பார்த்தால் சிணுங்கி !நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர். விமர்சனம் கவிஞர் இரா .இரவி

பார்த்தால் சிணுங்கி

நூல் ஆசிரியர்  கவிஞர் தபூ சங்கர்.   thabushankar@yahoo.com

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விலை ரூபாய் 70

விஜயா பதிப்பகம் 20.ராஜ வீதி ,கோவை .
1 .தொலைபேசி  2394614

கவிஞர் தபூ சங்கர் அவர்கள் காதல் கவிதைகளின் மூலம் காதலர்கள் இடையே பிரபலமாகி ,காதல் பரிசாக இவரது நூலே பரிசளித்து  வருகின்றனர் காதலர்கள்.அதனால்தான் இவரது நூல்கள் குறுகிய காலத்தில் அடுத்த பதிப்புகளும் வெளி வந்து கொண்டு இருக்கிறது . காதலர்கள் காதலுக்கு அடுத்த படியாக, நேசிப்பது தபூ சங்கர் கவிதைகள் என்றால் மிகை அன்று .அட்டைப்பட வடிவைப்பு ,கட்டமைப்பு, அச்சு என அனைத்தும் மிக நேர்த்தியாக உள்ளது .நூலை பார்த்ததும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் விதமாக உள்ளது. பதிப்பித்த விஜயா பதிப்பகதாருக்கு பாராட்டுக்கள் .நூலின் பெயரே சிந்திக்க வைக்கின்றது .தொட்டால் சிணுங்கி கேள்வி பட்டு இருக்கிறோம் ."பார்த்தால் சிணுங்கி "வித்தியாசமாக உள்ளது .காதலித்தவர்களுக்கு இதன் பொருள்  நன்கு விளங்கும் . திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் நா .முத்துக் குமார் அவர்களின் அணிந்துரை அழகுரையாக உள்ளது .காதலர் தின பரிசாக இந்த நூலை வழங்கலாம் என்று பரிந்துரை செய்து முடித்துள்ளார் . 

 மரங்கள் அசைய வில்லை  என்றால் காற்று வர வில்லை என்று நினைப்போம் .இது சாதாரண பார்வை .மரங்கள் அசைய வில்லை  என்றால் கவிஞர் தபூ சங்கரின் காதல் பார்வை என்னவெண்டு கவிதையில் பாருங்கள் .
நூலின்  முதல் கவிதையே காதல் உணவுடன் தொடங்குகின்றது .

உங்கள் வீதியில் மரங்கள்
அசைய வில்லை  என்றால்
அங்கே
எங்கோ ஒரு காதல்
புழுங்கிக் கொண்டிரு
க்கிறது   என்று அர்த்தம் .

காதலியை புகழ்வது காதலன் கடமைகளில் ஒன்று .மிக அதிகமாக புகழ்ந்தாலும் ஏற்றுக் கொள்வாள் காதலி .கவிஞர் தபூ சங்கர்  காதலியை புகழும் அழகு தனி அழகு .தனி நடை .

ஒரு வருட
உலக அழகிகளே
ஒதுங்கி நில்லுங்கள்
ஆயுள் கால
உலக அழகி
வருகிறாள் .

இன்றைய இளம் பெண்கள் இன்று அவ்வளவாக அணிவதே இல்லை .ஆனால்  கவிஞர் தபூ சங்கர் காதலி அணியும் வழக்கம் உள்ளதை பார்த்தால் வடித்த கவிதை இது .

கொலுசு
வளையல்
பூ
இதெல்லாம்
உன் அழகுபரப்புச்
செயலாளர்கள் .

கொள்கை 
பரப்புச் செயலாளர்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம் .அழகுபரப்புச் செயலாளர்கள் இப்போதுதான் கேள்விப்  படுகிறோம். வித்தியாசமான சிந்தனை .பாராட்டுக்கள் .
காதலி அமைதியானவள் ஆனால் அவளது அழகோ மிகவும் ஆர்ப்பாட்டமானது என்பதை எப்படி ? எழுதுகிறார் பாருங்கள் .

நீ ரொம்ப  ரொம்ப
அமைதியான
பெண்தான்
ஆனால்
உன் அழகுதான்
அடங்கப் பிடாரி .

