இடுகைகள்

June, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனதில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி

படம்
மனதில் ஹைக்கூ  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி  நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி  மின்னல் கலைக் கூ டம் ,117 எல்டாம்ஸ் சாலை .சென்னை .18 விலை ரூபாய் 40. செல் 9841436213
மனதில் ஹைக்கூ ........மிகவும் அருமையான  நூல் ! பலவிதச் சிந்தனைகளை மனதில் ஏற்படுத்துகிறது ......சிந்தனை வயப்பட்டாலே செயல் வடிவம் பெரும்.மனிதர்களுக்கு  , மனிதர்களைப் பற்றிச் சிந்திக்கச் சொல்லியிருக்கிறார் .தங்களைப்பற்றித் தாங்களே சிந்திக்கத்தெரியாத  மனிதர்களுக்கு , வேறு யாராவது சொன்னால்.....சொல்லும் முறையில் சொன்னால் அது அவர்களைச் சென்று அடையும் என்பதாக ஒரு 'ஆசானைப்' போல நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி சொல்லியிருப்பது நல்ல படிப்பினை..
..தொலைக்காட்சிப் பெட்டியே கதி..எனக் கிடக்கும் மக்களைக்  குறிப்பாகப் பெண்களை வேறு  சிந்தனைக்குச் செல்லுங்கள் எனக் கூறுவது......அதுவும் தலையில் கொட்டுவது போல் கூறுவது......நல்ல அறிவுறுத்தல்!
தமிழ்ப்பண்பாடு  சிதைப்பு  தமிழர் திருநாளில்  தொ(ல்)லைக்காட்சிகள்!
நல்ல ஹைக்கூ ....
தமிழர் திருநாட்களில் குழந்தைகளுக்கு நமது நாட்டுப் பண்பாட்டைப்பற்றிக் கூறுவதைவிடுத்து அனைவரும்  தொலைக்காட்ச…

Waterfalls of Tamilnadu

புரட்சிக்கவிஞர் பாடல்கள்

Speaker's Address During the Monthly Meeting of Madurai Media Club

Madurai Heritage Thirumalai Nayak Palace

Old Madurai-1945.mp4

Niththiraip Payanangal veliyitu vizha part 2.wmv

Archive MMSTF 0019

Archive MMSTF 0018

www.tamilauthors.com-Eraeravi interview01

மதுரை மாவட்ட மைய நூலகத்தில் கவிதை விழா அழைப்பிதழ்

படம்
மதுரை மாவட்ட மைய நூலகத்தில் கவிதை விழா அழைப்பிதழ் 

DVD 2

DVD 2

VTS 01 2

VTS 01 1

Oru Cup Urchagam 28-06-2013 Thanthi TV (ஒரு கப் உற்சாகம்)

பட்டிமன்றத்தில் கவிஞர் இரா.இரவி

kaalaimalar_split2.mp4

Eraravi split1

Eraravi split1

Eraravi split1

www.tamilauthors.com-Eraeravi interview01

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ ( சென்றியு )  கவிஞர் இரா .இரவி !

வழி  மேல் விழி வைத்து  முதியோர் இல்லத்தில்  முதியோர்கள்   ! 


நேரம் கிடைத்தால்  ரசித்து மகிழுங்கள்  வானம் !
உதட்டில் புன்னகை  உள்ளத்தில் ரணம்  திருநங்கைகள் !
வாசிக்க சுகம்  ரசிக்கும் மனம்  கவிதை !
வாக்குப்பிச்சை எடுத்தவர்களிடம்  வாக்குப்பிச்சை  மேல்சபை தேர்தல் !
மரங்களை வெட்டி  யாகம் நடந்தது  மழைக்காக !
வேண்டாம் வன்சொல்  வாடிடும் பிஞ்சு  அன்போடு கொஞ்சு !
வெள்ளத்தில் பக்தர்கள் காக்கவில்லை  கடவுள் !
மின்தடையிலும்  ஒளிர்ந்தது  மின்மினி !
அன்று சேவைக்காக  இன்று தேவைக்காக  அரசியல் !
அன்று மக்களுக்காக  இன்று தன் மக்களுக்காக  அரசியல் !
கற்பித்தன ஒழுக்கம்  காந்தியடிகளின்  மூன்று குரங்குகள் !
திறந்திடுவார்கள்  உடையுமோ  பயத்தில்  அணை !
பைத்திமாகியும்  காரியமாக  அரசியல்வாதி !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

