மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !
   

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் . திரு .ஜோதி மகாலிங்கம் , ,திரு .ஆ .முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மதுரை வானொலி நிலைய அறிவிப்பாளர்
திரு ச.  ஞானசம்பந்தன்" பெரிதினும் பெரிது கேள் " என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் . பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியிலிருந்து "பெரிதினும் பெரிது கேள் "தலைப்பு தந்தமைக்கு கவிஞர் இரா .இரவிக்கு நன்றி கூறினார். அய்புலன்களையும் நன்மைக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும் . கெட்டதை  கேட்க, பார்க்க ,பேச ,உண்ண பயன்படுத்தக் கூடாது . கேள் என்பதற்கு கேட்டல் ,யாசித்தல் ,கேள்வி ,தண்டித்தல் என்று பல பொருள் உண்டு .குழந்தைக்கு முதலில் உருவாகும் உறுப்பு காது .புராணத்திலும், அறிவியலிலும் இக்கருத்து உள்ளது .தாய் கருவுற்று இருக்கும் போதே குழந்தை கேட்கத் தொடங்கும் .அதனால் தாயும் நல்ல விசயங்களை கேட்க வேண்டும் .குறிப்பாக   வக்கிரம் வளர்க்கும்  இன்றைய தொலைக்காட்சித் தொடர்களை பார்ப்பது நன்மை அல்ல தீமையே . இவ்வாறு பல பயனுள்ள கருத்துக்கள் கூறி பயிற்சி அளித்தார் .

ஆசிரியர் பீட்டர் , திரு G. ராமமூர்த்தி ,மாணவி பாண்டிச் செல்வி  தன்னம்பிக்கை கருத்துக் கூறினார்கள் .தன்  சகோதரருக்கு சிறுநீரகம் தானம் வழங்கிய திரு ஜோ.சம்பத் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது .திரு.தினேஷ் நன்றி கூறினார் .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர் திரு .கார்த்திகேயன், திரு .ஜான் உள்ளிட்ட   பலர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தார்.

கருத்துகள்