பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

பனி சுமந்த மேகங்கள்


THE VISION
ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி
தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன்
நூல் விமர்சனம் : கவிஞர் இராஇரவி
தகிதா பதிப்பகம், 41833, தீபம் பூங்கா, கே. வடமதுரை, கோவை-641 017.  விலை : ரூ.100
*****
பனி சுமந்த மேகங்கள் நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது.  தலைப்புக்கு ஏற்ற முகப்பு அட்டை வடிவமைப்பு, உள் அச்சு, அழகு தமிழ் மொழிபெயர்ப்பு யாவும் மிக நேர்த்தியாக உள்ளது.  தகிதா பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிக் கவிதைகள். THE VISION என்று ஆங்கிலத்தில் எழுதியவர்  இனிய நண்பர் கவிஞர் பீர் ஒலி.  இவர் தொடர்வண்டித் துறையில் பரபரப்பான் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த போதும் இலக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கி தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழியிலும் படைத்து வரும் படைப்பாளி.  கடின உழைப்பாளி.  ஆங்கிலத்தில் உள்ள மூலத்தை சற்றும் சிதையாமல் அழகு தமிழ் மொழியில் மிகச்சிறப்பாக மொழி பெயர்த்து வழ்ங்கிய திரு. போ. மணிவண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
தகிதா பதிப்பகத்தின் வெளியீடாக வந்த நித்திரைப் பயணங்கள், சிறகுகளின் சுவாசங்கள் இரண்டு நூல்களின் ஆசிரியர் கவிஞர் பீர் ஒலி அவர்களின் ஆங்கில மொழியில் படைத்த அற்புதம் இந்நூல்.  ஆங்கில மொழியை ஒரு மொழியாகப் புரிந்து படித்தால் ஆங்கிலத்தில் கவிதையும் படைக்கலாம்.  ஆங்கிலம் என்றால் சிலருக்கு அலர்ஜியும் வருவதுண்டு.  ஆங்கில மொழிக்கு நாம் எதிரி அல்ல. தமிங்கில மொழிக்குத்தான் நாம் எதிரி.  1981ம் ஆண்டில் THE VISION என்று ஆங்கிலத்தில் வெளியான நூலின் தமிழாக்கம் இந்நூல்.  முனைவர் ந. அருள், முனைவர் பா. கிருஷ்ணன் ஆகியோரின் அணிந்துரை மிக நன்று.  இரண்டு மொழி ஆசிரியர்களின் என்னுரையும் சிறப்பு.
இந்த நூலில் ஆங்கிலக் கவிதை சிறப்பா, மொழியாக்கம் செய்திட்ட தமிழ்க்கவிதை சிறப்பா என்று பட்டிமன்றம் நடத்தினால் தீர்ப்பு வழங்குவது சிரமம்.  இரண்டுமே சிறப்பாக உள்ளன. 
Lend my ears
But for your
music notes
that will bring forth
manna dews ;
But I see my heaven in you
will thou come and
share my view?
என் செவி மடல்களால்
உன் இசைக்குறிப்புகளை மட்டுமே
சுவைக்கிறேன்.
என் எண்ணங்களை
பரவசத்தோடு பகிரப்பகிர நீ!
முதலில் சொந்தமாகி
பிறகு சொர்க்கமாகிறாய்.
தமிழில் மொழிபெயர்த்த கடைசி இரண்டு வரிகளே போதும்.  தமிழின் சொல் விளையாட்டை உணர்ந்திட. மொழிபெயர்த்த திரு. போ. மணிவண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  உலக மொழியான ஆங்கிலத்திலிருந்து உலகின் முதல் மொழியான செம்மொழி தமிழ்மொழிக்கு மிக நுட்பமாகவும், திட்பமாகவும் மொழிபெயர்த்து உள்ளார்கள்.  ஆங்கிலத்தில் எழுதிய கவிஞர் பீர் ஒலி அவர்களும் கடுமையாக, புரியாத ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தாமல் சராசரியான-வர்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் எளிதான ஆங்கிலச்சொற்கள் பயன்படுத்தி வடித்தமைக்கு பாராட்டுக்கள்.  பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு.
TO MY FAIR LADY !
I am thrown upon
my ideal world
where no miseries
have their hold
Encircled by the trembling
streams
lovely spots
pleasing scenes
என் பிரியையே!
இந்த
நீதி வழுவா நிலவுலகின் மீது
நான்
விழுந்து கிடக்கிறேன்
இங்கு
இல்லவே இல்லை
வளைக்கும் வலைகளும்
வருத்தும் கவலைகளும்.
TO MY FAIR LADY ! என்பதை சாதாரண மொழிபெயர்ப்பாளர் என்றால் “என்னுடைய அழகிய பெண்ணிற்கு””" என்று தான் எழுதி இருப்பார்கள்.  ஆனால் திரு. போ. மணிவண்ணன் அவர்கள், “என் பிரியையே!””" என்று கவித்துவமாக புதிய சொல்லாட்சியும் மொழிபெயர்த்து உள்ளார்.  என் பிரியமானவளே  எல்லோரும் அறிந்த சொல். என் பிரியையே புதிய சொல்லாக உள்ளது.  பாராட்டுக்கள்.
எங்களிடமும் வில்லியம் வோர்ட்ஸ்வெர்த், ஷெல்லி போன்று ஆங்கிலத்தில் கவி வடிக்கும் கவிஞர்கள் பீர் ஒலி போன்றவர்கள் தமிழர்களிலும் இருக்கிறார்கள் என்று உலகிற்கு உரக்க்ச் சொல்லும் நூலாக வந்துள்ளது. பாராட்டுக்கள்.  இயற்கை நேசிப்போடு காதலியை பார்த்து பாடுவது போல கவித்துவத்துடன் படைக்கப்பட்ட நூல்.  இந்த நூல் கவிதைகள் படிக்கும் போது படிக்கும் வாசகர்களின் அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்குன் என்று உறுதி கூறலாம்.  ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளில் இரண்டு மொழி வித்தகர்களால் படைக்கப்பட்ட நூல்.
******

கருத்துகள்