Oru Cup Urchagam 24-06-2013 Thanthi TV (ஒரு கப் உற்சாகம்)

நம்பிக்கை வாசல் மாத இதழில் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின் எழுதிய "மேதைகளின் வாழ்வில் மென்மையான சம்பவங்கள் " நூல் விமார்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
நம்பிக்கை வாசல் மாத இதழில் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின் எழுதிய "மேதைகளின் வாழ்வில் மென்மையான சம்பவங்கள் " நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

படம்
படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை !
நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் செல் 9442112288 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
மணிமேகலைப் பிரசுரம் ,7.தணிகாசலம் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .17. விலை ரூபாய் 60.
ஸ்ரீ விநாயகா ,சுவாஷ்சிகா பர்னிச்சர் உரிமையாளர் இனிய நண்பர் திரு பி .சுரேந்திரன் அவர்களின் செல்ல மகள் கவிதா -செல்வன் பி .அரவிந்த்  பொன்னையா திருமணம் மதுரையில் நடந்தது .நான் சென்று இருந்தேன் . திருமணத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் வழங்கிய தாம்பூல பையில் இந்த நூல் இருந்தது .உடன் இனிய நண்பர் திரு பி .சுரேந்திரன் அவர்களை செல்லிடப்பேசியில் அழைத்துப் பாராட்டினேன் .திரு பி .சுரேந்திரன் அவர்கள் கர்மவீரர் காமராஜர் மீது அளவற்ற பாசமும் , நேசமும் கொண்டவர் .காமராஜரை பெரிதும் மதிப்பவர் .பணம் இருக்கும் அனைவருக்கும் இதுபோன்ற மனம் இருப்பதில்லை .5000 நூல்கள் வாங்கி வழங்கிய செய்தி அறிந்து மேலும் பாராட்டினேன் .பணக்காரர்கள் திருமணங்களில் இதுபோன்று நூல் வழங்கும் நல்ல பழக்கத்தைக் கடைபிடிக்கலாம் .5000 நூல்களை ஒரு குடும்பத்தில் 5 பேர் வாசித்தால் 25000 பேருக்கும் காமாராஜர் பற்றிய நேர்மை உள்ளம் விளங்க…

கவியரசு என்றால் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி .

படம்
கவியரசு என்றால் கண்ணதாசன் !   கவிஞர் இரா .இரவி .
கவியரசு என்றால் கண்ணதாசன் !    கண்ணதாசன் என்றால் கவியரசு !
"ஆறு மனமே ஆறு " பாடலின் மூலம்  ஆறுதல் வழங்கிய கவியரசு நீ !
"வெற்றி பெற்ற மனிதரெல்லாம் " பாடலில்  தோற்றவருக்குத் தெம்பு  தந்தவன் நீ !
"நான் மலரோடு தனியாக" பாடலில்  நல்ல காதலை சுகமாக வடித்தவன் நீ !
"மலர்களைப்  போல் தங்கை" பாடலுக்கு  மயங்காத உள்ளம் இல்லை உலகில் !
"போனால் போகட்டும் போடா "பாட்டில்  புத்திப்புகட்டும் நிலையாமையைப் பாடினாய் !
"நான் சார்ந்த மதம் தாமதம் "என்று சொல்லி  நீ தாமதத்தையும் நகைச்சுவையாக்கியவன்  !
சித்தர்கள்  பாடல்களை எளிமைப் படுத்தி    சித்திரமாய் திரையில் தீட்டித் தந்தவன் நீ !
வாழ்வியல் கருத்துக்களை பாடல்களில்  வற்றாத ஜீவ நதியாக  வார்த்தவன்  நீ !
காதலின் வேதனையை பாட்டில்  கடவுளோடு ஒப்பிட்டுப் பாடியவன் நீ !
ஆங்கில  இலக்கியம் படிக்காத   நீ  ஆங்கில  இலக்கியம் வென்றாய் பாட்டில் !
சங்க   இலக்கியத்தை  திரைப்பாடலில் வைத்தாய்  சாமானியருக்கும் புரிந்திட பாடல் படைத்தாய் !

