

என் செல்லிடப்பேசியில்
பாட்டு ஒலிக்கும் ஒவ்வொரு முறையும்
ஆவலோடு எடுக்கிறேன் .
அழைப்பது நீயாக இருக்குமோ? என்று .
எடுக்கும் ஒவ்வொரு முறையும்
ஏமாற்றமே மிச்சம் .என்றாவது
நீ அவசியம் அழைப்பாய்
என்ற நம்பிக்கையில் எண்ணை மாற்றவில்லை .
என்னையும் மாற்றவில்லை

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி



தென்னைமரம் தேங்காய்
பனைமரம் நுங்கு
உழைக்காத மனிதன் ?

அகராதியில் இல்லாத சொல்
அடிக்கடிப் பயன்படுத்தும் சொல்
சும்மா
திரைஅரங்கின் பெயரால்
ஆபாசம் மறைத்தார்
சுவரொட்டி

ஹைக்கூ ராஜபட்சே கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ ராஜபட்சே கவிஞர் இரா .இரவி

ஹிட்லரின் தற்கொலை
முடிவை நீயே எடு
ராஜபட்சே

மரணம் உறுதி
விரைவில் இறுதி
ராஜபட்சே

தப்புச் செய்தவன்
தப்பிக்கப் பார்க்கிறான்
ராஜபட்சே

பலநாள் கொலைகாரன்
ஒரு நாள் அகப்பட்டான்
ராஜபட்சே

கெட்டிக்காரன் புளுகு
எட்டு நாளைக்குதான்
ராஜபட்சே
வணங்கிய புத்தரும்
கைகழுவினார்
ராஜபட்சே

மொட்டைப் பிட்சுக்களால்
காக்க முடியாது உன்னை
ராஜபட்சே

எத்தனுக்கு எத்தன்
உலகில் உண்டு உணர்
ராஜபட்சே

முகத்தில் தெரியுது
மரணபயம் உனக்கு
ராஜபட்சே

வினை விதைத்தவன்
வினை அறுப்பான் உண்மை
ராஜபட்சே

கூட்டுக்களவானி பொன்சேகா
உன்னுடன் இல்லை
ராஜபட்சே

--

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


பார்க்காதவர்கள் பாருங்கள்
தேவதை
என்னவள்

நடந்து சென்றாள்
கடந்து சென்றாள்
கடத்திச்சென்றாள்

சக்தியில்
மின்சாரத்தை வென்றது
அவள் கண்சாரம்

வேண்டாம் வண்ணம்
இயற்கையாகவே சிகப்பு
அவள் இதழ்கள்

உச்சரிப்பை விட
அசைவே அழகு
அவள் இதழ்கள்

செவிகளை விட
விழிகளுக்கு இன்பம்
அவள்

ஆயிரம்
அர்த்தம் உண்டு
மவுனத்திற்கு

வருகிறது
பெரு மூச்சு
அவளை நினைத்தாலே

இன்று நினைத்தாலும்
மனதில் மகிழ்ச்சி
அவள் புன்னகை

கால்தடம் அழித்தது
கடல் அலை
உள்ளத்தின் தடம் ?

முகம் சிரித்தாலும்
அகம் அழுகின்றது
காதல் தோல்வி

சோகமான முடிவுகள்
சுகமான சுமைகள்
காதல் தோல்வி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

இன்றும் காணலாம்
டைனோசர்கள்
அரசியல்வாதிகள்

சுருங்கச்சொல்லி
விளங்கவைத்தல்
ஹைக்கூ

வாடிக்கையானது
காக்காக் குளியல்
பெரு நகரங்களில்

ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
ஒழியவில்லை வறுமை

உலகெலாம் பரவியது
தேமதுரத் தமிழோசை அல்ல
ஊழல் ஓசை

பெருகப் பெருக
பெருகுது வன்முறை
மக்கள்தொகை

பலதாரம் முடித்தவர்
பண்பாட்டுப் பேச்சு
ஒருவனுக்கு ஒருத்தி

சிலைகளில் தெரிந்தது
ஆடை அணிகலனும்
சிற்பியின் சிறப்பும்

கூட்டம் கூடுவதில்லை
இலக்கிய விழாக்களுக்கு
தொலைகாட்சிகளால்

நிஜத்தை வென்றது நிழல்
நாடகத்தை வென்றது
திரைப்படம்

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeraviஇறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண்தானம்செய்வோம் !!!!!

