இடுகைகள்

August, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேவகானம் . நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
தேவகானம் .

நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்  .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நேசனல் பதிப்பகம் , 2.வடக்கு உசுமான் சாலை .தியாகராயர் நகர் ,சென்னை  .17  விலை ரூபாய்  120


கவிக்கோ என்றாலே  பெயர் சொல்லாமலே அனைவருக்கும் விளங்கும் அப்துல் ரகுமான் என்று .கவிதை உலகில் , இலக்கிய உலகில் அனைவரும் அறிந்த ஆளுமை மிக்க கவிஞர் .சமரசங்களுக்கு இடமின்றி கொண்ட கொள்கையில் இன்று வரை உறுதியாக இருக்கும் கவிஞர் .அவரிடம் நீங்கள் ஏன் ? திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை .என்று கேட்டனர் .அதற்கு அவர் தந்த பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது ."அம்மி கொத்த சிற்பி எதற்கு ? " உண்மைதான் பல சிற்பிகள் சிற்பி என்பதை மறந்து சிலைகளே செதுக்குவதில்லை அம்மி மட்டுமே கொத்திக்  கொண்டு இருக்கின்றனர். .நாடறிந்த நல்ல கவிஞரின் நூல் இது .

நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு இறை நம்பிக்கை உண்டு .ஆனால் கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கை அவருக்குப் பிடிக்க வில்லை .படைப்பாளியின் உள்ளக் குமுறலை கவிதையில் காண முடிகின்றது .அவருக்கு சாகித்ய அகதமி விருது கிடைத்தபோது மதுரையில் அவருக்கு தமிழ்த்தேனீ  இ…

இலங்கை நட்பு நாடாம் கவிஞர் இரா .இரவி

படம்
இலங்கை நட்பு நாடாம்                           கவிஞர் இரா .இரவி

இந்தியாவிற்கு இலங்கை நட்பு நாடாம்  சரி
இந்தியாவிற்கு தமிழ்நாட்டுத் தமிழர் பகைவர்களா ?

தினந்தோறும் தமிழக மீனவர்களைத் தாக்குகின்றான்
தமிழர்களைக்  கொல்கிறான் சிறைப் பிடிக்கிறான்

மீனவர்கள் நாள்தோறும் செத்துப் பிழைக்கின்றனர்
மனம் போன போக்கில் வன்முறை புரிகின்றான் ஈழத்தில் தமிழினத்தையே கூண்டோடு  அழித்தவன்
ஈனப்பிறவியான  சிங்களன் இவர்களுக்கு நண்பனாம்

சீனாவின் நண்பன் இந்தியாவிற்கும் நண்பனா ?
சிந்தித்துப் பார்த்து செயலினை மாற்று !

சீனாவோடு சேர்ந்து இந்தியாவையும் தாக்குவான்
சிங்களன் அன்று உணர்வாய் சிங்களம் குணம் !

உலகமகா ரவுடிக்கு ராணுவப் பயிற்சியாம் !
உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மடையர்கள் !

தமிழின விரோதி இந்தியாவிற்கு நண்பனாம் !
தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியர்கள்தானே ?

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி இன்புறும்
வீணர்கள் திருந்த வேண்டும் மறுத்தால் திருத்தப் படுவாய் !

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும்
இழி செயலை உடனே நிறுத்திடுக !எதையும் தாங்கும் இதயம் உண்டு தமிழருக்கு
இதனைத் தாங்கும் இதயம் இல்லை எங்களுக்கு !
கொடியவன் கொடூரன் கொல…

வயசு 18. திரைப்படம் விமர்சனம்

படம்
வயசு 18

இயக்கம்
திரு . R.பன்னீர் செல்வம்

திரைப்படம் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


மன நோயாளி கதை .ரேனுகுண்டா என்ற திரைபடத்தை இயக்கிய திரு . R.பன்னீர் செல்வம் அவர்களின் அடுத்த படைப்பு .பிறக்கும் போதே மன நோயாளியாக பிறப்பது மிகச் சிலர் .ஆனால் மன நோயாளியாக சமுதாயத்தால் ஆக்கப்படுவது பலர் .மன நோயுக்கு  மருந்து அன்புதான் .வன்முறை அல்ல என்று போதிக்கும் படம் .

