பனிமலை தாண்டிய பாதச் சுவடு ... நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

பனிமலை தாண்டிய பாதச் சுவடு ...
நூல் ஆசிரியர் விதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி
வெளியீடு அறிவகம் டென்மார்க்

வலி மிகுந்த புலம் பெயர்ந்த வாழ்விலும் தமிழுக்காக துண்டு செய்து வருபவர்கள் ஈழத்தமிழர்கள் .அவர்களில் குறிப்பிடத் தகுந்தப்  படைப்பாளி கவிஞர்
வேலணையூர் பொன்னண்ணா.தமிழகத்தில் இருந்து வரும் சிற்றிதழ்களான   ஏழைதாசன் ,இனிய நந்தவனம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கவிதைகள் எழுதி வருபவர் . வேலணையூர் பொன்னண்ணாஅவர்களின் தன வரலாறு கூறும்  நூல் இது .

இந்நூலில் திரைப்பட இயக்குநர் திரு .கி .சே . துரை முன்னுரை ,நூலகவியலாளர் என் .செல்வராஜா அணிந்துரை மிக நன்று .நூல் ஆசிரியர் வேலணையூர் பொன்னண்ணாஎன்னுரை மிகச் சிறப்பு .

கலாநிதி இளவாலை அமுதுப்புலவர் ,எழுத்தாளர் ஜீவகுமாரன்,டாக்டர் சு.சிற்றம்பலம் ,திரு .நா .க .சிவராமலிங்கம் ,திரு .எஸ் .பி .சாமி ,வேலணை வீர சிங்கம் ,வண்ணை தெய்வம் ,ஜெர்மனி பாக்கியநாதன் ,கவிஞர் விக்னா   பாக்கியநாதன், நடா.சிவராஜா ,திருமதி சுவக்கீன் ,கோனேரி  பா இராமசாமி ,ஏழைதாசன் ஆசிரியர் எஸ் .விஜயகுமார் ,அமரர் வல்லிக்கண்ணன் ,திரு .ம .ஜெகத் கஸ்பர் ,டாக்டர் வாசவன் ,வித்துவான் ச. குமரேசயா ,வேலணையூர் எம் .எஸ் .முத்து,இணுவை சக்தி தாசன் ,இந்து மகேஷ் ,ஐ .ரி .சம்மந்தர் ,ரவி தமிழ்வாணன் ,மனோகரன் ,இனிய நந்தவனம் ஆசிரியர் த.சந்திர சேகரன் ,கவிஞர் க .ராஜ மனோகரன் ஆகியோரின் அற்புதமான வாழ்த்துரையுடன் என்னுடைய வாழ்த்துரையும் இடம் பெற்றுள்ளது . 
  

நூல் ஆசிரியர் விதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணாஅவர்களின் மூத்த பேத்திசெல்வி ஜீவிதா அருளன் ,இளைய பேத்தி மருத்துவர் செல்வி சஞ்சியா மனோகரன் ,சுதன் வாணி சிலேஸ்ல்சா ,கவிஞர் முல்லை ஷ்ரான் ,செல்லத்துரை ,  சிறிகந்தராஜா ,திரு .ம .கணேச குருக்கள் ,திரு .சூ.யோ. பற்றிமாகரன்  ஆகியோரின் மலரும் நினைவுகள் நூல் ஆசிரியர் விதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா பற்றி மலர்ந்துள்ளது .
நூலில் இருந்து பதச் சோறாக சில வரிகள் உங்கள் பார்வைக்கு 

கவித்துளியில் சரிதம் !

கருவில் நான் வளரும் போதே அம்மாவின்
கண்ணீரைக் கண்டவன் .
பசியின் வேதனையை அம்மாவின் வயிற்றுக்குள்ளேயே
நேராக சந்தித்து வளர்ந்தவன் .


இதில் சில உண்மைகள் சொல்லப்படவில்லை .ஆனால் சொல்லி இருப்பவை அதனையும் உண்மையே .
வேலணை என்ற ஊரில் பிறந்ததன் காரணமாக தன பெயரோடு பிறந்த ஊரான வேலணையை இணைத்துக் கொண்டு எழுதி வரும் பிறந்த மண் பற்று மிக்கவர் .

