இடுகைகள்

May, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பனிமலை தாண்டிய பாதச் சுவடு ... நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
பனிமலை தாண்டிய பாதச் சுவடு ...
நூல் ஆசிரியர் விதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி
வெளியீடு அறிவகம் டென்மார்க்

வலி மிகுந்த புலம் பெயர்ந்த வாழ்விலும் தமிழுக்காக துண்டு செய்து வருபவர்கள் ஈழத்தமிழர்கள் .அவர்களில் குறிப்பிடத் தகுந்தப்  படைப்பாளி கவிஞர்
வேலணையூர் பொன்னண்ணா.தமிழகத்தில் இருந்து வரும் சிற்றிதழ்களான   ஏழைதாசன் ,இனிய நந்தவனம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கவிதைகள் எழுதி வருபவர் . வேலணையூர் பொன்னண்ணாஅவர்களின் தன வரலாறு கூறும்  நூல் இது .

இந்நூலில் திரைப்பட இயக்குநர் திரு .கி .சே . துரை முன்னுரை ,நூலகவியலாளர் என் .செல்வராஜா அணிந்துரை மிக நன்று .நூல் ஆசிரியர் வேலணையூர் பொன்னண்ணாஎன்னுரை மிகச் சிறப்பு .

கலாநிதி இளவாலை அமுதுப்புலவர் ,எழுத்தாளர் ஜீவகுமாரன்,டாக்டர் சு.சிற்றம்பலம் ,திரு .நா .க .சிவராமலிங்கம் ,திரு .எஸ் .பி .சாமி ,வேலணை வீர சிங்கம் ,வண்ணை தெய்வம் ,ஜெர்மனி பாக்கியநாதன் ,கவிஞர் விக்னா   பாக்கியநாதன், நடா.சிவராஜா ,திருமதி சுவக்கீன் ,கோனேரி  பா இராமசாமி ,ஏழைதாசன் ஆசிரியர் எஸ் .விஜயகுமார் ,அமரர் வல்லிக்கண்ணன் ,திரு .ம .ஜெகத் கஸ்பர் ,டாக்டர் வா…

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ                           கவிஞர் இரா .இரவி

திரவத்தங்கம்  திடத்தங்கம்
விலை உயர உயர
ஏழைகளுக்கு துன்பம் !

பிறக்கையில் முகம் சுளித்தவர்கள்
சாதித்தும் அகம் குளிர்ந்தார்கள்
பெண் குழந்தை !

கூட்டணிவைத்து கோடிகள்அடித்து
கடைசியாக அறிவித்தனர்
கசப்பான 
கூட்டணி !

கோயில் கருவறை
அனுமதி இல்லை
தமிழ் தமிழன் !

உயர்  நீதி மன்றத்தில்
தொடரும் தீண்டாமை
தமிழ் மொழிக்கு !

உதட்டிலும் உள்ளத்திலும்
இல்லை தமிழ்
தமிழன் ?

பாதுகாக்க முடியவில்லை
வேண்டவே வேண்டாம்
புதிய சிலை !

மரியாதைக்கு நிறுவியது
அவமதிக்க காரணியானது
சிலை !

சாலையில் படுத்திருந்தான்
சங்கடமின்றி
குடிகாரன் !

குடியால் கோடிகள் அரசுக்கு
குடும்பம் தெருக்கோடிக்கு
திருந்தாத குடிமகன்கள்  !

உதவுவதாக நினைத்து
துன்புறுத்துகின்றனர்
மாட்டுக்கு லாடம் !
(இரும்புக்  காலணி)

இறந்த வீட்டில்
எல்லோரும்
கேட்கும்  கேள்வி
காப்பீடு எவ்வளவு ?

தவிர்க்கலாம் இட நெருக்கடி
புதைப்பதை விட
எரிப்பதே நலம் !

அளவான குடும்பம்
அளவற்ற இன்பம்
குடும்பக்கட்டுப்பாடு !

கருப்பணம் வெள்ளையானது
கோயில் கணக்கில்
உண்டியல் வசூல் !

