மனத்தில் பதிந்தவர்கள் (கவிதை உறவு) பற்றி வாசகி மடல் !முனைவர் பட்ட ஆய்வாளர் : ந..செ .கி. சங்கீத் ராதா

மனத்தில் பதிந்தவர்கள் (
கவிதை உறவு) பற்றி வாசகி மடல் !
தொகுப்பு ; பட்டிமன்றப் பேச்சாளர் , ஆன்மிக சொற்பொழிவாளர் ,முனைவர் பட்ட ஆய்வாளர் 
: ந..செ .கி. சங்கீத் ராதா
*****
மனத்தில் பதிந்தவர்களின் கட்டுரையின் வாயிலாக என் மனத்தில் பதிந்தவை இதோ!
ஏர்வாடியாரின்  மனத்தில் பதிந்தவர்களின் கட்டுரைத் தொடரில்   நவம்பர் மாதம் அரியாசனம் இட்டு அமர்ந்திருப்பவர் நமது 'ஹைக்கூ திலகம்' இரவி அவர்கள்.!
'சிறியதாக இருந்தாலும் யாருக்கும் பிடுக்கும் சிறப்பாய் குழந்தையாக இருந்தால் பிடிக்கும்' என்று இப்படித்தான் தொடங்குகின்றது ஏர்வாடியாரின் கட்டுரை. 'ஹைக்கூ'வைப் பற்றி விளக்கும் போது பாரதியாரின் 'வெடிப்புறப்பேசு'  என்ற  வரியினை ஒப்பிட்டது உயர்வு.  ஹைக்கூ மட்டுமல்ல 'ஹைக்கூ திலகம்' இரவி அவர்களின் மீசையும் ஏர்வாடியாருக்கு 'பாரதியை' நினைஊட்டுகின்றது. இது ஏர்வாடியாரின் உள்ளக் கிடக்கில் பாரதி எவ்வளவு ஆழமாக வேரூன்றி உள்ளான் என்பதை விடையறுக்கின்றது.
மதுரையினைப் பற்றி குறிப்பிடும் வேளையில் 'கவிதை உறவு' மதுரை மாவட்டத்தில் கொடி கட்டிப் பறந்த காலம் ஒன்று உண்டு' என்பதிலிருந்து மதுரையில் இன்றைய இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள் 'கவிதை உறவு'வினை தமது வளர்ச்சிப் பயணத்திற்கு வழித்தடமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் பீறிடுகின்றது.
கவிஞர் இரா. இரவி அவர்களைப் பற்றி குறிப்பிடும் வேளையில், இரவி அவர்கள் விழுது விட்டு வளர்ந்திருக்கின்ற ஆலாகவும் இருக்கிறார், நல்ல ஆளாகவும் இருக்கிறார்' என்பது வளமான வர்ணனையாகும். அதே சமயம், தமக்கு இரவி அவர்களை அறிமுகப்படுத்திய 'நெல்லை சுப்பையா' அவர்களையும் குறிப்பிடத் தவறவில்லை.
இரவி அவர்கள் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அலுவலர் என்பதோடு மட்டுமல்லாமல், அவரது படைப்புகள் ஆய்வுப் பொருளாகவும், பல கல்லூரிகளில் பாடத்திட்டங்களாகவும் உள்ளது என்பதை வளரும் படைப்பாளிகளுக்கு உந்து சக்தியாக உள்ளது.  "குடும்பச் சூழ்நிலை
இரவி அவர்கள் தமிழ்நாடு சுற்றுலாத் துறை உதவி அலுவலர் என்பதோடு மட்டுமல்லாமல், அவரது படைப்புகள் ஆய்வுப் பொருளாகவும், பல கல்லூரிகளில் பாடத்திட்டங்களாகவும் உள்ளது என்பதை வளரும் படைப்பாளிகளுக்கு உந்து சக்தியாக உள்ளது.  "குடும்பச் சூழ்நிலை காரணமாக கல்லூரிக்குச் சென்று பட்டம் பெறாதவரின் கவிதை கல்லூரிக்குப் படமாக வைக்கப்பட்டுள்ளது" என்று எங்களது தகைசால் பேராசிரியர் முனைவர் இரா. மோகன் அய்யா அவர்கள் பெருமை பொங்கக் குறிப்பிடுவது இங்கு நினைவு கூறத்தக்கதாகும். 
