முனைவர் இரா .மோகன் ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி

மதுரை வாசகர் குழுமத்தில் தமிழ்த்தேனீ   முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி முனைவர் இரா .மோகன்  செல் 9443458286

தலைப்பு இன்று புதிதாய் பிறந்தோம் .நாள்  8.1.2012

இடம்  .
மதுரை அரவிந்த் மருத்துமனை அரங்கு .

என் உடம்பில் ஓடுவது மகா கவி பாரதி ரத்தம். 
பாரதியின் படைப்புகள் என் குருதியோடு கலந்தவை . பாரதியை நேசிப்பவன் நான் .அதனால்தான் பாரதி வரியை தலைப்பாகத் தந்தேன் .
நான் படித்து ரசித்த நகைச் சுவை ஒன்று .மருத்துவரிடம் பெண் நோயாளி, நீங்கள் தரும்
மாத்திரைகள் எப்போது ? சாப்பிடுவது என்பது மறந்து விடுகிறது என்றார் .ஒரு தொலைக்காட்சித்  தொடர்  பெயர்  சொல்லி அப்போது இந்த மஞ்சள் மாத்திரை ,மற்றொரு தொடர்  பெயர்  சொல்லி அப்போது இந்த வெள்ளை மாத்திரை சாப்பிடுங்கள் என்றார் .உடன் பெண் நோயாளி இனி மறக்காமல் மாத்திரை சாப்பிட்டு விடுவேன் என்றார் .
அந்த அளவிற்கு
தொலைக்காட்சித்  தொடர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன .தொடர்ககளில் நல்ல விஷயம் சொல்வதே  இல்லை .

பலரது வாழ்க்கை டென்ஷன் ,பென்ஷன் இரண்டிலுமே கழிந்து விடுகின்றது .  

சிங்கப்பூரில் அடையாள அட்டை ,கடித முகப்பு இவற்றில் தமிழ் இலக்கிய பொன் வரிகளைப் பொறிக்கின்றனர்.நண்பர் ஒருவரது   அடையாள அட்டையில் சிலப்பதிகார வரியை படித்தேன் .இந்த நல்ல பழக்கத்தை நாமும் கடைப்  பிடிக்க வேண்டும்.
ன்ஷ்டீன் வரிகள் !
நேற்றில் இருந்து பாடம் கற்போம் !
இன்றே செயல் படுவோம் !
நாளை வரவேற்போம் !
சொல்லுக்கும் ,செயலுக்கும் ஒருமைப்பாடு வேண்டும் .
வேறுபாடு
 
கூடாது .
சாதனைக்கு வயது இல்லை எந்த வயதிலும் சாதிக்கலாம் .
திரு
ஞானசம்பந்தர்  ,அப்பர் ,சுந்தரர் ,திருநாவுக்கரசர்  நால்வரும் பல்வேறு வயதில் சாதனை புரிந்துள்ளனர் .
பாரதி இந்த மண்ணில் வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள் மட்டுமே .
ஆனால் படைத்தது ஏராளம் .

பாரதி ஏன்? இளம் வயதில் இறந்தான் தெரியுமா ?அவன் மீசையில் கூட  வெள்ளையை
அனுமதிக்க விரும்ப வில்லை .என்று ஒரு புதுக் கவிஞன் எழுதினான் .
இயல்பாக இருங்கள் என்பது ஜென் என்கிறோம் .ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ் இலக்கியங்கள் 
இயல்பாக இருக்க வழி
  சொல்லி உள்ளது .
உபகாரம் செய்யாவிட்டாலும் அபகாரம் செய்யாமல் இரு என்பார் 
என் அப்பா என்றார் .என்னை அறிமுகம் செய்த திரு. சூரிய நாராயணன் சொன்னார் .
இந்தக் கருத்து அன்றே  தொல் காப்பியத்தில்உள்ளது .  நல்லது  செய்யாவிட்டாலும், அல்லது செய்யாதே !
நாம் கசப்பாக இருந்தால் துப்பி விடுவார்கள் .
நாம் இனிப்பாக இருந்தால் விழுங்கி
விடுவார்கள்.சீன பழமொழி உண்டு .
32 பற்களுக்கு இடையே சிக்கி விடாமல் நாக்கு எவ்வளவு விழிப்பாக உள்ளது பாருங்கள் .அது போன்று விழிப்புணர்வுடன் நாம் வாழ வேண்டும் .
பொல்லாத உலகம் அதில் இனிமை உண்டு .இனிமை காணக் கற்றுக் கொள்ள வேண்டும் .சங்க காலத்தில் நாடாளும் மன்னன் ,சிறு குழந்தைப் பற்றி பாடி உள்ளான்.பாண்டியன் சோழன் நட்பைப் பற்றி பாடி உள்ளனர் . ஏழ்மையில் வாடிய புலவரும் ,நமக்கு சிலரைப்  பிடிக்கும் ,நம்மை சிலருக்கும் பிடிக்கும் .உற்றார் உறவினர் உதவியவர் அனைவருக்கும் கொடு என்னை கேட்க என்று பாடி உள்ளார் .
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் ,வாய்த்தது ஒரு பிறவி ,இன்பமே எந்நாளும் இப்படி தன்னம்பிக்கை கருத்துக்கள் நேர்மறை சிந்தனைகள் ஏராளம் உள்ளது .நம் இலக்கியத்தில்  .
பாரதி வறுமையில் வாடியபோதும் பாடுகிறான் பாருங்கள்
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா !
கடவுளை நினைத்துக் கொண்டே இருப்பதை விட அடுத்தவன் துன்பக் கண்ணீர் துடைக்க நீளும் கரமே சிறந்தது .