கம்ப இராமாயண கருத்துக்களையும்  கனிச்சாறாக பாட்…

கவிஞர் இரா இரவி உரை கேட்டும் மகிழுங்கள்

கவிஞர் இரா இரவி உரை கேட்டும் மகிழுங்கள் 

-- 
http://www.youtube.com/watch?v=_3-JIRFbk3A

http://www.youtube.com/watch?v=WO9bGRILGiM

மதுரைக்கு வருகை தந்த முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்களுடன் சந்திப்பு.

படம்
மதுரைக்கு வருகை தந்த முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்களுடன் சந்திப்பு.
மதுரைக்கு வருகை தந்த முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப . அவர்களிடம்  முதுநிலை தமிழாசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் , வெ .இறையன்பு அவர்களின் மேற்கோள்களுடன் எழுதிய  தனது நூலான " வலி தாங்கும் மூங்கில் "  நூலை வழங்கி மகிழ்ந்தார் .உடன் கவிஞர் இரா .இரவி ,தமிழ் வளர்ச்சித் துறை  உதவி இயக்குனர் முனைவர் க .பசும்பொன், கொடைக்கானல் வானொலி நிலையத்தின் பொறுப்பாளர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் உள்ளனர் .
http://www.eraeravi.blogspot.in/2013/06/blog-post_7654.html --

முனைவர் வெ. இறையன்பு இ.ஆ .ப . அவர்களை வரவேற்றனர்

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வந்த முனைவர் வெ. இறையன்பு இ.ஆ .ப . அவர்களை கவிஞர் இரா .இரவி, மருத்துவர் சரவணன் , G.R.T  வெங்கடேஷ் ,அப்போலோ கார்த்திகேயன் , ஆகியோர்
வரவேற்றனர்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வந்த முனைவர் வெ. இறையன்பு இ.ஆ .ப . அவர்களை வரவேற்றனர்

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வந்த முனைவர் வெ. இறையன்பு இ.ஆ .ப . அவர்களை கவிஞர் இரா .இரவி, G.R.T  வெங்கடேஷ் ,அப்போலோ கார்த்திகேயன் ,AVA கணேசன் ஆகியோர் வரவேற்றனர்  --

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் கவிக்குயில் இரா .கணேசன் மகள் சிறுமி பொற்க்கொடி திருக்குறள் மற்றும் தமிழ்ப்பாடல் மனப்பாடமாக சொன்னது .

படம்
தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் கவிக்குயில் இரா .கணேசன் மகள் சிறுமி பொற்க்கொடி திருக்குறள் மற்றும் தமிழ்ப்பாடல் மனப்பாடமாக சொன்னது .

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

படம்
மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

படம்
மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ .எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் . திரு .ஜோதி மகாலிங்கம், மலேசியா திரு .சேதுமாதவன், திரு .சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் கவிஞர்கள் கே .விஸ்வநாதன் ,இரா .கணேசன் தன்னம்பிக்கை கவிதை வாசித்தனர் .அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண்  பெற்ற செல்வி கார்த்திகாவிற்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப் பட்டது .
தன்  முன்னேற்றப் பயிற்சியாளர் கவிஞர் கோ அவர்கள்  "தடைகளும் விடைகளும் " என்ற தலைப்பில் தன்  முன்னேற்றப் பயிற்சி அளித்தார். 
"தொடர் வண்டி இந்தியாவிற்கு வந்தபோது மூடநம்பிக்கை காரணமாக எதிர்த்தனர் .தொடர் வண்டி வந்ததால் கடவுள் கோபம் கொண்டு நோய்கள் தந்தார் .என்றனர் தடைகள் வந்தது .விடைகள் கண்டனர் . இன்று உலகில் தொடர்வண்டி பயன்பாட்டில்  முதல் இடத்தில இந்தியா உள்ளது .எல்லா தடைகளுக்கும் விடைகள் உண்டு …

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய கட்டுரை

படம்
தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய கட்டுரை படித்து மகிழுங்கள் .நன்றி  மனித நேயம்  ' மாத இதழ் .