கவிஞர் இரவி அவர்களுக்கு இணையதளத்தின் மேல் உள்ள ஈடுபாட்டினை மிக லாவகமாக காட்டியுள்ளார் ஏர்வாடியார்.   கவிதை என்றாலே kavimalar.com www.eraeravi.com   wwww.eraeravi.blogspot.in என்று குறிப்பிட்டு கவிதைக்காக, உலகை இணைத்து தளங்கள் அமைத்த 'கவித்தமிழன்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.  மேலும், இரவி அவர்களின் வலைத்தளம் தமக்கும் வழித்தளமாக அமைந்ததை ervadiar.com வாயிலாக அருமையாக எடுத்துரைத்துள்ளார்.
கவிஞர் இரவி அவர்களுக்கு சூட்டப்பட்ட பட்டங்களின் அணிவகுப்பில் பாரதிதாசன் விருது, வளரும் கவிஞர் விருது, பிரான்ஸ் நாட்டு விருது, இலண்டன் விருது என்பதோடு அமெரிக்க மேரிலாண்ட் பல்கலைக்கழகம் வழங்கிய முனைவர் பட்டம் வழங்கிய செய்தி முத்தைப்பாக உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக 'விழித்திருக்கும் விதை விருட்சம்' என்று இரவி அவர்களை குறிப்பிடுவது எங்களது தகைசால் பேராசிரியர் இரா. மோகன் ஐயா அவர்கள் குறிப்பிடும் 'பொற்குடத்திற்கு பொட்டு வைத்தாற்போல' என்ற வரியினை நீடு நோக்கச் செய்கின்றது.
கவிஞர் இரவி அவர்களின் ஆக்கப் பணிகளை நோக்கும் போது இலக்கியப் பணி, கல்விப் பணி, சமூகப் பணி என்று பகுத்து ஆயும் பாங்கினை அறிய முடிகின்றது.
கல்விப்பணியில் இரவி அவர்களின் படைப்புகள் எம்.பில். பட்டம் பெற்றுத்தந்துள்ளதையும், பாரதிதாசன் பல்கலையில் படத்திட்டமாகவும், யாதவர் கல்லூரியில் பாடத்திட்டக்குழு உறுப்பினராக இரவி அவர்கள் இடம் பெற்றிருப்பது போன்ற அறிய தகவல்கள் கவிஞரின் புலமையைப்  புடம் போட்டுக் காட்டுகின்றன. 
சமூகப் பணியில் இரவி அவர்கள், குருதிக்கொடை கொடுத்து தேகத்தை (மற்றவரது) தேற்றுவதோடு, நல்ல குருன்செய்திகளைக் கொடுத்து தேசத்தையும் (இளையவர்கள்) தேற்றுகிறார்.  நாட்டின் முதல் குடிமகனுக்கு (அப்துல் கலாம்) சிற்றதழ் குறித்த செய்தியினை அனுப்பும் இரவி அவர்கள் பற்றிய செய்தியினை ஏர்வாடியார் பதிவு செய்தது 'சிறப்புச் செய்தி' மட்டுமல்ல 'தலைப்புச் செய்தியும் தான்'.
இரவி அவர்களின் குடும்பத்தைக் குறிப்பிடும் வேளையில், "தாயார் சரோஜினி (கவிக்குயில்) அற்புதமான கவிதையை யா(பெ)த்திருக்கிறார்" என்பது நயம் பாராட்டத்தக்கது.
நிறைவாக 'மனத்தில் பதிந்தவர்கள்' கட்டுரையில் சுருதி முத்துக்களை சேர்த்தெடுத்து வீணை நரம்புகளில் கோர்த்தெடுத்து மீட்டப்படும் 'மதுர இசை' போல சொற்களைத் தெளிவு செய்து வாக்கியங்களை மிளிரச் செய்துள்ளார் ஏர்வாடியார்.  'மனத்தில் பதிந்தவர்கள்' கட்டுரையில் என்றும் மறவாத மனம் பரப்பும் மதுரை மல்லிகையாக 'ஹைக்கூ திலகம்' மலர்ந்திருக்கிறார் என்பதோடு மனத்தோடு வீற்றிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகின்றது. 




.

கருத்துகள்