மகன் மீது பாசம் பொழியும் நல்ல தந்தை .குட்டிக் கதைகள் ,நிலவு,நட்சத்திரம் , காடு என்று சொல்லி வளர்க்கும் சிறந்த தந்தை .வீட்டில் எபோதும் சண்டையிடும் அம்மா .மிகவும் பொறுமையான தந்தை .கல்லூரி நண்பனிடம்  தொடர்பு உள்ள அம்மாவின் நிலை கண்டு அதிர்ந்த அப்பா தூக்குப் போட்டு தற்கொலை  செய்து கொள்கிறார்  .மனம் பாதித்த சிறுவன் மன நோயாளி ஆகின்றான் .அவனிடம் அம்மா அன்பு காட்டாமல் அடித்து, சூடு வைத்து துன்புறு
த்துகின்றார்.   

கல்லூரி நண்பர் திருமணம் செய்யாமலே அம்மாவுடன் வந்து ஒரே  வீட்டில் தங்குகிறார் .மன நோய் முற்றுகின்றது .நாய் குரைப்பதை பார்த்து மன நோயாளி நாயை பார்த்து நாயைப் போலவே குரைத்து சண்டை போடவும் நாய் பயந்து ஓடி விடுகின்றது .நண்பன் மருத்து…

பார்த்தால் சிணுங்கி !நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர். விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
பார்த்தால் சிணுங்கி

நூல் ஆசிரியர்  கவிஞர் தபூ சங்கர்.   thabushankar@yahoo.com

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விலை ரூபாய் 70

விஜயா பதிப்பகம் 20.ராஜ வீதி ,கோவை .
1 .தொலைபேசி  2394614

கவிஞர் தபூ சங்கர் அவர்கள் காதல் கவிதைகளின் மூலம் காதலர்கள் இடையே பிரபலமாகி ,காதல் பரிசாக இவரது நூலே பரிசளித்து  வருகின்றனர் காதலர்கள்.அதனால்தான் இவரது நூல்கள் குறுகிய காலத்தில் அடுத்த பதிப்புகளும் வெளி வந்து கொண்டு இருக்கிறது . காதலர்கள் காதலுக்கு அடுத்த படியாக, நேசிப்பது தபூ சங்கர் கவிதைகள் என்றால் மிகை அன்று .அட்டைப்பட வடிவைப்பு ,கட்டமைப்பு, அச்சு என அனைத்தும் மிக நேர்த்தியாக உள்ளது .நூலை பார்த்ததும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் விதமாக உள்ளது. பதிப்பித்த விஜயா பதிப்பகதாருக்கு பாராட்டுக்கள் .நூலின் பெயரே சிந்திக்க வைக்கின்றது .தொட்டால் சிணுங்கி கேள்வி பட்டு இருக்கிறோம் ."பார்த்தால் சிணுங்கி "வித்தியாசமாக உள்ளது .காதலித்தவர்களுக்கு இதன் பொருள்  நன்கு விளங்கும் . திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் நா .முத்துக் குமார் அவர்களின் அணிந்துரை அழகுரையாக உள்ளது .காதலர் தின பரிசாக இந்த நூலை வழங்…

நூலகர் தின விழா

படம்
நூலகர் தின விழா

மதுரையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் I.A.S , I..P.S, I.R.S தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ( குடிமை ) நூலகப் பிரிவை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அவர்கள் தொடங்கி வைத்தார்கள் .நூலகர் தின விழாவும் நடைபெற்றது .

படம்
மதுரையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் I.A.S , I..P.S, I.R.S தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ( குடிமை ) நூலகப் பிரிவை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அவர்கள் தொடங்கி வைத்தார்கள் .நூலகர் தின விழாவும் நடைபெற்றது .

இதழ்கள் முகவரிகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி

இதழ்கள் முகவரிகள் !   தொகுப்பு  கவிஞர் இரா .இரவி  

தன்னம்பிக்கை
டாக்டர் .க .கலைச்செல்வி
79.திவான் பகதூர் சாலை ,
ஆர் .எஸ் .
புரம் ,
கோவை . 641002
செல் 9842232550
மின்னஞ்சல் thannambikkaimagazine@gmail.com
------------------------------
---------------------------------
பொதிகை மின்னல்
திரு .வசீகரன்
118.எல்டாம்ஸ் சாலை
சென்னை .18

செல் 9841436213
மின்னஞ்சல் pothigaiminnal@yahoo.co.in
-----------------------------------------------------------------
மின்னல் தமிழ்ப்பணி
118.எல்டாம்ஸ் சாலை
சென்னை .18

செல் 9841436213
மின்னஞ்சல் pothigaiminnal@yahoo.co.in
------------------------------------------------------------------
மின்மினி
கன்னிக்
கோவில்   ராஜா
30/8.கன்னிக்கோவில் முதல் தெரு
அபிராம புரம்
சென்னை .18

செல் 9841236965
மின்னஞ்சல் minminihaiku@gmail.com
---------------------------------------------
மனிதநேயம்
பேராசிரியர் எ.எம் .ஜேம்ஸ்   
16.மெய்ப்பன் 2 வது தெரு
ஞானஒளிவு புரம்
மதுரை .16
செல் 9790128232
மின்னஞ்சல் manithaneyajames@hotmail.com
-----------------------------------------------------------

ஏ…

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

படம்
மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

படம்
மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம்    நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை  உரையாற்றினார்  . திரு .ஜோதி மகாலிங்கம் , திரு .ராமமூர்த்தி ,
திரு .ஆ .முத்துக்கிருஷ்ணன்
திரு .சரவணன்,  திரு.கார்த்திகேயன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம்,சிவ முருகன் ஆகியோர் தன்னம்பிக்கை தொடர்பான கவிதை வாசித்தனர் .வருமான வரித்துறையின் ஆய்வாளர் திரு .சந்துரு என்ற சந்திரசேகர் அவர்கள் " மூன்றாவது கை தன்னம்பிக்கை " என்ற தலைப்பில் ,ராஜாஜி எழுதிய மகாபாரதத்தில் இருந்து அபிமன்யுவின் தன்னம்பிக்கை குறித்து விரிவாக விளக்கி ,தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .திரு. தினேஷ் நன்றி கூறினார் .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர்   பலர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

தமிழை இழிவுபடுத்தி எழுதிய ஆர் .நாகசாமிக்கு தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களின் மறுப்புரையும் விளக்கமும் . தொகுப்பு கவிஞர் இரா .இரவி

படம்
தமிழை இழிவுபடுத்தி எழுதிய ஆர் .நாகசாமிக்கு தமிழறிஞர்  தமிழண்ணல் அவர்களின் மறுப்புரையும்  விளக்கமும் .

தொகுப்பு   கவிஞர் இரா .இரவி 

விழா ஏற்பாடு திரு பி .வரதராசன் .புரட்சிக் கவிஞர் மன்றம். மதுரை


 " MIRRAR OF TAMIL AND SANSKRIT " என்ற நூலில் ஆர் .நாகசாமி நஞ்சை கக்கி உள்ளார் .

அவர் எழுதிய நூலுக்கு மறுப்பு எழுதி வருகிறேன் விரைவில் ஆங்கிலத்தில்  வெளிவரும். இணையங்களிலும் இடம் பெறும் .

உலகிற்கே உழவை கற்பித்த  தமிழருக்கு உழவு தெரியாது .வங்காள தேசத்தவர்தான் உழவு கற்றுக் கொடுத்தார்கள் என்று எழுதி உள்ளார்  .

திரு .வி .க . சொல்வார்கள்  "குப்பையை கிளறினால் தும்பும்  தூசியும் கிளம்பும் .கண்ணை கெடுத்து விடும்  ."அது போல அவர் எழுதி உள்ள நூல் முழுவதும் குப்பை .ஆர் .நாகசாமிக்கு தமிழ் புலமையும் இல்லை சமஸ்கிருத புலமை இல்லை என்பதை நிருபிக்கும் விதமாக இந்த நூல் உள்ளது .
அவ
ருக்கு  மறுப்பு எழுத  இந்தக்  குப்பையை படிக்கின்றேன் .

