மு .வ .அல்லது முன்னேற்ற வரலாறு நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மு .வ .அல்லது முன்னேற்ற வரலாறு

நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


வானதி பதிப்பகம் சென்னை.17 விலை ரூபாய் 60

தமிழ் உன்னை வளர்த்தது
தமிழை நீயும் வளர்க்க வேண்டும் .
----மு .வரதராசன்

தமிழ் அறிஞர் மு .வ.  அவர்கள் நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த்தேனீ  இரா .மோகன் அவர்களுக்கு எழுதிய மடலின் வைர வரிகளுடன் நூல் தொடங்குகின்றது .வைர வரிகளை தாரக மந்திரமாகக் கொண்டு தமிழ் அன்னைக்கு அணி சேர்க்கும் விதமாக நூல்களை எழுதி குவித்துள்ளார் .தமிழ்த்தேனீ  இரா .மோகன். இவருடைய மற்றொரு நூலிற்கான அணிந்துரையில், சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் , முனைவர் வெ.இறையன்பு . இ.ஆ.ப .அவர்கள் குறிப்பிட்டது.  முற்றிலும் உண்மை. தமிழ்த்தேனீ  இரா .மோகன் அவர்கள் அருகில் அவர் எழுதிய நூல்களை அடுக்கினால் அவரை விட உயரமாக இருக்கும் . 90 நூல்களை எழுதி குவித்தவரின்  தரமான நூல் இது .மாமனிதர் தமிழ் அறிஞர் மு .வ.என்ற ஆளுமையின் திறமை ,நேர்மை, எளிமை  உணர்த்தும் அற்புத நூல் .மு .வ . பற்றி தமிழ்த்தேனீ  இரா .மோகன் எழுதிய ஆறாவது நூல் இது  .இலக்கிய ஆறாகப் பாயும் நூல் இது .

நூலில் உள்ள கருத்துக்களில் பதச் சோறாக சில வரிகள் உங்கள் ரசனைக்கு .

"மு.வ .எழுத்துலகில் இவர் தொடாத துறையும் இல்லை .தொட்டுத் துலங்காத துறையும் இல்லை. என்னும் அளவிற்கு
மு.வ . வின் படைப்பாற்றல் இமாலயச் சாதனையாக வெளிப்பட்டது .பொதுவாக கல்வி உலகில் மாணவர்களால் மதிக்கப் பெரும் பேராசிரியர்கள் உண்டு . மு.வ .வோ  மாணவர்களை மதித்த பேராசிரியர் ஆவார் . தம் புதினங்கள் நான்கினுக்குத் தம்மிடம் பயின்ற முதலணி மாணவர்களான ம .ரா .போ .குருசாமி ,கா .அ.ச .ரகுநாயகம்  ,சி .வேங்கடசாமி ,ரா .சீனிவாசன் ஆகிய நால்வரிடம் அணிந்துரை பெற்ற தாயுள்ளம் கொண்டவர்  மு .வ ."

இந்த நிகழ்வைப் படித்ததும் வியந்துப் போனேன்  .இப்படியும் பண்போடு வாழ்ந்துள்ளார்கள் என்று எண்ணி . .
நான்கு மாணவர்களின் பெயர்களை முன் எழுத்துக்களுடன் ஆவணப் படுத்தி உள்ளார் . நூல் ஆசிரியர் .மு .வ .அவர்களின்  செல்ல ப் பிள்ளை என்பது உண்மை .ஒரு மகன் தந்தையின் பண்பை உற்று நோக்குவதுப்    போல உற்று நோக்கி படைத்துள்ளார் .மு .வ .அவர்களின் உள்ளம் உயர்ந்த உள்ளம் யாருக்கும் வாய்க்காத நல்  உள்ளம் .மாணவர்களை மதித்த உள்ளம் .

தமிழ் அறிஞர் மு .வ .அவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை .நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் அவர்களின் நூல்களின் வாயிலாகவே மு .வ .என்ற இலக்கிய ஆளுமையைப் பற்றி அறிந்து அவரது படைப்புகளை படிக்கத் துவங்கினேன். ஒரு கதை எப்படி? எழு வேண்டும் என்பதுப் பற்றி
மு .வ .அவர்களின் கதை படித்து அறிந்துக் கொண்டேன். இன்றைய எழுத்தாளர்கள் அனைவரும்
மு .வ .அவர்களின் படைப்புகளைப் படித்து அறிய வேண்டும் .பிற மொழிக் கலப்பு இன்றி, அழகு தமிழ் நடையில் தெளிந்த நீரோடைப் போன்று எழுதி உள்ளளார் .என்பதை அறிய முடிகின்றது .இந்த நூலின் மூலமாக.சங்கத் தமிழை எளிமைப் படுத்தி ,  இனிமைப் படுத்தி வழங்கியவர் மு .வ .என்பதை உணர்த்துகின்றது இந்நூல் .