மதுரைக்கு வந்த வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களை கவிஞர் .இரா இரவி பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார் .உடன் முதுநிலை தமிழாசிரியர் கவிஞர் ஞா.சந்திரன்

படம்
மதுரைக்கு வந்த வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களை  கவிஞர் .இரா இரவி பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார் .உடன் முதுநிலை தமிழாசிரியர் கவிஞர் ஞா.சந்திரன்

தன்னம்பிக்கை மாத இதழில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை செய்திகள்

படம்
தன்னம்பிக்கை மாத இதழில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை செய்திகள் 

செல்லமுத்து சரஸ்வதி கல்வி அறக்கட்டளையின் சார்பில் நன்கொடை

படம்
செல்லமுத்து சரஸ்வதி கல்வி அறக்கட்டளையின் சார்பில் அகவிழி பார்வையற்றோர்  விடுதியில் இருந்து கல்வி கற்று வரும் மாணவ , மாணவியரின் கல்விக்காக ரூபாய் 3000 க்கான காசோலையை லட்சுமி விலாஸ் வங்கியில் பணிபுரியும் திரு .ராஜேந்திரன் ,திரு.அனந்த குமார் ,நுகர்வோர் அமைப்பின் செயலர் திரு .ராம மூர்த்தி ,ஆகியோர் அகவிழி பார்வையற்றோர்  விடுதி நிறுவனர் திரு பழனியப்பன் அவர்களிடம் வழங்கினார்கள் .உடன் கவிஞர் இரா .இரவி

செல்லமுத்து சரஸ்வதி கல்வி அறக்கட்டளையின் சார்பில் நன்கொடை

படம்
செல்லமுத்து சரஸ்வதி கல்வி அறக்கட்டளையின் சார்பில் அகவிழி பார்வையற்றோர்  விடுதியில் இருந்து கல்வி கற்று வரும் மாணவ , மாணவியரின் கல்விக்காக நன்கொடை 
ரூபாய் 3000 க்கான காசோலையை லட்சுமி விலாஸ் வங்கியில் பணிபுரியும் திரு .ராஜேந்திரன் ,திரு.அனந்த குமார் ,நுகர்வோர் அமைப்பின் செயலர் திரு .ராம மூர்த்தி ,ஆகியோர் அகவிழி பார்வையற்றோர்  விடுதி நிறுவனர் திரு பழனியப்பன் அவர்களிடம் வழங்கினார்கள் .உடன் கவிஞர் இரா .இரவி

இயக்குனர் மணிவண்ணன் மணியான மனிதர் ! கவிஞர் இரா .இரவி !

படம்
இயக்குனர் மணிவண்ணன் மணியான மனிதர் ! கவிஞர் இரா .இரவி !

கோவை அருகே உள்ள சூளுரில் பிறந்தவர் ! கோடம்பாக்கத்தில் சூறாவளியாக சுழன்றவர் !
அய்ம்பது திரைப்படங்கள் இயக்கியவர் ! நாணூறு திரைப்படங்கள் நடித்தவர் !
வெண்தாடி வேந்தரின் பகுத்தறிவுக்கருத்துக்களை ! கருந்தாடி வைத்து திரையில் உரைத்தவர் !
மனிதநேயம் மிக்க மாமனிதர் மணிவண்ணன் ! மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்தவர் !
கதையாசிரியர் வசனகர்த்தா உதவி இயக்குனர்கதையின் நடிகர் இயக்குனர் என்று வளர்த்தவர் !
உதவி இயக்குனர்கள பலரை உருவாக்கியவர் !
உச்சம் செல்ல வழி  வகுத்துத் தந்தவர் !
ஈழத்தமிழர்களுக்காக உரக்கக் குரல் கொடுத்தவர் ! ஈழத்தமிழர்களின் விடுதலையை விரும்பியவர் !

