குக்கூ ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! இயக்கம் ; ராஜு முருகன் !

குக்கூ !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
இயக்கம் ; ராஜு முருகன் !
நடிப்பு ; தினேஷ் ,அறிமுகம் மாளவிகா !
காதலுக்கு கண் இல்லை என்பார்கள் .இந்தப் படத்தில் கண் பார்வை இல்லாத இருவருக்கும் உள்ள உண்மை காதல் பாடமாகி உள்ளது .பார்வையற்ற ஜோடியின் காதல் கூறும் கவிதைதான் படம். இராஜபார்வை கமலஹாசன் அளவிற்கு மிக நன்றாக நடித்து உள்ளார் அட்டைக்கத்தி படப் புகழ் தினேஷ் .ஜோடியாக வரும் அறிமுகமாகி உள்ள    மாளவிகா வும் மிக நன்றாக நடித்து உள்ளார் .இருவரில் யார் நடிப்பு சிறப்பு என்று பட்டிமன்றம் வைக்கும் அளவிற்கு மிக நன்று .பார்வையற்றவர்களின் துன்பம் உணர்த்தும் மிக நல்ல படம் ..

இயக்குனர்  ராஜு முருகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .ஆனந்த விகடன் இதழில் 7 வருடங்களாக நிருபராக பணியாற்றி விட்டு, இயக்குனர் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு இயக்குனராகி உள்ளார் .பல இடங்களில் கண்களில் கண்ணீர் வரவழைத்து வெற்றி பெறுகின்றார்  படத்தின் இறுதிகாட்சி சுபமாக முடிவது நன்று .வித்தியாசம் என்ற பெயரில் பல இயக்குனர்கள் சோகமாக முடிக்கின்றனர். பார்வையற்றவர்களாகவே வாழ்ந்து உள்ளனர் .பார்வை உள்ள இருவரும் பார்வையற்றவர்களாக நடிப்பது மிக கடினம். மிகவும் கஷ்டப்பட்டு நடித்து உள்ளனர் .

சில இடங்களில் வசனம் மட்டும் வருகின்றது .காட்சி சில நொடிகள் இல்லை .அவை பார்வையற்றவர்களின்  மன உணர்வை உணர்த்தும் விதமாக இயக்குனரின் முத்திரைப் பதிக்கும் விதமாக உள்ளன . தினேசின் நண்பராக உண்மையிலேயே பார்வையற்ற ஒருவர் நடித்து உள்ளார். அவர்தான் படத்தின் நகைச்சுவை நடிகர் .வசனம் மிக நன்று. படத்தின் வசனத்தில் ஒன்று " மூத்தவருக்கு இப்ப பவர் இல்லை இளையவருக்குதான் பவர் அதிகம் .அதுனாலே சின்னமா கிட்டே சொல்றேன் . ". "மின்தடை ஏற்படும்போது குஜராத் போல மின் மிகை மாநிலமாக்குங்கள் ." என்று ஒரு வசனம் ..மதிப்பெண் போடுவதில் கலா மாஷ்டருக்குப்பிறகு நான்தான் .என்று ஒரு வசனம் .வசனம் மிக நன்று .தினேஷ் மாளவிகாவிற்கு பார்வை உள்ள நண்பர் மூலம் மதிப்பெண் போடச் சொல்லும் போது   மாளவிகா கோபித்துக் கொள்கிறார். நான் அழகாக இல்லாவிட்டால் என்னை ஏற்க மாட்டாயா ? என்ற கடிந்து கொள்ளும் காட்சி நெகிழ்ச்சி .

தினேஷ் அம்மா இறந்தவுடன் இறுதிச் சடங்கின்போது கடைசியாக பார்த்துகங்க என்று வெட்டியான் சொல்லும்போது பார்வையற்ற தினேஷ் அம்மா முகத்தை விரலால் வருடம் காட்சி நெகிழ்ச்சி .

ஒரு திருமணத்தில் தினேஷ் இளையராஜா பாடல் பாடுகிறார்.அந்த திருமணதிற்கு வந்த மாளவிகா அறிமுகம் கிடைக்கின்றது .பரிசளிக்கும்போது நாங்களும் வருகிறோம் என்று காத்து இருக்கும் தினஷை விட்டு விட்டு சென்று விடுகிறாள் மாளவிகா .அந்த கோபத்தில் தினேஷ் நண்பர் ஒருவரிடம் சொல்லி மாளவிகா இறங்க வேண்டிய நிறுத்தத்தை விட்டு 4 நிறுத்தம்  தாண்டி இறங்க வைத்து விடுகிறார் .இதனால் மாளவிகா தினேசை குச்சியில் அடித்து ரத்தம்  வர வைக்கிறார் .

இந்தக்காட்சி ஏற்றுக் கொள்ள முடிய அகவிழி  பார்வையற்ற விடுதி நிறுவனர் பார்வையற்ற திரு பழனியப்பன்  உள்ளிட்ட விடுதி மாணவர்களிடம் பல வருடங்களாக பழகி வருகிறேன் அவர்கள் நல்ல குணம் நான் அறிவேன் 

மற்றபடி பார்வையற்றவர்களின் உள்ளத்து உணர்வை மிக நேர்த்தியாக திரையில் வடித்து உள்ளார் பாராட்டுக்கள் .படம் பார்க்கிறோம் என்பதை மறந்து கதையோடு ஒன்றி அவர்களுக்காக நம்மை அழ வைத்து விடுகிறார் .

பார்வையற்ற இருவர் காதலித்து திருமணம் செய்து வாழ்வதை பார்த்து இருக்கிறேன் .ஆனால் பார்வையற்ற ஒருவருக்கு பார்வை உள்ள ஒருவர் துணையாக வந்தால்தான் வாழ்க்கை இனிக்கும் என்பது என் கருத்து 

தினேஷ் ,மாளவிகா இருவருக்கும் தேசிய விருது வழங்கலாம். இயக்குனருக்கும் தேசிய விருது வழங்கலாம்.கிடைக்க வாய்ப்பு  உண்டு .இந்தப் படம் பார்த்து விட்டு வந்தால் பார்வையற்றவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று எண்ணம் பிறக்கும் .அதுதான் இயக்குனர் வெற்றி .


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்