கவனம் கவனம்
சாமியாரில் ஆசாமிகளில்
யார…

இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள்

இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் 
கவிதைகள் http://www.eraeravi.com/home/kavithai.php

கட்டுரைகள் http://www.eraeravi.com/home/katturai.php

நூல் விமர்சனங்கள் http://www.eraeravi.com/home/noolvimarsanam.php

புகைப்படங்கள் http://www.eraeravi.com/home/album.html

வீடியோ  http://www.eraeravi.com/home/video.html
விருதுகள்    http://www.eraeravi.com/home/awards.html

இதயத்தில் ஹைக்கூ   http://www.kavimalar.com/eh/index.htm

உள்ளத்தில்  ஹைக்கூ http://www.kavimalar.com/uh/index.htm


நெஞ்சத்தில்  ஹைக்கூ http://www.kavimalar.com/nh/index.htm

விழிகளில் ஹைக்கூ http://www.kavimalar.com/vh/index.htm

என்னவளே http://www.kavimalar.com/ennavale/index.htm

நகைச்சுவை http://www.kavimalar.com/jokes.htm

கவியரங்கக் கவிதைகள் http://www.kavimalar.com/arkavi/arkavi.htm

புகைப்படத் தொகுப்பு  http://www.kavimalar.com/picgal/

புதிய கவிதைகள் http://www.kavimalar.com/14407/index.htm

கவிதைகள் http://www.kavimalar.com/kavithaigal.htm

ஆங்கிலத்தில் ஹைக்கூ http://www.kavimalar.com/vh/enhycoo.htm
இந்தியில் ஹைக்கூ http://www.kavimalar…

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா

படம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா

படித்ததில் பிடித்தது ! ஹைக்கூ . பேராசிரியர் க.மணிவண்ணன். புதுவை .

படித்ததில் பிடித்தது !

ஹைக்கூ .             பேராசிரியர்  க.மணிவண்ணன்.  புதுவை .

பார்வையில் தெரியாதது
கேட்கையில் புரியாதது
புரிந்தது புன்னகையில் !

பண வீக்கத்தை
நீக்கும் மருந்து
உழைப்பு !

அரிச்சந்திரன் சிலை
துணைக்கு
காவல் பணி !

அறிவு ஆறு அல்ல
ஏழு
என்றது
இன்று திரைப்படம்
அன்றே பத்து என்றார் திருமூலர் !

புனைகை செலவழிக்க
அஞ்சும் கஞ்சர்கள்
இன்றைய மனிதர்கள் !

அனுபவம் பேசுகிறது
நினைவு இனிக்கிறது
ஹைக்கூ !

( உதகை மலர்க்கண்காட்சி ! )

( உதகை மலர்க்கண்காட்சி ! )

மலர்க்கண்காட்சி !    
கவிஞர் இரா .இரவி

மலர்ந்த மலர்கள்
மலர்வித்தன மனங்களை
மலர்க்கண்காட்சி !

பேசாத மலர்கள்
பேசின நம்மோடு
மலர்க்கண்காட்சி !

மலர்களின் மாட்சி
பார்த்தவர்கள் சாட்சி
மலர்க்கண்காட்சி !

மலைகளின் ராணிக்கு
மலர்களின் மகுடம்
மலர்க்கண்காட்சி !

வளமான வனப்பு
வந்தப்பின்னும் நினைப்பு
மலர்க்கண்காட்சி !

ரசித்துப் பார்த்ததில்
புசிக்க மறந்தனர்
மலர்க்கண்காட்சி !

யாராலும்
கூற இயலாது
மிகச் சிறந்த மலர் எது ?
மலர்க்கண்காட்சி !

பார்த்த இடமெல்லாம் ராஜா
மலர்களின் ராஜா ரோஜா
மலர்க்கண்காட்சி !

பூக்களை ரசிக்கும்
பூவையரும் அழகு
மலர்க்கண்காட்சி !

கண்கொள்ளாக் காட்சி
வண்ணங்களின் ஆட்சி
மலர்க்கண்காட்சி !

கண்டு ரசிக்க
கண்கள் போதவில்லை
மலர்க்கண்காட்சி !

மனதிற்கு மகிழ்ச்சி
உள்ளத்திற்குப் புத்துணர்ச்சி
மலர்க்கண்காட்சி !

மலருக்கு காயமின்றி
தேன் எடுத்த வண்டு
மலர்க்கண்காட்சி !
மரங்களின் அரசி மடியில்
மலர்களின் அரசாட்சி
மலர்க்கண்காட்சி !

