மூன்றாம் நாளின் இறுதியாக நிகழ் நாடக மய்யம் வழங்கிய நாடகம் ! கவிஞர் இரா .இரவி !

மூன்றாம் நாளின் இறுதியாக நிகழ் நாடக மய்யம் வழங்கிய  நாடகம் !
கவிஞர் இரா .இரவி !

 28.12.2014 அன்று இரவு நானும் இனிய நண்பர் கவிஞர் சந்திரனும்  கடம்பவனம் சென்றோம் .முதலில் வெளிநாட்டு பெண்கலைஞரின் ஆங்கில நாடகம் நடந்தது .அவரும் மிகச் சிறப்பாக நடித்து கை தட்டல் வாங்கினார் .மூன்றாம் நாளின் இறுதியாக நிகழ் நாடக மய்யம் தியேட்டர் நாடக இயக்குனர் சண்முகராஜா இயக்கிய "போங்கோவின் தேசம்" என்ற அரசியல் நையாண்டி நாடகம் நிகழ்ந்தது.

 ஒலி ஒளி அமைப்பு மிக நன்று .நாடகத்தின் கருத்து , நாட்டில் நடக்கும் ஊழலையும் ,இலவசத்தால் மக்களை வசமாக்கி வாக்குப் பெறும் அவலத்தையும் .அரசியல்வாதிகள் அனைவருமே ஏமாற்றுவோராகவே இருக்கின்றனர் என்ற அவலத்தையும்  உணர்த்துவதாக இருந்தது. வாரிசு அரசியலையும் சாடி முடித்தார். சாமியார்களின் பித்தாலாடத்தையும்   உணர்த்தினார் .

நடிகர்கள் மிகச் சிறப்பாக நடித்தனர் .நாடகத்தின் இயக்குனர் 
திரு .சண்முகராஜா அவர்கள் மிகச் சிறப்பாக இயக்கி இருந்தார். தமிழ்இலக்கியக் காட்சிகளை சிற்பமாக  வடித்துள்ள கடம்பவனம் அரங்கம் முழுவதும் நிரம்பி  மக்கள் இருந்தனர் .யாதவர் கல்லூரி  நாட்டு நலத் திட்ட  மாணவிகள் .அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் , மாணவிகள் பலரும் வருகை தந்து கண்டு களித்தனர் .கர ஒலி தந்து எழுந்து நின்று  பாராட்டினார்கள் .

கடம்பவனம் நிர்வாக இயக்குனர் திரு. கணபதி ,திருமதி சித்ரா கணபதி, இந்த இணையரின் புதல்வர் உள்பட அனைவரும் நாடகத்தை கண்டு களித்தனர்.நாடக விழா நிறைவு விழாவும் சிறப்பாக நடந்தது .

இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் செல்வம் இராமசாமி கை வண்ணத்தில் புகைப்படங்கள் கண்டு மகிழுங்கள் .   

.



கருத்துகள்