தவறான கற்பிதம் ! கவிஞர் இரா .இரவி !

தவறான கற்பிதம் ! கவிஞர் இரா .இரவி !

வெள்ளை என்றால் உயர்வு என்றும் 
கருப்பு என்றால் தாழ்வு  என்றும் !

தவறான கற்பிதம் செய்து வைத்துள்ளனர் 
தனக்குத்தானே சிலர் கர்வம் கொள்கின்றனர் !

ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்திடும் 
ஆணாதிக்கம் போன்ற தவறான கற்பிதம் !

மலர்களில் பல வண்ணங்கள் உண்டு
மனிதர்களில்  பல வண்ணங்கள் உண்டு !

உயர்வு தாழ்வு நிறத்தில் இல்லை 
உலக மனிதர் யாவரும் சமம் !

வெள்ளை என்பதால் கர்வம் வேண்டாம் 
கருப்பு என்பதால் கவலை வேண்டாம் !

கேரளாவில் வெள்ளை முகப்பெண் ஒருத்தி 
கறுப்புமைப் பூசி விழிப்புணர்வு விதைக்கிறாள் !

வண்ணங்களின் மீது தவறான எண்ணங்கள் 
வைத்து வாழ்ந்து வந்தது  போதும் !

விருப்பு வெறுப்பின்றி வண்ணம் மதிப்போம் 
வண்ணங்களை விட எண்ணங்களே முக்கியம் !

கருப்பு என்றால் குறை என்ற எண்ணம் வேண்டாம் 
வெள்ளை என்றால் நிறை என்ற எண்ணம் வேண்டாம் !

ரசித்துப் பார்த்தால் கருப்பு அழகுதான் 
ரசனையில் மாற்றம் விரைவில் வேண்டும் !

தவறான புரிதல் இனியும் வேண்டும் 
தவறான கற்பிதம் நக்கும் வேண்டாம் !


ன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்