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ             கவிஞர் இரா .இரவி

நல்ல தீனி
ஊடகங்களுக்கு
சாமியார்கள்
கூத்து !

மெய்ப்பி
த்தனர்   
கடவுள் இல்லை
சாமியார்கள் !

இலவசம் மாற்றம்
சொல் மட்டும்
விலையில்லா !

விமானிகள் வேலை நிறுத்தம்
அமைச்சர் பிடிவாதம்
பயணிகள் துன்பம் !

எந்த ஊரும்
ஈடாகவில்லை
பிறந்த மண்ணிற்கு !

தேவையற்றதை நீக்கிட
கிடைத்தது
சிலை !

விழிக்கொடை ! கவிஞர் இரா .இரவி

படம்
விழிக்கொடை !             கவிஞர் இரா .இரவி

வந்தது பார்வை
பார்வையற்றவர்களுக்கு
விழிக்கொடை !  

இறந்தப் பின்னும்
இறக்காத விழிகள்
விழிக்கொடை !  

மண்ணுக்கும் தீயுக்கும் வேண்டாம்
மனிதர்களுக்கு வேண்டும்
விழிக்கொடை !  

கரு விழிகள்
அகற்றியது இருள்
விழிக்கொடை !  

வாழ்கிறான் கொடையில்
வள்ளல் கர்ணன் 
விழிக்கொடை !  

உயிர்
ப் பிரிந்தும்
உயிர்ப் பெற்றது
விழிக்கொடை !  

உடல் மாறியும்
உயிர் உள்ளது
விழிக்கொடை !  

ஒளி ஏற்றியது
வழி காட்டியது
விழிக்கொடை !  

துன்பம் துரத்தி
இன்பம் ஈந்தது
விழிக்கொடை !  

குறையை நீக்கி
நிறைவாக்கியது
விழிக்கொடை !  

மரிக்கவில்லை மனிதம்
மனிதரில் புனிதம்
விழிக்கொடை !  

வைத்தது முற்றுப்புள்ளி
மூடநம்பிக்கைக்கு
விழிக்கொடை !   

செத்தப்பின்னும்   
சாகவில்லை
விழிக்கொடை !  

இறப்பிலும் பிறப்பு
இறக்கத உறுப்பு
விழிக்கொடை !  

மரணித்தும் மரணிக்கவில்லை
முடிவிலும் இனிய தொடக்கம்
விழிக்கொடை !  

கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
கவிதைக்கூத்து 

நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்

 விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வனிதா பதிப்பகம் ,தி நகர் ,சென்னை 17.  விலை ரூபாய் 70

நூலின் அட்டைப்பட ஓவியம் நன்று.
நூல் ஆசிரியர் மத போதகராக .அருட்தந்தையாக இருந்துக் கொண்டு மிக துணிவான கவிதைகளை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .இந்த நூலின் வெளியீட்டு  விழா  மதுரையில் நடைப் பெற்றது .விழாவிற்கு நானும் சென்று வாழ்த்தி விட்டு வந்தேன். விழாவில் தமிழ்த்தேனீ    இரா .மோகன் .மனிதத் தேனீ  இரா .சொக்கலிங்கம் உள்ளிட்ட  பலரும் நூல் விமர்சன உரையாற்றினார்கள் .வனிதா பதிப்பகத்தாரும், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் இயக்குனர்  முனைவர் கோ .பெரியண்ணன் .நூல் ஆசிரியரின் அண்ணி  தொடக்கக் கல்வி இணை இயக்குனர்  பணித்தேனீ திருமதி ராணி ஆகியோர் சென்னையில் இருந்து மதுரைக்கு வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர் .

தந்தைக்கு நூலை அர்ப்பணம் செய்துள்ளார் .
தன்னலம் கருதாத் 
தந்தையவர்
மின்னலை முந்தும் வேகமவர்
முன்னிலை விரும்பா மனிதரவர்
என் நிலை உயர்த்திய 
ந்லவர்.

இந்தக் கவிதை அவர் தந்தையை மட்டுமல்ல படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் தந்தையை நினைவூட்டும்…

மழை ! கவிஞர் இரா .இரவி

படம்
மழை !           கவிஞர் இரா .இரவி

வானில் இருந்து வரும்
அமுதம்
மழை !

பார்க்கப்  பரவசம்
நனைந்தால் குதூகலம்     
மழை !

