கேட்டதில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! சொன்னவர்; ஆச்சி வந்தாச்சு மாத இதழ் ஆசிரியர் திரு .பழனியப்பன் !

கேட்டதில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

சொன்னவர்;
ஆச்சி வந்தாச்சு மாத இதழ் ஆசிரியர் திரு .பழனியப்பன் !

கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்வில் சுவையான நிகழ்வுகள் .

கவியரசு கண்ணதாசன் அவர்களின் மகன் கண்மணி சுப்பு சொன்னது.  "அப்பா எழுதிய பாடல் வரிகளையும் ,பெற்ற பிள்ளைகளையும் அடித்ததே இல்லை ."

குழந்தைகளை அடிக்கும் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள் .

கவியரசு கண்ணதாசன் அவர்களின் வீட்டிற்கு அறிஞர் அண்ணா வந்து இருந்தபோது தனது மகனிடம் உன் பெயரைச்  சொல்லு என்று சொல்லி இருக்கிறார் .பலமுறை சொல்லியும் சிறுவன் தன் பெயரை சொல்லவில்லை .கோபம் கொண்ட  கவியரசு கண்ணதாசன் "அறிவு கேட்ட  அண்ணாத்துரை  உன் பெயரை சொல்லுடா." என்றாராம். உடன் அறிஞர் அண்ணா அவர்கள் சிரித்துக் கொண்டே இதற்காகத்தான் என் பெயர் வைத்தாயா ? என்றாராம் .

கவியரசு கண்ணதாசன், அறிஞர் அண்ணா இருவரின் அன்பை , நட்பை உணர்த்தும் நிகழ்வு !

கவியரசு கண்ணதாசன் அவர்களும் காவியக் கவிஞர் வாலியும் ஒரு அறையில் பேசிக் கொண்டு இருந்தபோது அருகில் பட்டிமன்றம் நடந்து கொண்டு இருந்தது .அவர்கள் பேசுவதைக்  கேட்டு விட்டு ,தலைப்பு கற்பில் சிறந்தவள் கண்ணகியா ? மாதவியா ? உடன் கவியரசு கண்ணதாசன் அவர்கள் காவியக் கவிஞர் வாலி இடம் நீ சொல்லு கண்ணகி மேலா ? மாதவி  மேலா ?என்று கேட்டு இருக்கிறார் .உடன் காவியக் கவிஞர் வாலி இருவருமே ( FEMALE )
என்று சொல்லி இருக்கிறார் .கவியரசு கண்ணதாசன் அவர்கள்  வாலியின் பெயரை மனதில் நினைத்துக் கொண்டு ,உன் குரங்கு புத்தியைக் காட்டி விட்டாயே ! என்றாராம் .காவியக் கவிஞர் வாலியும் சிரித்து விட்டாராம்.

கவியரசு கண்ணதாசன் ,காவியக் கவிஞர் வாலி இருவரின் அன்பை , நட்பை உணர்த்தும் நிகழ்வு !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்