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

அருமை அறியாதவனிடம்
அகப்பட்டால்
வீணையும் விறகுதான்

நடிகர்களின் ஆசை
நடிகைகளையும் தொற்றியது
வாரிசு அறிமுகம்

ஒரே வரிசையில்
தமிழ் அறிஞர்களும் ஆபாச நடிகைகளும்
கலைமாமணி பட்டமளிப்பில்

வில் அம்பு
விளம்பரமோ ?
அவள் விழிகள்

படித்ததில் பிடித்தது

படம்
படித்ததில் பிடித்தது

முனைவர் இறைஅன்பு இ .ஆ .ப,அவர்களின் நெஞ்சைத் தொட்டதும் ...சுட்டதும் நூலில் , தாய் என்ற கட்டுரையிலிருந்து சில துளிகள்

தொகுப்பு கவிஞர் இரா .இரவி

தாய்


தாய் ஈரெழுத்து திருக்குறள்
ஒரு சொல் காவியம்

அம்மா என்ற சொல் உயிர் எழுத்தில் தொடங்கி,மெய்யை மையப்படுத்தி உயிர் மெய்யில் முடியும்
உன்னதம் கொண்டது .
நான் சின்ன வயதில் இருந்தே என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது எதையும் செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதுதான் .
தாயிடம் இருந்து மனப்பாட சக்தியையும் ,தந்தை இடமிருந்து படைக்கிற திறனும் பெற்றதாய்த் தெரிந்தவர்கள் அடையாளப் படுத்துவார்கள் .

உறவுகள் பல வளர்ச்சியால் விளைவன.தாயின் உறவே வளர்ச்சியைத் தருவது .
மிதிவண்டியோட்டி விழுந்தபோது ஏற்பட்ட முதல் காயத்தில் அழுத அதே தாய் .வாகன விபத்தில் அடிபட்டு இரு கைகளிலும் கோலுன்றி நடந்தபோது ,இப்படி உன்னைப் பார்க்க நேர்ந்ததே ,உன் நடையின் வேகமல்லவா உனக்கு அழகு சேர்த்தது .என்று வாய் பொத்தி அழுதபோது
அந்த ரணதிற்க்காவாவது கால் விரைவில் குணமாகி விட வேண்டும் என்று தோன்றியது .
தங்கள் மகன்கள் மகள்கள் நேர்மையுடனும், அறிவுடனும் ,ஒழுக்கத்துடனும் …

ஹைக்கூ ஆற்றுப்படை நூலாசிரியர் :இரா.இரவி விமர்சனம் :ச.சந்திரா

படம்
ஹைக்கூ ஆற்றுப்படை நூலாசிரியர் :இரா.இரவி விமர்சனம் :ச.சந்திரா
ஹைக்கூ சாலை :
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறுத்துவதே ஆற்றுப்படை என்பர்.துளிப்பா என்றால் என்னவென்றே அறியாதோரை அறியச் செய்வதோடு அவர்களை ஹைக்கூ சாலையில் நிரந்தரமாக பயணிக்க வைக்கும் வல்லமை இரா.இரவியின் ஹைக்கூ ஆற்றுப்படை எனும் நூலுக்கு உண்டு. எனவே இப்பெயர் இந்நூலுக்குப் பொருத்தமான ஒன்றே !
தமிழன்னைக்கு மாலை :
அமுதபாரதி முதலாக தேவகிமைந்தன் ஈறாக உருவாக்கிய முத்துக்களை , கவிஞர் இரா.இரவி தன் சொல்லிழைகளால் திறனாய்வு மாலையாகத் தொடுத்து தமிழன்னைக்குச் சூட்டி அழகு பார்த்திருக்கிறார்.துளிப்பா என்பது இரா.இரவியின் இரத்தத்தில் கலந்த ஒன்றாக இருக்குமோ என்று எண்ணி அதிசயிக்கும் அளவிற்கு அவர் இந்த மூன்று வரிகளுக்குள் மோகம் வைத்திருப்பதை இந்நூலின் வழி உய்த்துணர முடிகிறது.அவர்தம் இலக்கிய பயணத்தில் அதிகம் பயன்படுத்திய சொல் ஹைக்கூவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் போன்றோரின் கணிப்பு.
நதியோட்டம் :
கோவிலுக்குள் நுழையும் கோபுர வாயிலாய் நூலாசிரியரைப் பற்றியும் ,நூலின் தன்மை குறித்தும் சொல்லிக்கொண்டே ,திறனாய்வுக் கோட்டைக்குள் நுழையும் இலாவகம் கவி…