பயிர்களின் உயிர் வளர்க்கும்
விவசாயிக்கு வளம் சேர்க்கும்
மழை !

குடை வேண்டாம்
தடை வேண்டாம்
மழை !

காதலி  அருகில்  இருந்தால்
காதல் மழை
மழை !

சூடான தேநீர்
சுவை மிகுதி
மழை !

கோடையில் வந்தால்
கொண்டாட்டம்
மழை !

சாலை வியாபாரிகளுக்கு
திண்டாட்டம்
மழை !

குடிசைவாசிகளுக்கு
ஒழுகும்  கவலை
மழை !

ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! கவிஞர் இரா .இரவி

படம்
ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா !              கவிஞர் இரா .இரவி

எத்தனையோ உறவுகள் உலகில் இருந்தாலும்
ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா !

இந்த உலகை நமக்கு அறிமுகம் செய்த
அழகு முகம்
என்றும் குழந்தைக்கு மறக்காத  முகம் அம்மா !

உயிரெழுத்தில் தொடங்கி  மெய்யெழுத்தில்
மையமாகி
உயிர்மெய்யில் முடியும் உன்னதம் 
அம்மா !

குழந்தைக்கு உயிரும் மெய்யும் தந்த
குவலயத்தில் சிறந்த  உறவு 
அம்மா !

கருவிலேயே குழந்தைக்கு திரு வழங்கிய
கருணைக் கடல் ஒப்பற்ற 
அம்மா !

தாய்மொழியை  சேயுக்கு கருவிலேயே
தன் வயிற்றிலேயே பயிற்றுவி
த்தவள்  அம்மா !

தன் இதயத் துடிப்பின் மூலம் கருவிலேயே குழந்தைக்கு
தனது முதல் தாலாட்டைத் தொடங்கியவள் அம்மா !

குழந்தை பிறந்து பின் அழ நேர்ந்தால் மார்போடு அணைத்து 
தன் இதயத் துடிப்பை உணர்த்தி அழுகை நிறுத்திய அம்மா !

குருதியைப்    பாலாக்கி வழங்கி பெற்றக்
குழந்தையின் உயிர் வளர்த்தவள்
அம்மா !

தன் துன்பம் பொறுப்பாள் அவள் ஆனால்
தன் குழந்தையின் துன்பம் பொறுக்காதவள் 
அம்மா !

தன்னைத் தேய்த்து தன் குழந்தை வாழ்வை
தரணியில் மணக்க வைக்கும் சந்தனம்  
அம்மா !

தன்னை உருக்கி தன் குழந்தையின்  வாழ்வை
தரணியில் ஒளிர வைக்…

மே 19 பிரித்தானிய ரவல்கர் சதுக்கத்தில் ஒன்று திரளுவோம் – மே 17 இயக்கம்.

மே 19 பிரித்தானிய ரவல்கர் சதுக்கத்தில் ஒன்று திரளுவோம் – மே 17 இயக்கம்.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=afj0ERiIr7Q

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!

உலகப் புகழ் இணையத்தில் www.lankasri.com கவிஞர் இரா .இரவி கவிதைகள் படித்து மகிழுங்கள்

படம்
உலகப் புகழ் இணையத்தில் www.lankasri.com கவிஞர் இரா .இரவி கவிதைகள் படித்து மகிழுங்கள்

http://www.lankasripoems.com/index.php?conp=list&poetId=194606

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி

படம்
தமிழா நீ பேசுவது தமிழா !   கவிஞர் இரா .இரவி

தமிழா நீ பேசுவது தமிழா !
தமிழா இப்படிப்  பேசுவது தகுமா ?

