உலக சுற்றுலா தினம் ! கவிஞர் இரா .இரவி !

உலக சுற்றுலா தினம் !  கவிஞர் இரா .இரவி !

பார்க்காத இடங்களைப்  பார்த்து 
பரவசம் அடைந்திட   உதவிடும்  சுற்றுலா !

இயற்கை  வனங்களுக்குச் சென்று 
இனிதே ரசித்திட   உதவிடும்  சுற்றுலா !

அருவிகளுக்குச் சென்று குளித்து 
ஆனந்தம் அடைந்திட   உதவிடும்  சுற்றுலா !

மலைகளின் வனப்பை ரசித்து பார்ப்போரின் 
மனதிற்கு மகிழ்ச்சி தர   உதவிடும்  சுற்றுலா !

சிற்பக்கலைகளை ரசித்து சிந்தை 
சிறக்க செழிக்க  உதவிடும்  சுற்றுலா !

ஓவியங்களைக் கண்டு ரசித்து உள்ளம் 
உவகை கொள்ள உதவிடும் சுற்றுலா !

பிறரது நல்ல பண்பாட்டை  அறிந்திட 
பயணிக்க என்றும்  உதவிடும் சுற்றுலா !

அறியாதவற்றை அறிந்து  கொள்ள 
அனைவருக்கும்  உதவிடும் சுற்றுலா !

தெரியாதவற்றைத்  தெரிந்து கொள்ள 
தினமும் அனைவருக்கும்  உதவிடும் சுற்றுலா !

புரியாதவற்றைப்  புரிந்து கொள்ள 
புலம் பெயர உதவிடும் சுற்றுலா !


திருவிழாக்களை கண்டு ரசிக்க 
தவறாமல்   உதவிடும் சுற்றுலா !

தனி மனிதர்களின் வாழ்வாதாரங்கள் 
தரணியில் செழிக்க உதவிடும் சுற்றுலா !

அரசுக்கு அன்னியச் செலவாணியை 
அளவின்றி ஈட்டிட உதவிடும் சுற்றுலா !


யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை 
யாவருக்கும் உணர்த்திட  உதவிடும் சுற்றுலா !

கருத்துகள்