இடுகைகள்

May, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

" நச் "வரி கவிதைகள் ! நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

படம்
" நச் "வரி கவிதைகள் !
நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
ஸ்ரீ வில்லிபுத்தூர் .விலை ரூபாய் 30.
நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன்அவர்கள் சகலகலா வல்லவர் .கதை ,கவிதை ,கட்டுரை .துணுக்கு எழுதும் படைப்பாளி மட்டுமல்ல ," நச் "வரி கவிதைகளுக்குத்  தகுந்த ஓவியம் வரைந்த ஓவியர் .இந்த நூலை நூல் இலைப் பின்னல் மூலம் நூலாக்கியவரும் இவரே .நெசவாளி , உழைப்பாளி .இவரது படைப்பு வராத இதழ்களே  இல்லை என்று சொல்லும்  அளவிற்கு சகல இதழ்களிலும் எழுதி வரும் படைப்பாளி .தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஸ்ரீ வில்லிபுத்தூர்  கிளைச் செயலராக இருந்து இலக்கியப் பணி  செய்து வருபவர் .வயதால் முதியவர்ராக இருந்தாலும் , ஓயாத உழைப்பால் என்றும் இளைஞர் .
.படைப்பாளியே ஓவியராக இருப்பதால் முதலில் ஓவியம் வரைந்தாரா ? முதலில்  கவிதை எழுதினாரா ? என வியக்கும் அளவிற்கு இரண்டும் மிகப்பொருத்தமாக உள்ளன .அவரே வரைந்து இருப்பதால் நூலிற்கு கூடுதல் பலமாக உள்ளது .

" நச் "வரி கவிதைகள் ! என்ற பெயரில் நச் , நச் என்ற கருத்துக்களை விதைக்கும் விதமாக கவிதைகள் எழுதி உள்ளார் .சமுதாயத்தின் நச்சுக் …

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ   ( சென்றியு  )  கவிஞர் இரா .இரவி !

மிருகத்தையும்  மனிதனாக்கியது  மழலையின் சிரிப்பு !
களத்துமேட்டில் குவித்த நெல்  குறையவில்லை அப்படியே  கிராமங்களில் !
தேவைப்பட்டது பணம்  நடத்தினார்  காதணி விழா !
ஒய்வுக்குமுன்  மகள் திருமணம்  அரசு ஊழியர் !
விமானம் ஓட்டினாலும்  வீட்டில் சமையல்  பெண்கள் !
சோழியன் குடுமி  சும்மா ஆடியது  காற்று !
வைகுண்டத்திற்கு வழி  சொன்னவர்  மறந்தார்  தன் வீட்டிற்கு வழி !
இன்றும் தொடர்கின்றது  மன்னனின் சந்தேகம்  கூந்தலின் மணம் இயற்கையா ?
மரம் இழந்த இலை  சருகானது  பெற்றோர் இழந்த குழந்தை ?
ஒன்றும் ஒன்றும் இரண்டு  குடும்பம் ஒன்றாய் இருப்பது நன்று  பிரிவினை பெரிய வினை !
வயதைக் குறைக்கும்  வாழ்நாளை நீடிக்கும்  இலக்கிய ஈடுபாடு !
அளவிற்கு மிஞ்சினால்  அமுதமும் திகட்டும்  திகட்டாத தமிழ் !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

தவம் ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

படம்
தவம் !

நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !

viji.masi@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மக்கள் வெளியிடு ,49 உனிசு அலி சாகிப் தெரு ,எல்லீசு ந்சாலை ,சென்னை .2.
makkalveliyeedu@yahoo.com

 திரு மே .து .ராசுகுமார் அவர்களின் பதிப்புரை ,தஞ்சை திரு .மா .ராசப்பா
அவர்களின் அணிந்துரை ,திரு ஆ .முருகரசன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு
தோரண வாயில்களாக  உள்ளன .16 முத்தான , சத்தான கட்டுரைகளின் தொகுப்பு நூல்
.நூல் ஆசிரியர் விஜிமா அவர்களின் என்னுரை மகாகவி பாரதியாரின்
மனதி லுறுதி வேண்டும் !
வாக்கினிலே யினிமை வேண்டும் !
என்ற வைர வரிகளுடன்  தொடங்கி உள்ளார்கள் .

நூல்  ஆசிரியர் விஜிமா அவர்களின் தவத்திற்கு உறுதுணையாக இருந்த மகன்கள்
இளங்கோ ,பாரதி ,திருஞானசம்பந்தன் ,மருமகள் ராதிகா ஆகியோருக்கும் ,என்
தவத்தில் தலையிடாத என் இனிய கணவருக்கும் நன்றி என்று எழுதி உள்ளார்கள்
.நூல் வெளி வந்த ஆண்டு 2006.அப்போது ஒரு மருமகள் மட்டும் இருந்ததால் அவர்
பெயர் மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள் .தற்போது மூன்று  மருமகள்கள் வந்து
விட்டதாக சொன்னார்கள் .தனது மகன்களுக்கு மிக நல்ல தமிழ்ப் பெயர்கள்
சூட்டி உள்ளது நூல் ஆசிரியர…

படித்ததில் பிடித்தது !

