வாழ்விக்க வந்த வள்ளுவம் ! கவிஞர் இரா .இரவி !

வாழ்விக்க வந்த வள்ளுவம் !   கவிஞர் இரா .இரவி !

---------------------------------------------------------------------------

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் ,அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு !
------------------------------------------------------------------------

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின்
போராட்டத்தை  ஒரே திருக்குறளில் அடக்கிடலாம் !

சொல்வது யார் ? என்பது முக்கியமன்று
சொல்வது சரியா ? என்பதே முக்கியம் !

அவரே சொல்லி விட்டார் என்பதற்காக
அப்படியே ஏற்பது என்பது  மடமை !      

எவரே சொன்னாலும் அவர் சொன்னதில்
ஏதேனும் உண்மை உள்ளது ஆராயவேண்டும் !

எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி? எதனால்  ?
என்று ஆராயக்  கற்பித்த ஆசான் பெரியார் !

மூடநம்பிக்கைகளை  முற்றாக எதிர்த்தார் !
மூளையைப் பயன்படுத்திடக் காரணமானார் !

வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று எப்போதும்
வெண்தாடி வேந்தரைப் பேசவைத்தது திருக்குறள் !

சமரசத்திற்கு இடமின்றி கொள்கைக் குன்றாக்கியது
செந்தமிழன் மகுடமான மட்டற்ற திருக்குறள் !

அறிவுப் புரட்சியை அகிலத்தில் நிகழ்த்திட
அகரமாக இருந்தது சிகரமான திருக்குறள் !

ஈ .வெ.இராமசாமி நாயக்கர் என்ற வணிகரை
ஈரோட்டுப் பெரியார் ஆக்கியது இணையற்ற திருக்குறள் !  
---------------------

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்