தொல்காப்பியம் இலக்கண நூல் எனபது உலகம் அறிந்த உண்மை .ஆனால் ஆர் .நாகசாமி தொல்காப்பியம் இலக்கண நூல் அல்ல என்கிறார் .நடன சாஸ்திர நூல் என்கிறார் .சிலப்பதிகாரத்தை …

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ   கவிஞர் இரா .இரவி

சூரியனால் எடுத்ததை
சுத்தமாக்கி பொழிந்தது
வானம் !

எங்கு விழுவோம்
என்பது தெரியாது
மழைத்துளி !

நினைவூட்டியது
சூரியனை
சூரியகாந்தி !

கரிசல் காட்டில்
வெண்மை மலர்ச்சி
பருத்திப்பூ !

ரசிக்க
சுவாசிக்க 
மரம் !

மொழிக்கு முந்தியது
ஓசை
இசை !

இசைகளின்
தாய்
தமிழிசை !

மெய்பிக்கப்பட்ட உண்மை
சேய்கள் மற்ற மொழிகள் 
மொழிகளின் தாய் தமிழ் !

இலக்கண இலக்கியங்களின்
இனிய சுரங்கம்
தமிழ் !


லட்சங்களைத்  தாண்டும்
சொற்களின் மொத்தம்
தமிழ் !


தமிழருக்குப் புரியவில்லை
அன்னியருக்குப் புரிந்தது
முதல் மொழி தமிழ் !

அழகு எல்லாம் அழகு அன்று ! கவிஞர் இரா .இரவி .

படம்
அழகு எல்லாம் அழகு அன்று ! கவிஞர் இரா .இரவி .

அழகு எல்லாம் அழகு அன்று
அழகற்றது எல்லாம் அழகற்றது அன்று !

அழகு அழகற்றது என்பது எல்லாம்
அனைவரும் கற்பித்த கற்பிதங்களே !

அழகை ஆராய்ந்து நோக்கினால் 
அழகில் உள்ள குறை தெரியும் !

அழகற்றதை ஆராய்ந்து நோக்கினால் 
அழகற்றதில் உள்ள அழகு தெரியும் !

வெள்ளைதான் அழகு என்று அன்றே
வெள்ளை அறிக்கை வாசித்ததின் விளைவு !

கருப்பு  அழகற்றது என்று அன்றே
கருப்பசாமியும் சொன்னதன் விளைவு !

அவனுக்கு அழகானது எனக்கு அழகற்றது
எனக்கு அழகானது அவனக்கு அழகற்றது !
அழகினால் ஆபத்தும் உண்டு
அழகற்றதால் ஆபத்து இல்லை !

கிடைக்காத அழகிற்கு ஏங்காதே
கிடைத்ததில் அழகை காண் ! 


அழகு ஆளுக்கு ஆள் வேறுபடும்
அழகு என்றும் நிரந்தரம் அன்று !

அழகு என்பது நிறத்தில் இல்லை
அழகு என்பது குணத்தில் உள்ளது 

மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி

படம்
மகாகவி பாரதி !     கவிஞர் இரா .இரவி 

எழுதியபடி வாழ்ந்தவன்
வாழ்ந்தபடி எழுதியவன்
மகாகவி பாரதி !

புதுமைக்கும்
மரபுக்கும்
பாலம் அமைத்தவன்
மகாகவி பாரதி !

விடுதலை விதையை
விருட்சமாக வளர்த்தவன்
மகாகவி பாரதி !

மற்றவரை மதித்தவன்
சுயமரியாதை மிக்கவன்
மகாகவி பாரதி !

வறுமையிலும் செம்மை
ஏழ்மையிலும் நேர்மை
மகாகவி பாரதி !

பா   ரதம்  செலுத்திய
பாக்களின் சாரதி
மகாகவி பாரதி !