நூலின் பெயர் : மனதில் ஹைக்கூ நூலின் ஆசிரியர் : இரா.இரவி நூல் விமர்சனம் :முனைவர் ச.சந்திரா

படம்
நூலின் பெயர் : மனதில் ஹைக்கூ
நூலின் ஆசிரியர் : இரா.இரவி
நூல் விமர்சனம் :முனைவர் ச.சந்திரா
கோபுர நுழைவாயில் :
உலகம் மூன்று ; கணிக்கும் காலம் மூன்று; ;சுவையூட்டும் கனி மூன்று ;உலகப்பொதுமறையின் பால் மூன்று ;அரும்பெருந் தமிழ் மூன்று ; ஆற்றல்சால் வேந்தன் மூன்று என புகழின் உச்சத்தை எட்டிய அனைத்துமே மூன்று எனும் உயரிய எண்ணாக வடிவெடுக்க,அதில் துளிப்பா மட்டும் விதிவிலக்கா என்ன ? மூன்றே வரிகளில் முத்தான கருத்துக்களை வாசகர் மனதிற்குள் புகுத்தும் சக்தி கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு உண்டு என்பதனை நிரூபணம்செய்ய வந்த நூலே மனதில் ஹைக்கூ.
ஆதியோடு அந்தமும் :
கடிகாரம் முதல் கணினி வரை ,பூசணிக்காயிலிருந்து பொக்ரான் வரை ,சம்மட்டி தொடங்கி சந்திராயன் வரை,காந்திதாசன் முதல் கண்ணதாசன் வரை, வாடும் ரோஜாமுதல் வாடாமல்லி வரை,அரேபியா முதல் ஆகாயம் வரை அலசி ஆராய்கிறது 64 பக்கங்களையுடைய மனதில் ஹைக்கூ எனும் அற்புத நூல்.
இதயப்பகுதி :
ஹைக்கூ திலகம் இரா.இரவியின் இந்நூலில் சமூக அத்துமீறல்கள் அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டப்பட்டிருக்கின்றது.மூடநம்பிக்கைகளின் ஆணிவேர் கிள்ளி எறியப்படுகின்றது.தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் வரைமு…

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

புறத்தில் கோபம்
அகத்தில் இன்பம்
அவள் பலாப்பழம்

யானைப்பசிக்கு
சோளப்பொரி
அவள் முத்தம்

இதழ்கள் வழி
இனிமைப் பகிர்வு
முத்தம்

கைரேகை பதிந்தனர்
படித்தவர்களும்
நவீன வருகைப்பதிவு

Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details

Seasons Ali Video: இலக்கியங்களும் ஹைக்கூ கவிதைகளும்!கவிஞர் இரா.இரவியு...

Seasons Ali Video: இலக்கியங்களும் ஹைக்கூ கவிதைகளும்!கவிஞர் இரா.இரவியு...: "பங்கேற்போர் கவிஞர் இரா.இரவி கிறிஸ்டோபர்"

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

வானிலிருந்து வரும்
திரவத்தங்கம்
மழை

இரண்டும் சமம்
மலை மண்
மழைக்கு

கழுவும் நீரே
அழுக்கு
சுத்தம் ?

ஓய்வுக்கு ஒய்வு
தந்தால்
சாதிக்கலாம்

சாதனைக்கு
முதல் எதிரி
சோம்பேறித்தனம்

தண்ணீரைப் பெட்ரோலாக்கி
வித்தைக் காட்டியவரிடம்
வித்தைக் காட்டியது இயற்கை

எலி மீது யானை
எப்படிச் சாத்தியம்
பிள்ளையார்

உருண்டது
உலோகக் குண்டென
தாமரையிலைத் தண்ணீர்

கருவறை உள்ள
நடமாடும் கடவுள்
தாய்

பல் பிடுங்கிய
பாம்பாக
தோற்ற அரசியல்வாதி
இன்றும் சொல்கின்றது
மன்னனின் பெயரை
அரண்மனை

பெருமூச்சு விட்டாள்
தங்கக்கோபுரம் பார்த்து
முதிர்கன்னி

கல்லுக்குள் தேரை
பாறைக்கு மேல் செடி
மனிதனுக்குள் மனிதநேயம் ?

