இரா. இரவி

இரா. இரவி

இரா. இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் கவிமலர் என்ற இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். இந்த இணையத்தில் கவிதைகள், ஹைக்கூ (குறுங்கவிதைகள்), நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. மதுரை சுற்றுலாத் துறையில் பணி புரிந்து வருகிறார்.

[தொகு] வெளிவந்த நூல்கள்

1. கவிதைச் சாரல் - 1997

2. ஹைக்கூ கவிதைகள் - 1998
3. விழிகளில் ஹைக்கூ - 2003
4. உள்ளத்தில் ஹைக்கூ - 2004
5. என்னவள் - 2005
6. நெஞ்சத்தில் ஹைக்கூ - 2005
7. கவிதை அல்ல விதை - 2007
8. இதயத்தில் ஹைக்கூ - 2007
9.மனதில் ஹைக்கூ 2010
10. ஹைக்கூ ஆற்றுப்படை2010
11.சுட்டும் விழி 2011 .

சிறப்புக்கள் !


 முனைவர், பேராசிரியர், தமிழ்த்துறைத்தலைவர் ச.சந்திரா  அவர்கள் கவிஞர் இரா .இரவியின் நூல்களை விமர்சனம் செய்து இணையத்தில் பதிப்பித்துள்ளார் .கவிமலர் டாட் காம் www.kavimalar.com இணையத்தை ஆய்வு செய்து ஆய்வுரை வழங்கி உள்ளார் .

இவரது முதல் கவிதை மதுரை மணி நாளிதழில் வந்ததை நன்றியோடு நினைவு கூறுகிறார் .26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார்.

இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.


சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.

இவரது 100க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை விஞ்ஞானி நெல்லை சு. முத்து \\\"புத்தாயிரம் \\\"தமிழ் ஹைக்கூ என்ற நூலில் மேற்கோள் காட்டி உள்ளார்.

இவரது இணையத்தளக் கவிதைகளை சென்னை இலயோலா கல்லூரி மாணவர் இரவிக்குமார் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ்த்துறை மாணவர் அன்பு ஷிவா இவரது கவிதைகளை ஆய்வு செய்து
உள்ளார்.

கவிஞர் இரா.இரவியின் கவிதை நூல்களை மாற்றுத்திறனாளி திரு.பிரகாசம் M Phil. ஆய்வு செய்து
ஆய்வேடு வழங்கி உள்ளார்.
இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலில் 9ஹைக்கூ கவிதைகள்,மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலில் 10 ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளது. விருதுநகர் வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி பாட நூலில்  2 ஹைக்கூ  இடம் பெற்றுள்ளது.

பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் உதவி சுற்றுலா அலுவலராக மதுரையில்  பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார்.மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து சிறந்த அரசுப்பணியாளர் விருது பெற்றுள்ளார். 

இதுவரை
எழுதியுள்ள   நூல்கள் 11.


புதுவை எழுத்தாளர் சங்கம் ஹைக்கூ கவிதை நூல் சிறந்த நூலாக தேர்வு செய்து பரிசும் பாராட்டுச் சான்றிதழும் புதுவை ஆளுனர் முன்னிலையில் ஆளு
னர் மாளிகையில் புதுவை துணைவேந்தர் வழங்கினார்.

 லண்டன் தமிழ் இலக்கிய மன்றம் உலக அள்வில் நடத்திய கவிதைப் போட்டியில் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றுள்ளார். இவரது ஒன்பது ஹைக்கூ கவிதைகள் திருச்சிப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாடநூலில் இடம்பெற்றுள்ளது.


மதுரை நகைச்சுவை மன்றத்தின் ஆண்டு விழாவில் முனைவர் கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களிடமிருந்து  வளரும்  கலைஞர்  விருது பெற்றுள்ளார் .இவருடை கவிதைகள் மதுரை வானொலியில் ஒலிபரப்பாகி இருக்கின்றது. இணையத்தில் கவிதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.பல்வேறு கவியரங்கங்களிலும் கலந்துகொண்டு கவிதை பாடி வருகின்றார்.

இவரின் கவிதைகள் பல்வேறு தினசரி பத்திரிகைகளில் பிரசுரமாகி இருக்கின்றது. பிரபல இதழ்களிலும்.பல்வேறு சிற்றிதழ்களிலும் பிரசுரமாகி வருகிறது.


கணித்தமிழ் சங்கம் மதுரையில் நடாத்திய கணிப்பொறித் திருவிழாவில் " தமிழும் அறிவியலும் " என்ற தலைப்பிலான
கவிதைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளார்.டில்லி  " மக்கள் காப்புரிமை " மாத இதழ் நடாத்திய கட்டுரை போட்டியிலும் பரிசு பெற்றுள்ளார்.மனிதநேய் அறக்கட்டளையின் சார்பில் மனித  "நேயப்படைப்பாளர் " விருது பெற்றுள்ளார் கவியருவி, கவிச்சிங்கம்,கவிச்சூரியன்,ஹைக்கூ திலகம் எனப் பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார். இலண்டன் "சிவாயோகம்" மலரின் ஆசிரியர் திரு.பொன்.பாலசுந்தரம் அவர்கள் தனது மலரில் திரு.இரா.இரவி அவர்களைப் பாராட்டியுள்ளார்."நகர் முரசு\" வார இதழின் சார்பில் சிறந்த ஹைக்கூ கவிஞர் விருது பெற்றுள்ளார்

.www.tamilauthors.com ,

http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://thannambikkai.org/author/ravi/
http://tamilbookmarket.com/wp/category/6
http://www.lankasripoems.com/?conp=list&poetId=194606
http://www.vaarppu.com/poet/474/
http://tamilsguide.com/day.php?day=2010-04-22

போன்ற இணையத் தளங்களிலும் இவரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளது.
லண்டன் மூத்த எழுத்தாளர் பொன் பாலசுந்தரம் ,ஜெர்மனி "சமூக ஜோதி " திரு.புவனேந்திரன், கலைவிளக்கு ஆசிரியர்,எழுத்தாளர் கவிஞர் திருமதி.விக்னா பாக்கியநாதன்,டென்மார்க் கவிஞர் பொன்ணண்ணா , கனடா எழுத்தாளர் அகில் ஆகியோரின் பாராட்டைப் பெற்றுள்ளார். பிரான்ஸ் தமிழ் ஒலி வானொலி பொறுப்பாளர் கவிஞர் வண்ணை தெய்வம் அவர்கள் "விழிகளில் ஹைக்கூ" கவிதைத் தொகுப்பினை ஏடும் எழுத்தாணியும் என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பினார். தாளம் பண்பலை வானொலியில் இவரது கவிதைகள் ஒலிபரப்பாகி வருகின்றன.
முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு அப்துல்கலாம் குடியரசுத்தலைவராக 29.6.2005 அன்று திருச்சி வந்திருந்தபோது கவிஞர் இரா.இரவியை வரவழைத்து சந்திக்க வாய்ப்பளித்துப் பாராட்டி உள்ளார்.

தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு பட்டிமன்றங்களில் பேசி வருகிறார் .
www.eraeravi.com    

கவிதை ,கட்டுரை ,நூல் விமர்சனம் உள்ளது .பல லட்சம் வாசகர்கள் படித்து வருகின்றனர் .
www.eraeravi.blogspot.com  வலைப்பூவில் படைப்புக்களை நாள்தோறும் பதிப்பித்து வருகிறார். துரை சுற்றுலாத் துறையில் பணி புரிந்து வருகிறார்.

தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்களின் தொகுப்பு நூலாக " கவிஞர் இரா .இரவி ஹைக்கூ ஆயிரம்"  நூல் விரைவில் வெளிவர உள்ளது .

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!





































கருத்துகள்