பாடல்களில் வாழும் பாவலர் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி

பாடல்களில் வாழும் பாவலர் கண்ணதாசன் !

கவிஞர் இரா .இரவி

*****
காதல், தத்துவம், மகிழ்ச்சி, சோகம் அனைத்தும் பாடியவர்
கற்கண்டுப் பாடல்களை வெண்திரையில் தந்தவர் !
கடவுள் காதலித்து சாக வேண்டும் என்பதை
நண்பர் சௌந்தர்ராசனுக்காக வாட வேண்டுமென மாற்றியவர்
!
அண்ணனிடம் கடன் கேட்டு மறுத்த நேரத்தில்
அண்ணன் என்னடா? தம்பி என்னடா? பாடல் வடித்தவர்
!
சிறுகூடல்பட்டி என்ற ஊருக்குப் பெருமையை
பெரும்பாடல்களால் பெற்றுத் தந்தவர்
!
முத்தையா படைத்த பாடல்கள் தமிழ்ச் சொத்தானது
சொத்தையான பாடலை என்றும் எழுதாதவர்
!
எம்மதமும் சம்மதமென எல்லா மதத்திற்கும் எழுதியவர்
எனக்குப் பிடித்த மதம் தாமதம் என்று சொல்லியவர்
!
பதறி விரைவாக மகிழுந்து ஓட்டிய ஓட்டுனரிடம்
பத்துநிமிட தாமத
ம் சரி  பத்து வருடங்கள் முந்தி போக வைத்திடாதே என்றவர் !

மாணவர் கவிதையை தான் வாசித்து அரங்கில்
மாணவருக்குப் பாராட்டை வாங்கித் தந்தவர் ! 

பாடாத பொருள் இல்லை எனும் அளவிற்கு
பல்வேறு பொருள்களில் பொருள்படப் பாடியவர்
!

கவியரங்குகளில் கைதட்டல் கவிதைகள் வாசித்தவர்
கவிதைக்கு பெரும் மதிப்பை பெற்றுத் தந்தவர்
!

ஏமாற்றத் தெரியாததால் அரசியலில் வெல்லவில்லை
எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் உள்ளம் பெற்றவர்
!

கல்வி வள்ளல் காமராசர் மதித்த கவிஞர்
கக்கன் வாழ் வேண்டுமென வாழ்த்திய கவிஞர்
!

மக்கள் திலகமும், நடிகர் திலகமும் புகழ்பெறக் காரணமானவர்
மக்கள் மனதில் விட்டு நீங்காத பாடல்கள் வடித்தவர்
!

காலார நடந்து சென்னை வீதியில் சிலை அருகே உறங்கிட
காவலருக்கு கையூட்டுத் தர பணமின்றி அலைந்தவர்
!

பாட்டெழுதி அதே வீதியில் அய்ந்து சொந்த கார்கள்
பயணிக்க சொந்தப்படம் எடுத்தவர்
!

இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஊதியமென சம்பாதித்து
இந்தியாவைப் போல கடனும் பெற்றவன் என்றவர்
!

ஒளிவுமறைவின்றி தன் வரலாறு வடித்தவர்
ஒப்பற்ற காந்தியடிகள் போல உண்மைகள் எழுதியவர்
!

மகனுக்கு அறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டியவர்
மகன் மகள் கவிதை மட்டுமல்ல வரிகளையும் அடிக்காதவர்
!

அதிகம் படிக்காவிட்டாலும் அதிகம் பாடியவர்
அதிகம் படித்தவர்களும் பார்த்து வியந்தவர்
!

கொள்கைப் பாடல்கள் திரைப்படத்தில் எழுதியவர்
கொலைவெறிப் பாடல்களின் காலம் இது
!

தமிழ் இக்கியங்களை பாடல்களில் வடித்தவர்
தமிழ்க்கொலை பாடல்களின் காலம் இது
!

நிழலின் அருமை வெயிலில் தெரியும்
நிந்தன் அருமை இன்று உணர்கிறோம்.
!

கவியரசு என்றால் கண்ணதாசன், கண்ணதாசன் என்றால் கவியரசு
கவியரசு பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர்

கருத்துகள்