Madurai vasagar vattam

படம்

பொற்றாமரை நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
பொற்றாமரை

நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

எ .ஆர்.பதிப்பகம் கே .கே .நகர், மதுரை விலை ரூ 955

தமிழர்களின் கலையை உலகிற்குப் பறைசாற்றிடும் கலைப் பொக்கிஷம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் .சமீபத்தில் உலக அதிசயமாக அறிவிக்க வேண்டுமென்று இணையத்தில் வாக்கெடுப்பு நடந்தது .
சீனப் பெருஞ்சுவர் நீளமான ஒன்று .உலக அதிசயமாக உள்ளது .ஆனால்
உலகில் எந்தக் கோயிலிலும் இல்லாத அளவிற்கு கற்ச்சிலைகளும் ,சுதைச் சிற்பங்களும் நிறைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை உலக அதிசயமாக இன்னும் அறிவிக்கவில்லை என்பது வருத்தம்தான் அறிவிக்க இவர்கள் யார் ?உலகத் தமிழர்கள் நாம் அறிவிப்போம் .
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உலக அதிசயம்தான் என்று .

இந்த நூலை படித்து முடித்தவுடன் இந்த நிலைக்குதான் நான் வந்தேன் .
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது .ஆனால் உலகின் முதல் மொழியான தமிழ் பேசிய தமிழன் உலகம் வியக்கும் வண்ணம் ,கல்லிலே கலை வண்ணம் கண்ட திறனைக் கண்டு வியந்து போனேன் .மீனாட்சி கோயில் பற்றி பல நூல்கள் வந்துள்ளன .ஆனால் இந்த நூல் MASTER PEICE என்றே சொல்ல வேண்டும் .இது போன்ற நூல் இத…

படித்ததில் பிடித்தது

படம்
படித்ததில் பிடித்தது

ஹைக்கூ

அச்சகம் கட்டிய
அறிவுக் கோபுரம்
புத்தகம்.
ச.சந்திரா

All About kavimalar.com - Website Valuation report

All About eraeravi.com - Website Valuation report

கை விட்டுச் சென்றதேன் ? கவிஞர் இரா .இரவி

படம்
கை விட்டுச் சென்றதேன் ? கவிஞர் இரா .இரவி

தூக்குத் தண்டனைக் கைதியிடம்
கூட கடைசி ஆசை
என்ன ?என்று கேட்கிறார்கள் .
உன்னைக் காதலித்து
ஆயுள் தண்டனைக் கைதியான
என்னிடம் நீ
கடைசி ஆசை
என்ன ?என்று கேட்காமலே
கை விட்டுச் சென்றதேன் ?

பொதிகை மின்னல் 10 ஆம் ஆண்டு விழா புகைப்படங்கள் .கன்னிமாரா நூலகம். சென்னை

படம்
பொதிகை மின்னல் 10 ஆம் ஆண்டு விழா
புகைப்படங்கள் .கன்னிமாரா நூலகம். சென்னை

பொதிகை மின்னல் 10 ஆம் ஆண்டு விழா புகைப்படங்கள் .கன்னிமாரா நூலகம். சென்னை

படம்
பொதிகை மின்னல் 10 ஆம் ஆண்டு விழா
புகைப்படங்கள் .கன்னிமாரா நூலகம். சென்னை

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

மன்னராட்சியையும் வென்றார்கள்
அரசியல்வாதிகள்
குடும்ப அரசியிலில்

மனிதனால் படைக்கப்பட்டு
மனிதனையே
ப் படுத்துகின்றது
பணம்

எங்கு ?முறையிடுவது
ஆண் காவலர்களால்
பெண் காவலர்களுக்குத் தொல்லை

அவள் தந்த
சங்கு பயன்பட்டது
இறுதி ஊர்வலத்திற்கு

சவுக்குமரம்
பார்க்கையில்
அவள் நினைவு

தமிழைக் காத்ததில்
பெரும்பங்குப் பெற்றன
பனை மரங்கள்

தமிழை அழிப்பதில்
பெரும்பங்குப் பெற்றன
தொலைக்காட்சிகள்

மூடநம்பிக்கையால்
முற்றுப் பெற்றது
சேதுகால்வாய்த் திட்டம்

இடித்ததால்
இடிந்தது மனிதநேயம்
பாபர் மசூதி

எட்டாவது அதிசயம்
ஊழலற்ற
அரசியல்வாதி

மூச்சுக்காற்று வெப்பமானது
ஏழை முதிர்கன்னிக்கு
தங்கத்தின் விலையால்

திரும்புகின்றது
கற்காலம்
மின்தடை

கருவறையில் உயிர்ப்பு
கல்லறையில் துயில்வு
இடைப்பட்டதே வாழ்க்கை

எல்லோரும் சிரிக்க
அழுது பிறந்தது
குழந்தை

எல்லோரும் அழ
அமைதியாக இருந்தது
பிணம்

நடமாடும் நயாகரா
நடந்துவரும் நந்தவனம்
என்னவள்

பெயருக்கு காதலிக்கவில்லை
பெயரையே காதலித்தேன்
மலரும் நினைவுகள்

அதிக வெளிச்சமும்
ஒருவகையில் இருட்டுத்தான்
எதுவும் தெரியாது

கூந்தல் மட்டுமல்ல
வாயும் நீளம்தான்
அவளுக்கு

ஹைக்கூ ராஜபட்சே கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ ராஜபட்சே .கவிஞர் இரா .இரவி

அணையப் போகும் விளக்கு
சுடர் விட்டு எரியும்
ராஜபட்சே

பாவத்தின் சம்பளம்
விரைவில் கிட்டும்
ராஜபட்சே

எத்தனைக் காலம்தான்
ஏமாற்றமுடியும்
ராஜபட்சே

பேராசை பெரும் நஷ்டம்
பொன்மொழியை மெய்ப்பித்தாய்
ராஜபட்சே

என்ன செய்ய நினைத்தாயோ ?தமிழ்ச் சாதியை கவிஞர் இரா .இரவி

படம்
என்ன செய்ய நினைத்தாயோ ?தமிழ்ச் சாதியை
கவிஞர் இரா .இரவி
அன்று முத்துக்குமார்
இன்று கிருஷ்ண மூர்த்தி
நாளை யாரோ ?
விலைமதிப்பற்ற
உயிரைத் தந்து
உலகின் கவனம்
ஈர்த்தபோதும் .
உலகின் கவனம்
ஈழத்தமிழரின் பால்
இன்னும் வரவே இல்லை .
கொலைவெறியன்
கொடூரன் ராசபட்சே
இன்னும் தண்டிக்கப் படவில்லை .
நான்கு மீனவர்களைக் கொன்று
நடுக் கடலில் வீசிய கொடுமையை
தட்டிக் கேட்க நாதி இல்லை.
கொலைக்காரன் ராசமரியாதையுடன்
கிரிக்கெட் பார்த்து
ச் செல்கிறான்
கோடிப் பணங்களையும்
கேடி வாங்கிச் செல்கிறான்
என்ன செய்ய நினைத்தாயோ ?தமிழ்ச் சாதியை
--

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

உழைக்காமல் உண்பது
திருட்டு
உழைப்பே உயர்வு

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

அங்கிகரிக்கப்பட்ட
சூதாட்டம்
பங்குச்சந்தை

Odum Nadhiyin Osai- Dr .V. Irai Anbu, IAS

Odum Nadhiyin Osai- Dr .V. Irai Anbu, IAS


முனைவர் இறைஅன்பு அவர்களின்
ஓடும் நதியின் ஓசை
அவர் குரலிலேயே கேட்டு மகிழுங்கள்

சிந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.கவிஞர் இரா .இரவி

படம்
சிந்தித்துக்
கொண்டுதான் இருக்கிறோம்.கவிஞர் இரா .இரவி

உடலால் நீ அங்கும்
நான் இங்கும்
பிரிந்து சந்திக்காமல்
வாழ்ந்து வந்தாலும்
உணர்வால்
நினைவால்
அடிக்கடி
சந்தித்து அல்ல சிந்தித்துக்
கொண்டுதான் இருக்கிறோம்

ஒரே சாதி கவிஞர் இரா .இரவி

படம்
ஒரே சாதி கவிஞர் இரா .இரவி

பிறப்பால் நீ வேறு சாதி
நான் வேறு சாதி
கவிதை ரசனையால்
இலக்கிய ஆர்வத்தால்
நீயும் நானும்
ஒரே சாதி

