இடுகைகள்

January, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹைக்கூ ஆற்றுப்படை » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

மனதில் ஹைக்கூ » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

சுட்டும் விழி » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
இலக்கிய சங்கமம்

நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

காவ்யா பதிப்பகம் சென்னை   விலை
ரூ 90

தமிழகத்தில் இலக்கிய இணையர் என்றால் தமிழ்த்
தேனீ  இரா .மோகன் ,தமிழ்ச்சுடர்   நிர்மலா மோகன் .கர்னாடகத்தில்  இலக்கிய இணையர் என்றால் முனைவர் இரா .சீனிவாசன் , முனைவர் அ.சங்கரி.இருவரும் பெங்களூர்த்தமிழ்ச்சங்கத்தில் தங்களை இணைத்துக்    கொண்டு தமிழ்ப்பணி செய்து வருகின்றனர் .தமிழ் இலக்கியங்களை கன்னடத்தில் மொழி பெயர்க்கும் பணி செய்து வருகின்றனர் .திருக்குறளை கன்னடத்தில் படித்து இருந்தால் திருவள்ளுவர் சிலை திறப்பிற்கு பல வருடங்கள் தடை செய்து இருக்க மாட்டார்கள் என எண்ண தோன்றுகிறது . 

நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரிஅவர்கள் இலக்கிய சங்கமம் என்ற இந்த நூலில் தமிழ் இலக்கியத்தில் உள்ள நுட்பங்களை, பெருமைகளை ,ஆற்றல்களை வெளிப்படுத்தும் விதமாக மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள் .    நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி தமிழ் பேராசிரியராகவும் ,தமிழ்த்துறைத் தலைவராகவும் இருந்த காரணத்தால் இலக்கிய ஈடுப்பாட்டின் காரணமாக நல்ல ஆய்வு செய்து நூல் எழுதி உள்ளார்கள் .இந்த நூலைப் படித்து விட்டு ஒவ்வொரு …

இணையத்தில் இலக்கியம் படித்து மகிழுங்கள்

படம்
இணையத்தில் இலக்கியம் படித்து மகிழுங்கள்

கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி

படம்
கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி
முல்லை பெரியாறு அணையை பிரிடீஷ் அரசு ஒதுக்கிய நிதி போதாமல் தன் சொந்த சொத்துக்களை வித்துக் கட்டினார்.திரு . பென்னி குக் என்ற மாமனிதர் .முல்லை பெரியாறு அணையை இடிக்க நினைப்பது அந்த தன்னலமற்ற தியாகி திரு .பென்னி குக் அவர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம் வெள்ளையருக்கு இருந்த மனிதாபிமானம் கேரளா மனிதர்களுக்கு இல்லை .
புதிய அணை கட்டுகிறோம் என்ற பெயரில் சில கோடிகளை அரசியல் வாதிகள் சுருட்டுவதை தவிர வேறு ஒன்றும் நோக்கம் இல்லை .
காங்கிரஸ் அரசு இது வரை போட்ட திட்டங்களில் அரசியல் வாதிகள் சுருட் டியத்தைப் பார்த்து உலகமே சிரிக்கின்றது.
500ஆண்டுகளுக்கு திடமாக உள்ள அணையை உடைக்க வேண்டும் .புதிய அணை கட்ட வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள்.நன்றி மறந்தவர்கள் .நெய்வேலியில் இருந்து தமிழ் நாட்டு மின்சாரம் கேரளா செல்கின்றது .மாட்டுக் கறி உண்ண அடி மாடுகள் சாரை சாரையாக தினமும் கேரளா செல்கின்றது .அரிசி பருப்பு என அனைத்துப் பொருள்களும் தமிழகத்தில் இருந்துதான் செல்கின்றது .உண்டு கொளுத்து விட்டு வஞ்சனை செய்கிறார்கள் .
அணை இடிவது போல கிராபிக்ஸ் காட்சி குறுந்தகடு…

மின்மினி இரு மாத ஹைக்கூ இதழ் ஜனவரி இதழ் வெளியீடு

படம்
மின்மினி இரு மாத  ஹைக்கூ  இதழ்   ஜனவரி இதழ்  வெளியீடு

தேநீர் கோப்பையுடன் கொஞ்சம் ஹைக்கூ ஹைக்கூ நூல் வெளியீட்டு விழா .

படம்
தேநீர் கோப்பையுடன் கொஞ்சம் ஹைக்கூ ஹைக்கூ நூல் வெளியீட்டு விழா .

