முனைவர் மூ. இராசாராம், இ.ஆ.ப. அரசு செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அவர்களின் வாழ்த்துரை

முனைவர் மூ. இராசாராம், இ.ஆ.ப. அரசு செயலாளர்   தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை  அவர்களின்  வாழ்த்துரை 


வாழ்த்துரை  

விளையும் பயிர்களெல்லாம் கதிர்களாவதில்லை.  சில பயனுடைய பயிர்கள் தான் செழுங்கதிர்களாக மிளிரும்.  இதனைப் பல நிலைகளில் அரசுப் பணியில் நான் கண்டு வருகிறேன்.  அந்த நிலையில் சுற்றுலாத் துறையில் எறும்பு தோற்கும் சுறுசுறுப்பும், கரும்பு தோய்ந்த தமிழின் இனிமையுடன் கவிதை பாடும் திறமும் கொண்டு துடிப்புள்ள இளைஞனாக, எங்களை-யெல்லாம் கவர்ந்த கவிதை செழுங்கதிர் தான் நம் இளவல் கவிஞர் இரவி ஆவார்.
சுற்றுலாத் துறையில் பணியாற்றுகிற போது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இருந்து சிறந்த அரசுப் பணியாளர் விருது பெற்றதைத் தான் இன்றளவும் சொல்லி மகிழ்வார்.  பணியும், படைப்பும் அவருக்கு இரு கண்கள் என்றே கூறலாம்.
ஜப்பான் நாட்டின் வானொலி, தொலைகாட்சி, கணினி என்ற  தலைசிறந்த சாதனங்களைத் தாண்டி அந்நாட்டினர் வழங்கிய கொடை தான் ஹைக்கூ வடிவக் கவிதைகள் ஆகும். 
மூன்று வரி முத்தாய்ப்பான கவிஞர் இரவியின் ஓவியத்துடன் 'ஹைக்கூ கவிதைகள்' , 'என்னவள்', 'ஆயிரம் ஹைக்கூ' ஆகிய முத்தமிழ் போன்ற மூன்று நூல்களையும் படித்துச் சுவைத்தேன்.
தலைசிறந்த நாவலாசிரியர் ரிச்சர்ட் ரைட் 4000 ஹைக்கூ கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிட்டதைப் போல், நம்முடைய எழுச்சிக் கவிஞர் இரவியும்  வரும் ஆண்டுகளில்  5000 ஹைக்கூ கவிதைகளை வெளியிட வாழ்த்துகிறேன்.
.

கருத்துகள்