தினமணி இணையம் தந்த தலைப்பு !

தினமணி இணையம் தந்த தலைப்பு !

இணை (த )யத்தில் வாழும் எம் தமிழ் !      கவிஞர் இரா .இரவி !

ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தில் இனிய 
ஆதிக்கம் செலுத்தும் மொழி நம் தமிழ் மொழி !

புலம்பெயர்ந்த தமிழர்கள் யாவரும் என்றும்  
புலம் மறக்காமல் வளர்க்கும் நம் தமிழ் மொழி !

அழியும் மொழிகளில் பட்டியலிட்ட ஐ .நா .மன்றமே 
ஆச்சரியம் அடைந்தது இணையத்தில் தமிழ் வளர்ச்சிக் கண்டு !

அழிவில்லை என்றும் நம் தமிழுக்கு அறிவிப்போம் 
அகிலம்  முழுவதும் காணலாம் இணையத்தில் தமிழ் !

கதை ,கவிதை ,கட்டுரை ,மதிப்புரை அனைத்தும் 
கண்டு ரசிக்கலாம் எழுதி மகிழலாம் இணையத்தில் !

பதிவிட்ட சில நொடிகளில் எங்கும் காணலாம் 
பரந்து விரிந்த உலகம் முழுவதும் வாசிக்கலாம் !

விஞ்ஞான வளர்ச்சியான இணையத்தின் பயனை 
விவேகமாகப் பயன்படுத்தி வென்றவன் தமிழன் !

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே கவிமலர்  தொடங்கியவன் 
பைந்தமிழில் கவிதைகள் பதித்தவன் அடியவன் நான் !

ஐந்து  லட்சம் ரசிகர்கள் கண்டு மகிழ்ந்துள்ளனர் 
அனைத்து முன்னணி இணையங்களிலும்  இணைப்பு   !

தமிழன் இல்லாத நாடே இல்லை உலகில் 
தமிழர்களின் இணைப்புப் பாலம் இணையத்தில்  தமிழ் !

இன்றுவரை எந்த வெளிநாடும் சென்றதில்லை 
எல்லா நாட்டிலும் கவிதை ரசிகர் உண்டு எனக்கு !

இணையத்தில் மட்டும் பதியவில்லை படைப்புகளை 
இதயத்திலும் பதிந்ததால் பெற்றது உலகப் புகழ் !

இணையத்தில்   தமிழ் வளர்க்கும் தினமணி கவிதை மணிக்கு 
இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் !

தினமணி இணை(த)யத்தில் வாழும் நம் தமிழ் 
திக்கெட்டும் புகழ் பரப்பும் தித்திக்கும் தமிழ் பரப்பும் !



http://www.cqcounter.com/?sts,summary,,,,malligai


DomainKAVIMALAR.COM   [ Site Info  Traceroute  RBL/DNSBL lookup ]
RegistrarGODADDY.COM, LLC GoDaddy.com, LLC
Registrar URLhttp://www.godaddy.com
Whois serverwhois.godaddy.com
Created04-Nov-2003
Updated04-Nov-2015
Expires04-Nov-2016
Time Left204 days 9 hours 41 minutes


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area
Preview attachment ravi1.JPG

கருத்துகள்