இடுகைகள்

September, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதயத்தில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன்.குமார்.

படம்
இதயத்தில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர்  பொன்.குமார்.

http://ponkumarsalem.blogspot.com/2011/08/blog-post_22.html
இரவும் பகலும் இடைவிடாது வந்து கொண்டேயுள்ளன. இது போலவே இரா.இரவி ஹைக்கூ படைத்தலும் தொடர்கிறது. ஹைக்கூ கவிதைகள், விழிகளில் ஹைக்கூ, நெஞ்சத்தில் ஹைக்கூ, உள்ளத்தில் ஹைக்கூ என்னும் ஹைக்கூத் தொகுப்புகளைத் தொடர்ந்து தற்போது தந்திருக்கும் தொகுப்பு "இதயத்தில் ஹைக்கூ" இரா.இரவியின் இதயத்துடிப்பு 'ஹைக்கூ ஹைக்கூ' என்றே ஒலிக்கும்.
சுனாமியில் பல்லாயிரம் உயிர்கள் பலியாயின. இப்பெரும் சோகத்தை பலகவிஞர்கள் கவிதையில் பாடியுள்ளனர். இரா.இரவியோ ...
"தாய் இருக்க சேய்
சேய் இருக்க தாய்
சுனாமி கொலை"
என சோகத்திலும் சோகமான பிரிவு சோகத்தைக் கூறியுள்ளார். இது முதல் ஹைக்கூ. தொடர்ந்து சுனாமி தொடர்பாக பல ஹைக்கூக்களை எழுதியுள்ளார். ஒரு சுனாமி கவிஞருக்கு பல கவிதைகளைத் தந்துள்ளது. விளம்பரங்கள் பெண்ணை பலவாறாய் சீரழித்து வருகிறது. பண்பாட்டையும் சிதைக்கிறது. ஒரு மெண்டோஃபிரஸ்க்காக ஒரு பெண் சோரம்…
படம்
கவிஞர் மு .குருநாதன் எழுதிய விழிகளின் விழுதுகள் நூலை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மோகன் வெளியிட எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்ரமணியன் பெற்றுக் கொண்டார் .உடன் திருச்சி சந்தர் பேராசிரியர் யாழ் சந்திரா ,கவிஞர்கள்  இரா .இரவி ,மூரா ,இரா .கணேசன்,மலர்மகள் ,மஞ்சுளா ,குமதம் ஆறுமுகம் ,பா .உஷா மகேஸ்வரி ,நீத்தி ,யமுனா ரகுபதி ,   நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்
படம்
படம்
உலக சுற்றுலா தின விழா மதுரை GRT விடுதியில் நடைப்பெற்றது .மதுரை சுற்றுலா அலுவலர் தர்மராஜ் உதவி சுற்றுலா அலுவலர்கள் இரா .இரவி ,நெல்சன்       ஆகியோர்  .        வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை தமிழ்ப் பண்பாட்டு முறையில் சந்தனம் தந்து ,மாலையிட்டு, இனிப்பு வழங்கி வரவேற்றனர்.விழாச் சிறக்க GRT நிர்வாகம் ஒத்துழைப்பு நல்கினார்கள். 

படித்ததில் பிடித்தது பெண்ணே உன் மனதில்... கவிதாயினி T.கார்த்திகா

படம்
படித்ததில் பிடித்தது

பெண்ணே உன் மனதில்... கவிதாயினி T.கார்த்திகா   

சிந்தும் மழைத்துளியிலே நான் சித்திரமாய் வடித்த ஒரு பெண்ணின் உருவம் கண்ணிமைக்கும் நேரத்தில் கல் பட்டு சிதறினாலும், என் மனமெனும்  ரோஜாவில் மங்கை அவள் பனிதுளியாகிப் போனாள்! கறைபடாத மனதை  களவாடிச்சென்றாள்! காயமில்லா  என்   இதயத்தில் வலி தந்தாள்! காற்றுப்போக  முடியாத  நெஞ்சிலே  கள்ளி அவள் குடித்தனம் புகுந்தாள்! பகல்நேரம்  கண்ட  கனவாகிப்போனாள்! பாதையில் என்னை  தனியாக்கிச்சென்றாள்!  பெண்ணே , உன்னைத்தேடி    வயதாகிப்போனேன்!   காலங்கள் போனால் போகட்டும் கண்ணே! என் காதல் வாழும்  என்றும்  இளமையாக! மண்மீது  மீண்டும்  ஜனனங்கள்  வேண்டாம்  உன்  மனதோடு நானும்  வாழ்ந்தாலே  போதும்... என் வாழ்நாளின் பாரம் தீரும்!