பெண் விடுதலைக்கு
போர்முரசு கொட்டியவன்
மகாகவி பாரதி !
வாழ்வில் ஆசைப்பட்டவன்
பேராசைப்படாதவன்
மகாகவி பாரதி !

மூடப் பழக்கங்களுக்கு
மூடு விழா நடத்தியவன்
மகாகவி பாரதி ! 

பகுத்தறிவைப் பயன்படுத்தி
பாடல்கள் புனைந்தவன்
மகாகவி பாரதி !

அழியாத பாடல்கள்
அகிலத்திற்கு வழங்கியவன்
மகாகவி பாரதி !

வெள்ளையர்களை 
விரட்டிய
காரணிகளில்  ஒன்றானவன்
மகாகவி பாரதி !

வாழ்ந்த காலம் முப்பத்தொன்பது
பாடல்களின் காலம் பல
நூற்றாண்டு 
மகாகவி பாரதி !

மொழிகள் பல பயின்றவன்
தமிழே சிறப்பு அறிவித்தவன்
மகாகவி பாரதி !


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
h…

வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி

படம்
வேண்டும் விடுதலை !  வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி

வேண்டும் விடுதலை !  வேண்டும் விடுதலை !
வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு 
விடுதலை !

பன்னாட்டு ராணுவத்தால் படை தொடுத்தவனோடு
பகை மறந்து வாழ்வது இனி சாத்தியமில்லை !  

நாட்டு மக்களையே காட்டுமிராண்டித்தனமாக அழித்த 
நயவஞ்சகனோடு இணக்கம்
இனி சாத்தியமில்லை !

மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற கொடியவனை
மகாத்துமா  இருந்தால்
கூட மன்னிக்க மாட்டார்  !

கொன்றது போக எஞ்சியோரை சிறைப்பிடித்து
முள்வேலியில்  இட்டவனோடு வாழ்வது சாத்தியமில்லை ! 

ஜாலியன் வாலாபாக் படுகொலையை  விட கொடியது
சிங்களப்படை ஈழத்தில் நடத்திய  படுகொலைகள் !

நாட்டு மக்களின் மீது குண்டு  மழை  பொழிந்தவனை 
நாட்டின் அதிபராக மதிக்க மனம் வருமா ?

வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களையும்
வஞ்சகமாகக் சுட்டவனை மன்னிக்க  முடியுமா ?

மூப்பென்றும் பிஞ்சென்றும் பெண்னென்றும் பாராமல் 
மூர்க்கமாக அழித்தவனை மதிக்க முடியுமா ? 

தமிழ் இனத்தையே அழித்தது இலங்கைப் படை
தன் மக்களையே ஒழித்தது இலங்கை அரசுப்படை !

கொலை பாதகம் புரிந்த கொடியவர்களுடன்
கூடிவாழுங்கள் என்று போதிக்கும் மூடர்கள் !

இனவெறி பிடித்த சிங்களப…

மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் ! நூல் ஆசிரியர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் !

நூல் ஆசிரியர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின்.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

குமரன் பதிப்பகம் , 19.கண்ணதாசன் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை.17.   விலை ரூபாய்  60 .

தன்னம்பிக்கை நூல்கள் என்றதும் நம் நினைவிற்கு உடன் வருவதுஎழுத்தாளர் மெர்வின்.பெரிய மீசைக்காரர் .குழந்தை உள்ளத்திற்கு சொந்தக்காரர் .இவரது நூல்கள் பல படித்து தன்னம்பிக்கை பெற்றவன் நான் .சமீபத்தில் இந்த நூலை அவரே எனக்கு அனுப்பி இருந்தார் .மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் ! என்ற ந்த நூல் மிகச் சிறப்பாக உள்ளது .நாம் அறிந்த மேதைகள் பற்றி நாம் அறியாத பல தகவல்கள் நூலில் உள்ளது .எழுத்தாளர் மெர்வின் அவர்கள் பல மேதைகளின் வாழ்க்கை வரலாற்று நூல்களை படித்து ,சுவைத்து ,அறிந்து ,ஆராய்ந்து  பழச்சாறாக வழங்கி உள்ளார். பாராட்டுக்கள். 