நூல்களை வாசிக்கும் நூல்களின் நேசர் ! நூல்களில் சிறந்ததைப் பரிந்துரை செய்தவர் !
ஆணவம் இல்லாத எளிமையான மனிதர் ! அனைவரும் விரும்பிய அன்பு மனிதர் !
நெசப்பாக்கத்தில் வாசித்த நேசக்காரர் ! நெஞ்சில் பட்டதைப் பேசும் பாசக்காரர் !
தன்  உதவி இயக்குனர்கள்   இயக்குனரானால்  தன்னால் முடிந்த உதவிகள் செய்தவர் !
மற்ற இயக்குனர்கள் போல என்றும்  மனதில் பொறாமை கொள்ளாதவர் !
சீடர்களின் வளர்ச்சியில் பெருமைப்பட்டவர் ! சின்னப் புத்…

ஆதலினால் காதல் செய்வீர் ! கவிஞர் இரா .இரவி !

படம்
ஆதலினால் காதல் செய்வீர் ! கவிஞர் இரா .இரவி !

காதலால் கவலை போகும் !
கல்யாணம் சிறக்கும் !

காதல் சொன்னால் புரியாது !
காதல் காதலித்தாலே புரியும் !

தென்றலால் இலைகள் அசைவது !
மொட்டுகள் மலர்களாக மலர்வது !

பூமியில் மழை பெய்வது !
விதைகள் மரமாக வளர்வது !

அருவியில் நீர் கொட்டுவது 1
எப்படி வந்தது தெரியாது !

இயற்கையாக வருவது !
அப்படித்தான் காதலும் !

ஆணுக்கும் பெண்ணுக்கும்
அவசியம் காதல் வரும் !

ஒருதலைக் காதலாவது
ஒரு முறையேனும் வந்திருக்கும் !

அரும்பிய காதல் மலராமல்
கருகி இருக்கும் !

பிறப்பும் இறப்பும் நிச்சயம் !
காதல் அனுபவுமும் நிச்சயம் !

காதல் பலவகை உண்டு !
மனதிற்குள் மறைந்த காதல் !

உதடுகள் உச்சரிக்காத காதல் !
உச்சரித்து ஏற்காத காதல் !

காதல் இல்லை என்றால்
இந்த உலகம் இல்லை !

காதலை உணர்ந்த பெற்றோர்கள்
ஊருக்குப் பயந்து எதிர்ப்பார்கள் !

காதல் திருமணத்தை அங்கீகரியுங்கள் !
கட்டாயம் வரதட்சணை ஒழியும் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

இயக்குனர் மணிவண்ணன் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு .கவிஞர் இரா .இரவி !

படம்
இயக்குனர் மணிவண்ணன் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு .கவிஞர் இரா .இரவி !

அமைதிப்படை ஒன்று ,இரண்டு  படங்களின் மூலம் அரசியல் பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டியவர் .பகுத்தறிவுக் கருத்துக்களை வெண் திரையில் சொன்னவர் .நல்லசிந்தைனையாளர் .ஈழத் தமிழருக்காக உரக்க குரல் தந்தவர் .வெண்தாடி வேந்தரைப் போல் கருந்தாடி வைத்தவர் .மணிவண்ணன் மணியான கருத்துக்களை திரைப்படத்தில் சொன்னவர் .அவரது இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு .

சிந்தனை !

படம்
சிந்தனை !


சேகுவாரா சொன்னது !
இலங்கையில் நடந்தது !
சேகுவாரா " எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கே விரிவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் ."

சிங்கள இன வெறியர்கள் இலங்கையில் யாழ் நூலகத்தில் உள்ள அறிய பல நல்ல நூல்களை எரித்தார்கள் .அதன்பின் நல்ல மனிதர்கள் ( ஈழத் தமிழர்கள் ) எரிக்கப்பட்டார்கள் .இறந்தவர்கள் இனி உயிர்த்தெழ முடியாது .ஆனால் பல்லாயிரம் தமிழர்கள் இறப்பிற்கு காரணமான கொடியவன் ராஜபட்சே உலக நீதிமன்றத்தால் தண்டிக்கப் படும் நாளே .
உலகத்தமிழர்களுக்கு திருநாளாகும் .

பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி !

படம்
பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி !

பெண் பிறந்தால் 
பேதலிக்கும் மனிதர்களே!
ம்ருமகள் கிடைக்காமல் 
மண்டியிடும் நாள் வரும் !