தினமணியில் படித்தது பல்லிநேயம், ஜப்பானில் வீடு கட்டும் போது மரத்தில் ஆணி அடித்தபோது ஒரு பல்லி அந்த ஆணியில் மாட்டி கொண்டது. 5 வருடங்கள் கழித்துப் பார்த்த போதும் அந்த பல்லி உயிரோடு அதே இடத்தில இருந்தது .எப்படி என்று காத்து  இருந்து பார்த்த  போது  மற்றொரு பல்லி உணவை தன் வாயில் சுமந்து கொண்டு வந்து ஊட்டியது. 5 வருடங்களாக இந்த பல்லி  நேயம் தொடர்கின்றது .
மனிதநேயம் இல்லாவிட்டாலும் இந்த பல்லிநேயமாவது மனிதனுக்கு வேண்டும் .  

அடுத்தவர் துன்பத்தை துடைக்க விட்டால் அறிவு இருந்து என்ன  பயன் ?உடன்பாட்டு சிந்தனை தமிழர் ரத்தத்தில் கலந்தது . நல்வழி என்பதற்கு எதிர்பதம் தீயவழி   ஆனால் நம் இலக்கியத்தில் நல்வழிக்கு  எதிர்பதமாக அல்வழி என்றே சொல்லே உள்ளது .
நடக்காது ,தெரியாது ,முடியாது 
போன்ற சொற்களை பயன் படுத்தாமல் இருப்பது சிறப்பு .

ஈரோடு தமிழன்பன் ஹைக்கூ 


பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பது முறை எழுதவனல்லவா நீ !

கண் மூடுதல் என்று சொல்லாமல் கண் வளர்தல்  என்பார் கவியரசு கண்ணதாசன் .புத்தாண்டை மெழுகு ஊதி  கொண்டாடுவது தமிழர் பண்பாடு இல்லை .

சிவாஜி கணேசன் போல ஒரு நடிகர் உலகில் இதுவரை பிறக்க வில்லை .நாம் தான் அவர் அருமை அறிய வில்லை .வெளிநாட்டினர் விருது தந்தார்கள் .
சிவாஜி கணேசன் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நாதஸ்வரக் கலைஞராகவே மாறி  இருப்பார் .அற்புதமான நடிகர் . எம் .ஜி. ஆரையும், சிவாஜி கணேசனையும் ஆய்வு செய்து ஒருவர் எழுதி இருந்தார் .
திரைப்படத்திலும்
அரசியலிலும் எம் .ஜி .ஆர் வெற்றிப்பெறக் காரணம் .நேர்மறை சிந்தனை என்று .எம் .ஜி .ஆர் , .நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்று   குழந்தைகளைப் பார்த்துப் பாடுவார்.
சிவாஜி குழந்தைகளைப் பார்த்து ஏன்?பிறந்தாய் மகனே  என்று  பாடுவார்.
எம் .ஜி .ஆர். பாடுவார்,எங்கே போய் விடும் காலம் அது நம்மையும்  வாழ வைக்கும் .நாளை  நமதே  ! இந்த நாளும் நமதே ! என்று
சிவாஜி பாடுவார் எங்கே நிம்மதி ! எங்கே நிம்மதி ! அங்கே எனக்கொரு இடம் வேண்டும் .என்று
எம் .ஜி .ஆர் .தாயைப் பார்த்துப்  பாடுவார் தாயின் மடியில் தலை வைத்து இருந்தால் .என்று
சிவாஜி பாடுவார் தாயைப் பார்த்துப்  பாடுவார் அவளா சொன்னாள்   என்றுஇருவருக்குமே பல பாடல்கள் எழுதியது கவியரசு கண்ணதாசன்தான்

எம் .ஜி .ஆர் திருடனாக வரும் படத்தின் பெயர் பாசம் .
சிவாஜி படத்தின் பெயர் முரடன் முத்து.
இன்று வரும் திரைப்படங்களின் பெயர் மிக மோசம் திமிர் ,மிருகம் ,சிங்கம் ,சிறுத்தை ,நாய் என்று வைக்கின்றனர் .

