ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம்: கவிஞர் ஆனந்தி !

ஆயிரம்  ஹைக்கூ !


நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி !

நூல் விமர்சனம்: கவிஞர் ஆனந்தி !  ananthi.ramyaa@gmail.com

வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com

184 பக்கங்கள் விலை ரூபாய் 100.

கவிஞர் இரா.ரவி  அவர்களின் ஆயிரம் ஹைக்கூ(ஹைக்கூ தொகுப்பு நூல்)...ஆயிரம் ஹைக்கூ வும் ஆயிரம் முத்துகள்....திறமையான எழுத்தாளுமை திறன் ...படைப்பு முழுவதும்....
....நகைசுவை, நாட்டுபற்று, மொழிப்பற்று, சமகால நிகழ்வுகள், சமகால சங்கடங்கள், பெண்ணியம் போற்றும் பதிவுகள், தன்னம்பிக்கையூட்டும் வரிகள், காதல், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சாட்டையடி, வறுமை, குடி, இன்றைய கல்வி நிலை, தற்கால ஊடகங்களின் நிலை போன்ற பல்வேறு கோணங்களில் பேசுகிறது படைப்பு....வாசகர்கள் படிக்கையிலே ஹைக்கூ செய்யத் தூண்டுகிறது நூல்....

தடுக்கி விழுந்தவன்
தமிழ் பேசுனான்
'அம்மா'
-இன்றைய நம் மக்களின் ஆங்கில மோகத்திற்கு எதிராய் சாட்டையைச் சுழற்றிவிட்டிருக்கிறார்கள்.
கோடாரியின் கைப்பிடியும்
மரம் தானே?
இனஎதிரி
-நேர்த்தியான சிந்தனை...வாசகர்களையும் பலமாய் சிந்திக்க தூண்டும் எழுத்துகள்...
ஆறடி கூட
புதைக்கப்பட்டவனுக்கே
எரிக்கப்பட்டவனுக்கு?
-பலமான கேள்வியோடு முடித்திருக்கிறார்கள்...மிக பெரிய வாழ்க்கை தத்துவத்தை மிக சாதாரணமாக சொல்லி சென்றிருக்கிறார்கள்....
நல்ல விலை
இன்று குடிநீர்
நாளை மூச்சுக்காற்று
-குடிக்கும் நீரை காசுக் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்...அணுஉலை கழிவுகள், பெருகிவரும் மாசுக்கள், நெகிழிப்பயன்பாடு, மணற்க்கொள்ளை போன்றவைகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது ....காற்றிலும் மாசு பெருகி வருகிறது...இதே நிலை நீடித்தால்..சுவாசக் காற்றையும் காசுக் கொடுத்தே வாங்க வேண்டியிருக்கும்....என்ற சமூக அக்கறையை முன் வைத்திருக்கிறார்கள்...
சாதி ஒழிப்பு
மாநாடு நடந்தது
சாதி சங்கக் கட்டிடத்தில்...
- சாதிப் பற்றிய தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்...
உருவமின்றி தாலாட்டியது
கிளைகளை
தென்றல்...
-கற்பனை நயம் மிகுந்த அசத்தலான ஹைக்கூ...உருவமில்லாதா? என்று யோசிக்கவிட்டு, தென்றல் என இறுதி பத்தியில் முடித்திருக்கிறார்கள்...அருமை!
மழையில் நனைந்தும்
வண்ணம் மாறவில்லை
வண்ணத்துப் பூச்சி....
-என்னே! சிந்தனை வியப்பு...வண்ணம் மாறா வண்ணத்துப் பூச்சுகளின் வண்ணங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது....
அணிலை ஹைக்கூவின் விளம்பரத் தூதுவர்களாக மாற்றியது, அரளியும் அழகு தான் என வாதிட்டது,வாங்காமலே மலர்ந்த பூவின் வேதனையை தயங்காமல் சொன்ன விதம், மலர்க்கண்காட்சியை வானவில்லோடு ஒப்பிட்டது, முதியோர் இல்ல கனவு என அத்தனையும் ஒரே நூலுக்குள் நேர்த்தியாய் சொன்ன விதம்....வெகுசிறப்பு....அனைவரும் வாசிக்க வேண்டிய பொக்கிஷம்...(....வாழ்த்தி, வணங்குகிறேன்...தமிழன்னைத் துணைக்கொண்டு தங்களை....நன்றிகள் ரவி சார்)
பின்குறிப்பு: நூல் விமர்சனங்கள் எழுதியதில்லை....இதுவே..முதல் முறை....ஏதேனும் பிழை இருப்பின் பொறுத்தருள்க....தோழர்களே....!
-


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்

கருத்துரையிடுக