7ஆம் அறிவு திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

7ஆம் அறிவு
இயக்குனர் முருகதாஸ்

நடிப்பு   சூர்யா
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படத்தின் ஆரம்பத்தில் யார்  யாருக்கோ நன்றி என்று வருகின்றது .இந்த தலைப்பில் ஏழாவது அறிவு என்று  பல வருடங்களுக்கு முன்பே நூல் எழுதிய நூல் ஆசிரியர் முனைவர் இறை அன்புவிற்கு நன்றி என்று எழுத மறந்து விட்டனர் .

சூரியாவின் நடிப்பை, உழைப்பைப் பாராட்டலாம் .தமிழ் தமிழர் என்று உயர்வான வசனங்கள் வருகின்றது .பாடல் ,இசை ,சண்டை ,ஒளிப்பதிவு என தொழில் நுட்பங்களைப் பாராட்
லாம் .

வாழைப் பழத்தில்   ஊசி ஏற்றுவது போல  சுருதி பேசும் வசனத்தில். ரிசர்வேசன் ,ரேகம்டேசன் ,கரப்சன் இதனால்தான் திறமை உள்ளவர்கள் வெளிநாடு சென்று விடுகிறார்கள் .இயக்குனர் முருகதாசின் கஜினி படம் வெற்றி பெற்றாலும்  கூட அது     (ச ய்கோ )ஒரு மன நோயாளி கதைதான். அந்தப்படமும் எனக்கு
ப் பிடிக்காத படம்தான் .ரேகம்டேசன் ,கரப்சன் சரி .ரிசர்வேசன் என்ற சொல் தேவையற்றது .

இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி அதை யாரும் எதிர்க்க கூடாது.  இட ஒதுக்கீடு மட்டும் இல்லை என்றால் முருகதாஸ் போன்றவர்கள் படித்து இருக்க முடியாது .அதை உணரவேண்டும் இயக்குனர் .ரிசர்வேசன் என்ற அந்த வரியை படித்தில் இருந்து நீக்க   வேண்டும் .
போதி தர்மன் என்பவர் தமிழர் என்பதில் பெருமை கொள்ளலாம் .அவரை சீனர்கள் கடவுளாக வணங்குகின்றனர் . ஆனால்  அவருக்கு விஷம் கலந்து உணவு தருகின்றனர் .

உணவில் கை வைத்ததும் விஷம் கலந்து   இருப்பதை அறிந்த போதி தர்மர். அதை உண்டு இறப்பதை நம்ப முடியவில்லை .பல வித்தைகள் கற்றவர், மருத்துவம் அறிந்தவர் ஏன் ? சாக வேண்டும்.இப்படி பல கேள்விகள் படம் பார்க்கும் பொது நம் மனதில் எழுகின்றது .

வில்லனாக வரும் சீனர் பார்த்தவுடன் காவலர் மற்ற காவலர்களை சுட்டு விட்டு தானும் சுட்டுக் கொண்டு செத்து விடுகிறார் .இது போன்ற காட்சி ஒரு முறை காட்டினால் பரவாயில்லை .படம் முழுவதும் அவர் பார்க்கும் நபர்கள் ,பெண் எல்லோரும் தாக்க கிளம்புவது .பழைய வி
ட்டலாச்சாரியார்  படத்தை  விஞ்சும் அளவிற்கு, காதில் பூ சுத்தும் வேலையை இயக்குனர் முருகதாஸ் செய்துள்ளார் .மாயாவி படம் என்றால் பரவாஇல்லை .

டி என் எ  சோதனை அறிவியல் ஆய்வு  செய்யும் கதையில் இத்தனை சொதப்பல் .
இயக்குனர் சங்கர் எந்திரனில் பூ சுத்தியது போலவே இந்தப் படத்தில் இயக்குனர் முருகதாஸ் பூ சுத்தி உள்ளார்  .

ரூம் போட்டு யோசிக்கிறார்கள் உண்மையில் தமிழ்ப்பட இயக்குனர்கள் ரூம் போட்டு யோசிக்கிறார்கள்.சீனாவில் இருந்து வந்து நாயிக்கு ஊசிப்போட்டு  வைரஸ் மூலம் நோய் பரப்பி இந்தியர்களை கொ
ல்கிறதாம் .சீனா .சீனாவிற்கு நமது இயக்குனர்களே அய்டியா   கொடுப்பார்கள் .
படத்தில் ஆறுதலான விஷயம் எட்டு நாடுகள் சேர்ந்து இலங்கையில் தமிழர்களைக் கொன்றது துரோகம் .யாழ் நூலகத்தை எரித்தார்களே, தமிழன் தோற்கக்   கூ டாது .போன்ற   வசனங்கள் கைதட்டல் பெறுகின்றது . 
கமலஹாசன் மகள் சுருதி தமிழில் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு சிறப்பாக நடித்து உள்ளார் .
வித்தகக் கவிஞர் பா .விஜய் எழுதிய தோழா பாடல் நன்றாக உள்ளது .இசை ஆதிக்கம் செலுத்தாமல் வரிகள் புரிவதால் ரசிக்கும் படி உள்ளது .

  படத்தில் தேவை இல்லாமல் செலவு கணக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே கார்கள் பெருமளவு உடைத்து உள்ளனர் .காட்சி நம்பும் படியாக  இல்லை .7ஆம் அறிவு என்று பெயர் வைத்து விட்டு ஆறாவது அறிவை பயன்படுத்தாமல் படத்தைப் பார்த்துவிட்டு போங்கள் என்று   சொல்லும் விதமாக படம் உள்ளது .
மிகப் பெரிய எதிர்பார்ப்பை விளம்பரத்தை தந்தாலே ஏமாற்றம்தான் மிஞ்சும்  .
--

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!
 

கருத்துகள்

  1. விமர்சனம் அருமை... நீங்கள் சொல்வதை பார்த்தல் எதிர்பார்ப்பு இல்லை என நினைக்கிறன்.

    குறிப்பு: சொல் சரிபார்ப்புபை எடுத்துவிடுங்கள் இல்லையேல் பின்னுட்டோம் இட பலர் எரிச்சல் அடைவார்கள். நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக