மூன்றாம் உலகப்போர் என்றப் பெயரை மாற்றுங்கள் கவிஞர் இரா .இரவி


மூன்றாம் உலகப்போர் என்றப் பெயரை மாற்றுங்கள்
கவிஞர் இரா .இரவி

கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வணக்கம் . ஆனந்தவிகடன் வார இதழில் தாங்கள் எழுதி வரும் புதிய தொடருக்கு மூன்றாம் உலகப்போர் என்று சூட்டிய பெயரை மாற்றுங்கள் .போரில்லாத உலகம் வேண்டும் என்பதே மனித நேய ஆர்வலர்களின் விருப்பம் .உங்களுடைய தலைப்பே
மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுத்துவிடுமோ ?என அச்சமாக உள்ளது .எதிர்மறையான தலைப்பு எதற்கு ?கனி இருக்க காய் கவர்ந்தற்று வள்ளுவர் சொன்னது நீங்கள் அறிந்தது .உங்களுடைய திரைப்படப் படப் பாடலில் யுத்தம் இல்லாத பூமி வேண்டும் என்று எழுதி உள்ளீர்கள் .
நீங்களே மூன்றாம் உலகப்போர் என்று பெயர் வைத்தது வியப்பாக உள்ளது .தமிழில் எண்ணில் அடங்கச் சொற்கள் உண்டு .பெயருக்கா ப் பஞ்சம். சிந்தித்து வேறு நல்ல பெயர் சூட்டுங்கள் தயவுசெய்து பெயரை மாற்றுங்கள் .மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது .எனது வேண்டுகோளை ஏற்று மாற்றுங்கள்.இரண்டு உலகப் போர்களின் அழிவுகளை நாம் நன்கு அறிவோம் .மூன்றாம் உலகப்போர் வந்தால் உலகில் மனித இனமே இருக்காது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகப் பொது கருத்தை எழுதியவன் கனியன் பூங்குன்றன் .ஐநா மன்றத்தில் இடம் பெற்று உள்ளது .உலகப் புகழ் தமிழ்க் கவிஞர்கள் வரிசையில் வரும் நீங்கள் ,தேசிய விருதுகள் பலப் பெற்று நீங்கள் இப்படி மூன்றாம் உலகப்போர் என்று பெயர் சூட்டலாமா ?மறு பரிசீலனை செய்யுங்கள் .உங்களுடையத் தொடரைப் படிக்கும் போதெல்லாம் மூன்றாம் உலகப்போர் வருமோ ?என்ற அச்சம் வருகின்றது ஏற்கெனெவே உலகம் அமைதி இன்றித் தவிக்கின்றது .நல்லது நினையுங்கள் நல்லது நடக்கும் என்றார்கள் .நாம் ஏன்?கெட்டதை நினைக்க வேண்டும் .சிந்தியுங்கள். நாம் சூட்டிய பெயரை மாற்றச் சொல்ல இவன் யார் ?என்று எண்ண வேண்டாம் .நல்லது யார் சொன்னாலும் கேட்கலாம் .இந்தத் தொடர் பல வாரங்கள் வர உள்ளது .எனவேதான் மாற்றச் சொல்கிறேன்.இந்தத் தொடரை பிரசுரம் செய்து வரும் ஆனந்தவிகடன் இதழுக்கும் என் வேண்டுகோளை வைக்கின்றேன் .

கருத்துகள்

  1. உங்கள் கருத்துச் சரிதான். ஆனால் படைப்பாளிக்கு முழு சுதந்திரம் தரவேண்டும் என்று நினைக்கிறேன். வள்ளுவர் கூறியது கருப்பொருளில் தான் கனி வேண்டுமே தவிர உருபொருளில் இல்லையே!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக