நாய்கள் ஜாக்கிரதை! இயக்கம் : திரு. சக்தி .சௌந்தர் ராஜன் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

.
நாய்கள் ஜாக்கிரதை!
இயக்கம் :  திரு. சக்தி .சௌந்தர்  ராஜன் !
திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி



நடிப்பு : திரு. சிபி   :
தயாரிப்பு  திரு. சத்யராஜ்


*****
       சத்யராஜ் அவர்களின் புதல்வர் சிபி நடித்துள்ள படம்.  இந்தப்படத்தின் கதாநாயகன் சிபி என்றால் இன்னொரு கதாநாயகன் நாய் என்றே சொல்ல வேண்டும்.  நாய் பற்றி இப்படி ஒரு படம் வந்தது இல்லை.  நாய் இவ்வளவு அறிவு மிக்கது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் இயக்குனர் திரு.            . பாராட்டுக்கள்.
       5 சூட்கேஸ்கள் வைத்து உள்ளனர்.  அதில் ஒன்றில் மட்டும் வெடிக்கக்கூடிய வெடிமருந்து உள்ளது.  நாய் சூட்கேஸ்களை மோந்து பார்த்து விட்டு வெடிமருந்து உள்ள சூட்கேஸ் சுட்டிக்காட்டி அதன் அருகே + என்ற குறியிடுகிறது.  படத்தின் இறுதிக்காட்சியில் கதாநாயகன் சிபி உயிர் உழைப்பதற்கும் உதவுகின்றது நாய்.  கதாநாயகி இருக்கும் இடத்தையும் சுட்டிக் காட்டுகிறது.  கடைசியில் வில்லனால் சுடப்பட்டு இறந்து விடுகிறது.
       நாய்க்கு பயிற்சி தந்தால் பல சாகசங்கள் செய்கின்றது.  ஏணிகளில் ஏறுகின்றது, ஓடுகின்றது, திருடனை விரட்டிச் சென்று பிடிக்கின்றது.  நாயின் பயிற்சியாளர் உட்காரு என்றால் உட்காருகிறது.  ஓடு என்றால் ஓடுகின்றது.

இந்தப்படம் பார்த்தபோது இனிய நண்பர் காவல்துறை உதவி ஆணையர் கவிஞர் மணிவண்ணன் அவர்கள் இலக்கிய விழாவில் சொன்ன நிகழ்வு நினைவிற்கு வந்தது.  காவல்துறையில் உள்ள நாயின் முன் இறைச்சி வைத்து இருப்பார்கள். அந்த நாய் இறைச்சியை உண்ணாமல் அப்படியே பார்த்துக்கொண்டே இருக்கும். பயிற்சியாளர் சாப்பிடு என்று சொன்னால் மட்டுமே சாப்பிடும்.  இப்படி ஒழுக்கம் கடைபிடிப்பதில் நாய்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன.

       நாய் நன்றியுள்ள விலங்கு என்பதையும் தாண்டி, அறிவு உள்ள விலங்காக உள்ளது.  நாய் பற்றி முழுக்க முழுக்க எடுத்து இயம்பிடும் படம்.  படத்தில் நகைச்சுவை காட்சிகளும் உள்ளன.  துப்பாக்கி சத்தம் கேட்டால் மிரளும் காட்சி.  அதற்கு முன்பு நடந்து துப்பாக்கி சுடும் காட்சி.  சிபி காவல் அதிகாரியாக நன்றாக நடித்து உள்ளார்.  படம் தொய்வின்றி விறுவிறுப்பாக செல்கின்றது.  மயில்சாமியின் நகைச்சுவை ரசிக்கும்படி இருந்தது.

       உயிரோடு சவப்பெட்டியில் அடைத்து சாவதை வெப் காமிரா மூலம் கண்டுகளிக்கும் கொடூர வில்லன். கதாநாயகி சவப்பெட்டியில் உயிருக்குப் போராடும் காட்சி.  பார்ப்பவர்களுக்கு பரபரப்பை தந்தது.  கதாநாயகனையும் சவப்பெட்டியில் உயிரோடு அடித்து கடைசியில் இருவரும் சாகாமல் பிழைப்பது படம் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சி.

       சண்டைக்காட்சிகளில் சிபி கடினமாக உழைத்து உள்ளார்.  நகைச்சுவைக் காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார்.  சற்று இடைவெளி எடுத்துக்கொண்டு சிபி நடித்து வெளிவந்துள்ள படம்.  குடும்பத்துடன் குறிப்பாக குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய படம்.  பார்த்து விட்டு வெளியே வரும் போது நாயின் மீதான மதிப்பு கூடிவிடுகின்றது.  ஒளிப்பதிவு, இசை, பின்ணணி இசை யாவும் மிக நேர்த்தியாக இருந்தன. மதுரை விமான நிலையத்தில் தினமும் இவ்வகை நாய்களை பார்ப்பேன்.  அவைகளின் அறிவு நுட்பம் கண்டு வியந்து போவேன்.பாராட்டுகள் .காவலர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம் .
நாயுக்கு 5 அறிவு அல்ல 6 அறிவு உள்ளது என்ற முடிவுக்கு வர வைத்தது இந்த திரைப்படம் .படத்தின் இயக்குனர் திரு. சக்தி .சௌந்தர்  ராஜன் அவர்களுக்கும் ,நடித்த அவர்களுக்கும் ,தயாரித்த   திரு. சத்யராஜ் அவர்களுக்கும்
-



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !




















































































கருத்துகள்

  1. வித்தியாசமான கருவினை எடுத்துக் கொண்டு திரைப்படம் அமைத்துள்ளதைப் பார்க்கும்போது முயற்சியைப் பாராட்டத் தூண்டுகிறது. தங்களின் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக