மது ! கவிஞர் இரா .இரவி

மது !  கவிஞர் இரா .இரவி !

குடிக்க குடிக்க
உயிர் குடிக்கும் 
மது !

திரவ வடிவில் உள்ளது 
திராவகத்தை விட கொடியது  
மது !

இன்று மட்டும் என்று தொடங்கி
என்றும் என்றாகும் 
மது !

துக்கம் மறக்க என்பாய் 
துக்கத்தில் முடிக்கும்  
 மது !

வன்முறையின் காரணி 
வம்புகளின் ஆரம்பம் 
மது !

ஒழுக்கத்தின் எதிரி 
ஒழுக்கக்கேட்டின் நண்பன் 
மது !
.
சிற்றின்பம்  என்பாய் 
பெருந்துன்பம் தரும் 
மது !

முதலில் கோப்பை மோதல் 
பின் நண்பர்கள்  மோதல் 
மது !

தேசப்பிதா வெறுத்தது
பித்தனாய் ஆக்குவது 
மது !

பேதைமை வளர்ப்பது 
பெண் இனம்  வெறுப்பது   
மது !

கடமையில் தவறி 
மடமையில் வீழ்த்துவது 
மது !

அடிமையாக்கி 
அழித்து விடும் 
மது !

இலவசமாக வழங்கி நண்பன்
பகைவனாக  மாறுவான் 
மது !

கூடி கும்மாளமிட்டு குடித்து 
சண்டையிட்டு பிரிவில் முடிக்கும் 
மது !

காலம் மாறிவிட்டது என்பாய் 
நீ காலமாக வழி வகுக்கும்
மது !

நாகரிகம் என்று தொடங்கி
அநாகரிகத்தில் முடிக்கும் 
மது !

ஆற்றலை அழிக்கும்
அறிவை சிதைக்கும் 
மது !

அறிவாளியை முட்டாளாக்கும் 
முட்டாளை  மூடனாக்கும் 
மது !

உயிர்க்கொல்லி  பானம் 
உள்ளே எய்திடும் பாணம்
மது !

மதிப்பை இழப்பாய் 
மதியையும்  இழப்பாய்
மது !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்