நீர்ப் பறவை ! இயக்கம் சீனு ராமசாமி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நீர்ப் பறவை !

இயக்கம் சீனு ராமசாமி .

திரைப்பட விமர்சனம்  கவிஞர் இரா .இரவி .

தென்மேற்குப் பருவக் காற்று படத்தை இயக்கி ,தேசிய விருது பெற்ற மதுரை
க்காரரான சீனு ராமசாமி இயக்கி உள்ள திரைப்படம் நீர்ப் பறவை. இந்தப் படத்திற்கும் தேசிய விருது உறுதி என்று அறுதி இட்டுக் கூறலாம் .மிகச் சிறப்பாக இயக்கி உள்ளார் .பாராட்டுக்கள் .அடுத்த தேசிய விருது பெறப் போவதற்கும் முன் கூட்டிய வாழ்த்துக்கள் .குடியால் குடி கெட்டு, மதி  கெட்டு ,வாழ்க்கை கெட்டு ,சீரழிவதை படம் உணர்த்துகின்றது. மீனவர்கள் சந்திக்கும் இன்னலை ,வாழ்க்கை முறையை நன்கு பதிவு செய்துள்ளார் .

அம்மாவாக நடித்துள்ள சரண்யாவிற்கும் , அப்பா லூர்துசாமியாக  நடித்துள்ள நடிகருக்கும் தேசிய விருது கிடைக்கும் .கதாநாயகன் விஷ்ணுவர்த்தன் கடலில் மிதக்கும் மரத்தில் நிற்பதற்கு பல முறை முயன்று தோற்று கடைசியில் நிற்கும் காட்சி நல்ல உழைப்பு .,கதாநாயகி சுனேனா ஒப்பனை எதுவுமின்றி மிகஇயல்பாக  நன்றாக நடித்து உள்ளனர் .படம் பார்ப்பது போல அல்லாமல் நிஜமான நிகழ்வைப் பார்க்கும் உணர்வை தந்தது, இயக்குனரின் உழைப்பிற்கு  கிடைத்த வெற்றி .

படகு செய்து தரும் இஸ்லாமியராக சமுத்திரக்கனி நன்றாக நடித்து உள்ளார் . "பகைமை பாராட்டும் பாகிஸ்தான் கூட மீனவர்களை சுடுவது இல்லை .போரிட்ட சீனா கூட மீனவர்களை சுடுவது இல்லை.னால் இலங்கைக்காரன் மீனவர்களை சுடுகிறான் கேட்க நாதி இல்லை .தமிழகத்தில் மீனவர்களுக்கு என்று ஒரு தொகுதி கூட இல்லை .பதிரிக்கைக்காரகளும் இந்திய மீனவர்கள் சுடப் பட்டார்கள் என்று எழுதுவது இல்லை .தமிழக மீனவர்கள் சுடப் பட்டார்கள் என்றுதான் எழுதுகின்றனர் ." அவர் பேசும் வசனங்கள் திரை அரங்கில் கை தட்டல் பெறுகின்றது .வசனம் மிக நன்று. தம்பி ராமையாவும் நன்றாக நடித்து உள்ளார்.கதாநாயகி சுனேனாவின் வயதான பாத்திரத்தில் நந்திதாதாஸ் நடித்துள்ளார் .கள்ளச்சாராயம் விற்கும் பாத்திரத்தில் வடிவுக்கரசி ,பாதிரியாராக ,அருட் சகோதரியாக ,படத்தில் வரும் அத்தனை  பாத்திரங்களும் நடிக்காமல் வாழ்ந்து காட்டி உள்ளனர் .

படத்தின் கதை என்று சொன்னால் மீனவன் கடலுக்குள் செல்லும் போது நடுக் கடலில் இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த அப்பா, அம்மா இலங்கை கடற் படையால் சுடப்பட்டு இறந்து கிடக்கின்றனர் .அருகில் ஆண் குழந்தை அழுது  கொண்டு உள்ளது .அந்தக் குழந்தையை எடுத்து வந்து வளர்க்கிறார் .மனைவி சரண்யா தாயுள்ளத்தோடு வளர்க்கிறார் .அகதி  குழந்தை என்பதே இறுதியில்தான் தெரிகிறது .குழந்தை வளர்ந்து  பெரியவன் ஆனதும் நண்பனுடன் சேர்ந்து குடித்து கெடுகிறான் .ஊரில்  பார்க்கும் அனைவரிடமும் பொய்   சொல்லி  பணம் பெற்று குடிக்கிறான் .ஒரு நாள் குடித்து விட்டு படகில் படுத்து இருக்கிறான் .தந்தையின் முதலாளி கண்டித்தும் அவர் காதை போதையில்   கடித்து விடுகிறான் .தந்தையின் வேலையும் போய் விடுகின்றது .தேவாலயத்தில் தொண்டு   செய்து வரும் னாதை அருட் சகோதரியின் வளர்ப்பு மகள் சுனேனா .தேவாலய காணிக்கை வீடுகளில் வாங்கி வரும் சுனேனாவிடமும் பொய்   சொல்லி  பணம் பெற்று குடிக்கிறான் . பாதிரியாரிடம் பாவம் மன்னிப்பு கேட்கிறோம் என்று சொல்லி அவரிடமும் பொய் சொல்லி பணம் கேட்கிறான் .குடியால் இவன் தொல்லை தாங்க முடியாமல் போதை மறு வாழ்வு மருத்துவமனையில் சேர்க்கின்றனர் .அங்கு உள்ள பணியாளர்களை அடித்து விட்டு தப்பி வந்து குடிக்கிறான் .சுனேனா அவன் தலையில் கை வைத்து ஜெபம்   செய்கிறாள் .அவளை விரும்ப தொடங்குகிறான் .பின் திரும்பவும் போதை மறு வாழ்வு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று புது மனிதனாக வருகிறான் .

சுனேனாவை மனம் முடித்து வைக்க வேண்டுகிறான் .வளர்ப்புத் தாய் வேலை இல்லாத உனக்கு பெண் தர மாட்டேன் என்கிறாள் .கடலுக்கு மீன் பிடிக்க வேலை கேட்டால் ,நீ மீனவ சமுதாயம் இல்லை எனவே உனக்கு கடலில் மீன் பிடிக்க வேலை தர மாட்டோம் என்கின்றனர் .பிறகு கரையில் மீன் சுமந்து கூலி வேலை பார்த்து கூலியாக மீன்களைப் பெற்று விற்று பணம் சேர்க்கிறான் .மீன் இனப்  பெருக்கத்திற்காக  மீன் பிடிக்க வருடத்தில் 45 நாட்கள் தடை உள்ள காலத்தில் ,உப்பளத்தில் வேலை பார்க்கிறான் .உப்பள முதலாளியின் தங்கை விரும்புவதாக சொன்னதும்,  தனக்கு ஊரில் காதலி உள்ளாள் என்று உண்மை சொன்னதும் ,காதலிக்காக உண்மையாக இருப்பதைப் பாராட்டி அவள் சேலை பரிசு  தந்து அனுபுக்கின்றாள். சம்பாதித்த பணத்தில் புதிய படகு வாங்கி அதில் தந்தை லூர்துசாமி பெயர் எழுதி கடலுக்குள் சென்று மீன் பிடிக்கிறான் .சுனேனாவை திருமணம்  முடித்து வைக்கின்றனர் .மிக மகிழ்ச்சியாக வாழ்க்கை செல்கின்றது .குழந்தை பிறக்கின்றது .

கடலுக்குள் சென்று மீன் பிடிக்க சென்ற போது  வரவில்லை தேடியும் கிடைக்க வில்லை .கடலை வந்து வந்து பார்
க்கிறாள் மனைவி .அப்பா லூர்துசாமி இரவில் கடலுக்குள் சென்று மகனை தேடு கின்றார் .
 
இலங்கை கடற்படையால் சுடப்பட்டு மகன் பிணமாக இருக்கிறான் .உழைத்து வாங்கிய படகும் சுடப்பட்டு ஓட்டை விழுந்து கடலில் மூழ்கின்றது . மகனின் பிணத்தை குடும்த்தைத் தவிர பிறருக்கு  தெரியாமல் வீட்டில் புதைத்து விடுகின்றனர் .பின் காவல் துறை நந்திதாசை கைது செய்கின்றனர் .நீதி மன்றத்தில் நந்திதாஷ் பேசும் வசனங்கள் .தமிழக மீனவர்கள் படுகொலைக்கு எதுவும் செய்யாமல் மவ்னம் சாதிக்கும் மைய அரசை மண்டையில்  கொட்டுவதுப் போல உள்ளது .

சமரசத்திற்கு இடமின்றி துணிவுடன் கருத்து சொல்லி படம் இயக்கிய சீனு ராமசாமிக்கு பாராட்டுக்கள் .கதையே இல்லாமல் நடிகையின் சதையைக் காட்டி மசாலா படம் எடுக்கும் இயக்குனர்கள் அனைவரும் பார்த்து திருந்த வேண்டிய மிக நல்ல படம் .இந்தப் படம் பார்த்தல் குடிக்கும் குடி மகனம்கள் சிலர் திருந்தவாய்ப்பு உண்டு .சமுதாயத்தை சீர் படுத்த படமியக்கிய துரை மண்ணின் மைந்தன் சீனு ராமசாமிக்கு வாழ்த்துக்கள் .



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க
 கண் தானம் செய்வோம் !!












































கருத்துகள்