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

சுட்டும் விழி விமர்சனத்திற்கு விமர்சனம் கலாநிதி பொன் பால சுந்தரம் லண்டன்

படம்
சுட்டும் விழி விமர்சனத்திற்கு விமர்சனம் கலாநிதி  பொன் பால சுந்தரம் லண்டன்  
md;Gf; ftpQH,utp mtHfSf;F
jq;fs; Rl;Lk; tpopf;fhd Nguhrpupia re;jpuh mk;ikahupd; tpkHrdk; gbj;Njd;. kJiuf; ftpQuhf ,Ug;gjdhy; fz;zfpapd; Rl;l tpopahf ftpijfs; kdq;fisj; jpwf;f itj;Js;sd.
jq;fspd; fw;gidf; fsQ;rpag; ngl;lfj;jpy; epiy nfhz;bUf;Fk; rpy fUj;jhsk; kpf;f Kj;Jf;fis Iahapuk; iky;fSf;F mg;ghy; ,Ue;J mjpfhiyapy; urpj;J kfpo;e;Njd;.
jLf;fp tpOe;jJk; jkpo;g; Ngrpdhd;
f\;lj;jpYk;> Jd;gj;jpYk; jkpo;jhd; clypy; XLk; ,uj;jk;Nghy $lNt ek;Kld; tho;fpwnjd;gij ,J czHj;JfpwJ. jkp;o; Ngr kwg;gtHfSf;F ,e;j tupfs; Crp kUe;jhf Vwpf;nfhz;bUf;Fk;. my;yJ Vw;wg;gLk;.
kw;nwhU i`f;$--tsh;j;jpl;l kz;zpw;F ed;wp nrhd;dJ kuk; G+r;nrhupe;J
mG+Htkhd tupfs; ,it. gj;J khjk; Rke;J ngw;nwLj;J ghYhl;bj;> jhyhl;b> gy;RitA+l;b tsHj;j jha;f;Ff; $l ghy;thHf;fj; jaq;Fk; khdpl kuq;fs; jq;fSila kdg;gilg;ig jkJ neQ;rq;fspy; gjpj;J jpUe;jp tho jkJ kdf; fjTfisj; jpwf;Fk; jpwTNfhyhf Vw;Wf;nfhs;thHfs; vd;gJ vdJ ek;gpf;ifahFk;.
,g;gb …

நூல்:சுட்டும் விழி ஆசிரியர்:கவிஞர் இரா.இரவி மதிப்புரை;முனைவர் ச.சந்திரா

படம்
நூல்:சுட்டும்விழி ஆசிரியர்:கவிஞர்இரா.இரவி
மதிப்புரை;முனைவர் ச.சந்திரா
தமிழ்த்துறைத் தலைவர்
கலசலிங்கம் பல்கலைக்கழகம்

சுட்டும்விழிஎனும்நூல்கவிஞர்இரா.இரவியின்பதினொன்றாவதுபடைப்பு.பாங்கானபடைப்புங்கூட.இலக்கியத்தேனீ முனைவர்இரா.மோகன்அவர்கள்இந்நூலுக்குவழங்கியிருக்கும்அணிந்துரைஅடிமுதல்முடிவரைபுத்தகத்தைஆராய்ந்துஎழுதப்பட்டஅற்புதஉரை.அட்டைப்படவடிவமைப்பிற்குஎனத்தனியாகஏதேனும்பரிசுஅறிவிக்கப்படின், இந்தவருடத்திற்கானபரிசுசுட்டும்விழிக்குத்தான்.அறிவுப்பூர்வமாய்வடிவமைத்திருக்கும்அரிமாமுத்துஅவர்களுக்குமனமார்ந்தபாராட்டுக்கள்!சமூகச்சீர்கேடு,மது-மாசுகேடுகள்-எனசூரியப்பார்வையினையும்,இயற்கைரசனை,அதீதஅன்பு- எனசந்திரப்பார்வையினையும்சுட்டிக்காட்டுவதனால்மகாகவியின்பயன்பாட்டுச்சொற்றொடரான 'சுட்டும்விழி'- எனும்தலைப்புஇந்நூலுக்குபொருத்தமானஒன்றே! திறப்புவிழா! புத்தகத்தைத்திறந்தவுடன்முதல்பக்கத்திலேயே,அந்நியமொழியில்பேசுவதுதான்ஆடம்பரம்என்றுதவறாகஎண்ணிநடப்போர்க்குநெற்றிப்பொட்டில்அறைந்தாற்போல்ஒருதுளிப்பா! "தடுக்கிவிழுந்ததும் தமிழ்பேசினான்! அம்மா!(ப.1) தமிழியல்உணர்வோடுதமிழினஉணர்வு;சமூகஇழிநிலையோடுஅரசியல்இழிநிலை;தாயன்போடுதாரத்த…