உள்ளம் உன்னிடமே .கவிஞர் இரா .இரவி

படம்
உள்ளம் உன்னிடமே .கவிஞர் இரா .இரவி

உதடுகள் பலரிடம்
உரையாடினாலும்
உள்ளம் உன்னையே
நினைத்துக் கொண்டு
இருப்பது
எனக்கு மட்டுமே
தெரியும்

பேரழகி இல்லை .கவிஞர் இரா .இரவி

படம்
பேரழகி இல்லை .கவிஞர் இரா .இரவி


அவள் பேரழகி இல்லை
சுமாரானவள்தான்.
பெரும் பணக்காரி இல்லை
நடுத்தரக் குடும்பம்தான்
பேரழகியைப் பார்த்தாலும்
அவளைக் கண்ட இன்பம்
வருவதில்லை .
பெரும் பணக்காரியைப்
பார்த்தாலும்
அவளின் நல்ல
குணம் இருப்பதில்லை

அவள் பதமாக வெந்த ரொட்டி. கவிஞர் இரா .இரவி

படம்
அவள் பதமாக வெந்த ரொட்டி. கவிஞர் இரா .இரவி

அவள் கருப்பு இல்லை
வெள்ளையும் இல்லை
இரண்டும் கலந்த
கலவை .
கருப்பு தீய்ந்த
ரொட்டியாம் .
வெள்ளை வேகாத
ரொட்டியாம் .
இரண்டும் கலந்த
கலவைதான்
பதமாக வெந்த ரொட்டியாம்.
அவள் பதமானவள்
மிகவும் இதமானவள்


--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeraviஇறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண்தானம்செய்வோம் !!!!!

உந்தன் ஈர்ப்பு .கவிஞர் இரா .இரவி

படம்
உந்தன் ஈர்ப்பு .கவிஞர் இரா .இரவி

எந்தப் பெண் சிரிப்பைப்
பார்த்தாலும்
உந்தன் சிரிப்பின்
ஈர்ப்பு
யாரிடமும் இல்லை .
என்று அறுதியிட்டுக்
கூறுவேன்.
கோடி முகம்
பார்த்தாலும்
உன் முகம் பார்த்த
இன்பம் வருவதில்லை

என்னைக் கவிஞ்னாக்கிச் சென்றாள் கவிஞர் இரா .இரவி

படம்
என்னைக் கவிஞ்னாக்கிச் சென்றாள்
கவிஞர் இரா .இரவி

கவிதை சரியாக
எழுத வராதபோது
என்னுடன் இருந்தாள்.
கவிதை நன்றாக
எழுத வந்ததும்
ஏன்? எனைவிட்டு
சென்றாள் .
கவிஞனாக்க வேண்டும்
என்பதற்காகவே
சந்தித்துப் பிரிந்தாள்.
--

இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeraviஇறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண்தானம்செய்வோம் !!!!!

ஒரே சாதி கவிஞர் இரா .இரவி

படம்
ஒரே சாதி கவிஞர் இரா .இரவி

பிறப்பால் நீ வேறு சாதி
நான் வேறு சாதி
கவிதை ரசனையால்
இலக்கிய ஆர்வத்தால்
நீயும் நானும்
ஒரே சாதி

மறுக்கமுடியாத உண்மை .கவிஞர் இரா .இரவி

படம்
மறுக்கமுடியாத உண்மை .கவிஞர் இரா .இரவி



காதலில் வென்றவர்கள்
வென்றதும் காதலை
மறந்து விடுகின்றனர் .
காதலில் தோற்றவர்கள்தான்
இருவருமே இறுதி வரை
காதலை நினைக்மறுக்ககின்றனர் .
மறுக்கமுடியாத உண்மை
மறக்க முடியாத உண்மை

நினைவில் உள்ளது கவிஞர் இரா .இரவி

படம்
நினைவில் உள்ளது கவிஞர் இரா .இரவி


எத்தனையோ வருடங்களுக்கு
முன் நடந்த நம் சந்திப்பு
சில நிமிடங்களுக்கு
முன் நடந்தது போல
இன்னும் என்
நினைவில் உள்ளது .
பசுமரத்து ஆணியாகப்
பதிந்தது .