படம்
படித்ததில் பிடித்தது !  இனிய நண்பர் மருத்துவர் கவிஞர் K.சரவணன் அவர்கள் கபிலன் வைரமுத்துவிற்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை  !
அன்பிற்கினிய திரு கபிலன் அவர்களுக்கு வணக்கம்!

பொன்னும், மணியும்,
 வைரமும், முத்தும் என
 நான்மணி நல்கிய நல் மாணிக்கமே!

பெற்றோரின் பெறுந்தவத்தால்
 அன்னையின் மணிவயிற்றில்
 முன்னூறு நாள் கலைபயின்றாய்!

இவ்வுலகம் ஆவல் கொள்ள
இப்புண்ணிய பூமியில் தவழ்ந்தாய்!

குழலின் நாதம்போல்
மகிழ்வாய் மழலை கொண்டாய்!

பாடும் பறவைகள்போல்
பாங்குடனே துள்ளித்திரிந்தாய்!

கண்டங்கள் கடந்து சென்று
கல்வியின் கரைகண்டாய்!

கலையும், தகவல் தொழில்நுட்பமும்
இரு கண்களெனக்கொண்டாய்!

கலையும், இலக்கியமும்
கலந்து விருந்து தந்தாய்!

உயிரின் உன்னதத்தை
 தன் உள்ளத்தில் உணர்ந்துகொண்ட
மருத்துவர் மங்கை நல்லாள்
மனதிற்கு இனியவனானாய்!

அன்னையும் தந்தையும்
காட்டிய நல் அன்பு வழியில்
மனதிற்கு இனியாளோடு
இல்லரத்தில் நல்லரம் கொண்டாய்!

இல்லரத்தின் நல்லரத்தால்
இனிய வாழ்வின் பெறும்பயனாய்
மெட்டூரி என்ன்னுமொரு
மொட்டொன்றை மலரச்செய்தாய்!

அன்னை தந்தையற்குப் பிள்ளையாய்

அன்பு மனைவிக்குக் காதலனாய்

நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !

படம்
நம்மை மீட்டும் வீணை !
நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி !
நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் ,சென்னை .
நம்மை மீட்டும் வீணை ! நூலின் தலைப்பே நம்மை மீட்டி விடுகிறது .சிந்திக்க வைக்கிறது .வீணையை நாம்தானே மீட்ட வேண்டும் .வீணை நம்மை எப்படி?  மீட்டும் .சிந்தித்தபோது .இந்த நூல் படித்தால் படித்த வாசகரும் ஹைக்கூ கவிதை எழுத வைத்து விடும் என்பதை உணர்த்துகின்றதோ!  என்று நினைத்தேன் .இதற்கான விடையை ஒரு ஹைக்கூ வாகவே வடித்துள்ளார் .
கையில் ஏந்தினால்  நம்மை மீட்டும் வீணை புத்தகம் !
புத்தகம் பற்றிய இவ்வளவு அருமையான விளக்கம் இதுவரை யாரும் சொல்லவில்லை .
.நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி அவர்கள் மரபுக்கவிதை , புதுக்கவிதை , ஹைக்கூ கவிதை முப்பா வடிப்பதிலும்  வல்லவர் .ஏற்கெனவே நூல்கள் எழுதி பல பரிசுகளும் , பாராட்டுகளும் பெற்றவர் .ஓய்வு பெறும்  வயது வந்தபோதும் , ஓய்வின்றி தனியார் விடுதியில் மேலாளராக உழைத்து  கொண்டே இலக்கியப் பணியும் செய்து வரும் நல்லவர் .இவர் புறத் தோற்றம் கருப்பாக இருந்தாலும் ,அகம் மிக, மிக வெள்ளையானவர் .இனிய மனிதர் .தள்ளாத வயதிலும் தளராத தேனீ .சமுதாயத்…

எழுத்து ஓர் கலை ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

படம்
எழுத்து ஓர் கலை !

நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !   
viji.masi@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

திருவரசு புத்தக நிலையம் 13.தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை .,17 விலை ரூபாய் 30
எழுத்தாளர் ஆக வேண்டும் .கவிஞர் ஆக வேண்டும் .படைப்பாளி ஆக வேண்டும் .என்ற எண்ணம்  உள்ள இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நல்ல நூல் .சராசரி வாசகர் கூட இந்த நூல் படித்தால் படைப்பாளி ஆகி விடுவார் .அந்த அளவிற்கு படைப்பின் ரகசியம் சொல்லித்தரும் நூல் .நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலா மணி அவர்கள் கவிதை ,கதை ,கட்டுரை ,நூல் விமர்சனம் எழுதிடும் சகலகலா ஆற்றல் மிக்கவர் என்பதால் ,படைப்பு உலகில் தான் சந்திந்த அனுபவங்களை வாசகர்களுக்கு பயன்படும் விதத்தில் பகிந்து உள்ளார்கள் . . எழுத்தாற்றல் கலை கைவரப் பெற்ற காரணத்தால் ,வளரும் படைப்பாளிகளுக்கு படைப்பின் சூத்திரத்தை சொல்லித்தரும் விதமாக கட்டுரைகள் வடித்துள்ளார்கள் . " எழுது எழுது என்று என்னை எபோதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இப்புத்தகம் சமர்ப்பணம் " என்று அவர்களை எழுதிட ஊக்கப்படுத்தியவர்களை ஊக்க…

