நான் எழுதிய ஹைகா ( கவிஞர் இரா .இரவி )

மின்மினி இதழின் ஹைகா போட்டி  ( ஓவியத் துளிப்பா  ) கலந்து கொள்ளுங்கள் .

நான் எழுதிய ஹைகா   ( கவிஞர் இரா .இரவி )

ஏழ்மையிலும் மகிழ்ச்சி
பயணப்பட்டது மனசு
காகிதக்கப்பலுடன் !

பொருட்படுத்தவில்லை
வயிற்றுப்பசி
மனப்பசியாறும் மழலை !

மழைநீர் சேகரிப்பு
மண் குடத்தில்
குடிசைக்குள் !

அடுப்பெரியவில்லை
கவலையில்லை
குதூகலத்தில் குழந்தை !

இல்லாததற்கு வருந்தாமல்
இருப்பதில் இன்புறும்
சிறுமி !
வெள்ளோட்டம் பார்க்கிறாள்
வருங்கால
கப்பல் படை அதிகாரி !

உணவுக்காக வருந்தாமல்
உணர்வோடு மகிழ்கின்றாள்
உன்னதப்பெண் !

சோகத்தைத் தள்ளி வைத்து
சுகமாக ரசிக்கிறாள்
கப்பலை !

வீடெல்லாம் தண்ணீர்
விடவில்லை கண்ணீர்
விளையாடும் பனிமலர் !

வறுமைக்கு வறுமை தந்து
மென்மையாக விளையாடும்
மேன்மை !


உங்களின் இரண்டு ஹைகா ( ஓவியத் துளிப்பா  ) மட்டும் அனுப்ப வேண்டிய முகவரி .

கவிஞர் கன்னிக்கோவில் ராஜா
ஆசிரியர் மின்மினி
 30/8.கன்னிக்கோவில் முதல் தெரு
அபிராமபுரம்
சென்னை . 18

கருத்துகள்