நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை ! கவிஞர் இரா .இரவி !

நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை ! 


மலர்ந்தது  22.2.1898  - உதிர்ந்தது  22.2.1914.

கவிஞர் இரா .இரவி !

காந்தியடிகள் தியாகம் கண்டு உலகம் வியந்தது !
காந்தியடிகள்  வியந்தார் வள்ளியம்மையின் தியாகத்தை !

சத்திய சோதனையில் காந்தியடிகள் எழுதினார் !
சத்தியமகள்  வள்ளியம்மையின்  தியாக உள்ளத்தை ! 

முனுசாமி மங்களம் தமிழரின் மகளாகப் பிறந்தாள் !
மூன்றுபவுன் தலைவரி தகர்த்திடக் காரணமானாள் !   

மாமனிதர் காந்தியடிகள் உரைகேட்டு எழுந்தாள் !
மண்ணில் பிறந்த யாவரும் சமம் முழங்கினாள் ! 
  
தென்ஆப்பிரிக்காவின் நிறவெறி எதிர்த்தாள் !
தென்ஆப்பிரிக்காவின் அநீதி அகற்றினாள் !

வெள்ளையரை எதிர்த்த வீரமங்கை வள்ளியம்மை !
வேதனைகளைச் சுமந்தவள்  என்பது உண்மை !

சிறைக்கு அஞ்சாத பெண் சிங்கம் வள்ளியம்மை !
சிரம்மேற்கொண்டு காந்தியடிகள் சொன்னதைச் செய்தவள் ! 

வெள்ளையன் ஒருவன் காந்தியடிகளை மிரட்டியபோது !
வீரமாக முன்நின்று சுடு பார்க்கலாம் நெஞ்சம் நிமிர்த்தியவள் ! 

இளம்வயதில் கடுங்காவல் தண்டனை கொடிய சிறையில் !
இனிதே பயமின்றி காலம்  கழித்தால் சிறிய அறையில் !

அபராதத் தொகை கட்டினால் விடுதலை என்றனர் !
அபராதத் தொகை கட்டுவது இழுக்கென்று மறுத்தாள் ! 

நோய்வாய்ப்பட்டு உடல் மெலிந்து நலிந்த போதும் !
நோகவில்லை கண் கலங்கவில்லை  அவள் !

இன்னும் ஒருமுறை சிறை செல்ல நேர்ந்தாலும் !
இனிதே செல்வேன் என்றாள் காந்தியடிகளிடம் ! 

எல்லாத் திருமணமும் சட்டப்படி ஏற்றிட வைத்தாள் !
எல்லோரும் சமம் என்பதை உணர்த்திக் காட்டினாள் !

இந்தியரின் உரிமைக்காக உரக்கக் குரல் கொடுத்தாள் !
இனிய போராட்டத்தில் உயிரையும்  அற்பணித்தாள் !

அகிம்சை வழி போராடி சாதனை புரிந்தாள் !
அகிம்சைக்கு விலையாக உயிரையும் தந்தாள் !

இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதினார் காந்தியடிகள் ! 
இந்தியாவின் புனிதமகளை இழந்தோம் என்று !

விடுதலைக் காற்றை நாம் சுவாசிக்க வித்திட்டவள் !
வஞ்சி உயிர் தந்ததில் முதல் பெண் ஆனாள் !  

பிறந்தநாள் தினத்தன்றே இறந்ததும் போனாள் !
இறந்த பின்னும் இன்றும்  நிலைத்து வாழ்கிறாள்  !

போராளிகளுக்கு மரணம் இல்லை உணர்த்தினாள் !
போராட்டதிற்கு அஞ்சாத வீர நங்கை அவள் ! 

நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் நெஞ்சில் !
இன்னும் பல நூற்றாண்டு வாழ்வால் உலகில் !


.

கருத்துகள்