 
"இமைக்காமல் பார்க்கும் போட்டியில் என்னை வென்றவள் அவள் "என்று நான் எழுதிய கவிதையை நினைவூட்டிய கவிதை ஒன்று .

கண்கள்
கூசாமல்
சூரியனைப் பார்ப்பதற்கு
க் கூ  
கண்ணாடி உதவுகிறது .
ஆனால்
உன்னைக்
கண்கள்
கூசாமல் பார்க்க
எதுவுமே
உதவுவதில்லை .

காதலி தந்த ஒன்றை மிக சாதரணமானதாக இருந்தாலும் அதை பத்திரப் படுத்துவது காதலன் கடமை .அந்த வகையில் ஒரு கவிதை. படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவை மலர் விக்கும் விதமாக ஒரு கவிதை .

பேருந்தில்
நீ எனக்காக
எடுத்துக் கொடுத்த
பயணச்சீட்டு
இன்னும்
பயணித்துக்
கொண்
டிருக்கிறது.

நூல் முழுவதும் காதலர்களுக்கு அவரவர் மலரும் நினைவுகளை மலர்விக்கும் கவிதைகள் ஏராளமாக உள்ளது.

இந்த உலகம்
எத்தனையோ
சர்வாதிகாரிகளைப்
பார்த்திருக்கிறது
ஆனால்
உன்னை மாதிரி ஒரு
சர்வ அழகுக்காரியை
இப்போதுதான்
பார்க்கிறது .

காதலியை 
சர்வாதிகாரி என்று சொல்ல வருகிறாரோ என்று எதிர்பார்த்து ஏமாந்தேன் .என்பதே உண்மை .சர்வ அழகுக்காரியை என்று எழுதி வியப்பில் ஆழ்த்தி விட்டார் நூல் ஆசிரியர்  கவிஞர் தபூ சங்கர் .

காதலன் கனவு காண்பது இயல்பு .அதனை உணர்த்தும் கவிதை .

தினமும்
நான் தூங்கிய
உடனேயே
என் கனவில்
வந்து  விடுகிறாயே
நான் எப்போது
தூங்குவேன் எண்டு
நீ எங்கிருந்து
கவனிக்கிறாய் .


காதலியிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு வேண்டுகோள் வைக்கிறார் பாருங்கள் .

நீ என்னை
காதலிக்கக்
கூ
வேண்டாம்
உன் தோழிகளில்
ஒருத்தியிடமாவது
அவன் என்னைக்
காதலிக்கிறா
ன் தெரியுமா
என்று
ஒரே ஒருமுறை சொல்
அது போதும் .

இப்படி நூல் முழுவதும் அட்டை முதல் அட்டை வரை காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதைகள் வடித்துள்ளார் .விமர்சனம் எழுத மேற்கோள் காட்ட எனக்குப் பிடித்த கவிதைகளை மடித்து அடையாள படுத்தினேன் .கடைசியில் எல்லாம் பக்கமும் மடித்து விட்டேன். பிறகு   மறு முறை படித்து மிகவும் சிரமப்பட்டு சிலவற்றை தவிர்த்து  எழுதி உள்ளேன் .

நூல் ஆசிரியர்  கவிஞர் தபூ சங்கர் நூலை படித்து முடித்தவுடன் நாமும் காதல் கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்து விடும் .சில நாட்களில் நானும்  காதல் கவிதை எழுதி  இணையத்தில்பதிப்பித்து விடுவேன் . கவிஞர் தபூ சங்கர் காதலர்களை மட்டும் மகிழ்விக்க வில்லை .கவிஞர்களையும் மகிழ்வித்து இளமையாக இருக்க சிந்திக்க உதவுகின்றார் கவிதைகள் மூலம் . பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .

நூல் ஆசிரியர்  கவிஞர் தபூ சங்கர் அவர்களிடம் சிறிய வேண்டுகோள் .காதல் கவிதைகள் மட்டுமே எழுதி வருகிறீர்கள் . உங்களுடைய கவித் திறமையை சமுதாய விழிப்புணர்வு கவிதைகள்  எழுதவும் பயன் படுத்துங்கள்

 www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response


கருத்துகள்