சகிப்புத்தன்மை ! ( பொறுமை ) கவிஞர் இரா .இரவி !

சகிப்புத்தன்மை ! ( பொறுமை )   கவிஞர் இரா .இரவி !
சகிப்புத்தன்மை என்பதையே மறந்து வருகின்றனர்
சகிப்புத்தன்மையை எல்லோரும் இழந்து வருகின்றனர் !

பொறுமை என்றால் என்னவென்று தெரியவில்லை
பொறாமை என்பதை பலரும் கொள்கின்றனர் !

மனிதனை மனிதன் நேசிக்கும் நல்ல
மனிதாபிமானத்தை அறியவில்லை !

விலங்கிலிருந்து வந்த மனிதன் விலங்கு ஆவதேன்  
விலங்குகள் கூட கூடி அன்பாக வாழ்கின்றன !

ஒரு கன்னம் அடித்தால் மறுகன்னம் காட்டாவிடினும்
உடனே திருப்பி அடிக்காமல் இருக்கலாமே !

என் சாதி பெரிது உன்சாதி சிறிது என்ற
இழிவான சண்டைகளுக்கு முடிவு கட்டுங்கள் !


என் மதம் உயர்வு உன் மதம் தாழ்வு என்ற
இனிமையற்ற மோதலுக்கு முடிவு கட்டுங்கள் !

எங்கு வளர்ந்தாலும் மணம் மாறாக் கருவேப்பிலை  
எங்கு வாழ்ந்தபோதும்  மனிதனாக  வாழுங்கள் !

பெரும்பான்மையை என்பதால் அகந்தை வேண்டாம்
சிறுபான்மை என்பதால் அஞ்சவும் வேண்டாம் !

மிதித்தவருக்கும்  காலணி தந்தார் காந்தியடிகள்
உமிழ்ந்தவரையும் மன்னித்தார் அன்னை தெரசா !

தீயவரை வெறுக்காமல்  அன்பு  செய்தார்  புத்தர்
தவறுகளைத் திருத்திட வாய்ப்பு வழங்குவோம் !

பழிக்குப்பழி வாங்குவது மிருககுணம்
பண்போடு மன்னிப்பதே மனிதகுணம் !

.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்