பத்மஸ்ரீ டி .எம் . சௌந்தர ராஜன் முதலாம் ஆண்டு நினைவு நாள் 25.5.2014. என்றும் மறைவு உனக்கில்லை ! கவிஞர் இரா .இரவி !

பத்மஸ்ரீ டி .எம் . சௌந்தர ராஜன் முதலாம் ஆண்டு நினைவு நாள் 25.5.2014.

என்றும் மறைவு உனக்கில்லை ! கவிஞர் இரா .இரவி ! 


சௌந்தரராஜன் என்பது பெயர் மட்டுமல்ல ! 
சௌந்தரமான குரலின் ராஜன் நீ ! 

உனது தாய் மொழி தமிழ் இல்லை !
உச்சரிப்பில் உச்சமே உன் எல்லை !

உனது தாய் மொழி சௌராஷ்டிரம் மொழி !
உனது வாய் மொழி செம்மொழி தமிழ் மொழி !

கவியரசு கண்ணதாசனின் வைர வரிகளை !
காதுகளில் தேனாகப் பாய்ச்சியவன் நீ !

கவியரசு கண்ணதாசனின் கருத்துக் கல்லை !
கண் கவரும் சிலையாக வடித்த சிற்பி நீ !

மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களிடமும்
முத்திரைப் பதித்த சகலகலா வல்லவன் நீ !

எம் .ஜி .ஆர் . சிவாஜி இரு துருவத்திற்கும் !
இரண்டு குரலில் இனிமையாகப் பாடிய ஒருவன் நீ !

பாட்டுக் கோட்டையான பட்டுக்கோட்டை
பாடலுக்கு பட்டுக் கட்டியவன் நீ !

மக்கள் திலகம் எம் .ஜி .ஆருக்கு நூறு சதவிகிதம் !
முற்றிலும் என்றும் பொருந்தியது உந்தன் குரலே !

வேறு பலர் அவருக்குப் பாடி ப் பார்த்தார்கள் !
விரும்பவில்லை ரசிகர்கள் கூட்டம் !

செவாலியர் சிவாஜியின் சிறப்பான நடிப்பை !
சிம்மக்குரலில் கர்ஜித்துப் பாடியவன் நீ !

யாரை நம்பி நான் பிறந்தேன் பாடலின் மூலம் !
யாருக்கும் பிடித்தவன் ஆனாய் நீ !

மலர்ந்து மலராத பாடல் மூலம் !
மக்கள் மனதை கொள்ளை அடித்தவன் நீ !

பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி !
கோடிகளுக்கு மேல் ரசிகர்களை உனக்கு !

தானாகவே மரணம் வந்தது உன் உடலுக்கு !
தனி இடம் உண்டு என்றும் உன் குரலுக்கு !

மதுரையில் மாநாடுப் போல நடந்தது !
மண்ணின் மைந்தன் உந்தன் பாராட்டு விழா !

ஒலிநாடாவிற்கும் உனது இசை நிகழ்ச்சிக்கும் !
ஒரு வேறுபாடு கூட என்றும் இருந்ததில்லை !

படிக்காத பாமர்கள் பலருக்கும் தமிழ்
படிப்பித்த பாடல் ஆசான் நீ !

உழைப்பாளிகளின் உதட்டிலும் உன் பாட்டு !
படிப்பாளிகளின் உதட்டிலும் உன் பாட்டு !

ஒரு காலத்தில் நேயர்களின் சொர்க்கமாக இருந்த !
இலங்கை வானொலியில் எப்பவும் ஒலித்தது உன் பாடலே !

ஒப்பற்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடி !
உலகத் தமிழர்களை எழுந்து நிற்க வைப்பவன் நீ !

உயிர் உன் உடலை விட்டு பிரிந்திட்டப் போதும் !
உயிராய் வாழும் ரசிகர்கள் உள்ளத்தில் உன் பாடல் !

உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும் !
பாடலால் என்றும் வாழ்வாய் எங்களிடம் !
-- 

கருத்துகள்