வேறு பேசுங்கள் கவிஞர் இரா .இரவி

படம்
வேறு பேசுங்கள் கவிஞர் இரா .இரவி

எனக்குப் பிடித்த கடவுள்
முருகன் .
உங்களுக்குப் பிடித்த கடவுள்
எது ? என்றாள் அவள் .
எந்தக் கடவுளும்
எனக்குப் பிடிக்காது
என்றேன் நான் .
ஏன்? என்றாள் அவள்.
கடவுள் இல்லை
என்றேன் நான் .
போதும் வேறு பேசுங்கள்
என்றாள் அவள்
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeraviஇறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண்தானம்செய்வோம் !!!!!

இதயத்தில் ஹைக்கூநூல் விமர்சனம் :முனைவர் ச.சந்திரா

படம்
இதயத்தில்ஹைக்கூநூலாசிரியர்:கவிஞர் இரா.இரவிநூல்விமர்சனம் :முனைவர்ச.சந்திராகோபுர வாயில்:அன்னையில்துவங்கிஆன்மீகத்தந்தையில்நிறைவுறும்இதயத்தில்ஹைக்கூஎன்னும்இந்நூல்முழுவதும்மின்மினிப்பூச்சிகள்!அரட்டிப்புரட்டிப்போடும்போலிபொதுநலவாதிகளைதன்மூன்றுவரிக்கணைகளால்வீழ்த்துகிறார்கவிஇரவி.இந்நூலில்சூரியனும்நிலவும்நட்சத்திரங்களும்வர்ணனைக்குமட்டுமல்ல!அறிவுரைக்கும்இலக்கணமாகின்றன. இதயத்தில்ஹைக்கூஎனும் இந்நூலில்ஆன்மீகத்திற்கோநிறுத்தற்குறி .மூடப்பழக்கத்திற்கோமுற்றுப்புள்ளி. ஐம்பெரும்பூதங்களும்கவியின்கரங்களில்பம்பரம்ஆடுகின்றன.புராணக்கதைகளோஇந்நூலில்பொடித்துகள்களாகின்றன.புதிரோ புதிர்:மங்கைபற்றியகவிதைகள்அனைத்தும்உவமைஉடைஅணிந்து,உருவகநடைபயின்றுவரும்மகத்தானகவிதைகளாகஉள்ளன. கரை தாண்டியசுனாமிக்கவிதைகளோ,கல்நெஞ்சக்காரரையும்கரையவைக்கின்றன.'பெண்மை'-இதுகவிஇரவியின்நோக்கில்உயர்வா?தாழ்வா? எனகண்டறியமுடியாதபுதிராகவேஇந்நூலில்உள்ளது.கவிஅஃறிணைஉயிரின்மீதுகொண்டஅக்கறைஆல்பர்ட்சுவைட்சரை நினைவுப்படுத்துகிறது.பக்கத்திற்குப்பக்கம்:அகதிகள்மேல்கவிஞர்கொண்டிருக்கும்ஆதங்கம்அக்கவிதைகளைஆ! தங்கம் -எனப்பாராட்டத்தோன்றுகிறது.உலகஅமைதிகேள்விக்க…

நம் காதல் கவிஞர் இரா .இரவி

படம்
நம் காதல் கவிஞர் இரா .இரவி

அழகு ,அந்தஸ்த்துப்
பார்த்து வருவது
காதல் அல்ல .
உள்ளம் பார்த்து
உணர்வுப் பார்த்து
மலரென பூத்தது
நம் காதல்

மனதில் மாளிகை கவிஞர் இரா .இரவி

படம்
மனதில் மாளிகை கவிஞர் இரா .இரவி


காதல் தோல்விக்காக
தற்கொலை செய்பவர்கள்
மூடர்கள்.
காதல் தோல்விக்காக
மனதில் மாளிகை
கட்டியவன் நான் .

பார் நன்றாகப் பார் ! கவிஞர் இரா .இரவி

படம்
பார் நன்றாகப் பார் ! கவிஞர் இரா .இரவி

உனக்கு கண் வலி என்பதால்
என் விழி பார்ப்பதை
தவிர்க்காதே !
பார் நன்றாகப் பார் .
எனக்கும் கண் வலி
வரவேண்டும் .
உன் வலி நானும்
உணரவேண்டும் .

நினைத்து இருப்போம் . கவிஞர் இரா .இரவி

படம்
நினைத்து இருப்போம் . கவிஞர் இரா .இரவி

நாம் இணைந்து இருந்தால் கூட
விரைவில் மறந்து இருப்போம்
நாம் இணையாததால்தான்
இருவரும் இறுதிவரை
நினைத்து இருப்போம் .

