கலசலிங்கம் ஐயாவிற்கு கவிதாஞ்சலி ! முனைவர் ச .சந்திரா தமிழ்த் துறைத் தலைவர்

படித்ததில் பிடித்தது  !



 கலசலிங்கம் ஐயாவிற்கு கவிதாஞ்சலி  !
 

முனைவர்  ச .சந்திரா தமிழ்த் துறைத் தலைவர் 
கலசலிங்கம்   பல்கலைக் கழகம்
கிருஷ்ணன்கோவில்  

கண்ணீர்த்துளிகளை எழுதுகோலில் ட்டு நிரப்பினோம்!
கவிதைத் துளிகளாய் உருமாறிற்று அவை!
ஒரு நூற்றாண்டில் ஓயா உழைப்பினைத் தேடினாய்!
மறு நூற்றாண்டில் மங்காப்புகழ் அடைந்தாய்!
படிப்படியாய் எட்டுவைத்தீர்!பாங்காய் வாழ்ந்தீர்!
அலைமகள்தந்த செல்வத்தினை கலைமகளுக்கு
அல்லவா கருணையுடன்  வழங்கினீர்!
ஏழையர்க்கு உதவும் எட்டாவது வள்ளலானீர்!
இன்று எமக்கு எட்டாக்கனியுமாக னீர்!.
ஆயிரம் பிறை கண்ட ஞானியை
அழைத்துச் செல்ல எமதர்மனுக்கு
எப்படித்தான் மனம் வந்ததோ?
நதிபோல் விடாது இயங்கினீர்!
நாடறிந்த மாமனிதர் ஆனீர்!
மரணதேவனுக்கு எப்படித்தான் மனம்வந்ததோ?
மகா மனிதரைக் கொண்டு செல்ல!!
ஆசிரியர்க்கு நெம்புகோல்:நிர்வகிப்பதில் செங்கோல்:
வேண்டினோர்க்கு ஊன்றுகோல்:மொத்தத்தில்
துலாக்கோலாய் இருந்தீர்!இன்று ம்மைத்
துயரக்கடலில் ஆழ்த்திச் சென்றீர்!
சொந்த மண் மீது நேசங்கொண்ட நீங்கள்
சொர்க்கலோகம் செல்லத் துணிந்தீரோ?
மண்ணுலகம் விட்டு விண்ணுலகம்
புகுந்தாலும் மாறாப் புகழுடன்
மக்கள்  மனந்தோறும் வாழ்வீர்!
                              மீளாத் துயரத்துடன்,

.

கருத்துகள்