காந்தியடிகள்  அவர்களின் அகிம்சை குணம் வந்தது எப்படி என்ற கேள்விக்கு அவரே அளித்த பதில் நூலில் உள்ளது .

"நான் பள்ளியில் படித்தபொழுது ஒரு குஜராத்திப் பாடல் என் உள்ளத்தில் பதிந்தது .ஒருவன் உனக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தால் அதற்குப் பதிலாக நீ அவனுக்க…

நினைவாற்றல் மேம்பட வழி ! நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

படம்
நினைவாற்றல் மேம்பட வழி !

நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வெளியீடு ; தன்னம்பிக்கை ,79. திவான் பகதூர் சாலை ,ஆர்.எஸ் .புரம் ,கோவை.641002. விலை ரூபாய் 20 . info@thannambikkai.net

நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் அவர்கள் பன்முக ஆற்றலாளர் .அவருடைய  நூல்கள் பல படித்து உள்ளேன் .மதுரையில் அவர் உரை கேட்டு இருக்கிறேன் .பழகுவதற்கு இனிமையானவர் .இவர் கோபப்பட்டு யாருமே பார்த்து இருக்க முடியாது .
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகப் பேராசிரியர் ,நாடறிந்த அறிவியல் தமிழ் எழுத்தாளர் ,கவிஞர் ,ஆற்றல் மிக்க பேச்சாளர் ,தொண்டறம் புரியும் கால்நடை மருத்துவர் .அவர் எழுதிய   நினைவாற்றல் மேம்பட வழி ! அய்ந்து பதிப்புகளைக்  கடந்து வந்து வந்து விட்டது .தன்னம்பிக்கை பதிப்பாக வருகின்றது .தன்னம்பிக்கை மாத இதழின் வாசகர் நான் .மதுரை தன்னம்பிக்கை வாசகர் வடத்தின் செயலராக இருந்து மாதம்தோறும் பயிலரங்கம் நடத்தி வருகின்றோம் .தன்னம்பிக்கை நூலில் விலை என்பதற்குப்  பதிலாக  மூலதனம் என்று இருக்கும் .இந்த நூலும் மூலதனம்தான் .மிகச் சிறந்த நூல் இது .இந்த நூலை சமீபத்தில் …

பூரண மது விலக்கு வந்தால் பெண்கள் மகிழ்வார்கள் .நாடு நலம் பெறும் .கவிஞர் இரா .இரவி

பூரண மது விலக்கு வந்தால் பெண்கள் மகிழ்வார்கள் .நாடு நலம் பெறும் .கவிஞர் இரா .இரவி

பூரண மது விலக்கு வந்தால், நாடு நலம் பெறும் .கள்ளச் சாராயம் வந்து விடும்  என்று பூச்சாண்டி காட்டுவதை நிறுத்துங்கள் .குஜராத்தில் பூரண மது விலக்கு அமுலில்  உள்ளது .சட்டத்தை ,தண்டனையை கடுமையாக்கினால்  கள்ளச் சாராயம் ஒழித்து விடலாம் .முதல்வர் வசம் தான் காவல் துறை உள்ளது .இன்று குடியால் நாட்டில் கொலை, கொள்ளை என குற்றங்கள்  பெருகி விட்டது .பள்ளி மாணவன் சீருடையோடு சென்று குடிக்கிறான் .ஆசிரியர் குடிக்கின்றார்.பேராசிரியர் குடிக்கின்றார்,கணிப்  பொறியாளார்  குடிக்கின்றார் . வாகன ஓட்டுனர்கள் குடித்து விட்டு வந்து வாகனம்  ஓட்டி விபத்து ஏற்படுகின்றது .உயிர்கள் பலியாகின்றது .இரு சக்கர  வாகனத்தில்  சென்று மதுக்கடையில் மது அருந்தி  விட்டு வந்து குடி போதையில் .இரு சக்கர  வாகனத்தை ஓட்டி   விபத்து நேர்கின்றது .இன்று நடக்கும் குற்றங்ககளில்  80 % குடி போதையின் காரணமாகவே நடக்கின்றது என்று ஆய்வு சொல்கின்றது .குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் உயிருக்கும் கேடு என்பது முற்றிலும் உண்மை .மது விலக்கு உடனடி தேவை !மது வ…

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

படம்
மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

நண்பர்கள் ! கவிஞர் இரா.இரவி

நண்பர்கள் !   கவிஞர் இரா.இரவி

கோடிப் பணத்தை விட
உயர்ந்தவர்கள்
நண்பர்கள் !  