Kavithai :: The Real Smell of Kavithai

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

வருடா வருடம் மீனாட்சிக்கு
எப்போது? முதிர்கன்னிக்கு
திருக்கல்யாணம்

குகன் பக்கங்கள் இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி

படம்
http://guhankatturai.blogspot.com/2011/04/blog-post_15.html

குகன் பக்கங்கள் இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி
பக்கம் பக்கமாக எழுதப்படும் கவிதைகளை விட பல சமயம் இரு வரி, மூன்று வரி கவிதைகள் வாசகர் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது. அதில் குறிப்பாக நல்ல ஹைக்கூ கவிதைகள் படித்த நிமிடங்களை விட நம் மனதில் குடியிருக்கும் நிமிடங்கள் தான் அதிகமாக இருக்கும். உண்மையான கவிதைக்கு அது தான் வெற்றியும் கூட. அப்படிப்பட்ட வெற்றி ஹைக்கூ கவிதைகளை எழுதி, தொகுத்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள். www.kavimalar.com என்ற இணையதளம் மூலம் இணையத்தில் பரவலாக பேசப்படுபவர்.

கடலில் விளையாடும் சிறுவனுக்கு ஒரு அலையை விட இன்னொரு அலை எப்படி பெரிதாக தெரியுமோ, இந்த நூலிம் இடம் பெற்று இருக்கும் கவிதை ஒன்றை விட ஒன்று அதிகமாக அளவிடப்படுகிறது. சுனாமி, அரசியல்வாதி, ஈழம், குழந்தை தொழிலாளிகள் இரா.ரவியை அதிகமாகவே பாதித்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த நூலில் பல கவிதைகள் இந்த நான்கை சுற்றி தான் வலம் வருகிறது.

உண்மையிலும் உண்மை
எழுத்து இடமாற்றம்
நகரம் – நரகம்


இன்னும் சில கவிதைகள் இன்றைய அரசியல் நிலவரத்தை பகடி செய்வது போல்…

முற்போக்குச் சிந்தனைகளின் முகவரி கவிஞர் இரா .இரவி தமிழ்த்தேனீ இரா .மோகன்

படம்
முற்போக்குச் சிந்தனைகளின் முகவரி கவிஞர் இரா .இரவி

தமிழ்த்தேனீ இரா .மோகன்

தகைசால் பேராசிரியர்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் .

இரா .இரவி அன்னைத் தமிழினைத் தம் உயிரினும் மேலாக நேசிப்பவர் .அல்லும் பகலும் இடைவிடாமல் இலக்கியங்களை வாசிப்பவர் .பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் முற்போக்குச் சிந்தனைகளையே தம் மூச்சுக் காற்றாய்ச் சுவாசிப்பவர்.பாரத மணித் திருநாட்டின் முன்னைக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ .ப .ஜே அப்துல் கலாமின் வழியில் இளைய தலைமுறையினரின் நெஞ்சகளில் விழிப்புணர்வை விதைப்பது பற்றியே தீவிரமாக யோசிப்பவர் .சுருங்கக் கூறின்,முற்போக்குச் சிந்தனைகளின் முகவரி என ரவியைச் சுட்டலாம்.அவர் பணியாற்றுவது சுற்றுலாத் துறையில் ,அவர் மிகவும் விரும்புவதோ தமிழ் உலாவை.
கணினியும் ,இணைய தளமும் அவருக்கு இரு கண்கள் ,இலக்கியச் சீரிதழ்களின் செல்லப்பிள்ளை இரா .இரவி.என் மனதில் பட்டதை எவருக்கும் அஞ்சாமல் ஹைக்கூவாக வடித்துள்ளேன் .உள்ளக் குமுறலை ,கோபத்தை ,சமுதாய விழிப்புணர்வை விதைத்துள்ளேன் .(மனதில் ஹைக்கூ ப 8 )என மனதில் ஹைக்கூ தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் ஒப்புதல் வாக…

எது ? சுகம் இரா .இரவி

படம்
எது ? சுகம் இரா .இரவி

காதலில் வெல்வது
சுகமா ?
தோற்ப்பது
சுகமா ?
தோற்ப்பதே சுகம்
தோற்றதால்தான்
இன்னும் அசை
போடுகிறேன்
அவள் நினைவை

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeraviஇறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண்தானம்செய்வோம் !!!!!