காலைப் பொழுதை மார்னிங் என்றாய்
மதியப் பொழுதை ஆப்ட்ரநூன் 
என்றாய்

மாலை
ப் பொழுதை ஈவ்னிங் என்றாய்
நல்ல பொழுதை ஆங்கிலத்தால் கொன்றாய்

பாட்டை சாங்
என்றாய்
வீட்டை ஹவுஸ்
என்றாய்

படுக்கை அறையை பெட்
ரூம் என்றாய்
கழிவறையை டாய்லெட்
என்றாய்

தமிழை டமில் 
என்றாய்
தண்ணீரை வாட்டர்
என்றாய்

சோற்றை ரைஸ் என்றாய்
உப்பை சால்ட்
என்றாய்

கடற்கரையை பீச் என்றாய்
காதலியை   லவ்
வர் என்றாய்

கண்களை அய்ஸ்     என்றாய்
கடிதத்தை லெட்டர்  என்றாய்

பள்ளியை ஸ்கூல்
என்றாய்
கல்லூரியை காலேஜ் 
என்றாய்

மாணவனை ஸ்டுடென்ட்
என்றாய்
ஆசிரியரை  டீச்சர்
என்றாய்

வானொலியை ரேடியோ என்றாய்
விமானத்தை பிளைன்
என்றாய்

தொலைக்காட்சியை டிவி என்றாய்
தொலைபேசியை போன் 
என்றாய்

பணத்தை மணி என்றாய்
குணத்தை கேரக்டர்
என்றாய்

வஞ்சியை கேர்ள்
என்றாய்
விபத்தை ஆக்ஸிடென்ட் 
என்றாய்

இப்படிப் பேசியே தமிழைக் கொல்கிறாய்
எப்போது வரும் உனக்கு தமிழ் உணர்வு !

தமிழா உன்னிடம் ஒரு கேள்வி
சிந்தித்துப் பார்
ஆங்கிலேயன் தமிழ் கலந்து ஆங்கிலம் பேசுவானா ?

ஈழத் தமிழர்களின் உச்சரி…

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ                          கவிஞர் இரா .இரவி
மின் விளக்கின்
வெளிச்சத்தில்
எடிசன் முகம் !
இறந்தபின்னும்
ஒலி எழுப்பும் விலங்கு
மத்தளம் !

திட்டங்கள் கோடிகளில்
ஏழைகள் தெருக்  கோடியில்  
என்று விடியல் ?

பாலியல்  குற்றவாளி
கொலைக்
குற்றவாளி
சாமியார்கள் ?

தாமதமான நீதி அநீதி
தண்டியுங்கள் விரைவில்
இலங்கைக் கொடூரன் !


சரியாக ஆடும்
ஆட்டத்தின் பெயரோ
தப்பாட்டம் !

இதயத்தை இதமாக்கும்
கோபத்தைக் குறைக்கும்
இசை !

மனதை மலர்விக்கும்
சிந்தையைச் செதுக்கும்
கவிதை !


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

பரத நாட்டியம் ! கவிஞர் இரா .இரவி

படம்
ரத நாட்டியம்  !     கவிஞர் இரா .இரவி
தோகை உண்டு

பெண் மயிலுக்கு
ரத நாட்டியம்  !  

பேசும் விழிகள்
சைகை மொழிகள்
ரத நாட்டியம்  !  

வேற்று மொழியை விட
தமிழ் மொழி இனிமை
ரத நாட்டியம்  !  
கண்டு ரசித்தால்
கவலைகள் போகும்
ரத நாட்டியம்  !  


வரிகளுக்கு ஏற்றப்படி
வஞ்சியின் நளினம்
ரத நாட்டியம்  !  
கைகளும் பேசும்
கால்களும் பேசும்
ரத நாட்டியம்  !  
குத்துப் பாட்டும் உண்டு
குறத்தி நடனம்
ரத நாட்டியம்  !   

ராகத்தை ரசிக்கலாம்
சோகத்தை மறக்கலாம்
ரத நாட்டியம்  !  

புத்துணர்வுப் பெறலாம்
புதுமைகள் காணலாம்
ரத நாட்டியம்  !  
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!

படித்ததில் பிடித்தது !

படம்
படித்ததில் பிடித்தது !
 ஹைக்கூ      சி.ஆர்.அருண்

முதலெழுத்தோடு
தலையெழுத்தும் மாறியது!
மணப்பெண்!

எதிர்கால எமனின்
இன்றைய தூதுவன்!
அலட்சியவாதி!

போனால் வரும் !
வந்தால் போகாது!
எய்ட்ஸ்!

------------------------------------------------
ஷா.முஹம்மது முஸ்தபா.
திரைக்கு வரவில்லை!
வீதிக்கு வந்தது!
திருட்டு வி.சி.டி.

தேடாமல் செல்போன் சிக்னல்!
தேடியும் காணவில்லை!
சிட்டுக்குருவி!

--------------------------------------------------------
பா.ஹரிஹர செல்வம்.
உண்ண உணவு வேண்டி
உண்ணாவிரதம்!
கூலித்தொழிலாளி!

பெண்களுக்கு இடஒதுக்கீடு!
குப்பைத்தொட்டியில்
பெண்குழந்தை!

நேற்று கழனி!
இன்று கணினி!
நாளை சனி!


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ                   கவிஞர் இரா .இரவி

இரும்புச் சங்கிலி இழுத்துத் தோற்றதால்
கயிற்றை இழுக்க முயலவில்லை
கோயில் யானை !

இரண்டும் மிக அவசியம்
இல்லாவிட்டால் சிரமம்
சம்சாரம் மின்சாரம் !

குளிர் பூமி ஆடை
வெப்ப பூமியில்
மட்டை விளையாட்டு (கிரிக்கெட் )


இயற்கையை அழிக்காதே
உணர்த்துகின்றது
புயல் !

மரம் வைத்தவர்
தண்ணீர்
ற்றவில்லை
அமைச்சர் !

அவமானப்படுத்துகின்றனர்
புத்தரை
புத்தபிட்சுகள் !

மேலும்
மேலும் சலுகை
வருமானம் மிக்க
காவல்துறைக்கு !

காரணம் புரியவில்லை
கவர்ச்சி நடிகைக்கு
தேசியவிருது ?

மக்கள் விருப்பம்
அனைத்துத் தொகுதியிலும்
இடைத் தேர்தல் !

விலை மதிப்பற்ற உயிர்கள் பலி
தேர்வடம் இரும்பில்
பகுத்தறிவு ?

வழக்கு எண் :18/9 , திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
வழக்கு எண் :18/9

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

எழுத்து இயக்கம் பாலாஜி சக்திவேல்

தயாரிப்பு UTV & N.லிங்குசாமி


செய்தி தாளில் படித்த நிகழ்வுகளை தொகுத்துத் திரைக்கதையாக்கி இயக்கி உள்ளார் பாலாஜி சக்திவேல்.பாராட்டுக்கள் மிக எதார்த்தமாகப்  படமாக்கி உள்ளார் .ஒரே படத்தில் பல தகவல்களைத் தந்துள்ளார் .தயாரிப்பாளர்களும் பாராட்டுக்கு உரியவர்கள் .சமரசம் இன்றி குத்துப் பாடல் இன்றி மசாலா இன்றி படமாக்கி உள்ளனர் .படத்தில் ஸ்ரீ ,முரளி ,மிதுன் ,ஊர்மிளா ,மனீஷா அனைவருமே மிகச் சிறப்பாக நடித்து உள்ளனர் .அல்ல பாத்திரமாகவே மாறி உள்ளனர் .அறிமுகம் என்பதே தெரியாத அளவிற்கு முதிர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களாக நடித்து உள்ளனர் .நம்ப முடியாத நான்கு சண்டை ,நான்கு காதல் பாட்டு ,வெட்டு குத்து என்று திட்டமிட்டு மசாலாப் படம் எடுக்கும் சராசரி இயக்குனர்கள் அனைவருக்கும் இந்தப் படத்தை திரையிட்டுக் காட்டிப் புத்தி புகட்ட வேண்டும் .

சிறுவர்களை, வட மாநிலத்தில் ,முறுக்கு நிறுவனத்தில் கொத்தடிமைகளாக நடத்திய செய்தி செய்தித் தாளில் படித்த நினைவு உள்ளது .அந்த நிகழ்வை படத்தில் வைத்துள்ளார் .கொத்தடிமையாக வட மாநிலத்திற்கு…

மதுரையில் எழுத்தாளர் கர்ணன் எழுதிய ,சரித்திரம் உருவாக்கிய சந்திப்பு நூல் வெளியீட்டு விழா

படம்
மதுரையில் எழுத்தாளர் கர்ணன் எழுதிய ,சரித்திரம்  உருவாக்கிய சந்திப்பு நூல் வெளியீட்டு விழாவில் நூல் ஆசிரியர் கர்ணன் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் பொத்திப் பாராட்டினார் .

ஜெயா தொலைக்காட்சி ,காலைமலர் நிகழ்ச்சியில்அகில்

படம்
ஜெயா தொலைக்காட்சி ,காலைமலர் நிகழ்ச்சியில் ,4.5.2012 அன்று காலை 8.15 மணிக்கு, இனிய நண்பர் ,எழுத்தாளர்,www.tamilauthors.com  இணையத்தின் ஆசிரியர் அகில் அவர்களின் நேர்முகம்  ஒளிப்பரப்பாகின்றது .பார்த்து மகிழுங்கள் .