இன்று கொலைவெறிப் பாடலை உலகப் புகழ் பாடல் என்கிறார்கள் .

மதுரையில் ஆட்டோக்களில் மிக சிறந்த வசனங்கள் இடம் பெறும்.
நேற்று என்பது உடைந்த பானை!
நாளை என்பது மதில் மேல் பூனை !
இன்று என்பதே   
கையில் உள்ள வீணை !
படுத்தால்பாய்
கூட பகை !
பெட்ரோல் விலை ஏறிய மறு நாள் ஒரு 
ஆட்டோவில் படித்தேன்
கடவுள் ஆட்டோ டிரைவராகப் பிறக்க வேண்டும்
அவன் 
ஆட்டோ ஒட்டி வேதனையில் வாட வேண்டும்
  மதுரையில் தெருவில் பழம் விற்பவர் சொல்கிறார் .பழம் கனிவு ,தெளிவு ,மலிவு என்று .
பொழுது பார்க்கும் கருவி பழுது நீக்கப் படும் என்று ஒரு கடிகாரக் கடையில்  படித்தேன் .
திரு .வி .க பற்றி மு. வ. எழுதுவார் .உடல் நோயற்று இருப்பது இன்பம் ,மனம் கவலையற்று 
இருப்பது இன்பம்,உயிர் பிறருக்கு உதவியாக இருப்பது இன்பம்.இப்படி நாம் வாழ வேண்டும் .
அன்று திருவாசகம் படித்து விட்டு போப் அழுதார் .
இன்று மாணவன் தேர்விற்கு
திருவாசகம் படிக்க வேண்டுமே என்று அழுகிறான் .
போப் 80 வயதில் திருவாசகத்தை  ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணி செய்கிறேன்  முடித்துவிட முடியுமா ?என்று தயங்கியபோது .கல்லூரி முதல்வர் சொன்னார் உங்களால் முடியும் .என்றார் .அதன்படி போப் திருவாசகத்தை  ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணி முடித்து விட்டுதான் இறந்தார் .அவருக்கு முன்பாகவே கல்லூரி முதல்வர்  இறந்து போனார் .

மு .வ .சொல்வார் தமிழன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது .வல்லவனாகவும் இருக்க வேண்டும் .என்று .
திருக்குறளில் தன்னம்பிக்கை கருத்துக்கள் ஏராளம் உள்ளது .இன்று நல்லவராக  இருந்தால் பாவம் நல்லவர் என்கின்றனர் .

சிலரது கல்லறையில் 1900---1990  
என்று இருக்கும் அதன் பொருள்
இடையில் உள்ள கோட்டோடு வாழ்க்கை முடிந்தது என்பதாகும்
ஜென் கதை ஒன்று ,பணக்காரர் லட்சம் பொன்னிற்கு அதிபதியிடம் மரண தேவதை வந்து வா போகலாம் என்றால் . பணக்காரர் பாதிப்பொன் தருகிறேன் சில நாள் அவகாசம் தா !என்றார்  மரண தேவதை முடியாது .என்றாள் .பொன் முழுவதும் தந்து விடுகிறேன் சில மணிநேரம் தா ! என்றார் முடியாது என்றாள்.இரண்டு வினாடி தருகிறேன் என்றாள் .பணக்காரர் எழுதி வைத்தார், எட்டு லட்சம் பொன்னிற்கு அதிபதியாக இருந்தும் சில நொடி கூட என்னால் வாங்க முடியவில்லை .எனவே, இதை மனதில் கொண்டு வாழ்ந்திடுங்கள் .
 
ஒவ்வொரு நாளும் அன்றுதான் இறுதி நாள் என்று எண்ணி பணியாற்றி வாழ வேண்டும் .
பிறப்பு இறப்பு ஒரு முறை அல்ல
ஒவ்வொரு நாளும் பிறக்கிறோம் இறக்கிறோம் .இன்று  புதிதாய் பிறந்தோம்! என்று எண்ணி வாழ வேண்டும் .கவியரசு கண்ணதாசன் ஆறு மனமே ஆறு பாடலில் சொன்ன கட்டளைகளை பின்பற்றி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் .
நமது தமிழ் இலக்கியங்களில் உள்ள கருத்துக்களை ஆழ்ந்து படித்து அதன் வழி நடந்தால் எந்நாளும் இன்பமே .

--

கருத்துகள்