வரலாறு கூறும் நூல் .தாய் தந்தை தொடங்கி,காது குத்தல்,பாட சாலை வாழ்க்கை ,கல்லுரி வாழ்க்கை ,குடி  இருந்த  வீடு  எரிந்த சோகம்,ஆறாத்துயரம்,அம்மாவின் மரணம் ,பெரும்படை அய்யனார் கோயில் புனரமைப்பு ,அரசியல் பொதுப்பணி பிரவேசம் ,நண்பர்கள் , 1958 கலவரம் 10  வது திருக்குறள் மாநாடு ,திருமணம் ,அண்ணன் அண்ணி ,குழந்தைகள் பிறப்பு ,தாலிக்கொடி விற்று வீதி போட்டது , 1981ஆடி மாதம்
ம் 9 திகதி தாய் மண்ணின் வாழ்வை நிறுத்தி புலம் பெயர்ந்து 20.7.1981 பாரிஸ் மாநகரில் பாதம் பதித்தல்,இப்படி தனது வாழ்வில் நடந்த நிகழ்வுகளை மறக்காமல் நினைவாற்றலுடன் தேதிகளுடன் குறிப்பிட்டு படிக்கும் வாசகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார் .மிகச் சரியாக ஆவணப் படுத்தி உள்ளார் .

"தாய் மண்ணை விட்டு அகன்ற வேதனை ஒரு புறம் நெஞ்சை எரிக்க ,உறவுகளின் பிரிவு மறுபுறத்தை எரிக்க ,குடும்பத்தைப் பிரிந்து  வந்த தவிப்பு நெஞ்சை  வதைக்க   ,பட்ட கடனைக் கொடுத்து முடிக்க வேண்டுமே என்ற நினைப்பு நெஞ்சை இறுக்க,உறவுகளின் முன்னைய கூற்றுகள் எனது நினைப்பில் வந்து எனது வைராக்கியம் கொண்ட நெஞ்சில் விழ ,வாழ்ந்து காட்டணும் என்று ஏற்பட்ட மனத் துணிவுடன்  தன்னம்பிக்கை யோடு பயணம் தொடர்கின்றது ."

புலம் பெயந்தவர்களின் உள்ளது உணர்வை படம் பிடித்துக் காட்டி உள்ளார் .நூலில் வண்ண புகைப்படங்கள் வரலாறு கூறுகின்றன .மனைவி ,மக்கள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகளோடு கம்பீரமான புகைப்படங்கள் குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்பதைப் பறை சாற்றுகின்றன .

முயன்று படி சரித்திரம்
முடிந்தால் படை
சரித்திரம்
முடிந்தவரை வாழ் சரித்திரமாய் .

நூல் ஆசிரியரின் வைர வரிகள் இந்த நூலின் நோக்கத்தை இயம்புகின்றது .என்னுடைய வாழ்த்துரையில் நான் மேற்கோள் காட்டி உள்ள அவர் கவிதை இதோ !

ஏழைக்குமரியின்  அழுக்குப் பாவடை
கிழியல் ஓட்டை
பணக்காரனுக்கு வந்து நட்சத்திரம் . 


சமுதாய ஏற்றத்தாழ்வை எடுத்து இயம்பி பாண்பாடு விதைக்கும் நல்ல கவிஞர் விதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா  நூல் வெளியீடு, குழந்தைகள் திருமணம் வரிசையாக எழுதி உள்ளார் .படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் வாழ்க்கை மலரும் நினைவுகளை மல்ர்விக்கின்றது நூல்.
      விவேகானந்தர் கருத்துக்களை எழுதி தன்னம்பிக்கை விதை விதைத்து உள்ளார் .பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .சைவ சமய ஈடுபாடு உள்ள காரணத்தால் சை சமய கருத்துக்களும் நூலில் உள்ளது .சராசரி நூல் அல்ல இது .சாதனை மனிதரின் சரித்திரம் கூறும் அற்புத நூல் .

கருத்துகள்