படித்ததில் பிடித்தது ! தலைப்பு ; பாரடா உனது மானிடப்பரப்பை ! கவிபாரதி மு .வாசுகி , மேலூர் .

படித்ததில் பிடித்தது !

தலைப்பு ; பாரடா உனது மானிடப்பரப்பை ! 
கவிபாரதி மு .வாசுகி , மேலூர் .


திருப்பரங்குன்றம்  கவிஞர் பேரவையில் ரூபாய் 5000 பரிசு பெற்ற கவிதை !



ஆணாதிக்க மணவாழ்விலே  
பெண்பாதிக்கும் நிலைவரினும் 
தேக்கிய வேதனைக்கு 
திறவுகோள் கிடைக்காமல் 
கங்கையின் புதிய கிளையை 
கண்களில் திறக்கிறார்கள் !  

' நிலைவரையே பயணிக்கும் 'கதவு ' போல 
வரையறைக்குள் வாழ்ந்து வாழ்ந்து 
வாசற்படி தாண்டாமலே 
வயோதிகத்தை அடைகிறார்கள் !

அடுப்பங்களை அனல்  கூட   
குறைவாகத்தான் சுடுகிறது !
அடுக்கடுக்காய் அநீதி இழைக்கும் - சில 
ஆண்களோடு ஒப்பிடுகையில் !

அன்று , அந்நியரிடம் அடிமையாயிருந்ததில் 
அதிசயம் ஒன்றுமில்லை !

இன்றோ ,
நம்முக்குள்ளே தான் நடந்து கொண்டிருக்கிறது 
கூலிப்படைகொண்டு 
குண்டு வெடிப்பும் ,கொலைகளும் !

'ஆவி ' பிடித்த பெண்ணிற்கு கூட 
அல்லல்கள் அதிகமில்லை !
 'காவி ' பிடித்த  பெண்ணிற்குத்தான் 
காலத்திற்கும் சீரழிவு !

எத்தனை நாளைக்குதான் நீடிக்கும் இந்த அவலம் ?
எனக்கேட்டு ,
மாற்றுக் கருது வெளியிட்டவரெல்லாம்  
மாற்றுத்திறனாளியே ஆகிறார்கள் !

இவ்வுலகை மாற்ற  இனி  ஒரு பாரதி  போதாது !
ஒவ்வொருவரும் பாரதியாக வேண்டும் !
இல்லையேல் ,
புறாக்களுக்குள்ளும்  போர்க்குணம் புகுந்தால் 
சமாதானமுமிங்கே சமாதியாகிவிடும் ! எனவே 
   
பெண்ணடிமைக்கு விடை கொடுங்கள் ! அவர்களின் 
பெருமைக்கு கை கொடுங்கள் !
நாளைய விடியலாவது - பெண்களின் 
விழிகளுக்குச் சொந்தமாகட்டும்  !



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



கருத்துகள்