மதுரை மண்ணின் மைந்தன் ஓவியர் ட்ராட்ஷ்கி மருது அவர்களின் உரை !தொகுப்பு கவிஞர் இரா .இரவி !

மதுரை மண்ணின் மைந்தன்   
ஓவியர் ட்ராட்ஷ்கி  மருது அவர்களின் உரை !

மதுரை புத்தகத் திருவிழாவில் !

தொகுப்பு  கவிஞர் இரா .இரவி ! 

நான் பிறந்
து வளர்ந்த ஊர் மதுரை .நான் ஓவியனாக வளர்க காரணம் மதுரை .கோரிப்பாளையம் பகுதியில் என் வீடு .இந்த புத்தகக் கண்காட்சி நடக்கும் இடமான தமுக்கம் மைதானம் ,காந்தி மியூசியம் நான் வியந்து  பார்த்த இடங்கள். 

தமுக்கம் மைதானத்தில் வருடா வருடம் சித்திரைப் பொருட்காட்சி நடக்கும் .நான் சிறுவனாக இருந்தபோது பொருட்காட்சி காண வந்தேன் . சந்திரிகா சோப் கடையில் ஓவியங்கள் இருந்தன அழகிய பெண்கள்,அருவி போன்ற ஓவியங்களை உற்று நோக்கினேன் .அதில் பரதன் என்று இருந்தது .ஓவியர் பரதன் ஒரு மரத்தை வரைந்து  ,இந்த மரத்தை எடுத்து வாருங்கள் என்பார் .என்று அவர் உதவியாளர்கள் சொன்னார்கள் .அவர்தான் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் பரதன் .அவரது திரைப்படங்களான வைசாலி ,தேவர் மகன் போன்ற படங்களில் அவரது கலை நுட்பத்தை உணர்ந்தேன் .அவரை சந்திக்க வேண்டும் விரும்பினேன் .அவரும் விரும்பி இருந்தார் .அனால் சந்திக்க முடிய வில்லை அவர் இறந்து விட்டார் . என்னுள் ஓவியன் ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய இடம் இது .


தமுக்கம் மைதானத்தில் அருகே உள்ள   என் குடும்பத்தினர் வணங்கிய கருப்பண சாமி சிலையை  சிறுவனாக இருந்த போது ரசித்து இருக்கிறேன்  .மதுரை மீனாட்சி கோயில் ,கிராமியக் கலைஞர்கள் செய்யும் சுடு மண் சிலைகளை செய்வதை உற்று நோக்கினேன் .குதிரை சுடு மண் சிலை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நுட்பமாக இருக்கும் .அவற்றை கவனிப்பேன். ஆராய்வேன் .சுடு மண்  குதிரைகள் நாயக்கர் காலத்து  குதிரைகள் போலவே இருக்கும் .மிக நுட்பமாக செய்வார்கள் .தமுக்கம் மைதானத்தில் தமுக்கம் மைதானத்தில்னால் அந்த நுட்பம் இப்போது இல்லை. அந்தக் கலை அழிந்து விட்டது .இப்படி நிறைய    கலைகளை இழந்து வருகிறோம் .


சமூகம்தான் ஒரு கலைஞனை தூண்டி விடுகின்றது .இந்த மதுரைதான் என்னை ஓவியனாக உருவாக்கியது .இன்று திரைப்படத் துறை வரை நான் பணி புரியக் காரணம் மதுரை .
என் தந்தை நான் சிறுவனாக இருந்த போது அவரது நண்பர் கடையான பாரதி புத்தகக் கடைக்கு வாரம் மூன்று முறை    அழைத்து செல்வார் .கடைக்காரர் சாக்லைட்  கொடுத்து உபசரிப்பார் .சில மணி நேரங்கள் புத்தகங்களில் உள்ள ஓவியங்களை ஆராய்வேன் .அந்தப் பழக்கம் தான் என்னை ஓவியனாக்கியது. புத்தகக் கடையில்    நான் விரும்பிய நூல்களை இரவு நான் துங்கும் போது அருகே வைத்து விடுவார். கலையில் நான் கண் விழித்ததும் அந்த நூல்களைப் பார்த்து மகிழ்வேன் .அதைப் பார்த்து அவரும் மகிழ்வார் . என் தாய் மாமன்கள் இருவரும் சித்திரங்களுக்கு புகழ் பெற்ற ஆங்கிலத்  திரைப்படங்களுக்கு அழைத்து செல்வார்கள் .அதுவும் ஒரு காரணம் . வயதில் சென்னை ஓவியக் கல்லூரியில் சென்று பயின்றேன் .பிறகுதான் சென்னை .

என் தந்தை காந்தியடிகள்  ஆசிரமத்தில் ஒரு வருடம் தங்கி இருந்தவர் .காந்தியடிகளை ஒரு முறை பார்த்தவர்களே நான் காந்தியடிகளை பார்த்து இருக்கிறேன் என்று பெருமையாக சொல்வார்கள் .என் தந்தை தினந்தோறும் ஒரு வருடம் காந்தியடிகளை சந்தித்தவர் .என்னை ஊக்கப் படுத்தியவர் என் தந்தைதான் .என் ஓவியங்களின் முதல் ரசிகர் அவர்தான் .பார்த்து பரவசம் அடைந்து  பாராட்டுவார் .என் தந்தை நிறைய  நூல்கள் படிப்பார் .படித்து விட்டு நூலகங்களுக்கு நன்கொடையாகத் தந்து விடுவார்.

 எங்கள் வீட்டில் எங்கு பார்த்தாலும் நூல்களே இருக்கும் .அந்த வாசிப்பு வழக்கம்தான் என்னை ஓவியனாக்கியது .
ஓவியக் கல்லூரியில் எனக்கு ஆசிரியராக இருந்தவர் சிற்பி தனபால் .இவரை என் தந்தை அவர் நண்பர் மூலமாக ஏற்கனேவே சந்தித்து இருக்கிறார் .அவரிடம் பயில்கிறேன் என்றதும் மனம் மகிழ்ந்தார் .சிற்பி தனபால் . அவர்களின் மனைவி மதுரையை சேர்ந்தவர் .தந்தை பெரியார் ,புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் ,ஜீவா போன்ற பெரியவர்கள் சிற்பி தனபால் அவர்களிடம் மாதிரியாக அமர்ந்தவர்கள் .சிற்பி தனபால் உயிரோடு இருந்தபோது தமிழகம் அவரை கொண்டாட வில்லை என்பது வருத்தம் .

மீனாட்சி கோயில் எதிரில் உள்ள புது மண்டபத்தில்  மிக நுட்பமான சிலைகள் உண்டு .அவற்றில் சில சேதம் அடைந்து  உள்ளது .காக்கத் தவறி விட்டோம் .நிறைய கலைகளை இழந்து வருகிறோம் .ஆனால் அயல் நாட்டினர் சில நூறு ஆண்டு பொருட்களைக் கூட பாதுகாத்து வருகின்றனர்.
கட்டப்பொம்மன் காலத்தில் வந்த இரு ஓவியர்களை நமது கலைக் கோயில்களை வரைந்து
ய்ரோப்பாவிற்கு அனுப்பினார்கள் .

மதுரையில் உள்ள கலைப்  பொக்கிசங்களை காக்க முன் வர வேண்டும். விழிப்புணர்வு  வேண்டும்.  கடவுள் நம்பிக்கையையும் , கலையைக் காப்பதையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் . தமிழர்களின் கலைகள் மிகவும் தொன்மை    வாய்ந்தது .மதுரையின் கலைகள் முதன்மையானது .நான் சிறுவனாக இருந்தபோது ரசித்து மகிழ்ந்த மதுரை மீனாட்சி கோயிலில் ஓவியங்கள் அழிக்கப் பட்ட தகவல் அறிந்து வருத்தத்தில் சில நாட்கள் தூங்காமல் தவித்தேன். இழந்தது  போதும் . இனி எதையும் இழக்க வேண்டாம் என்ற வேண்டுகோளை வைத்து விடை பெறுகின்றேன் .
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response


கருத்துகள்