மறையவில்லை முத்துக்குமார் இரா .இரவி

படம்
மறையவில்லை முத்துக்குமார்    இரா .இரவிஉடலால் உலகை விட்டு மறைந்த போதும்
உணர்வாளர்களின் உள்ளத்தில் என்றும் வாழ்கிறாய்

மரண வாக்கு மூலத்தை இறபிற்கு முன்
மின்னஞ்சல் அனுப்பி அதிர்ச்சியில் ஆழ்த்தினாய்

உலகில் தற்கொலை செய்வது கோழைத்தனம்
உந்தன் தற்கொலையோ நல் வீரத்தின் இலக்கணம்

உடலுக்கு தீ மூட்டி பரவிய ஒளியில்
உணர்வினை எமக்கு புகட்டிய புத்தன்

உந்தன் கோரிக்கையை ஆள்வோர் ஏற்று இருந்தால்
ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து இருப்பார்கள்

சர்வதேச சமுதாயத்திற்கு படு கொலைகளை
கவன ஈர்ப்பு செய்த திருமகன்

ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் காக்க வேண்டி
ஒப்பற்ற உன் உயிர் மாயித்த மா
வீரன்
ஈழத்தமிழர்கள் லட்சிய வரலாற்றில்
இனிய இடம் உனக்கு உறுதியாக உண்டுகொலைகாரன்களிடையே நடந்த தேர்தலில்
பெரிய கொலைகாரன் வெற்றி பெற்றான்
கொட்டு இல்லாமல் ஆடுவான் இனி
வெற்றி
க் கொட்டு கிடைத்ததால் கூடுதலாக ஆடுவான்
ஆணவக்காரர்களின் ஆட்டம் நிரந்தரம் அன்று
ஆதிக்கம் நிலைத்ததாக வரலாறு இல்லை

இருள் மறைந்து ஒளி பிறக்கும் உறுதி
தனித்தமிழ் ஈழம் விரைவில் மலர்வதும் உறுதி

தமிழ் ஹைக்கூ ஆயிரம்-தொகுப்பாசிரியர் முனைவர் இரா.மோகன் .மதிப்புரை: முனைவர் ச.சந்திரா

படம்
தமிழ்ஹைக்கூஆயிரம்-தொகுப்பாசிரியர் முனைவர் இரா.மோகன்  eramohanmku@gmail.com

மதிப்புரை:முனைவர் ச.சந்திரா  neraimathi@rocketmail.com
கோபுரநுழைவாயில்:
சேரமன்னர்பதின்மரின்வாகைசூடல்குறித்தபதிற்றுப்பத்துதோன்றியதுசங்ககாலம்!நூற்றுவரின்சமுதாயச்சாடல்குறித்ததொகுப்புநூலாம் 'தமிழ்ஹைக்கூஆயிரம்'உருவானதுஇக்காலம்! இந்தியதேசத்தின்தென்கோடியில்வசிக்கும்முத்தானகவிஞர்களின்படைப்புக்களில்முனைமுறியாதஅட்சதைஅரிசியாய்,பதின்நூறுதெரிவுசெய்யப்பட்டுவடகோடியில்ஒளிர்விடும்சாகித்யஅகாதமியால்வெளியிடப்பட்டிருக்கும்முனைவர்இரா.மோகன் அவர்களின்இத்தொகைநூல்ஹைக்கூவரலாற்றில்அதிகமாய்பேசப்படவிருக்கின்றஅற்புதநூல்! தன்னலம்கருதாதுபொதுநலச்சார்போடுபல்லோரின்பாங்கானப்படைப்புக்களைத்தொகுத்துவெளியிட்டிருக்கும்இத்தகையப்பெருந்தகையாளருக்குமுத்தமிழ்க்காவலர்நினைவுப்பரிசுவழங்கப்பட்டிருப்பதுபொருத்தமானஒன்றுதானோ?
ஒன்பான்சுவையா?அறுசுவையா?
மேல்கணக்குபதினெட்டுபிறந்ததுசங்ககாலம்!கீழ்க்கணக்குபதினெட்டுபிறந்ததுசங்கம்மருவியகாலம்!ஹைக்கூதொகைநூல்பத்தொன்பதுபிறந்ததுஇக்காலம்!முனைவர்இரா.மோகனின்இத்தொகுப்புநூல்பிறந்தததனால்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

விழித்த
விதை
விருட்சம்

தூங்கிய
விதை
குப்பை

மிகவும் ஒல்லி
பெயர்
குண்டுமலை

பார்த்தீனியமாகப்
பெருகியது
ஊழ
ல்
விலைவாசி குறையுமா ?
விடியல் விளையுமா ?
ஏக்கத்தில் ஏழைகள்

இங்கிலாந்துக்காரனின்
இனிய சுவடுகள்
கல் கட்டிடங்கள்


அங்கிகரிக்கப்பட்ட
சூதாட்டம்
பங்குச்சந்தை

துன்ப இருள்
அகற்றும் விளக்கு
திருக்குறள் 


அறநெறிப்படுத்தி
அன்பைப் போதிக்கும்
ஆத்திச்சூடி

பெண்ணுரிமையின்
முதல் குரல்
கண்ணகி   


தமிழில் புதிய முயற்சி லிபுன் கவிஞர் .இரா .இரவி

படம்
தமிழில் புதிய முயற்சி 

லிபுன்              கவிஞர் .இரா .இரவி

காதல் ஜோடி இருவர் .ஆனால் அருகே பலர் .நேரடியாகப் பேசிக் கொள்ள முடியாத சூழ்நிலை .இருவரும் அருகில் உள்ள பலருக்கும் தெரியாமலே விழிகளாலே பல பேசினார்கள் .சம்மந்தப்பட்ட    இருவருக்கும் நன்கு புரிந்தது .ஆனால் அருகில் இருந்த எவருக்கும் எதுவும் புரியவில்லை .காதல் மொழி பேச இதழ்கள் வேண்டாம் .விழிகளே போதும் என்று பேசிவிட்டு இருவரும் விடைப்பெற்று சென்றனர் .காதலி என்ன சொன்னாள்.காதல
ன் என்ன சொன்னான் என்பது இருவர் மட்டுமே அறிந்த ரகசியம் .

பேசும் அவள் விழிகள்
காதல் மொழி நாளும் சொல்லும்
ஒய்வு எடுத்தன இதழ்கள்


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
லிபுன்              கவிஞர் .இரா .இரவி மலர்க்கண்காட்சி யின்  உள்ளே நுழைந்தான் .பார்த்தான் பரவசம் அடைந்தான் .இத்தனை வண்ணங்களா ? வியந்தான் .இயற்கையின் இனிய கொடை எண்ணங்களை இனிமையாக்கிய…

கவிஞர் இரா .இரவி தன் செல்லிடப்பேசியில் எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

படம்
கவிஞர் இரா .இரவி  தன் செல்லிடப்பேசியில்  எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

கவிஞர் இரா .இரவி தன் செல்லிடப்பேசியில் எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

படம்
கவிஞர் இரா .இரவி  தன் செல்லிடப்பேசியில்  எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

கவிஞர் இரா .இரவி தன் செல்லிடப்பேசியில் எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

படம்
கவிஞர் இரா .இரவி  தன் செல்லிடப்பேசியில்  எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

கவிஞர் இரா .இரவி தன் செல்லிடப்பேசியில் எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

படம்
கவிஞர் இரா .இரவி  தன் செல்லிடப்பேசியில்  எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

கவிஞர் இரா .இரவி தன் செல்லிடப்பேசியில் எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

படம்
கவிஞர் இரா .இரவி  தன் செல்லிடப்பேசியில்  எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

கவிஞர் இரா .இரவி தன் செல்லிடப்பேசியில் எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

படம்
கவிஞர் இரா .இரவி  தன் செல்லிடப்பேசியில்  எடுத்த பெங்களூர் ,மைசூர் புகைப்படங்கள்

உணவுத் திருவிழாவில் உணர்வுத் திருவிழாவாக கவியரங்கம் நடைப்பெற்றது

படம்
மதுரையில் நடந்த உணவுத் திருவிழாவில் உணர்வுத் திருவிழாவாக கவியரங்கம் நடைப்பெற்றது .தலைமை கவிஞர் பொற்கை பாண்டியன் உடன் கவிஞர்கள் இரா .இரவி ,அருச்சுனன் ,கா .கண்ணதாசன் கவிதை வாசித்தனர் .  

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ     கவிஞர் இரா .இரவி 
விதைத்தவர் இல்லை
வளர்ந்து சிரித்தது
மரம்

உருவம் இல்லை
உணர்வு இனிது
தென்றல்

அங்கீகரிக்கப்பட்ட
கை
யூட்டானது
வரதட்சணை

விலை ஏறும் தங்கம்
வேதனையில்
பெற்றோர்

பணி ஒய்வுப் பெற்றாலும்
சிந்தனை 
ஒய்வு இல்லை
எழுத்தாளர்

பறக்கும் பட்டத்துடன்
சேர்ந்து பறந்தது
மனசு

உடலுக்கு மட்டுமல்ல
உள்ளத்திற்கும் நல்லது
காய்கறிகள்

காரணப்பெயரோ ?
ஆங்கிலத்தில்
வெண்டிக்காய்

பாவாடை அணிந்த
காய்
கத்தரிக்காய்

உணர்த்தியது
வாழ்வின் வெறுமை
வெங்காயம்

கூடியது சுவை
இலையில் இட்ட
உணவு

பறித்ததும் சிரித்தது
அற்ப ஆயுள்
ரோஜா

இதழ்கள் சொல்லவில்லை
கூந்தல் சொல்லியது
வருகிறேன்

இல்லை என்றால்
மிகவும் சிரமம்
மின்சாரம் சம்சாரம்



--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


ஹைக்கூ கவிஞர் இரா. இரவி

படம்
ஹைக்கூ            கவிஞர் இரா. இரவி 

மலரே ரசித்தது
மலர்க்  கண்காட்சி
என்னவள்

வண்ணங்கள் எத்தனை
உணர்த்தியது 
மலர்க்  கண்காட்சி

இயற்கையின் மேன்மை
இனிதே சொல்லியது
மலர்க்  கண்காட்சி


நினைவிற்கு வந்தது
சரவிளக்கு
பொன்சாய்மரம் 


பலன் தரவில்லை
பெயர்
வாகை மரம் 


பயணத்தில்
உடன் வரவில்லை
வந்தால் நினைவில்


வரப்பு உயர
நீர் உயரும்
வரப்பு ?


எங்கெங்கோ மலர்ந்த
மலர்களை இணைத்தது
நார்

 எங்கெங்கோ பிறந்த
இருவரை இணைத்தது
காதல்

வழியே
தெரியவில்லை
வழிகாட்டி ?

சிறகுகள் அ
சைத்து
சிகரம் தொட்டது
பறவை

விலைவாசி
ஆலைக் கரும்பாக
மக்கள்

காற்றாடி
சுழன்று
தந்தது மின்சாரம்



விலை ஏறியது
வருத்தமில்லை
குடிகாரன்

சென்னையில் நடந்த முனைவர் வெ.இறையன்பு அவர்களின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா புகைப்படங்கள்

படம்
சென்னையில் நடந்த முனைவர் வெ.இறையன்பு அவர்களின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா  புகைப்படங்கள்   

மைசூர் புகைப் படங்கள்

படம்
மைசூர் புகைப் படங்கள் ,தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன், .கவிஞர் இரா. இரவி,முத்து இளங்கோவன், திருநாவுக்கரசு

பெங்களுர்த் தமிழ்ச் சங்கத்தில்

படம்
பெங்களுர்த் தமிழ்ச் சங்கத்தில் முத்தமிழ்க்  காவலர் விருதுப் பெற்ற தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன் அவர்களுக்கு பாராட்டும்,தமிழ்த்தேனீ  முனைவர் இரா மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது .உடன் பெங்களுர்த் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மு .மீனாட்சி சுந்தரம் செயலர் கோ .தாமோதரன் ,பேராசிரியர் சீனிவாசன்   ,தமிழ்ச்  சுடர் முனைவர் நிர்மலா மோகன்,முனைவர் சங்கரி ,கவிஞர் இரா. இரவி,முத்து இளங்கோவன், திருநாவுக்கரசு   ,பெங்களுர்த் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள்.
--

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்மேனிலை ப் பள்ளி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப்போட்டிகள் நடந்தது

படம்
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்மேனிலை ப் பள்ளி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப்போட்டிகள்  நடந்தது

மதுரை கேப்ரங்கால் மகளிர் மேனிலைப் பள்ளியில் நடைப் பெற்றது. பள்ளியின் தேசிய மாணவிகள் படையின் மரியாதை அணிவகுப்பு நடந்தது .

படம்
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்மேனிலை ப் பள்ளி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப்போட்டிகள்  நடந்தது

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்   மேனிலை ப் பள்ளி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப்போட்டிகள் நடந்தது. வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கி பாராட்டும் விழா மதுரை கேப்ரங்கால் மகளிர் மேனிலைப் பள்ளியில் நடைப் பெற்றது. பள்ளியின் தேசிய மாணவிகள் படையின் மரியாதை அணிவகுப்பு நடந்தது .
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் முனைவர் க .பசும்பொன் வரவேற்றார் .பள்ளியின் தாளாளர் திரு .மார்த்தாண்டன் தாமஸ், உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் இரா.இரவி,கவிஞர் பாண்டுரங்கன் ,புலவர் ஆறுமுகம் எழுத்தாளர் கர்ணன், கனல்பூக்கள்  ஆசிரியர் கவிஞர் சாந்தி  ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சு .நாகராச முருகன்  வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கி,சிறப்புரையாற்றினார் .மூன்று போட்டிகளுக்கும் தலா   முதல் பரிசு ரூபாய் 10000 இரண்டாம் பரிசு ரூபாய் 7000
பள்ளியின் தலைமை ஆசிரியர் லீலா மனோகரி நன்றி கூறினார்.

 முடிந்த அளவிற்கு ஆங்கிலச் சொல் கலப்பின்றி நல்ல தமிழில் பேசுங்கள் .ம…