படித்ததில் பிடித்தது

படம்
படித்ததில் பிடித்தது
மைவரைந்த கண்கள்!  கவிதாயினி T. கார்த்திகா


நாள்கணக்காய் இரவில் நடைபோடும் வெண்ணிலவு..  வெளிச்சத்தில் பெண்ணின்  முகம்  பார்த்தல் மண்ணில்  வந்து  வாழ  ஏங்கும்!  பாலைவனச்செடிகள் எப்போதாவது பெய்யும் மழையில்! சந்தோசமாய் நனைந்துவிட்டு, நனைந்த மயக்கத்தில் தன்னைச்சுற்றி  இளந்தளிகளை  ஈன்று தன்னிலை வந்தவுடன் வெயில் கொளுத்தும் வானையே பார்த்து மழைக்காக  ஏங்கினாலும்  மடிந்து  போவதில்லை! இந்த பெண்மையும்  மாயவன் விரித்த வலையில்  மதிமயங்கி மாட்டிக்கொண்டு  விடிவிக்க...  ஆளில்லாமல் போனாலும் தனிமையில் போராடி முதுமையிலும் ஓய்வதில்லை! மடிந்தாலும் இவள் வரலாற்று பாதையின் நினைவுச்சினங்களின்  புதிய  போர்க்களம் ! பூக்களை  ரசிப்பவன்  அது  காற்றோடு  மோதி  காயமாகும்  ரகசியத்தை அறிவதில்லை! பெண்ணின் மைவரைந்த  கண்களை  வருணிப்பவன்   அது நாளும் எழுதும்  கண்ணீர் இதிகாசம் அறிவானா?
--


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கவிஞர் இரா .இரவி எழுதிய சுட்டும் விழி ஹைக்கூ நூல் வெளியீடு விழாப் புகைப்படங்கள்

படம்
கவிஞர் இரா .இரவி எழுதிய சுட்டும் விழி ஹைக்கூ நூல் வெளியீடு விழாப் புகைப்படங்கள் 

மதுரை வந்த வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார் கவிஞர் இரா .இரவி

படம்
பொறியாளர் சுரேஷ் மகன் திருமண வரவேற்பிற்க்காக மதுரை வந்த வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி  வரவேற்றார் கவிஞர் இரா .இரவி உடன் கவிஞர்கள் சந்திரன் ,குருநாதன்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ                    கவிஞர் இரா .இரவி

உயிர்களை ஊசலாடவிட்டவருக்கு
பதவி ஊசலாடுகிறது
சிதம்பர ரகசியம்

பொதுஉடைமை
உணர்த்தியது
செம்பருதி பூ

தங்கக்கூண்டு வேண்டாம் 
தங்க  கூண்டு போதும்
காதலர்களுக்கு

இயற்கையின்
இனிய கொடைகள்
வண்ணங்கள்

மூளையின்
முடங்காத முயற்சி
எண்ணங்கள்

இதயத்தை இதமாக்கும்
கோபத்தைக் குறைக்கும்
இனிய இசை

ஈடு இணை இல்லை
இன்பத்தின் எல்லை  
காதல் உணர்வு

அளவிற்கு அதிகமானால்
ஆபத்து
பணமும் காற்றும்

யோசிப்பதில்லை பிறரைப்பற்றி
சந்திக்கும்போது
பிரிந்த காதலர்கள்

அன்று   பாசத்தால்
இன்று பணத்தால்
உறவுகள்

புலியைக்கண்ட மானாக
வேட்பாளரைக் கண்ட
வாக்காளர்
--


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

நூல் உலகம் » குறிச்சொல் - வெ. இறையன்பு

அணு உலை உயிர்களுக்கு உலை

படம்
அணு உலை உயிர்களுக்கு  உலை

நமக்கு நாமே
வைக்கும் அணுகுண்டு
அணு உலை
வராது பூகம்பம் சரி
வந்தால்
அணு உலை

கணிக்க முடியாதது
இயற்கையின் சீற்றம்
அணு உலை

கொலைக்களம் ஆக வேண்டாம்   
கூடங்குளம்
அணு உலை

மின்சாரம் காற்றிலும் கிடைக்கும்
உயிர்கள் போனால் கிடைக்குமா ?
அணு உலை

பண நட்டம் பெற்றிடலாம்
உயிர்கள் நட்டம் ?
அணு உலை



மின்சாரம் பெறப்   பல வழி
உயிர்கள் போக வழி
அணு உலை

உயிர்கள் அவசியம்
மின்சாரம் அனாவசியம்
அணு உலை

வாழலாம் மின்சாரமின்றி
வாழமுடியுமா?உயிரின்றி
அணு உலை

உயிரா ? மின்சாரமா?
உயிரே முதன்மை
அணு உலை

வராது சுனாமி என்றவர்களே
வராமலா இருந்தது சுனாமி
அணு உலை

உத்திரவாதம் உண்டா ?
பூகம்பம் வரதா ?
அணு உலை

விரும்பவில்லை வெறுக்கின்றனர்
மனிதாபிமானிகள்
அணு உலை 

வேண்டும்   என்போர்
வசித்திட வாருங்கள்
அணு உலை அருகில்

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


--

ஜோசியனை ஜெயிலில் போட வேண்டும்!

படம்
பேரன்புள்ள தாய்மார்களே! தோழர்களே! இன்றைய தினம் நாம் எல்லோரும் டாக்டர்
மனோகரன் - கஸ்தூரி இவர்களின் வாழ்க்கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சி
குறித்து இங்குக் கூடி இருக்கின்றோம். இந்நிகழ்ச்சி இதுவரை நம்மிடையே
நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளுக்கு மாறாகவும், அறிவிற்குப்
பொருத்தமானதும், மூடநம்பிக்கை அற்றதுமானதுமாகும். இதுவரை நடைபெற்ற
முறைகளின் உட்பொருளைப் பற்றி சிறிதும் கருதாமல், அதனால் ஏற்படும் பலனைப்
பற்றியும் கவனிக்காமல் தொடர்ந்து பழைய முறையையே பெரும்பாலோர் பின்பற்றி
வருகின்றனர்.

பழைய புரோகித முறை என்பது மூன்று தன்மைகளை அடிப்படையாகக் கொண்டது;
சிறுபான்மையினர் பலன் அனுபவிக்கவும், பெரும்பான்மையினரை அடிமைகளாக்கி
தாங்கள் பாடுபடாமல், உழைக்காமல் வாழ்ந்து கொண்டு வருவதுமாக
இருக்கின்றனர்.

முதலாவது காரியமாக ஜாதிப் பிரிவுகளை ஏற்படுத்தி, அதன் காரணமாகத் தங்களை
உயர்ந்தவர்களாக்கிக் கொண்டு, அந்த ஜாதிப் பிரிவுகள் கலைந்து விடாமல்
இருக்க, இதுபோன்ற சடங்குகளையும் முறைகளையும் ஏற்படுத்திப் பலன்
அனுபவித்துக் கொண்டு வருகின்றனர்.

சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு
வருவதில், சமுதாயத் துறைகள…

சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்: சோமாலிய மக்களுக்கு தமிழர்கள் ஏன் உதவக்கூடாது ?

படம்
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்: சோமாலிய மக்களுக்கு தமிழர்கள் ஏன் உதவக்கூடாது ?
ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் 640.000 பிள்ளைகளை பட்டினி மரணத்தின் விளிம்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டதாக ஐ.நா அவசர அறிவப்பு விடுத்துள்ளது.
சோமாலியாவின் தெற்குப் பகுதியில் பட்டினி காரணமாக ஐந்து வயதுக்குட்டபட்ட சுமார் 29.000 பிள்ளைகள் கடந்த 90 தினங்களில் மரணித்துள்ளார்கள். பட்டினி வேகம் தொற்று நோய்போல பரவிக்கொண்டிருக்கிறது.
சோமாலியாவில் மட்டும் அடுத்த சில மாதங்களில் 640.000 பிள்ளைகள் பட்டினி மரணத்தை நெருங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏழுமாதமுள்ள சிறுமி ஒருத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவருடைய நிறை வெறும் 3.4 கிலோ மட்டுமே. ஐ.நாவின் வேண்டுகோள் பலமாக இருந்தாலும் அதற்கு உலகின் வளமுள்ள நாடுகள் பெரிதாக அக்கறை காட்டவில்லை. ஆபிரிக்க கண்டத்தில் மிகவும் வறுமைப்பட்ட நாடாகவும் உலகிலேயே மிகவும் ஆபத்து மிக்க நாடுகளில் ஒன்றாகவும் இருப்பது சோமாலியா ஆகும். 1991ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தால் அப்போது ஆண்டு அவந்த அரசு கவிழ்ந்ததோடு பல விடுதலைப் போராட்ட …

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம்

படம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின்  சார்பில் தன் முன்னேற்றப்   பயிலரங்கம் ,சிபி பயிற்சிக் கல்லூரியில்   நடைப்பெற்றது .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர் ராஜராஜன் வரவேற்றார் .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .ஆ .முத்துகிருஷ்ணன் ,ராமமூர்த்தி  வாழ்த்துரை வழங்கினார்கள்  .உதவி வேளாண்மை அலுவலர் ,கவிஞர் திருமதி .குமாரி லட்சுமி    வெற்றிக்கு வழி தன்னம்பிக்கை என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .  கவிஞர்கள் விஸ்வநாதன் ,குருநாதன்,குமுதம் ஆறுமுகம் ,யமுனா ரகுபதி ,மகாலட்சுமி ஆகியோர் தன்னம்பிக்கை தொடர்பான கவிதை படித்தனர் .செயற்குழு உறுப்பினர் தினேஷ் நன்றி கூறினார் .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர்  பெருமளவில்   கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .
இணைப்பு தன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா புகைப்படங்கள்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ          கவிஞர் இரா .இரவி

கேலிக்கூத்தானது
அகிம்சையின் ஆயுதம்
உண்ணாவிரதம்

எடுபடவில்லை
மோடியின் 
மோடிமஸ்தான் வேலை

காந்தியடிகளை
அவமானப்படுத்தும் 
மத வெறியர்

பிறக்கும் போது இல்லை
இறக்கும் போது உண்டு
ஆடை

யானையின் வாய்
அரசியல்வாதியின் கை
சென்றால் திரும்பாது 

இதயம் அல்ல
மூளைதான்
காதலியின் இருப்பிடம் 



--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

எய்ட்ஸ் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
எய்ட்ஸ் ஹைக்கூ
கவிஞர் இரா .இரவி

பண்பாடுப்   பயிற்றுவிக்கும்
பயமுறுத்தல் நோய்   
எய்ட்ஸ்

ஒழுக்கத்தைப் பொதுவாக்குவோம்
இருபாலருக்கும்
வராது  எய்ட்ஸ்

மருந்து இல்லை
மரணம் உறுதி
எய்ட்ஸ்

உயிரை உருக்கும்
உடலைக் கெடுக்கும்
எய்ட்ஸ்

கவனம் தேவை
குருதி பெறுகையில்
எய்ட்ஸ்

எச்சரிக்கை
ஊசி போடுகையில்
எய்ட்ஸ்

வரும் முன் காப்போம்
உயிர்க் கொல்லிநோய்
 உணர்ந்திடுவோம் 

சபலத்தின் சம்பளம்
சலனத்தின் தண்டனை
எய்ட்ஸ்

சில நிமிட மகிழ்வால்
பல வருடங்கள் இழப்பு
எய்ட்ஸ்

வெறுக்க வேண்டாம்
நேசிப்போம் நண்பராக
எய்ட்ஸ் நோயாளிகளை

--

--

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

அணு உலை

படம்
அணு உலை                     ஹைக்கூ                              கவிஞர் இரா .இரவி

அறிவியலின்
ஆபத்து
அணுஉலை

அரிசி உலை உயிர் வளர்க்கும்
அணு உலை உயிர்களைப்
பறிக்கும்

அதனைத் தொலை
உயிருக்கு   உலை
அணு உலை

நன்மையை விட
தீமையே அதிகம்
அணு உலை

கூட்டமாகக்    கொல்லும்
கொடிய வில்லன்
கூடங்குளம் அணு உலை

பற்றி எரிந்தால்
அணைக்கவே முடியாது
அணுஉலை

கொள்ளியால்
தலைச்   சொரிதல்
அணுஉலை

ஆதாயத்தை விட
ஆபத்தும் அழிவும் அதிகம்
அணுஉலை

உயிர் இனங்களை மட்டுமல்ல
புல் பூண்டுகளை அழிக்கும்   
அணுஉலை

அயல்நாடுகளில்
அங்கீகரிக்கவில்லை
அணுஉலை

அக்கம் பக்கம்
அழிவு நிச்சியம்
அணுஉலை

வேண்டாம் வேண்டாம்
கூடங்குளம்
ரத்தக்குளமாகிட

உலை வைக்காமல்
உண்ணாவிரதம்
அணுஉலை  மூட

ஜப்பானின் அழிவு
தமிழகத்திற்கு  வேண்டாம்
மூடுக   அணுஉலை
--

--


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

{பகலவன் குழுமம்} - ஒன்றுபடுவோம், வென்றெடுப்போம், பெரியாரின் புகழ் பாடுவோம்!

{பகலவன் குழுமம்} - ஒன்றுபடுவோம், வென்றெடுப்போம், பெரியாரின் புகழ் பாடுவோம்!
தமிழ்நாடன் குவைத்
இன்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 133 ஆவது பிறந்த நாள். தமிழர்கள் தெளிவுபெற்றது இவரால், தமிழர்கள் அரசியல் விடுதலை பெற்றது இவரால், எழுச்சியுற்றது தந்தை பெரியாரால், நமது வாழ்வு பணி அரசியல் பொருளாதாரம் என அனைத்து மட்டங்களிலும் இன்று நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி, உயர்ச்சி என்பதெல்லாம் பெரியார் ஒருவரால் கிடைத்ததாகும். ஆனால், பெரியார் இன்றும் வாழவேண்டிய செயலாற்ற வேண்டிய கட்டாயம் அப்படியே உள்ளது. நாம் ஒரு அடி மேலேறினால் எதிரி நமக்கும் மேலே நிற்கப் பார்க்கிறான், துரோகிகள் காலைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறான். கலைஞரை விரட்ட செயலலிதாவை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கேற்பட்டது, கெட்ட வாய்ப்பா? வேறு வழியின்றியா? அல்லது துப்பின்றியா? சிந்திக்க வேண்டும். தமிழினம், தமிழ்தேசியம் என்றெல்லாம் காலம் காலமாக பேசி, இரண்டில் ஒருவர்தான் முடிவென்று சொல்வதன் தன்மை என்ன?. அநியாமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று உயிர்களை தமிழர்களை இருபது ஆண்டுகளாக ஆகியும் காக்க முடியாததன் காரணம் என்ன?…

தந்தைப் பெரியார்

படம்
ஈ. வெ. ராமசாமிகுறுந்தொடுப்பு [காட்டு] கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. ஈ.வெ. இராமசாமி
வேறு பெயர்(கள்):இராமசாமி, ஈ.வெ.இரா., பெரியார், (அ) தந்தை பெரியார்பிறப்பு:செப்டம்பர் 171879பிறந்த இடம்:ஈரோடு, தமிழ்நாடு, இந்தியாஇறப்பு:திசம்பர் 241973 (அகவை 94)இறந்த இடம்:வேலூர், தமிழ்நாடு, இந்தியாஇயக்கம்:சுயமரியாதை இயக்கம், தமிழ் தேசியவாதம்முக்கிய அமைப்புகள்:இந்திய தேசிய காங்கிரஸ், நீதிக்கட்சி, திராவிடர் கழகம்குறிப்பிடத்தக்க விருதுகள்:யுனஸ்கோ (1970)மதம்:இறை மறுப்பாளர்பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்[1]. இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை