படித்ததில் பிடித்தது


படித்ததில் பிடித்தது
விபத்தில் பலியான மகன் அம்மாவை நினைத்தும் பாடும் கவிதை

மீண்டும் அவளின் கருவறையில்
கவிதாயினி கார்த்திகா

அவன் வாழ்வில்
அதிசயமாய் ஒரு அதிகாலை
கதிரவன் உதயமாகிவிட்டு
கண்முடிக்கொண்டான்
பாவம் அவன்
கண்ணீர் வடிக்க கற்றுக் கொள்ளவில்லை
வானில் அஸ்தமனம் என்பதே
அதிகாலையைத் தேடித்தான்
ஆனால் ...
மறையும் மனிதனோடு சேர்ந்து
மண்ணில் புதையும்
அவன் கனவுகளுக்கு
கிழக்கே தோன்றுமா ?விடியல் !
தாயே !
நீ ஆசையாய் சுமந்த
என் தேகத்தில் ஆயிரம் கீறல்கள் !
மழை என் மீது விழுந்தாலும்
மனம் நோகத் துடிப்பாயே..
மரணமே வந்ததம்மா
எப்படி தாங்குவாய் !
எங்கே சென்றாலும்
சொல்லிச் செல்லச் சொல்வாய்
எங்கேயோ செல்கிறேன்
வழியனுப்ப நீ இல்லை என்னருகில்
என்னைப் பற்றி கனவுக் கண்டாய்
காலம் வந்து
கலைத்துப் போட்டதே !
மார்போடு சேர்த்து வளர்த்தாய்
மண்ணை நனைக்கும் என்
குருதியை கண்டால் என்ன? ஆவாயோ !
வாழ நினைத்தேன்
என்ன செய்வேன் !
பயணம் முடிந்ததம்மா !
உன்னை அழ வைத்தா
கல்லறைக்குச் செல்வேன்
அடிமனம் அலறுதம்மா !
வீசும் காற்றும் அதை உணருதம்மா !
கண்முடுகின்றேன் !
கவலைக் கொள்ளாதே..
என் கல்லறை என்பதே
உன் கருவறையைத் தேடித்தான் !

--

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்