ஆட்டிற்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி !
மாட்டிற்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி !
கோழிக்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி !
பெண்ணிற்குப் பெண் பிறந்தால் ஏன் இகழ்ச்சி ?
பெண்ணிற்கு முன்னுரிமை
பேருந்தில் தந்தோம் !
திரையரங்கில் தந்தோம் !
இல்லத்தில் தந்தோமா ?
இதயத்தில் தந்தோமா ?
இல்லதரசிக்குத் தந்தோமா ?
உணவு உண்பது உடை உடுப்பது
உறக்கம் கொள்வது
இருபாலருக்கும் பொது !
ஒழுக்கம் மட்டும் பெண்ணிற்கு மட்டும்தானா ?
ஆணிற்கு வேண்டாமா ?
பெண்ணுரிமை பற்றிப்
பேசிவிட்டு வந்து
எதிர்த்துப் பேசிய
இல்லதரசியை எட்டி உதைக்கும் அவலம் .!
பெண்ணுரிமை ஏட்டில் எழுத்தில்
தந்தால் போதாது !
பெண்ணுரிமை நாட்டில் நடைமுறையில்
வீட்டில் தர வேண்டும் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !

படம்
சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !
வானிலிருந்து வரும் அமுதம் மழை .உலக உயிரினங்களின் உயிர் மழை .ஒப்பற்ற மழை பற்றி பல்வேறு கோணங்களில் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி.உள்ளத்தில் உள்ளது கவிதை .உள்ளத்து உணர்வு கவிதை .கண்ட காட்சி கவிதை என்று முத்தான  கருத்துக்களால் முத்துக் கவிதை வடித்துள்ளார் .மா .முத்துப்பாண்டி .
மழையைப்  பற்றிப்  பல்வேறு கவிஞர்கள் கவிதை எழுதி உள்ளார்கள் .ஆனால் கவிஞர் மா .முத்துப்பாண்டி அளவிற்கு மழை பற்றி யாரும் எழுதவில்லை என்றுதான் சொல்லவேண்டும் .அந்த அளவிற்கு அடை மழை போல கவிதைகளைக்  கொட்டி உள்ளார் .சாரல் காலம் கவியருவியில் குளித்த மகிழ்ச்சியைத் தருகின்றது .பாராட்டுக்கள் .
இயற்கையை ரசிக்கத் தெரிந்தால்தான் இயற்கைப்  பற்றி எழுதிட முடியும் .நூல் ஆசிரியர் கவிஞர் மா.முத்துப்பாண்டி மழை கொட்டுவதை இமை கொட்டாமல் ரசித்த காரணத்தால் , மழையைப் பற்றி பல்வேறு கவிதைகள் வடித்துள்ளார் .பதச்சோறாக சில வரிகள் மட்டும் .
ரசனை ! கருமேகங்களை  நாண  நடனமாடச் சொல்லுங்கள் ! நாம் அனைவரும்  ரசிப்போம் ! ஈர்க்கின்ற   மழைத்துளி…

வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

படம்
வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர்ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
பாவை பப்ளிகேசன்ஸ் ,142.ஜானி ஜான் கான் சாலை .இராயப்பேட்டை,சென்னை .14. விலை ரூபாய் 50.
வலி தாங்கும் மூங்கில் நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது .வலி தாங்கும் மூங்கில் தான் புல்லாங்குழல் ஆகின்றது .இசை தருகின்றது .துன்பத்தைத் தாங்கினால்தான் வாழ்வில் வெற்றிப் பெறலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக நூல் உள்ளது .தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக முத்தாய்ப்பாக 30 கட்டுரைகள் உள்ளன .
இனிய நண்பர் நூல் ஆசிரியர் ஞா. சந்திரன் .புனித மரிய மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் ,கவிஞர் ,கட்டுரையாளர் ,தன்னம்பிக்கைப்  பேச்சாளர் பன்முக ஆற்றலாளர் .இனிய  நண்பர் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்கள் மதுரைக்கு வந்தால் சந்திக்கும் முதல் நண்பர் .புதுமனை புகு விழா ,இந்த நூல் வெளியீட்டு விழா , மகனுக்கு புனித விழா என்று முப்பெரும் விழா மதுரையில் நடத்தினார் .இவ்விழாவில் நானும் ,வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களும் , தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களும் ,பொறியாளர் சுரேஷ் அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தோம் .விழா கோலாகலமாக …