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ   ( சென்றியு )   கவிஞர் இரா .இரவி !
இனிய வரவேற்பு  இரடிப்பு மகிழ்ச்சி  கோடை மழை !
சக்தி உள்ளவ்ரை  நகர்ந்துகொண்டே  நிமிட முள் !
இன்றும் வாழ்கின்றனர்  மலை முழுங்கி  மகாதேவன்கள் !
நாய் விற்ற காசு  குரைத்தது  மனதில் !
அன்று " நானே கள்வன் "
மாண்டான் மன்னன்  இன்று ?
ஆராய்ச்சி மணி  அடித்த பசு  அரண்மனை பிரியாணியில் !
முரசுக் கட்டிலில்  தூங்கிய புலவன்  முதுகை முறித்தனர் !
மக்களின் மறதி  அரசியல்வாதிகளுக்கு வசதி  புதுப்புது ஊழல் !
நாட்டு நடப்பு  வறுமையிலும் செம்மை ஏழைகள்  செழுமையிலும் சீரின்றி பணக்காரர்கள் !
காந்தியோடு முடிந்தது  அரசியிலில் நேர்மை  நேர்மையின்மை முதல் தகுதி !

சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

படம்
சுட்டும் விழி !
நூல் ஆசிரியர்  கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் கவிஞர்  விஜயலட்சுமி மாசிலாமணி ! மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் சாலை ,சென்னை .18 விலை ரூபாய் 40. செல் 9841436213.

மதிப்பிற்குரிய  நண்பர் , கவிஞர் இரா.இரவி அவர்கள் ,"ஹைகூ " உலகில்  தனக்கென ஒரு இடம் பெற்றிருக்கிறார். இயற்கையை  ரசிப்பதும் , காதலை வருணிப்பதும் தான் ஒரு கவிஞனின் வாடிக்கை என்பதைக்  கடந்து , கவிஞனும் , சமுதாய விழிப்புணர்வை  ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில் ,"சுட்டும் விழியைச் " சுழட்டிவிட்டிருக்கிறார்.
இவரது  சமுதாயப் பார்வை  நம்மைப்  பலவாறு சிந்திக்கவைக்கிறது.
எப்படி?
கொஞ்சம் பார்க்கலாம் வாங்க...

சமுதாய  விழிப்புணர்வை  ஏற்படுத்தத்  தன்னால் முடியும் என்று முழங்கி , அதை அவரது "சுட்டும் விழியில்" நிரூபித்திருக்கிறார்."நல்ல  கூட்டம் பித்தலாட்டப்  பயிற்சி சோதிடம்." மனிதனின் முன்னேற்றமும் , அவன் வாழ்வும் அவன் உழைப்பில்தான் இருக்கிறதே தவிர , சோதிடம் பார்ப்பதிலா? பித்தலாட்டத்தை  நம்புகிறாயே மனிதா? சிந்தியப்பா  சிந்தி! என்று சொல்லாமல் சொல்லுகிறார் ஆசிரியர்.
"பலனில்லை  பெயர்…

கவிதை பாட ஆசை ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

படம்
கவிதை பாட ஆசை !
நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !    viji.masi@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விஜயா பப்ளிகேசன் .தென்றல் .100.அன்னை தெரசா நகர் ,மடிப்பாக்கம் ,சென்னை .91. விலை ரூபாய் 12.
நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் "என்னைக் கவிதை எழுதத் தூண்டிய மடிப்பாக்கம் பாரதி இயக்கத்திற்கு " என்று எழுதி நூலை காணிக்கையாக்கி உள்ளார்கள் .சொற்கள் நடந்தால் வசனம் .சொற்கள் நடனமாடினால் கவிதை .இந்த நூலில் சொற்கள் களி  நடனம் புரிந்துள்ளன .உள்ளத்தில் உள்ளது கவிதை .உண்மையை உரைப்பது கவிதை .இயற்கையாகப் பொங்கி வருவது கவிதை .படித்ததும் மனதில் பதிவது கவிதை .இப்படி கவிதைக்கு பல்வேறு விளக்கங்கள்  எழுதிக் கொண்டே போகலாம் .இந்த நூலில் உள்ள கவிதைகள் கவிதைக்கான எல்லா விளக்கங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது .நல்ல கவிதை நூலை இவ்வாளவு ஆண்டுகளாக வாசிக்க விலையே என்று வருத்தப்பட்டேன் .இந்நூல் பதிப்பித்த ஆண்டு 1999.இன்றும் பொருந்துவதாக கவிதைகள் உள்ளது .அதுதான் நூல் ஆசிரியர் வெற்றி .
மரபுக் கவிஞர் ஆலந்தூர் கோ .மோகனரங்கன் ,புலவர் திலகம் சி .வித்யாசாகரம் இருவரின் அணிந்துரையும்…