பெங்களூரு பாவாணர் பாட்டரங்கின் தலைவர் நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் தந்த தலைப்பு ! வெளிச்ச விதைகள் ! கவிஞர் இரா .இரவி !

பெங்களூரு பாவாணர் பாட்டரங்கின் தலைவர்   
நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் தந்த தலைப்பு !

வெளிச்ச விதைகள் ! கவிஞர் இரா .இரவி !  

அகல்விளக்கின் வெளிச்சம் இருள் அகற்றிடும் 
அறிவொளி வெளிச்சம் மனஇருள் அகற்றிடும் !

விதைகள்  பல மரங்களாக வளர்கின்றன 
விதைகள் சில மண்ணிலேயே மக்கி விடுகின்றன !

வெளிச்சம் என்பது விதையில் இல்லை 
வெளிச்சத்தால்தான் விதைகள் வளர்கின்றன !

விதை இல்லாத பழங்கள் சுவை இருக்கலாம் 
வீரிய சத்துக்கள் இல்லாதவை தீங்கானவை !

விதை விருட்சமாவதும் வெம்பி விடுவதும் 
விதைத்தவனின் தொடர் பராமரிப்பில் உள்ளது !

அறக்கருத்துக்களை நாளும் பிஞ்சுகளிடம்  விதைத்தால் 
அன்பாக அறிவாக வளர்ந்திடும் குழந்தைகள் !

என்ன விதைக்கின்றமோ அதுதான் அறுவடையாகும் 
எனவே அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்வோம் !

உடன்பாட்டுச் சிந்தனையே வெளிச்ச விதைகள்
உடன் நினைத்த செயல் முடிக்கத்  துணைபுரியும் !

பறவைகள் இட்ட எச்ச விதைகளால்தான் 
பரந்து விரிந்த பெரிய காடுகள் உருவாகின !

விதை விருட்சமாகத் தேவை வான்மழை  
மனிதன் மனிதனாக வாழத் தேவை அன்புமழை  !

எவ்வுயிரும் என்னுயிர் என்றெண்ணி இரங்கு
என்றார் வடலூர் வள்ளலார் பெருமான் !

தன்னைப் போலவே பிறரை நேசி என்றார் 
தன்னலமற்ற இயேசு பிரான் அவர்கள் !

எதுவாக எண்ணுகிறாயோ அதுவாகவே ஆவாய் 
என்றார் அறிவில் சிறந்த  விவேகானந்தர் !

உண்மை பேச்சவார்த்தை அகிம்சை வாழ்வியல் 
உரைத்தார் ஒப்பற்ற தேசப்பிதா காந்தியடிகள் !

வாழ்வில் வெளிச்சம் பெற உதவுவது 
வல்லுநர்கள் கூறும்  நல்ல கருத்துக்கள் !

விடியல் வாழ்வில் விளைந்திட உதவுவது 
விவேகமானவர்கள் சொல்லும் கருத்துக்கள் !

வெளிச்சம் அளவோடுதான் இருக்க வேண்டும் 
வெளிச்சம் அதிகமானால் எதுவும் தெரியாது !

செயற்கை வெளிச்சமிட்டு ஆடம்பரமானவர்கள் 
சிறைக்குச் சென்ற வரலாறுகளும் உண்டு !

ஆன்றோர் கருத்துக்களே வெளிச்ச விதைகள் 
அனைவரின் உள்ளத்திலும் அறிவொளி பாய்ச்சும் ! 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்