எனக்கு மு .வ . அவர்களை நூல்கள் வழி அறிமுகம் செய்தவர் பேராசிரியர் இரா .மோகன்.கவி அரசர் தாகூரை மு .வ. அவர்களின் நூலைப் படித்து தான் அறிந்துக் கொண்டேன் .தாகூர் பற்றி கவிதை எழுதினேன் . மிகச் சிறந்த மனிதர் மு .வ . முதன் முதலில் தமிழில் முனைவர் பட்டம் பெற்றமைக்காக பாராட்டு விழா நடத்த அனுமதி கேட்டப்போது பாராட்டு விழா வேண்டாம் என்று மறுத்த பண்பாளர்  மு .வ .மு .வ . அவர்களின் புகழைப் பறை சாற்றும் நூலாக வந்துள்ளது. பாராட்டுக்கள். இன்றைய  இளைய தலைமுறை அனைவரும் படிக்க வேண்டிய அற்புத நூல் .

உன் நண்பன் யார் ?  என்று சொல் நீ யார் ? நான் என்று சொல்கிறேன் .என்று சொல்வார்கள். அதுப்போல மு. வ .அவர்கள் யார் என்று சொல்ல அவர் யார் பற்றி நூல் எழுதி உள்ளாரோ ? அதை வைத்தே மு .வ .யார் என்று சொல்லி விடலாம் .

மு .வ .எழுதிய நூல்கள் .

காந்தி அண்ணல் ,கவிஞர் தாகூர் ,அறிஞர் பெர்னாட்சா,திரு .வி.க . இந்த நான்கு பெருமக்களையும் தமிழ் உலகிற்கு விரிவாக அறிமுகம் செய்து வைத்தவர் மு .வ .


  "தேவையே இல்லாமல் ஒரு மனிதன் வாழ முடியாது .தேவைகளைக் குறைத்து வாழலாம் ."மண் குடிசை  ( பக்க எண் 52.) தமிழ் அறிஞர் மு .வ.  அவர்களின் அத்தனை நூல்களையும் ஆராய்ந்துப் படித்து மலர்களில் தேன் எடுப்பதுப்  போல எடுத்து இலக்கிய தேன் வழங்கி உள்ளார் .மு .வ.  அவர்களின் வைர வரிகளை பக்க  எண்களுடன் சான்றாக மிகத் துல்லியமாகப்  எழுதி உள்ளார்கள் .

மு வ .வின் படைப்புகளான கள்ளோ ? காவியமோ ?, கரித்துண்டு , நெஞ்சில் ஒரு முள் போன்ற நூல்கள் ஆழ்ந்து படித்ததன் காரணமாக ,அந்த நூலில் உள்ள வரிகளுடன் நூல் எழுதி உள்ளார். இலக்கிய விருந்துப்  படைத்துள்ளார் .


மதுரையில் காந்தி அருங்காட்சியத்தில் மு .வ அவர்களின்
நூற்றாண்டு  நிறைவு விழாவை மிகச் சிறப்பாக ,கோலாகலமாக, மதுரை வியக்கும் வண்ணம் ஒரு நாள் முழுவதும் நடத்தி மு வ .வின் புகழை உலகு அறிய வைத்தவர்  நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் .எழுதுவதோடு நின்று விடாமல் எழுதியபடி செயல் பட்டும் வருகிறார் .விழாவில் முழுவதும் இருந்து ரசித்தேன் நான் .
மு .வ .பற்றிய பிம்பம் இமயத்தை வென்றது .


சூரியனின் இதயத்திலிருந்து சிந்திக்கவும்
நிலவின் உதடுகளிலிருந்து பேசவும்
வல்லவர் மு .வ .
---- ஈரோடு தமிழன்பன்

மு .வ .பற்றி இப்படி மற்றவர்கள் எழுதியதைத் தேடி
ப் பிடித்து நூலில்  ஆவணப் படுத்தி உள்ளார். இந்த நூலில் மு .வ. அவர்கள் எழுதிய நூல்களின் பட்டியலும் ,நூல் ஆசிரியர் பேராசிரியர்
இரா. மோகன் அவர்கள் எழுதிய நூல்களின் பட்டியலும் உள்ளது .படித்து பிரமித்துப் போனேன். இலக்கிய ஆர்வலர்கள் .ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல். தரமான நூலை பதிப்பித்த வாதி பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .இந்த நூல் மு .வ .என்ற மகுடத்தில் பதித்த வைரக் கல்லாக ஒளிர்கின்றது .


கருத்துகள்