சொத்துக்களை விட
சிறந்தவர்கள்
நண்பர்கள் !  

துன்பம் என்றால்
திரண்டு விடுவார்கள்
நண்பர்கள் !  

துயரத்தின் போது
தோள் கொடுப்பவர்கள்
நண்பர்கள் !  

எதுவும் செய்வார்கள்
எதையும் இழப்பார்கள்
நண்பர்கள் !  

குடத்து விளக்கான நம்மை
குன்றத்தில் வைப்பார்கள்
நண்பர்கள் !

கூட்டமாகக் கூடி
கூத்துக் கட்டுவார்கள்
நண்பர்கள் !

நேரம் செல்வதை
மறக்கடிப்பவர்கள்
நண்பர்கள் !

புண்பட்ட மனதிற்கு
மருந்தாவர்கள்
நண்பர்கள் !

வாழ்வின் இருள் நீங்க
வழிகாட்டி ஒளி தருவார்கள்
நண்பர்கள் !

தவறான பாதை சென்றால்
தட்டிக் கேட்பவர்கள்
நண்பர்கள் !

எதிரிகளை அடக்குவார்கள்
பகைவர்களை பயப்படுத்துவார்கள்

நண்பர்கள் !

ஏணியாக இருப்பார்கள்
தோணியாக  வருவார்கள்
நண்பர்கள் !

காதலுக்கு துணை நிற்பார்கள்
காதலி கரம் பிடிக்க உதவுவார்கள்
நண்பர்கள் !

உயிருக்கு உயிரானவர்கள்
என்றும்  மறக்கமுடியாதவர்கள்
நண்பர்கள் !

--

வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன் ! கவிஞர் இரா .இரவி

வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன் !
கவிஞர் இரா .இரவி

உயிர் காப்பான் தோழன் உண்மை
உயிர் கொடுத்தும் காப்பான் நண்பன்

அம்மா அப்பா மனைவிக்குச் சொல்லாத ரகசியம்
அன்பு நண்பனுக்குச் சொல்லலாம் காப்பான்

சொந்த பந்தம் பணம் பார்த்து பழகும்
சொந்த நண்பன் மனம் பார்த்து பழகுவான்

நமக்கு ஒரு சோகம் என்றால் உடன்
நம்மைத் தேடி வரும் ஆறுதல் நண்பன்

நமக்கு ஒரு கவலை என்றால்
நம் கவலையைத் தீர்ப்பவன் நண்பன்

நம் கண்ணில் கண்ணீர் வழிந்தால்
நமக்காக துடைக்க கரம் நீடுபவன் நண்பன்

நம் வளர்ச்சி கண்டு பெருமை கொள்வான்
நம் மகிழ்ச்சி கண்டு பூரிப்பான் நண்பன்

போட்டி வந்தால் விட்டுக் கொடுப்பான்
போட்டியில் இருந்து விலகிடுவான் நண்பன்

தியாகம் செய்த நண்பன் உண்டு
துரோகம் செய்தவன் நண்பனே அல்ல துரோகி

சாதனைக்குத் துணை நிற்பான் நண்பன்
சோதனையை தூர விரட்டுவான் நண்பன்

பணத்தைப் பெரிதாக நினைக்காதவன்
பண்பில் சிறந்த பாசக்கார நண்பன்

நண்பனை யாரும் இகழ்ந்தால் துடிப்பான்
நண்பனின் பெருமையைப் பேசும் நண்பன்

நாம் செய்த சிறு உதவி மறக்க மாட்டான்
நமக்கு அவன் செய்த பேருதவி மறந்திடுவான் நண்பன்

