இடுகைகள்

November, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம்
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தனக்கு வெயில் பட்டாலும்
தன் குழந்தைக்கு படக்கூடாது
தாயுள்ளம் !

தன்னலம் கருதாது 
சேய்நலம்  கருதும்  
தாயுள்ளம் !

சேய் சுமையை
தாய் சுமக்கும் காட்சி
மாட்சி ! 

பிஞ்சு தாங்காது வெயில்
பாசத்தோடு குடை தாங்கும்
அன்னை ! 


முல்லைக்கு தேர் தந்தவன் மகள்
மகளுக்குக் குடை ஏந்தி
மகிழ்வோடு பயணம் !

பாடசாலைக்கு செல்லும்
பாசமகளுக்கு
நேசக் குடைபிடிப்பு !

ஆயிரம் உறவுகள்
பூமியில்  இருந்தாலும்
ஈடாகாது அன்னைக்கு ! 


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

காவல்துறை உதவி ஆணையர் ,கவிஞர் ,முனைவர் ஆ .மணிவண்ணன் அவர்கள் சிறப்புரையாற்றிய படம்

படம்
இனிய நண்பர் கவிஞர் வாசகன் எழுதிய " எல்லோர்க்கும் பிடிக்கும் " நூல் வெளியீட்டு விழாவில் காவல்துறை உதவி ஆணையர் ,கவிஞர் ,முனைவர் ஆ .மணிவண்ணன் அவர்கள் சிறப்புரையாற்றிய படம். இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்.


கனவெல்லாம் கலாம் நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் .நூல் மதிப்புரை பேராசிரியர் ஏ.எம் ஜேம்ஸ் ஆசிரியர் மனிதநேயம் !

படம்
"கனவெல்லாம் கலாம்"
 நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் .
நூல் மதிப்புரை பேராசிரியர் ஏ.எம்  ஜேம்ஸ் ஆசிரியர் மனிதநேயம் !


"உலக உத்தமர் கலாம் " நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் !

படம்

இலக்கிய இணையரின் இல்ல நூலகம் ! முனைவர் அ.கோவிந்தராஜூ

.http://iniangovindaraju.blogspot.in/2015/11/blog-post_30.html
இலக்கிய இணையரின் இல்ல நூலகம்!முனைவர் அ.கோவிந்தராஜூ
இலக்கிய இணையரின் இல்ல நூலகம் இரண்டு மாத விடுப்பில் அமெரிக்கா சென்று வந்து, பயணக்களைப்பு தீர்வதற்குள்ளாகவே மீண்டும் பள்ளிப்பணியில் மூழ்கிவிட்டேன். தேங்கிக் கிடந்தக் கோப்புகள், சோம்பிக்கிடந்த மாணவர்கள் அனைத்தையும் அனைவரையும் ஒழுங்குபடுத்த ஒரு மாத காலம் ஆயிற்று.

   தொடர்ந்து அமெரிக்கப் பயண அனுபவங்களை அன்புள்ள அமெரிக்கா என்னும் தலைப்பில் நூலாக்கும் பணியில் ஈடுபட்டேன். இதன் காரணமாக ஒவ்வொரு ஞாயிறன்றும் மடிக்கணினியும் கையுமாகக் கிடப்பேன். ஒருவழியாக தட்டச்சு செய்து முடித்து, நூல் வடிவம் கொடுக்கும் கணினி வல்லுநர் மதுரை இராம்குமாருக்கு அனுப்பியபின் தான் பெருமூச்சு விட்டேன்.
    அவ்வப்போது எனது தமிழாசான் மதுரை வாழ் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள் தொலைபேசி மூலம் நெம்புகோல் போட்டதால் இந்த நூல்பணி உரிய காலத்தில் நிறைவடைந்தது. தானும் உரிய நேரத்தில் பணிமுடிப்பதோடு, தன்னைச் சார்ந்தவர்களும் அவ்வாறே செய்து முடிக்க வேண்டும் என்னும் கண்டிப்புடையவர் அப் பேராசிரியர்.
  இராம்குமாரும் சிறந்தமுறையில்…

இனிய நண்பர் கவிஞர் வாசகன் எழுதிய " எல்லோர்க்கும் பிடிக்கும் " நூல் வெளியீட்டு விழா ! படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்

படம்

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம்
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

அத்தை கண்டு
சிரிக்காதவள் சிரிக்கிறாள்
நத்தை கண்டு !

பார்க்கப் பரவசம்
நத்தை ரசிக்கும்
தத்தை !

குழந்தையைக் கவரும்
வித்தைக் கற்றுள்ளது
நத்தை !

நத்தையோடு பேசுகிறாள்
நமக்குப் புரியாது
நத்தைக்குப் புரியும் !

அழகிய நத்தையை
இமைக்காமல் ரசிக்கின்றாள்
குட்டி தேவதை !

மலேசியா வெளியிட்டுள்ள காமராசர் அஞ்சல் தலை ! கவிஞர் இரா .இரவி !

படம்
மலேசியா வெளியிட்டுள்ள காமராசர் அஞ்சல் தலை !
கவிஞர் இரா .இரவி !

படத்திற்குப் பாக்கள் !கவிஞர் இரா .இரவி !

படம்
பார்க்காமலே
கவர்ந்து இழுக்கின்றாய்
பார்த்தால் ?

நிலம் பார்த்தது போதும்
நிலவே
என்னைப் பார் !

பாவையின் பற்கள் தெரியாத
புன்னகையும்
பரவசம்தான்

வஞ்சி
வெட்கத்தைக்  கற்ப்பிக்கிறாள் 
கட்டணமின்றி  

இமை திறந்து பார்
வந்துவிட்டேன்
கனவு நாயகன் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

உலகத் திருக்குறள் பேரவை விழாவில் பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லுரி தாளாளர் மலேசிய பாண்டியன் கவிஞர் இரா .இரவிக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்.

படம்
உலகத் திருக்குறள் பேரவை விழாவில் பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லுரி தாளாளர் மலேசிய பாண்டியன் கவிஞர் இரா .இரவிக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்.

கவிச்சுடர் காரைக்கிழார் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி, தான் எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூலை பரிசளித்த போது

படம்
உலகத் திருக்குறள் பேரவை விழாவில் " மலேசிய நண்பன் " இதழ் துணை ஆசிரியர் கவிச்சுடர் காரைக்கிழார் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி, தான் எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூலை பரிசளித்த போது எடுத்த படம் !  இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்.

உலகத் திருக்குறள் பேரவை விழா !

படம்
உலகத் திருக்குறள் பேரவை விழா !
நன்றி .நக்கீரன்

படம்

உலகத் திருக்குறள் பேரவை விழா ! படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்

படம்

திருக்குறளில் வினாக்கள் ! உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி !

படம்
திருக்குறளில் வினாக்கள் ! உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி !
தொகுப்பு : கவிஞர் இரா. இரவி !
இடம் : மதுரை திருவள்ளுவர் கழகம் *****        திருக்குறளில் 142 வினாக்கள் உள்ளன.  ஒரு குறளில் ஒரு வினா, ஒரு சில குறளில் இரண்டு வினாக்கள், ஒரு சில குறளில் மூன்று வினாக்களும் உள்ளன.
பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்கு
       அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு                                    148        பிறன்மனைவியை விரும்பிப் பார்க்காத பெரிய ஆண்மை சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று, நிறைந்த ஒழுக்கமும் ஆகும்.
       திருவள்ளுவர், இராமாயணம், மகாபாரதம் படித்தவர்.  நன்கு கற்றவர்.  இராவணன் சிவபக்தன், அறநெறியாளன், நல்ல மன்னன் என்ற பல நற்குணங்கள் இருந்த போதும் சீதையை கவர்ந்த காரணத்தால் மரணம் அடைந்தான்.  அதனை உணர்த்திடும் திருக்குறள் இது.
       ஒழுக்கத்தில் சிறந்த ஒழுக்கம் பிறன் மனைவி நோக்காது இருத்தல்.  ஆண்மை என்பது போரிடுவது, வெற்றி காண்பது.  பேராண்மை என்பது பால்உணர்ச்சி அடக்குவது.  காமக்கண்ணுடன் பிறன்மனைவியைப் பார்க்காது இருத்தலே பேராண்மை. 
பேராண்மை என்ற பெயரில் ஒரு திரைப்படம் வந்தது. பார்த்து இருப்பீர்…

பேராசிரியர் ,முனைவர் .இ .கி .இராமசாமி அவர்கள் "திருக்குறளில் கேள்விகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் வடக்கு ஆடி வீதியில் உள்ள மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் இன்று ( 22.11.2015 )இரவு 7 மணிக்கு மதுரை யாதவர் கல்லூரியின் முன்னை தமிழ்த்துறைத் தலைவர் ,பேராசிரியர் ,முனைவர் .இ .கி .இராமசாமி அவர்கள் "திருக்குறளில் கேள்விகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .படங்கள் கவிஞர் இரா .இரவி !

திருவள்ளுவர் மன்றம் அழைப்பிதழ் !

படம்
திருவள்ளுவர் மன்றம் அழைப்பிதழ் !

புரட்சிக் கவிஞர் மன்றம் மதுரை அழைப்பிதழ் ! கவிஞர் இரா .இரவி

படம்

உலகத் திருக்குறள் பேரவை மதுரை அழைப்பிதழ் ! கவிஞர் இரா .இரவி

படம்

கலந்துரையாட கவிஞர்கள் வருக ! கவிஞர் இரா .இரவி !

படம்
கலந்துரையாட கவிஞர்கள் வருக ! கவிஞர் இரா .இரவி !

பொது மருத்துவ முகாம் ! கவிஞர் இரா .இரவி !

படம்
பொது மருத்துவ முகாம் !               கவிஞர் இரா .இரவி !