பார்த்து விட்டு தங்கள் கருத்தைப் பகிர்ந்துக்  கொள்ள  அகில் அவர்களின்  மின் அஞ்சல் editor@tamilauthors.com

http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Ahil.html
--

ஊடகங்கள் திருந்த வேண்டும் . கவிஞர் இரா .இரவி

படம்
ஊடகங்கள் திருந்த வேண்டும் .                கவிஞர் இரா .இரவி

ஊடகங்கள் திருந்த வேண்டும் .பண ஆசை காட்டி வெளியே தெரியாமல் பணம் பறிக்கும் எண்ணத்தைக்  கை விட  வேண்டும்.பணம் வாங்கிக் கொண்டு திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு அளவிற்கு அதிகமாக முக்கித்துவம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் .ஒரே நடிகர்  படத்தை ஒரே தினத்தில் பல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்புவது  .   பேன்ட்டை  அவிழ்த்து அவிழ்த்துத் திரும்பப்  போடும் காட்சியை ,படத்தில் திரும்பத் திரும்ப இடம் பெறச் செய்த
ஓரு படம் .திரைஅரங்கில் எல்லோரும் முகம் சுளித்தப்படம்  கோடிக்கணக்கானவர்கள் பார்க்கும் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புகின்றனர் .படம் ஒளிப்பரப்பும்  முன்பு  அதுப் பற்றி ஒரு சிறப்பு நிகழ்ச்சி வேறு .

ஒரு நடிகருக்கு பிறந்த நாள் ஆனால் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கே வர மாட்டார் .ஆனால் அவரையும் விடுவதில்லை .அவரைப்பற்றி வானளாவப்  புகழச் சொல்லி , இரண்டு  இயக்குனர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி .ஊடகங்கள் சில நல்ல நிகழ்ச்சிகளை ஊறுகாய் போன்று ஒளிப்பரப்பி விட்டு ,பண்பாட்டைச்  சிதைக்கும்  நிகழ்ச்சிகளை  சோறுப்  போல ஒளிப்பரப்புகின்றனர் .ஊ…

உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி

படம்
உழைப்பாளர் தினம் !                   கவிஞர் இரா .இரவி

வருடத்தில் ஒரு நாளாவது உழைக்கும் உழைப்பாளிகளை
உலகம்  நினைத்துப் பார்ப்பதற்கு நன்றி !

தினம் தினம் உழைக்கும் உழைப்பாளிகளை
உழைப்பாளர் தினத்திலாவது நினைத்து மகிழ்வோம் !

உலகம் உருவானதும் உயர்வானதும் 
உழைப்பாளிகளின் ஒப்பற்ற உயர்ந்த உழைப்பால் !

பாலங்கள் கட்டியதும் அணைகள் கட்டியதும்
வாகனங்கள் செய்ததும் சாலைகள் போட்டதும்

உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள்  !
உழைப்பாளிகள் உழைப்பு மதிக்கப் பட வேண்டும் !


உண்ண உணவு வழங்கியவர்கள் உழைப்பாளிகள் !
உடுக்க உடை உருவாக்கியவர்கள் உழைப்பாளிகள்  !

வசிக்க வீடு கட்டியவர்கள் 
உழைப்பாளிகள்  !
வளமான வாழ்விற்குக் காரணம் 
உழைப்பாளிகள்  !

உழைப்பாளிகள்   இல்லை என்றால் நீயும் இல்லை நானும் இல்லை
உழைப்பாளிகள்   இல்லை என்றால் ஊரும் இல்லை உறவும் இல்லை !

உழைப்பாளிகள்   இல்லை என்றால் உலகம் இல்லை
உழைப்பாளிகள்   இல்லை என்றால் வாழ்க்கை இல்லை !

உடலின் வியர்வை நிலத்தில் சிந்தி
உலகின் உயர்வை உருவாக்கிய சிற்பிகள் 
!
ஓய்வை  ஒத்தி வைத்து விட்டு நாளும்
உழைப்பை ஓய்வின்றி நல்கியவர்கள் !  


உழைப்பாளிகள் வாழ்க்கையில் உய…