மறக்க முடியாதவன் நண்பன்
மறக்கக் கூடாதவன் நண்பன…

மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
மதுபானக் கடை

இயக்கம் திரு .கமலக்கண்ணன்

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வழக்கமான திரைப்பட மசாலா இல்லாமல் மிக இயல்பாக யதார்த்தமாக பாடமாக்கி உள்ளார்
.திரு. கமலக்கண்ணன்.இவரை மற்றொரு பாலாஜி சக்திவேல் என்றே சொல்லலாம் .படத்தில் கோடிகள் தியம் பெறும்  நடிகர்கள் இல்லை .கோடிகள் தியம் பெறும் நடிகைகள் இல்லை .புகழ்ப்பெற்ற நகைச் சுவை நடிகர்  இல்லை.வெளி நாடு செல்ல வில்லை .டுயட் பாடல் இல்லை . எந்த பிரமாண்டமும்  இன்றி பிரமாதமாக இயக்கி உள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள் .சமீபத்தில் வந்த எல்லா திரைப்படங்களிலும்   மதுபானக்  கடையில் மது அருந்தும் காட்சி கட்டாயம் இருக்கும் .ஆனால் இந்தப் படமோ மொத்தப் படமும்,   மதுபானக்   கடையிலேயே நடக்கின்றது .படம் தொடங்கும் போதே "இந்தத் திரைப்படத்தில்  கதை என்று இருப்பதாக நீங்கள்  கருதினால்,அது உங்களுடைய கற்பனை "வித்தியாசமாக உள்ளது .அதேபோல் படத்தில் பெரிய கதை ஒன்றும் இல்லை .ஆனால்    
மதுபானக்   கடையில் குடிமகன்கள் நடத்தும் கூத்து  படம் முழுவதும் காட்டி உள்ளார் .

படத்தின் பெயரைப் பார்த்து விட்டு
குடிக்கு எதிராக கவிதை ,கட்டுரை எழுதி வரும் நாம்

பகுத்தறிவு சிந்தனைக்கு ! கவிஞர் இரா .இரவி

படம்
பகுத்தறிவு சிந்தனைக்கு !  கவிஞர் இரா .இரவி
இரண்டு கைகளை தலை மேல் வைக்க கூடாது வைத்தால் அப்பா அம்மா இறந்து போவார்கள் .என்பார்கள் .இறுதிச் சடங்கின் போது குடியானவர்  இரண்டு கைகளை தலை மேல் வைக்க சொல்வார் .அதனால் ,சாதரணமாக இரண்டு கைகளை தலை மேல் வைக்க கூடாது என்பது மூட நம்பிக்கை.

சாப்பிடும் முன் இலையில் தண்ணீர் தெளிப்பது இலையை சுத்தம் செய்ய ஆனால் சிலர் சிந்திக்காமல் இரவில் சாப்பிடும் போது 
இலையில் தண்ணீர்  தெளிக்க கூடாது என்பது மூட நம்பிக்கை.

சனிக் கிழமை யாரவது இறந்தால் துணை பிணம் கேட்கும் என்பது
மூட நம்பிக்கை.இதற்காக வீணாக கோழியை கழுத்து அறுத்து பாடையில் போட்டு விடுவார்கள் .  

உயரம் குறைவான  நிலையில் குனிந்து போகாமல் முட்டி விட்டு நிலை தட்டி விட்டது .உட்கார்ந்து போங்கள் என்பார்கள் .

பூனை எலியை பிடிக்க ஓடும் .பூனை குறுக்கே போனால் நாம் வெளியே  போகக் கூடாது என்பது மூட நம்பிக்கை.
அந்தக்காலத்தில் மின் விளக்கு இல்லாத காலத்தில் ஊசி இரவில் விற்க மாட்டார்கள் .காரணம் தவறி கிழே விழுந்தால் எடுப்பது சிரமம் என்பதால், ஆனால் இன்றைக்கு மின் விளக்குகள் வந்து விட்ட காலத்திலும் சிலர்  ஊசி இரவில் விற்க மாட்டா…