மானம் இருந்தால் மதியாதோர் தலை வாசல் மிதிக்காதே ! கவிஞர் இரா .இரவி .

மானம் இருந்தால் மதியாதோர் தலை வாசல் மிதிக்காதே !   
கவிஞர் இரா .இரவி
.


தமிழ் இலக்கியம் படித்து இருந்தால்
தன் மானம் தெரிந்து இருக்கும் !

கொலைகாரனே வ
ராதே ! என்று
கொள்கைக் கூட்டம் குரல் தருகின்றது !

மீறி நீ  வந்தால் உனக்கு
த்தான் அவமானம் மானம்   பற்றிய புரிதல் இல்லாதவனே !

இனத்தைக்  கொன்று அழித்து விட்டு
இளித்துக் கொண்டு வருகிறாய் ! நீ !

புத்தனின் பெயர் சொல்ல அருகதை இல்லை
பேராசை பிடித்த பித்தன் நீ !

மதம் பரப்ப வருகிறாயா ?
மதம் பரப்ப வருகிறாயா ?


அந்த மதத்தில்   நீ  இருப்பது
அந்த மதத்திற்கு இழுக்கு !

எறும்பை
க் கூட மிதிக்கக் கூடாது
என்பது அவர்கள் நோக்கம் !

இனத்தையே
கூண்டோடு அழித்த
ஈவு இரக்கமற்ற கொடூரன் நீ !

தண்டனை
ப் பெற வேண்டிய குற்றவாளி நீ
தாரளமாக இந்தியாவிற்கு வந்து போகலாமா ?

அய் .நா .மன்றமோ வேடிக்கைப் பார்க்கின்றது 
இந்தியாவோ ரத்தினக் கம்பளம் விரிகின்றது !

மனசாட்சி என்ற ஒன்று உனக்கு இருக்குமானால்
மறுபரிசீலனை  செய்து பயணத்தை ரத்து செய் !

உன்னால் நடந்த கலவரங்கள் போதும்
உன்னால் இனி ஒரு கலவரம் வேண்டாம் !
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

கருத்துகள்