படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! நன்றி திரு .தமிழ் அரசு !


படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
 நன்றி திரு .தமிழ் அரசு !


இனிய வணக்கம்..
...........................................
இன்றைய நாள் உற்சாகமும், உத்வேகமும் தரும்
நாளாக உங்களுக்கு அமையட்டும்..

இன்றைய சிந்தனை..
.........................................

நம்பிக்கை...
....................

பாரசீகத்தின் மீது அலெக்சாண்டர் படையெடுத்த போது, சிட்னஸ் நதிக்கரையில் தங்கியிருந்தார். அந்த சமயம் அலெக்சாண்டரை விசித்திரமான காய்ச்சல் தாக்கியது.
அவருடன் வந்த கிரேக்க மருத்துவர்களுக்கு அந்த காய்ச்சலின் தன்மை புரிய வில்லை.
எனவே எங்களால் இதை குணப்படுத்த முடியது என தெரிவித்தனர். ஒரு வேளை பாரசீகத்தின் அரண்மனை மருத்துவர் வந்தால் குணப்படுத்த வாய்ப்பு உண்டு என ஆலோசனை கூறினர்.
தாங்கள் படையெடுத்து வந்த எதிரி நாட்டு மன்னரின் வைத்தியரை அழைப்பதா? கூடவே கூடாது என மறுத்தனர் அலெக்சாண்டரின் தளபதிகள். அவர்களை சமாதானப்படுத்திய அலெக்சாண்டர் பாரசீகத்திற்கு ஆள் அனுப்பி, அரண்மனை வைத்தியரை அழைத்து வரச் சொன்னார்.
அதன்படி பாரசீகத்தில் இருந்து வந்த வைத்தியர் அலெக்சாண்டரின் நாடி பிடித்துப் பார்த்தார். நோயின் தன்மையை உணர்ந்து கொண்ட அவர் நாளை மருந்துடன் வருவதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையில் கிரேக்க ஒற்றன் ஒருவனிடம் இருந்து அலெக்சாண்டருக்கு கடிதம் மூலம் செய்தி வந்தது.
அதில் பாரசீக மருத்துவர் கொண்டுவரும் மருந்தில் விஷம் கலந்திருப்பதாகவும் அதனை குடிக்க வேண்டாம் எனவும் கூறப்பட்டிருந்தது.
அலெக்சாண்டர் அந்த கடிதத்தினை படித்துக் கொண்டிருக்கும் போதே அந்த பாரசீக மருத்துவர் மருந்துடன் வந்து சேர்ந்தார்.
அவரிடம் ஒற்றன் அனுப்பிய கடிதத்தைக் கொடுத்து படிக்கச் சொல்லிவிட்டு, அவர் கொடுத்த மருந்தை எந்தத் தயக்கமும் இன்றி குடிக்கத் தொடங்கினார்.
அதைப் பார்த்த பாரசீக மருத்துவர், "என் மீது உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை வந்தது எப்படி"? என அலெக்சாண்டரை பார்த்துக் கேட்டார்.

"நீங்கள் விஷத்தை கொடுத்திருந்தாலும் பிரச்சினை கிடையாது.
'நம்பிக் கெட்டான் அலெக்சாண்டர்' என்று உலகம் ஒரு படிப்பினை பெற்றிருக்கும்.
நீங்கள் உயிரைக் காக்கும் புனிதமான தொழிலை செய்பவர். தொழில் தர்மத்தை காப்பாற்றுவீர்கள் என எனக்குத் தெரியும் " என்று பதிலளித்தார் அலெக்சாண்டர்.
ஆம்,..நண்பர்களே.,
வாழ்க்கையில் எச்சரிக்கை தேவைதான். இருந்தாலும், நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையில்லை.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



கருத்துகள்